என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94387"
- திருச்சி பா.ஜ.க. நிர்வாகிக்கு கொலை மிரட்டல் பெண் போலீஸ் மீது வழக்கு
- இரு குடும்பத்தினரிடையே ஏற்கனவே குடும்பதகராறு இருந்து வந்துள்ளது
ராம்ஜிநகர்,
திருச்சி மணிகண்டம் அருகே உள்ள மட்டப்பாறைப்பட்டி வைகை நகரை சேர்ந்தவர் கிருஷ்ணராவ் (வயது 40). இவர் 58-வது வார்டு பா.ஜ.க. தலைவராக உள்ளார். இவரது மனைவி தேவிகா (39). இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் குழந்தைவேல். இவரது மனைவி அன்பு மலர். இவர் தில்லை நகர் காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார்.இந்த இரண்டு குடும்பத்திற்குமிடையே ஏற்கனவே முன்விரோதம் உள்ளதாக தெரிகிறது.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தைவேல், கிருஷ்ணராவ் வீட்டு படுக்கையறையை நோட்டமிடும்படி தனது வீட்டில் சி.சி.டி.வி கேமரா பொருத்தினாராம். தொடர்ந்து கிருஷ்ணராவின் காம்பவுண்ட் சுவரை குழந்தைவேல் இடித்து இருக்கிறார். இதனை பார்த்த கிருஷ்ணராவும், தேவிகாவும் தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த குழந்தைவேல் - அன்பு மலர் தம்பதி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக தேவிகா மணிகண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் குழந்தைவேல் மற்றும் இவரது மனைவி அன்பு மலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
- பல்லடம் போலீசார் உடனடியாக தாராபுரம் சோதனை சாவடி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
- தாராபுரம் சோதனை சாவடி போலீசார் காரை வழிமறித்து, அபிஷேக், பரணிதரன் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
பல்லடம்:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் அபிஷேக். இவரது நண்பர் பரணிதரன். கோவையில் வேலை பார்த்து வந்தனர். இருவரும் சொந்த ஊரில் நடைபெறும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக இன்று அதிகாலை 3 மணியளவில் திருப்பூர் பல்லடம் - தாராபுரம் பிரிவு சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே லாரி ஒன்று வந்துள்ளது. அதனை ஓட்டி வந்த டிரைவர் கார் எதிரே நிறுத்தி, ஹெட்லைட்டை ஏன் இப்படி எரிய விட்டு கொண்டு வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதில் 2 தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து காரை எடுத்து சிறிது தூரம் சென்ற அபிஷேக் திடீரென்று சென்று கொண்டிருந்த லாரியின் எதிரே காரை குறுக்கே நிறுத்தி துப்பாக்கியை காட்டி சுட்டுக்கொன்று விடுவேன் என்று டிரைவரை மிரட்டியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த லாரி டிரைவர் இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
பல்லடம் போலீசார் உடனடியாக தாராபுரம் சோதனை சாவடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தாராபுரம் சோதனை சாவடி போலீசார் காரை வழிமறித்து, அபிஷேக், பரணிதரன் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்தது பொம்மை துப்பாக்கி என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த மார்ச் மாதம் வீட்டின் முன்பு சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
- ஊழியர்களை மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை கரந்தையை சேர்ந்தவர் பிரதீப் (வயது 23). இவர் தனது வீட்டில் அப்பளம் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இவர் கடந்த மார்ச் மாதம் வீட்டின் முன்பு வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து தஞ்சை கிழக்குப்போலீசார் வழக்குப்பதிவு செய்து கரந்தை பகுதியை சேர்ந்த விக்னேஷ் (26), கீழ அலங்கம் சிவக்குமார் (25), வடக்குவாசல் சூர்யா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் கைதுசெய்யப்பட்ட 3 பேரும் கொலை நடந்த அன்று கரந்தை பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கடன்கேட்டு ஊழியர்களை மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டதோடு, ஆயுதங்களை காட்டி தாக்கவும் முயற்சி செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் விக்னேஷ், சிவக்குமார் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய, தஞ்சை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், கலெக்டர் தீபக்ஜேக்கப்புக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவப்படி, தஞ்சை நகர கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததற்கான உத்தரவை, திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
- தெலுங்கானாவில் வங்கிக்குள் புகுந்து மர்ம நபர் ஒருவர் பணம் கேட்டு மிரட்டினார்.
- தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் மேட்ச்சல் மாவட்டம் ஜி.டி.மெட்லா நகரில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு புகுந்த நபர் ஒருவர், போலி வெடிகுண்டை காண்பித்து அங்குள்ளவர்களை மிரட்டினார். அவர், தனக்கு உடனடியாக 2 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். தவறினால் வெடிகுண்டை வெடிக்க செய்துவிடுவேன் என்றார்.
இதையடுத்து, வங்கியில் இருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் அந்த நபரை மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.
விசாரணையில், ஜி.டி.மெட்லா பகுதியைச் சேர்ந்த கிரேன் ஆபரேட்டர் சிவாஜி என தெரிய வந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
- போலீஸ் நிலையத்தில் பேசிக் கொள்ளலாம் என்று கூறினார்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி முத்திருளாண்டி சேர்வை தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (32). இவர் மனைவியுடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் வெங்கடேசுக்கு ''ஹலோ போலீஸ்'' கொடுத்த தகவல் மூலம் அங்கு வந்தார். அவர் தம்பதியினரிடம் சண்டை போட வேண்டாம், போலீஸ் நிலையத்தில் பேசிக் கொள்ளலாம் என்று கூறினார்.
அதற்கு ஆனந்தராஜ் எங்க குடும்ப பிரச்சினையில் தலையிட நீ யாருடா? என்று தகாத வார்த்தையில் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்தார். மேலும் இங்கிருந்து செல்லா விட்டால் கொலை செய்து விடுவேன் என்று அரிவாளை காட்டி போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து போலீஸ்காரர் வெங்கடேஷ் கமுதி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆனந்தராஜை கைது செய்தனர்.
- வண்டிப்பாளையம் ரோட்டில் கடந்த பல ஆண்டுகளாக கடை நடத்தி வருகின்றேன்.
- கவுன்சிலர் மற்றும் ஆதரவாளர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முன்னாள் கவுன்சிலர் நக்கீரன் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான வண்டிப்பாளையம் ரோட்டில் கடந்த பல ஆண்டுகளாக கடை நடத்தி வருகின்றேன். இந்நிலையில் கவுன்சிலர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்னிடம் பணம் கேட்டு கடையை உடைத்து விடுவதாக மிரட்டல் விடுத்து கடையை பூட்டி சென்றனர். இது சம்பந்தமாக இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த போது, அவர்கள் சம்பந்தப்பட்ட கவுன்சிலர் மற்றும் ஆதரவாளர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர். எனவே கடையை தடையின்றி நடத்தவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும், பணம் கேட்டு மிரட்டும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
- மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
கடலூர்:
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வீச்சு அரிவாளுடன் 2 வாலிபர்கள் நின்றுகொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி மிரட்டல் விடுத்து வந்தனர்.
போலீசார் 2 வாலிபர்களை மடக்கி பிடித்து அவர்களிடம் இருந்த வீச்சு அரிவாள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பண்ருட்டி திருவதிகை பன்னீர்செல்வம் (வயது 24), சிம்பு (19) ஆகியோர் தெரிய வந்தது. இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
- தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
- தாய்-மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
விருதுநகர்
சாத்தூர் பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணபிரபு. இவர் சம்பவத்தன்று தனது தாய் மகாலட்சுமியிடம் செலவுக்கு பணம் தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால் அவர் பணம் தர மறுத்தார். இதனால் தாய்-மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அவரது சகோதரர் கண்டித்தார். அப்போது லட்சுமணபிரபு கொலை மிரட்டல் விடுத்து தப்பினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீட்கப்பட்டார்.
- போலீசார் அவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் முகமதுஷா புரம் தேவர் தெருவை சேர்ந்தவர் மதன பிரகாஷ் (வயது 36), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த சிலர் முன்விரோதம் காரணமாக மதன பிரகாஷை தாக்கியதாகவும், அவருடைய இருசக்கர வாகனத்தை எரித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் மதன பிரகாஷ் புகார் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், இன்று திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள உயர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்று கொண்டு தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்கள் கூடினர். தகவல் அறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் 2 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தியும், மதனபிரகாஷ் அவர்களுக்கு உடன்படாமல் கீழே இறங்கிவர மறுத்தார். இதைத் தொடர்ந்து அங்கு வந்த நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்மகை எடுக்கச் செய்வதாக உறுதியளித்ததை அடுத்து அந்த வாலிபர் செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கிவந்தார்.
உடனடியாக திருமங்கலம் டவுன் போலீசார் அவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவர் செல்போன் கோபுரம் மீது ஏறி மிரட்டல் விடுத்தது தொடர்பாக அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
- வளர்ச்சிப் பணிகளை செய்யவிடாமல் வேல்முருகன் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது.
- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேன்மொழி(வயது47). இவர் பூண்டி ஒன்றிய 4-வது வார்டு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. தேன்மொழி இப்பகுதியில் வளர்ச்சிப் பணிகளை செய்யவிடாமல் வேல்முருகன் இடையூறு செய்தாராம். மேலும், இதுகுறித்து புகார் செய்தால் உன்னை அழித்து விடுவேன் என்று தேன்மொழியை மிரட்டினாராம்.
இந்த சம்பவம் குறித்து தேன்மொழி பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- பெண்ணின் காதல் விவகாரத்தில் மிரட்டல் விடுத்த மைத்துனர், மருமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ஆனந்த் மிரட்டியதை குறித்து அவரது தந்தை ராமச்சந்திரனிடம், சுப்பிரமணியன் புகார் கூறியுள்ளார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே இளந்திரைகொண்டான் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது53). இவரது மகளும், தங்கை மகன் ஆனந்த்தும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனந்த்தின் நடவடிக்கைகள் சரியில்லாததால் ஆனந்த்துடன் பழகுவதை சுப்பிரமணியனின் மகள் நிறுத்திவிட்டார்.
இந்தநிலையில் சுப்பிரமணியன், தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்தார். இதையறிந்த ஆனந்த் ஆபாச போட்டோக்களை அனுப்பி தன்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அந்த பெண்ணிடம் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனந்த் மிரட்டியதை குறித்து அவரது தந்தை ராமச்சந்திரனிடம், சுப்பிரமணியன் புகார் கூறியுள்ளார். ஆனால் அவரும் ஆனந்த்துக்குதான் சுப்பிரமணியனின் மகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி மிரட்டினாராம்.
இதுகுறித்து சுப்பிரமணியன் தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் -புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரையில் 10-ம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்து மிரட்டினார்.
- போக்சோ சட்டத்தின் கீழ் ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை
மதுரை கீரைத்துறை இருளப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் முத்துராமலிங்கம் (வயது 25), ஆட்டோ டிரைவர். இவர் அனுப்பானடியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலையாய் காதலித்து வந்துள்ளார்.
அவர் மாணவியை கடந்த 6 மாதமாக பின்தொடர்ந்து சென்று அவரிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். அவரது ஒருதலை காதலை மாணவி ஏற்றுக்கொள்ள வில்லை. இருந்தபோதிலும், முத்துராமலிங்கம் மாணவியை பின்தொடர்ந்து வந்தார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்ற மாணவியை வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி யுள்ளார். அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்ததால் அவரை அவதூறாக பேசி கல்லால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி மதுரை அனைத்து மகளிர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிக்கு மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் முத்துராமலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்