என் மலர்
நீங்கள் தேடியது "slug 94726"
- பெரியாரின்,அண்ணாவின் கனவுகளை நனவாக்கும் வகையில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.
- டெல்லியில் ஆட்சியிலிருக்கும் திமிரில் இன்றைக்கு சில ஆட்டுக்குட்டிகள் கத்துகின்றன.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள காரணம் பேட்டையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், பெரியார், அண்ணா, ஆகியோரது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பெரியார் சுப்பிரமணி தலைமை வகித்தார். அங்ககுமார், குமாரவேல், முன்னிலை வகித்தனர். திருமூர்த்தி வரவேற்றார். இதில் கலந்துகொண்டு நாஞ்சில் சம்பத் பேசியதாவது:-
பெரியாரின்,அண்ணாவின் கனவுகளை நனவாக்கும் வகையில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.டெல்லியில் ஆட்சியிலிருக்கும் திமிரில் இன்றைக்குச் சில ஆட்டுக்குட்டிகள் கத்துகின்றன.பயந்து நடுங்கும் கட்சியல்ல தி.மு.க. இந்த நாட்டில் நன்றாக உள்ள கட்சியை உடைத்து,அதில் உள்ள குள்ள நரிகளை வைத்து ஆட்சியை பிடிக்கும் பா.ஜ.க.வின் நரித்தனம் தமிழகத்தில் பலிக்காது.இவ்வாறு அவர் பேசினார். இந்தக் கூட்டத்தில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில அமைப்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், மற்றும் மு.சுப்பிரமணியம், காவி.பழனிச்சாமி, சூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மத, இன ரீதியாக மக்களை பிரித்து அதை ஓட்டுக்களாக மாற்றும் விதமாக நீலகிரி எம்.பி., ஆ.ராசா தொடர்ந்து பேசி வருகிறார்.
- இந்து மதம் தவிர, தனி மனிதர்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. மாநில பார்வையாளர் செல்வகுமார் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத, இன ரீதியாக மக்களை பிரித்து அதை ஓட்டுக்களாக மாற்றும் விதமாக நீலகிரி எம்.பி., ஆ.ராசா தொடர்ந்து பேசி வருகிறார். தற்போதைய அவரது பேச்சு, இந்து மதம் தவிர, தனி மனிதர்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளது. மிகவும் அநாகரீகமான பேச்சு.இதை அவர் ஒரு தொழிலாகவே செய்து வருகிறார். அடுத்த பாராளுமன்ற தேர்தலில், நீலகிரி தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிட்டால், அவரை டெபாசிட் கூட வாங்க விட மாட்டோம். அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை கண்டித்து போராட்டம் நடத்துவதோடு சட்டரீதியாக வழக்கு தொடரப்படும். எம்.பி.,யாக இருக்க கூட அவருக்கு தகுதியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- சமூக நீதியை கடைபிடிக்கும் கட்சி பா.ஜ.க. தான் என்று மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
- தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க. போராட்டம் நடத்தியுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
நீதிமன்றத்தை நாடுவோம்
பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட கூடாது என மாநில அரசு காவல்துறை மூலம் தடுத்து வருகின்றனர். தி.மு.க. துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து பெரம்பலூரில் பா.ஜ.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கட்சியினரை தாக்கிய போலீஸ் துைணசூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்க திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.யையும் மாவட்ட கலெக்டரையும் சந்தித்து மனு அளிக்க உள்ளோம். நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம். மேலும் திருச்சி கோட்ட பா.ஜ.க. வினர் சார்பில் பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துமு சூழ்நிலை ஏற்படும்.
பதில் சொல்ல வேண்டும்
ஆ.ராசா, மற்ற மதங்களில் குறிப்பிட்டுள்ள பெண்களுக்கு விரோதமாகவும், சமூக நீதிக்கான விரோதமாகவும் குறிப்பிடப்பட்டுள்ள விஷசங்களை பற்றி பேசமுடியுமா? மக்கள் பிரநிதியான ராசா அனைத்து மக்களுக்கும் பொதுவானராக இருக்கவேண்டும். இந்துக்கள் குறித்து ஆ.ராசா பேசியதற்கு முதல்-அமைச்சர் பதில் சொல்ல வேண்டும்.
சமூக நீதியை கடைபிடிக்கும் கட்சி பா.ஜ.க. தான். சொத்து வரி, மின் கட்டணம் உயர்வு போன்றவற்றை கண்டித்தும், மக்களுக்கு விரோதமாக செயல்படும் தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க. போராட்டம் நடத்தியுள்ளது.
இந்து மக்களை பற்றி அவதூறாக பேசிய ஆ. ராசா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் அந்த பேச்சை வாபஸ் பெறவேண்டும். அதுவரை பா.ஜ.க. தொடர்ந்து போராடும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது மாவட்ட தலைவர் செல்வராஜ் உடனிருந்தார்.
- பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா.
- தங்க மோதிரங்களை திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் மங்களம் ரவி வழங்கினார்.
உடுமலை :
உடுமலையில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு உடுமலை நகர பா.ஜ.க. சார்பில் உடுமலை அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் மங்களம் ரவி வழங்கினார்.
நிகழ்ச்சியில் உடுமலை நகர பா.ஜ.க. தலைவர் கண்ணாயிரம், நகர பொதுசெயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன் , திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன் , திருப்பூர் தெற்கு மாவட்ட மருத்துவர் அணி தலைவர் விஜய கண்ணன், நகர சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- ராசாவுக்கு ,எதிராக பாஜக மகளிர் அணியினர் எதிர்ப்பு குரல் எழுப்பினர்
- ராஜாவை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும்.
ஊட்டி
ஊட்டியில் மாவட்ட பாஜக சார்பில் ராசாவின் மதப்போக்கு பிரிவினையை கைவிடக்கோரி மண்டல் தலைவர் பிரவீன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது
மாவட்டத் தலைவர் மோகன்ராஜ்கௌடா , மாவட்ட பொதுச் செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட செயலாளர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
நகர நிர்வாகிகள் பொதுச்செயலாளர்கள் சுரேஷ்குமார் ,ராஜேந்திரன், நகர துணைத் தலைவர் சுதாகர் ,ஹரி கிஷன் ,மணி ஸ்மூத்லி, நகர மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ,தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்,
ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராசாவுக்கு ,எதிராக பாஜக மகளிர் அணியினர் எதிர்ப்பு குரல் எழுப்பினர்
நீலகிரி மாவட்டத்தில் ராசா ஒரு இந்து வீட்டிலேயு கூட ஓட்டு கேட்க முடியாது. அவரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் உதகை நகர பாஜக நிர்வாகிகள் கூறினர்
- 50 க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் அன்னூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசனிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
- 16 ஒன்றியங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெறும்
அன்னூர்
கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயலாளர் ஜெயபால் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் அன்னூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசனிடம் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், தி.மு.க.வை சேர்ந்த நீலகிரி எம்.பி.ஆ.ராசா, சமீபத்தில் இந்துக்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகவும், இந்த பேச்சு இந்து மதத்தையும், இந்து மக்களையும் அவமானப்படுத்தும் வகையில் உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவலியுறுத்தப்பட்டது.
அப்போது,பாஜக விவசாய அணி மாவட்ட செயலாளர் விஜயகுமார், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட செயலாளர் நாகம்மாள், ஆன்மீக அணி மாவட்ட தலைவர் வெள்ளியங்கிரி,ஒன்றிய தலைவர்கள் திருமூர்த்தி,ரத்தினசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர். இதுகுறித்து மாவட்ட செயலாளர் ஜெயபால் கூறுகையில் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா தலைமையில் உள்ள 16 ஒன்றியங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெறும் என்றார்.
- பேருந்து நிறுத்தமும், ஊரின் நுழைவுவாயிலாகவும் அந்த இடம் இருக்கின்றது.
- கழிவுநீர் அடைக்காமல் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 56-வது வார்டு பாரதிய ஜனதா கவுன்சிலர் காடேஸ்வரா தங்கராஜ் தலைமையில் அப்பகுதி மக்கள் திருப்பூர் மாநகராட்சி கமிஷனரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
56-வது வார்டுக்கு உட்பட்ட சந்திராபுரம் மெயின் ரோட்டில், அம்மா உணவகம் எதிர்புறம் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், சாக்கடைகால்வாயை ஆக்கிரமித்தும் நல்ல தண்ணீர் வரும் தொட்டிகளை அடைத்தும்ஒரு மிகப்பெரிய அளவில் செட் ஒன்றை உணவகம் நடத்துவதற்காக, ஒருவர் அமைத்துள்ளார். அந்த இடத்தில் பேருந்து நிறுத்தமும், ஊரின்நுழைவுவாயிலாகவும் அந்த இடம் இருக்கின்றது. பொதுமக்கள் பயன்பாட்டில்உள்ள அந்த இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீர் விநியோகம் சீராகநடைபெறவும் வடிகாலில் கழிவுநீர் அடைக்காமல் செல்லவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
- கல்லூரியில் படிக்கிற ஏழை, எளிய மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 என்பது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு திட்டம் என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.
- சீனாவை போல ஒரு கட்சி ஆட்சி வைத்து நடத்துவதற்காக தான் பா.ஜ.க. திட்டமிடுவதாக பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.
கடையநல்லூர்:
கடையநல்லூரை அடுத்த சுந்தரேசபுரத்தில் சிறுபான்மை நல ஆணையர் பீட்டர் அல்போன்ஸ் காங்கிரஸ் கட்சி கொடி ஏற்றி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாணவிகளுக்கு மாதம் ரூ.1000
கல்லூரியில் படிக்கிற ஏழை, எளிய மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 என்பது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு திட்டம். மாதம் ரூ.1000 என்பது ஒவ்வொரு ஏழை வீட்டு பெண்ணிற்கும் எவ்வளவு பெரிய உதவியாகவும், நல்ல காரியங்களை செய்ய முடியும் என்பதை கடந்த சில தினங்களாக என்னிடம் நேரில் பேசிய மாணவிகளின் பேச்சிலேயே நான் அறிவேன்.
தன்னுடைய அன்றாட தேவைக்காக மட்டுமல்ல அத்தியாவசிய தேவைக்காக கூட பணம் கேட்க முடியாத மாணவிகள் இந்தப் பணத்தை தன்னுரிமை பணமாக வைத்துக் கொள்ள முடியும்.
அப்படிப்பட்ட ஒரு திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி இருக்கிறார். இந்த உரிமைத் தொகை ஒரு லட்சம் பெண்களுக்கு போய் சேர்கிறது.
ஒரு கட்சி ஆட்சி
ராகுல் காந்தியை மட்டுமல்ல இந்தியாவில் எந்த எதிர்க் கட்சி தலைவர்களையும் செயல்பட விடாமல் முடக்குவது தான் பா.ஜ.க.வின் வேலை. இந்தியா முழுவதும் ஒரு கட்சி ஆட்சியை நோக்கி பா.ஜ.க. காய் நகர்த்துகிறது.
காங்கிரஸ் இல்லாத பாரதம், கம்யூனிஸ்டுகள் இல்லாத இந்தியா, கழகங்கள் இல்லாத தமிழ்நாடு தற்போது சீனாவை போல ஒரு கட்சி ஆட்சி வைத்து நடத்துவதற்காக தான் பா.ஜ.க. திட்டமிடுகிறது. அதை தடுத்து நிறுத்தக் கூடிய மிகுந்த மிக உயர்ந்த பண்பாடுள்ள, உண்மை யுள்ள அரசியல்வாதியாக ராகுல் காந்தி மட்டும் தான் இருக்கிறார்.
பயம் காட்ட முடியாது
மம்தா பானர்ஜி, மாயாவதி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, இவர் களையெல்லாம் பா.ஜ.க. பயம் காட்டலாம். ஆனால் ராகுல் காந்தியை பயம் காட்ட இனிமேல் ஒருவன் பிறந்துதான் வரவேண்டும். ஆகவே அந்த தைரியத்தோடு இருக்கின்ற அவரை முடக்க பார்க்கிறார்கள்.
ராகுலே கூறியிருக்கிறார் 57 மணி நேரம் என்னை விசாரித்து இருக்கிறீர்கள். 5 வருடம் வைத்து விசாரித்தாலும் நான் பயப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார்.
ராகுல் காந்தி தொடங்கிய பாத யாத்திரையை எண்ணி பா.ஜ.க.வினர் ஆடிப்போய் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் வாழப்பாடி ராமசுகந்தன், நெடுஞ்செழியன், ஆலங்குளம் செல்வராஜ், செங்கோட்டை முன்னாள் யூனியன் சேர்மன் சட்ட நாதன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- 6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டதிற்கு கைரேகை பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.
- 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் முகாமில் கலந்து கொண்டனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரத்தில்,பல்லடம் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமரின் விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டதிற்கு கைரேகை பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.
பல்லடம் வடக்கு ஒன்றிய தலைவர் பூபாலன் தலைமை வகித்தார். திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில்வேல், மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில்100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு ஊக்கத்தொகை திட்ட கைரேகை பதிவு செய்து புதுப்பித்துக் கொண்டனர். இதில் பா.ஜ.க.,நிர்வாகிகள் நித்யா ஆனந்தகுமார்,லதா, ஆதி கேசவன்,மகேஷ், குப்புராஜ், அய்யப்பன், திரிலோகசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் செந்தில்வேல் அறிக்கை.
- செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
பல்லடம் :
பல்லடம் பாஜக. மகளிரணி நிர்வாகிகள் 2 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இது குறித்து திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் .செந்தில்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பல்லடம் நகரை சேர்ந்த ரேவதி என்பவர் வகித்து வந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அதே போல் பல்லடம் நகர மகளிர் அணி தலைவர் பொறுப்பில் இருந்த லதாமலர் ஆகியோர் அவர்கள் வகித்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர் என்று அதில் அவர் கூறியுள்ளார்.
- கோவை நகரில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நொய்யல் ஆற்றில் சேர்கிறது.
- நொய்யல் ஆற்றின் ஓரம் உள்ள குளம், குட்டைகள் நீர் ஆதாரம் பெறும்.
திருப்பூர் :
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க., தலைவர் செந்தில்வேல், முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட திருப்பூர் மாநகராட்சி பஸ் நிலையத்திற்கு முன்னாள் நகர தந்தை பழனிசாமி கவுண்டர் பெயர் வைக்க வேண்டும்.பி.என்., ரோடு புது பஸ் நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பெயரும், புதிதாக கட்டப்பட்டுள்ள டவுன்ஹால் மாநாட்டு அரங்கத்துக்கு, அந்த இடத்தை வழங்கிய ரங்கசாமி செட்டியார் பெயரும் வைக்க வேண்டும்.
சாமளாபுரம் பாசன நீர் மேலாண்மை பாதுகாப்பு குழுவினர் அளித்த மனுவில், கோவை நகரில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நொய்யல் ஆற்றில் சேர்கிறது.இதை சுத்திகரிப்பு செய்து, மீண்டும் ஆற்றில் திறந்து விட்டால், நொய்யல் ஆற்றின் ஓரம் உள்ள குளம், குட்டைகள் நீர் ஆதாரம் பெறும். சுற்றுப்பகுதி விவசாயிகள் நிலத்தடி நீர் ஆதாரம் பெறுவர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ்நாடு மக்கள் மன்றம், பல்வேறு வகையில் நலிவடைந்துள்ள விசைத்தறி தொழிலுக்கு மின் கட்டண உயர்வு மேலும் அவதியை ஏற்படுத்துகிறது.விசைத்தறிகளுக்கான மின் கட்டண உயர்வு முடிவை திரும்ப பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
- தேர்தலை எதிர் கொள்வது போன்ற ஆலோசனைகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
- பொது மக்களின் குறைகளை அரசு அதிகாரிகளிடம் தெரியப்படுத்த வேண்டும்.
அவினாசி :
பா.ஜ.க., அவினாசி நகர மண்டல கூட்டம் அவினாசி சக்தி நகரில் உள்ள அரங்கில் நடந்தது. இதில்சிறப்பு விருந்தினராக ஈரோடு மாவட்ட பொதுசெயலாளர் ருத்ரசாமி கலந்து கொண்டு ஆய்வு மேற்க்கொண்டார், நகர நிர்வாகிகள், கிளை தலைவர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், ஆகியோர்களின் செயல்பாடுகளை ஆய்வு நடத்தி வரும் காலங்களில் கட்சியினரின் செயல்பாடு, பொது மக்களின் குறைகளை அரசு அதிகாரிகளிடம் தெரியப்படுத்துவது, தேர்தலை எதிர் கொள்வது போன்ற ஆலோசனைகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் அவினாசி நகர தலைவர் தினேஷ்குமார், நகர பார்வையாளர் உதயகுமார், பொதுசெயலாளர்கள் விஜயகுமார், மோகன்குமார், நகர பொருளாளர் ரமேஷ்குமார், துணை தலைவர்கள் பாலகிருஷ்ணன், நந்தகுமார், சித்ரா, விஜயலட்சுமி, நகர செயலாளர்கள் தனசேகரன்,பைரவன் உட்பட நகர,அணி, நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.