என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95139"

    • டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி நட்டா கலந்துகொண்டு பேசினார்.
    • காங்கிரஸ் அரசு செய்திருந்த அனைத்து ஊழல் சாதனைகளையும் ஆம் ஆத்மி கட்சி முறியடித்துள்ளது என்றார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    முந்தைய காங்கிரஸ் அரசு செய்திருந்த அனைத்து ஊழல் சாதனைகளையும் ஆம் ஆத்மி கட்சி முறியடித்துள்ளது.

    டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி கலால் துறையிலும், போக்குவரத்து துறைக்கு பஸ்கள் வாங்குவதிலும், கழிப்பறைகள் கட்டுவதிலும் ஊழல் செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஊழல்களின் கட்சியாக மாறியுள்ளது.

    டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவேன் என முதல் மந்திரி கெஜ்ரிவால் கூறியிருந்தார். ஆனால் ஆட்சி அமைத்த பிறகு எல்லா இடத்திலும் மதுக்கடைகளைத் திறந்துள்ளார் என தெரிவித்தார்.

    • நாங்கள் வரலாறு பேசினால் மட்டும் ஏன் இந்த ஆட்டம் ஆடுகிறீர்கள்.
    • கமல் அரசியலும் செய்கிறார். தொழிலையும் பார்க்கிறார்.

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்தபோது மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுத்து அக்கட்சியின் நிர்வாகி கவிஞர் சினேகன் கூறியதாவது:-

    அண்ணாமலை சார் எங்க தலைவர் அமெரிக்காவில் அரசியல் பேசுவதாக சொல்லியிருக்கிறீர்கள். அவர் லாஸ் ஏஞ்சல்சிற்கு சொந்த காசில் போனார். நீங்கள் எந்த காசுல போயிருக்கீங்கனு எங்களுக்கு தெரியாது. அவர் அமெரிக்காவுல இருந்து அரசியல் பேசுறார்னா இப்போ நீங்க எங்க இருந்து பேசுறீங்க?

    லாஸ் ஏஞ்சல்ஸ் அமெரிக்காவுல இருக்குன்னா. கலிபோர்னியா கரூருக்கு பக்கத்துலயா இருக்கு? அப்படி இல்லை அல்லவா?

    யார் வரலாறு பேசினாலும் அமைதியாக இருக்கிறீர்கள். நாங்கள் வரலாறு பேசினால் மட்டும் ஏன் இந்த ஆட்டம் ஆடுகிறீர்கள். அரசியலை விட்டுவிட்டு தொழிலுக்கு சென்று விட்டார் என்கிறீர்கள். நீங்களும் தான் ஒருமுறை சொல்லி இருக்கிறீர்கள். அரசியல் சரியில்லை என்றால் நான் ஆடு மாடு மேய்க்க போய்விடுவேன் என்று.

    அவர் அரசியலும் செய்கிறார். தொழிலையும் பார்க்கிறார். காரணம், அரசியல் கட்சி நடத்துவதற்கு பணம் தேவைப்படுகிறது. உங்களுக்கு கொட்டிக் கொடுப்பது போல மேலிருந்தும், கீழிருந்தும் கருப்பாகவும், வெள்ளையாகவும் கொட்டிக் கொடுக்க எங்களுக்கு யாரும் இல்லை. அப்படி கொடுத்தாலும் நாங்கள் வாங்குபவர்கள் அல்ல.

    எனவே தான் தொழிலையும் பார்க்கிறோம். அரசியலும் செய்கிறோம். இனியாவது ஒருவரை விமர்சனம் செய்வதற்கு முன்பு, பண்போடு பகுத்து ஆய்ந்து பேசுங்கள். அதுதான் படித்தவர்களுக்கு நல்லது. ஆகாயத்தை பார்த்து எச்சில் துப்ப ஆசைப்படாதீர்கள். அது உங்கள் முகத்தில் தான் விழும் என்றார்.

    • சிவப்பு வண்ண பால் பாக்கெட் வாங்க மக்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
    • ஒரு பக்கம் ஆவின் இனிப்பு வகைகளின் விலையை அரசு உயர்த்தி உள்ளது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் ஆவின் பால் நிறுவனம் அதிகமாக விற்பனை செய்து வந்த, மக்கள் விரும்பி வாங்கிய, அதிக சத்துமிக்க ஆரஞ்சு வண்ண ஆவின் பால் பாக்கெட் நிறுத்தப்பட உள்ளதாக அறிகிறேன். அதற்கு பதிலாக சிவப்பு வண்ண பால் பாக்கெட் வாங்க மக்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

    பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் எல்லாம் மிகச்சிறப்பாக லாபம் ஈட்டி இயங்கி கொண்டிருக்கும்போது தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மட்டும் எப்போதும் நஷ்ட கணக்கு காட்டி வருவது ஏன்?

    ஒரு பக்கம் ஆவின் இனிப்பு வகைகளின் விலையை இந்த அரசு உயர்த்தி உள்ளது. இப்போது தீபாவளிக்கு பால் மற்றும் பால் பொருட்களை பயன்படுத்தி பலகாரங்கள் எல்லாம் தயாரிக்கும் இந்த வேளையிலே மறைமுகமாக பால் விலையை உயர்த்தும் வகையில் ஆரஞ்சு வண்ணத்தை தடை செய்து சிவப்பு நிறத்தை முன்னிறுத்துவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    அதிலும் கறவை மாடு வைத்து பால் உற்பத்தி செய்துக்கொண்டிருக்கும் ஏழை விவசாய மக்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி கொடுக்காமல் விற்பனை விலையை மட்டும் அதிகரித்து மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது.

    ஆளும் அரசுக்கு ஆரஞ்சு வண்ணத்துக்கு பெருகி வரும் மக்கள் ஆதரவு அதிக வெறுப்பாகி விட்டது போல, அதனால் சிவப்பு வண்ணத்தை அதிகமாக வெளியிட்டு மக்கள் விரும்பாத சத்துக்குறைவான சிவப்பு வண்ணத்தை பயன்படுத்த கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மக்கள் கருத்தை அறிந்து செயல்படுவதே மக்களாட்சி.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நான் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி விட்டேன்.
    • சாமானியர்கள் மீது பாஜகவுக்கு அக்கறை இல்லை.

    பாட்னா :

    பீகார் மாநிலம் சமஷ்டிபூரில், அரசு என்ஜினீயரிங் கல்லூரியின் புதிய கட்டிடத்தை அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    வாஜ்பாய், அத்வானி, ஜோஷி போன்ற மாபெரும் தலைவர்களின் காலத்து பா.ஜனதாவில் இருந்து தற்போதைய பா.ஜனதா வேறுபட்டது. அந்த தலைவர்கள் என் மீது பாசமும், மரியாதையும் வைத்திருந்தனர். தற்போதைய தலைவர்களிடம் அதை பார்க்க முடியவில்லை. மேலும், சாமானியர்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை. நான் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி விட்டேன். என் வாழ்நாளில் இனிமேல் அக்கட்சியுடன் கைகோர்க்க மாட்டேன். மீதி வாழ்நாளில், சோஷலிஸ்டு கட்சிகளுடன் சேர்ந்து அனைத்துதரப்பினரின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவேன்.

    என்னுடன் கூட்டணியில் இருந்தபோது, 2017-ம் ஆண்டு லாலுபிரசாத் யாதவ் வீட்டில் சோதனை நடந்தது. ஒன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் மீண்டும் என்னுடன் கைகோர்த்தவுடன், அரசியல் எஜமானர்கள் உத்தரவுப்படி, அவர் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு போட்டு துன்புறுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியையும், மாநில மொழிகளையும் முன்னிறுத்துவதில் எந்த தவறும் இல்லை.
    • ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள தாய்மொழியை மோடி அரசு ஊக்குவித்து வருகிறது.

    புதுடெல்லி :

    இந்தி பேசும் மாநிலங்களில், ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், மற்ற மாநிலங்களில் மாநில மொழிகளே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு சிபாரிசு செய்துள்ளது.

    இதற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தியை திணித்து இன்னொரு மொழிப்போருக்கு வித்திட வேண்டாம் என்று அவர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனும் ஆட்சேபனை தெரிவித்தார். பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இந்தநிலையில், இந்த எதிர்ப்புகளை பா.ஜனதா நிராகரித்துள்ளது. பா.ஜனதா பொதுச்செயலாளரும், தமிழ்நாடு பா.ஜனதாவின் மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி கூறியதாவது:-

    நாடாளுமன்ற குழு, ஆங்கிலத்துக்கு மாற்றாகத்தான் இந்தியை முன்னிறுத்துகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி போன்ற மாநில மொழிகளுக்கு மாற்றாக இந்தியை சிபாரிசு செய்யவில்லை.

    ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியையும், மாநில மொழிகளையும் முன்னிறுத்துவதில் எந்த தவறும் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள தாய்மொழியை மோடி அரசு ஊக்குவித்து வருகிறது.

    கடிதம் எழுதிய தலைவர்கள், தமிழின் பெருமையையோ, மலையாளத்தின் பெருமையையோ வலியுறுத்தி கடிதம் எழுதி இருந்தால், பா.ஜனதா அதை வரவேற்கும்.

    ஆனால் அவர்கள் ஆங்கிலத்துக்கு ஆதரவாக கடிதம் எழுதி இருப்பது சரியல்ல. ஆங்கிலத்தை பயன்படுத்தும் மனப்பான்மையுடன் உள்ளனர். அவர்கள் காலனி மனப்பான்மையில் இருந்து வெளியே வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகல்கள் வழங்கப்பட்டன.

    கோவை;

    கோவை மாவட்ட பாஜக தலைமை அலுவலகம் மீது கடந்த மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக சதாம் உசேன், அகமது சிகாபுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான நகல்களை, இருவரிடமும் சிறையில் வழங்கப்பட்டன.

    • கங்குலி பாஜகவில் சேருவார் என்ற தகவலை மக்கள் மத்தியில் பரப்ப பாஜக முயன்றது.
    • கங்குலி வீட்டிற்கு சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரவு உணவு சாப்பிட்டார்.

    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தலைவர் பதவிக்கு 2வது முறையாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியிடவில்லை. எனினும் செயலாளர் பதவிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா 2வது முறையாக போட்டியிடுகிறார். கங்குலிக்கு பதில், பிசிசிஐ தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகின.

    இந்நிலையில் பாஜகவில் கங்குலி சேராததால், 2வது முறையாக அவருக்கு பிசிசிஐ தலைவர் பதவியை வழங்காமல் அவரை அக்கட்சி அவமானப் படுத்துவதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. இது குறித்து பேசிய திரிணாமுல் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், கடந்த ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாகவே, கங்குலி பாஜகவில் சேருவார் என்ற தகவலை மக்கள் மத்தியில் பரப்ப பாஜக முயன்றது என்றார்.

    கடந்த மே மாதம் கங்குலி வீட்டிற்கு சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரவு உணவு சாப்பிட்டதை திரிணாமுல் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. ஆனால் கங்குலி பாஜகவில் சேராதததால் அவரை அக்கட்சி அரசியல் ரீதியாக அவமானப்படுத்த முயற்சிப்பது வெளிப்படையாக தெரிகிறது என்றும் குணால் கோஷ் கூறினார்.

    ஜெய்ஷா இரண்டாவது முறையாக பிசிசிஐ செயலாளராக ஆகும் போது கங்குலி ஏன் பிசிசிஐ தலைவராக 2வது முறையாக வர முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் திரிணாமுல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ள பாஜக, கொல்கத்தா இளவரசரை, ஒருபோதும் கட்சியில் சேர்க்க முயற்சிக்கவில்லை என்று கூறியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜன சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் எடியூரப்பா, பசவராஜ்பொம்மை ஆகியோர் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்கள், மக்களை சந்திக்க உள்ளனர்.
    • முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் ராய்ச்சூரில் இருந்து தங்களது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்க அக்கட்சி மேலிடம் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய ஒற்றுமைக்கான பாதயாத்திரையை ராகுல்காந்தி கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கினார்.

    அவர் மைசூரு, துமகூரு வழியாக நேற்று சித்ரதுர்காவில் தனது நடைபயணத்தை மேற்கொண்டார். அவரது பாதயாத்திரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    இதற்கு பதிலடியாகவும், சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டும் பா.ஜனதா மேலிடம் காங்கிரஸ் பாதயாத்திரைக்கு போட்டியாக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, தற்போதைய முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை ஆகியோரை களத்தில் இறக்கியுள்ளது. இரு தலைவர்களும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள்.

    அதன்படி ஜன சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் எடியூரப்பா, பசவராஜ்பொம்மை ஆகியோர் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்கள், மக்களை சந்திக்க உள்ளனர். அவர்களின் சுற்றுப்பயணம் வடகர்நாடகத்தில் உள்ள ராய்ச்சூரில் இன்று தொடங்குகிறது.

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் ராய்ச்சூரில் இருந்து தங்களது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளனர். 50 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்த 2 தலைவர்களும் முடிவு செய்து உள்ளனர்.

    ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி, கொப்பல் மாவட்டம் குஷ்டகி, விஜயநகர் மாவட்டம் ஊவினஅடஹள்ளி, பல்லாரி மாவட்டம் சிருகுப்பாவில் அடுத்த 3 நாட்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள்.

    அதன்பின்னர் 2 நாட்கள் ஓய்வு எடுக்கும் பசவராஜ் பொம்மை மைசூருவில் 16-ந் தேதி நடக்கும் எஸ்.சி. சமூக மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதன்பின்னர் பீதர், யாதகிரி, கலபுரகி மாவட்டங்களில் பசவராஜ் பொம்மை சுற்றுப்பயணம் செய்கிறார்.

    • மதுரை சிலைமான் பகுதியில் உள்ள கல்லம்பல் வில்வநாதர் கோவிலில் மாவட்ட பா.ஜ.க. சார்பில் கடந்த 7-ந் தேதி சிறப்பு பூஜை நடந்தது.
    • மதுரை மாவட்ட பா.ஜ.க தலைவர் மகா. சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை:

    மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைய வேண்டி தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வினர் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    மதுரை சிலைமான் பகுதியில் உள்ள கல்லம்பல் வில்வநாதர் கோவிலில் மாவட்ட பா.ஜ.க. சார்பில் கடந்த 7-ந் தேதி சிறப்பு பூஜை நடந்தது.

    இதில் மதுரை மாவட்ட பா.ஜ.க தலைவர் மகா. சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் மகா. சுசீந்திரன் கூறுகையில், இந்து சமயத்தை கேவலப்படுத்துவதற்காகவே ஒரு கும்பல் திரிந்து வருகிறது. அவர்கள் சுய லாபம்-அரசியல் ஆதாயத்திற்காக, இந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசி வருகின்றனர்.

    அதனை நாங்கள் இனிமேலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இந்து மதத்தையும், கடவுள்களையும் அசிங்கமாக பேசுபவர்களின் உடலில் நாக்கு இருக்காது. அதனைத் துண்டு துண்டாக வெட்டி வீசுவோம் என்றார்.

    இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் மகா. சுசீந்திரன் மீது, சிலைமான் போலீசார், பொது இடத்தில் அவமரியாதையாக பேசியது, சட்டம்-ஒழுங்கு, அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பேசியது, தொண்டர்களை வன்முறைக்கு தூண்டியது உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இமாசலபிரதேசத்தை சேர்ந்த நட்டாவின் வயது 61.
    • ஜே.பி.நட்டா பிரதமர் மோடியின் நம்பிக்கையை பெற்றவர்.

    புதுடெல்லி :

    பா.ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் 3 ஆண்டு பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைகிறது.

    இருப்பினும், அவருக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. ஏனென்றால், 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருகிறது. அதற்கு முன்பு, சில முக்கியமான மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன.

    கட்சியில் அதே நிர்வாகம் நீடிப்பது மேற்கண்ட தேர்தல்களுக்கு உதவும் என்று கட்சி மேலிடம் கருதுகிறது. எனவே, 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை ஜே.பி.நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்படக்கூடும் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

    பா.ஜனதாவின் உயரிய அமைப்பான ஆட்சி மன்ற குழு, இதற்கு ஒப்புதல் அளிக்கும் என்று தெரிகிறது.

    பொதுவாக, தேசிய தலைவர் தேர்தல் நடப்பதற்கு முன்பு, பாதி மாநிலங்களிலாவது மாநில பா.ஜனதாவின் உட்கட்சி தேர்தல்கள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், தற்போது வரை மாநில பா.ஜனதாவில் உட்கட்சி தேர்தல்கள் தொடங்கப்படவில்லை. ஜே.பி.நட்டா நீடிப்பார் என்பதற்கான அறிகுறியாக இதை சுட்டிக்காட்டுகிறார்கள்.

    நட்டாவுக்கு முன்பு தலைவராக இருந்த அமித்ஷாவுக்கும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகுதான் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு, நட்டா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இமாசலபிரதேசத்தை சேர்ந்த நட்டாவின் வயது 61. அவர் பிரதமர் மோடியின் நம்பிக்கையை பெற்றவர். ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கு நெருக்கமானவர். அமித்ஷா உருவாக்கிய உத்வேகத்தையும், சுறுசுறுப்பையும் அவர் முன்னெடுத்து செல்வதாக கருதப்படுகிறார்.

    அவர் தலைவரான பிறகு உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.

    பீகாரில் கூட்டணியாக வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் பலமான சக்தியாக உருவெடுத்தது. மேற்கு வங்காளம் மட்டுமே பின்னடைவாக அமைந்தது.

    • 2017-ம் ஆண்டு, ஊழலுக்காக லாலுபிரசாத் யாதவிடம் இருந்து நிதிஷ்குமார் விலகினார்.
    • தற்போது, ஊழல் விவகாரத்தில் கண்ணை மூடிக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது

    புதுடெல்லி :

    ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ், ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, வேலை வழங்க நிலம் லஞ்சமாக கைமாறியதாக புகார் எழுந்தது. அதன்பேரில், லாலுபிரசாத், அவருடைய மனைவி ராப்ரிதேவி, மூத்த மகள் மிசார பாரதி எம்.பி. உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்திருந்தது.

    இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக சி.பி.ஐ. கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

    ஆனால் இதுபற்றி கருத்து தெரிவித்த பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், ''அந்த வழக்கில் எதுவுமே வெளிவரவில்லை. நான் இப்போது அவருடன் கூட்டணியில் இருக்கிறேன். சி.பி.ஐ. தங்கள் ஆசைக்கேற்ப செயல்படுகிறது'' என்று கூறினார்.

    இந்தநிலையில், நிதிஷ்குமாருக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நிதிஷ்குமார், தான் வாழ்நாளில் கட்டிக்காப்பாற்றிய முக்கிய கொள்கைகளை லாலுவையும், அவரது குடும்பத்தையும் ஊழல் வழக்கில் ஆதரித்து பேசுவதன் மூலம் சமரசம் செய்து கொண்டு விட்டார்.

    2017-ம் ஆண்டு, ஊழலுக்காக லாலுபிரசாத் யாதவிடம் இருந்து நிதிஷ்குமார் விலகினார். ஆனால் அவரே தற்போது, ஊழல் விவகாரத்தில் கண்ணை மூடிக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது, துரதிருஷ்டவசமானது.

    அவர் சட்டத்தை செயல்பட விட வேண்டும். அதில் குறுக்கிடக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பேனர்களை கிழித்தது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர்.
    • பாஜகவின் தோல்வி பயத்தை இந்த அராஜகம் காட்டுவதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் குறிப்பிட்டார்.

    வதோதரா:

    குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று அவர் தலைமையில் வதோதராவில் மூவர்ணக்கொடி யாத்திரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கட்சியினர் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆனால், கெஜ்ரிவாலின் இந்த யாத்திரைக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில், டெல்லியின் ஆம் ஆத்மி அமைச்சர் ஒருவர் இந்து விரோத கருத்துக்களை கூறியதாக கூறி பாஜகவினர் இன்று வதோதராவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மூவர்ணக்கொடி யாத்திரை தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் படம் அச்சிடப்பட்டிருந்த பேனர்களை கிழித்து எறிந்தனர். இந்த அத்துமீறல் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவம் காரணமாக பாஜகவினருக்கும் ஆம் ஆத்மி கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்படும் ஊழல் உருவானது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் துர்கேஷ் பதக் கூறுகையில், குஜராத்தில் பாஜகவின் தோல்வி பயத்தை இந்த அராஜகம் காட்டுகிறது என்றார்.

    ×