என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96310"

    • மானாமதுரை பகுதியில் சனிபிரதோஷ வழிபாடு செய்யப்பட்டது.
    • 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள குறிச்சிகாசி விஸ்வநாதர் கோவிலில் சனிபிரதோஷ வழிபாடு நடந்தது. காசிவிஸ்வநாதர், காசிநந்திக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கங்கை தீர்த்தத்தால் சிவலிங்கத்திக்கு அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர்.

    இதேபோல் இடைக்காட்டூர் மணிகண்டேஸ்வரர், மேலெநெட்டூர் சொர்ண வாரீஸ்வரர், வேம்பத்தூர் கைலாசநாதர், கட்டிக்குளம் ராமலிங்கம் சுவாமி, மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர், சிருங்கேரி சங்கரமடத்தில் உள்ள சந்திர மவுலீசுவரர் ஆகிய கோவில்களிலும் சனிபிரதோஷம் வழிபாடு-அபிஷேகம் பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் சனி மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்தியம்பெருமானுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரதட்சணம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பிரதோஷ வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

    • சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம்

    கரூர்

    வேலாயுதம்பாளையம் அருகே காகிதபுரம் குடியிருப்பு காசிவிஸ்வநாதர் கோவிலில் உள்ள நந்திபகவானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் நஞ்சை புகழூரில் உள்ள மேக பாலீஸ்வரர்கோவிலில் ஜப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தாா்

    நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் உள்ள சிவன்கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • வடுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான அதிகாரி மற்றும் ஸ்தானிகர் ரவி குருக்கள் செய்திருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சிவபுரி பட்டியில் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயத்தில் வடுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திருமஞ்சனம், பால், அரிசி மாவு, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனாதி திரவியங்கள் மூலம் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக ஹோமங்கள் நடந்தன.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான அதிகாரி மற்றும் ஸ்தானிகர் ரவி குருக்கள் செய்திருந்தனர்.

    • கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் நந்தவனத்தில் ஸ்ரீ ராமர் கோவில் அமைந்துள்ளது.
    • இந்த கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் நந்தவனத்தில் ஸ்ரீ ராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதையொட்டி கோவி லில் உள்ள சர்வ சித்தி வலம்புரிவெற்றிவிநாயகர், மூலஸ்தான கருவறையில் அமைந்துஉள்ள ராம பெரு மான், அதன் எதிரே அமைந்து உள்ள 9 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் ஆகியோருக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள் பொடி, மா பொடி, களபம், சந்தனம், விபூதி, குங்குமம், மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம்நடந்தது.

    அதைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலையில் ராமபிரா னுக்கு வெள்ளிஅங்கி சாத்தி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஆஞ்சநேயருக்கு முழு உருவ பஞ்சலோக அங்கிசாத்தி 1008 வடை மாலை அணிவித்து மலர்களால் அலங்கரிக் கப்பட்டு இருந்தது. சர்வ சித்தி வலம்புரி வெற்றி விநாயகருக்கும் மலர்களால் அலங்காரம்செய்யப்பட்டு இருந்தது.

    பின்னர் இரவு 7.30 மணிக்கு சர்வ சித்தி வலம்புரி வெற்றி விநாயகர், ஸ்ரீ ராமர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சிறப்பு வழிபாடுகளும், விசேஷ பூஜைகளும், அலங்கார தீபாரதனையும் நடந்தது.

    அதைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. அன்னதான நிகழ்ச்சியை கொட்டாரம் ஸ்ரீராமர் கோவில் பக்தர்கள் சங்க தலைவர் ராமச்சந்தி ரன் தொடங்கி வைத்தார். செயலாளர் ஏ.பி.முத்து, துணைத்தலைவர் ராஜகோபால், மேற்கு குழு உறுப்பினர் அய்யம் பெருமாள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆஞ்சநேயரை புரட்டாசி மாத சனிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.
    • ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் அதிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் 16 அடி உயர வைராக்கிய விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது.

    இந்த ஆஞ்சநேயரை புரட்டாசி மாத சனிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.

    அதன்படி புரட்டாசி மாதம் சனிக்கிழமையையொட்டி நேற்று வைராக்கிய விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிங்காரவடிவேலு.

    தலைமை பட்டாச்சாரியார் வெங்கடேசன் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சீனிவாச பெருமாள்கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இங்கும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்திருப்பதி என்று அழைக்கபடும் திருவண்ணா மலை சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இங்கு பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

    மேலும் இன்று புரட்டாசி 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று அதிகாலை 3 மணிக்கு சீனிவாசப் பெருமாளுக்கு திருமஞ்சனம், 5.30 மணிக்கு காலசாந்தி பூஜை ஆகியவை நடந்தது. இதில் ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் பலர் இங்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஆடு, மாடுகள், விவசாய பொருட்கள், தானிய பொருட்கள் ஆகியவற்றை சீனிவாசப்பெருமாளுக்கு காணிக்கையாக வழங்கி வருகிறார்கள்.

    இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பஸ் வசதிகள், மருத்துவம், குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 30-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்கபட்டு வருகின்றனர்.

    விழா ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள காட்டழகர் கோவிலிலும் 4-ம் சனிக்கிழமை பிரமோற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது. இங்கும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கடந்த ஜுலை மாதம் 21-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டலபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு 19 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கடந்த ஜுலை மாதம் 21-ம் தேதி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டலபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்நிலையில், மண்டலபிஷேகம் நிறைவு விழாவான இன்று காலை கலசபிஷேகம், 108 சங்காபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. இரவு மயில் வாகனத்தில் சுவாமி திரு மீது உலா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் சித்ரா தேவி, செயல் அலுவலர் செந்தில்குமார், எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ரஷ்யா, இங்கிலாந்து, அர்ஜென்டினா உள்ளிட்ட 9 நாடுகளை சேர்ந்த 30 பேர் கொண்ட வெளிநாட்டு குழுவினர் வந்தனர்.
    • நவகிரக தலங்களுக்கு சென்று வழிபாடு செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தையல்நாயகி அம்பாள் சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த கோவிலுக்கு வாழும் கலை அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் சீடர் சுவாமி பிரணவானந்தா தலைமையில் தைவான், ஸ்பெயின், கஜகஸ்தான், குரோஷியா, ரஷ்யா, இங்கிலாந்து, பங்களாதேஷ், அர்ஜென்டினா, உருகுவே ஆகிய 9 நாடுகளைச் சேர்ந்த 30 பேர் கொண்ட வெளிநாட்டு குழுவினர் வந்தனர்.

    அவர்கள் சுவாமி, அம்பாள், செல்வ முத்துக்குமார சுவாமி, செவ்வாய் பகவான் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    முன்னதாக வெளிநாட்டினர் நவகிரக தலங்களுக்கு சென்று வழிபாடு செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    கோவில் கோபுரங்கள் மற்றும் சிற்பங்களை பார்த்து வியந்த வெளிநாட்டினர் சுவாமி சன்னதிகள் கோபுரங்கள் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    • சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தில் விரதமிருந்து பெருமாளை வழிபடுவர்.
    • தேர் வீதிவுலா முடிந்து காவிரி ஆற்றில் பெருமாளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே நீடூர் சாலை பல்லவராயன்பேட்டையில் அமைந்துள்ள தென்தி ருப்பதி வேங்கடாஜலபதி என்று அழைக்கப்படும் சீனிவாச பெருமாள் கோயிலில் தமிழ் மாதமான புரட்டாசி மாதத்தில் விரதமிருந்து பெருமாலை வழிபடுவார்கள்.

    எஸ்.ஆர்.பட்டர் சுவாமிகள் தலைமையில் நேற்று தேர் வீதிவுலா முடிந்து காவிரி ஆற்றில் சுவாமி பெருமாளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஏராமான பக்தர்கள் ஆற்றில் இறங்கி கோவிந்தா கோவிந்தா என கோஷங்கள் எழுப்பியவாறு குளித்து சாமியை வழிப்பட்டனர்.

    கோயில் தர்மகர்த்தாக்கள் சந்தானகிருஷ்ணன், மகாதேவன், ரெங்கநாதன், லெட்சுமிநாராயணன், மற்றும் கோயில் ஊழியர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.

    • வில்வமரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள்.
    • வில்வ இலை உலர்ந்து போனாலும் கூட பூஜைக்குப் பயன்படுத்தலாம்.

    வில்வ இலை ரொம்பவே உயர்வானது. வில்வத்தோட பெருமைகளைப் பற்றி சிவபுராணம் விரிவாக சொல்லி உள்ளது. வில்வமரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள். ஒரு வில்வ மலரானது ஒரு லட்சம் தங்க புஷ்பங்களுக்கு இணையானது என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி என்றால் அதோட சிறப்பு உங்களுக்குப் புரியுமே.

    அதைத் தவிர ஒரு வில்வ மரத்தை வீட்டுல வளர்த்தால் அஸ்வமேத யாகம் செஞ்ச பலனும், ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனும், கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் உலகில் உள்ள அத்தனை சிவாலயங்களைத் தரிசித்த பலனும் கிடைக்கும்.

    அதைத் தவிர வில்வத்துக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு அதற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதைப் பறித்து எத்தனை நாள்கள் ஆனாலும் உலர்ந்து போனாலும் கூட பூஜைக்குப் பயன்படுத்தலாம். மற்ற மலர்களையோ இலைகளையோ அந்த மாதிரிப் பயன்படுத்தக் கூடாது. இது வில்வத்துக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு.

    • சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை வழிபாடு நடைபெற்று வருகிறது.
    • பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவ ட்டம், சீர்காழி அடுத்த திருவெள்ளக்குளம் கிராமத்தில் 108 வைணவ தலங்களில் 39-வது திவ்யதேசமான, குமுதவல்லி தாயார் சமேத அண்ணன் பெருமாள் கோவில் உள்ளது.

    குமுதவள்ளி தாயார் அவதரித்த இத்தலத்தில் அண்ணன் பெருமாளை வேண்டி திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்கள் பாடி மங்களாசாசணம் செய்துள்ளார்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் திருப்பதியை போன்று புரட்டாசி மாதம் 12 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 27-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நாள்தோறும் பெருமாள் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை வழிபாடு நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது.

    முன்னதாக பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று, ஆபரணங்கள், மலர்கள் கொண்டு அலங்காரம் நடைபெற்றது.

    தொடர்ந்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×