என் மலர்
நீங்கள் தேடியது "slug 96565"
- போலீசை கண்டதும் டெம்போ டிரைவர் வண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
- வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய டெம்போ டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே குமரன்குடியில் இருந்து செம்மன் கடத்தப்படுவதாக திருவட்டார் தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே திருவட்டார் தாசில்தார் குமரன்குடி கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் அதிரடியாக அந்த பகுதியில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது செங்கோடி அருகே காரியமங்கலத்துவிளை பகுதியில் டெம்போவில் சிலர் செம்மண் ஏற்றிகொண்டு இருந்தார்கள்.
போலீசை கண்டதும் டெம்போ டிரைவர் வண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். கிராம நிர்வாக அதிகாரி ஜெகன் அருள் டெம்போவை கைப்பற்றி திருவட்டார் போலீசில் ஒப்படைத்தார். அவர் கொடுத்த புகாரின்பேரில் திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய டெம்போ டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- வாலிபர் காரில் கடத்தப்பட்டார்.
- தந்தை போலீசில் புகார் கொடுத்தார்
கரூர்:
கரூர், தான்தோன்றிமலை, தெற்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் தனுஷ்(வயது18). இவரது, நண்பர் சூர்யாவின் காதல் திருமணத்துக்கு தனுஷ் உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு, 2 பேர் தனுஷ் வீட்டிற்கு காரில் சென்றனர். இவர்களை பார்த்த தனுஷ் நீங்கள் யார்? எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அவர்கள் எதுவும் பேசாமல் தனுஷை தாங்கள் கொண்டு வந்த காரில் தூக்கிப்போட்டு கொண்டு சென்றனர். இதனை பார்த்த கிருஷ்ணன் பதட்டம் அடைந்தார். பின்னர் இவர் கொடுத்த புகாரின் பேரில் தான்தோன்றிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏரியில் கவிழ்ந்த லாரியில் 10 டன் அளவில் 300-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் இருந்தது.
- லாரி ஓட்டி வந்தது யார் என்பது குறித்து காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த அமரம்பேடு பகுதியில் குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி மர்ம நபர்கள் லாரியில் ரேஷன் அரிசி கடத்தி சென்றனர். திடீர் என லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் உள்ள ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஏரியில் கவிழ்ந்த லாரியில் 10 டன் அளவில் 300-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் இருந்தது. ரேஷன் அரிசி கடத்தி சென்ற லாரி ஏரி பகுதியில் கவிழ்ந்தது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சோமங்கலம் போலீசார் விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்த லாரி டிரைவர் மற்றும் லாரியில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். லாரியில் கடத்திவரப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது. லாரி ஓட்டி வந்தது யார் என்பது குறித்து காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.13 லட்சம் அபராதம் வசூல்
- குமரி மாவட்ட கனிம வளம் கடத்தல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் நடவடிக்கை
கன்னியாகுமரி:
குமரி மாவட்ட கனிம வளம் கடத்தல் பிரிவு சப் - இன்ஸ்பெக்டராக பணி புரிபவர் திலீபன். இவருக்கு நேற்று மாலை கேரளாவுக்கு மணல் கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சுதாரித்து கொண்டு குமரி மாவட்டம் தக்கலை பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டார்.
அப்போது நெல்லை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு மணல் கொண்டு சென்ற 18 டாரஸ் லாரிகளை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அனுமதி இல்லாமல் மணல் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து 18 டாரஸ் லாரிகளையும், ரூ. 13 லட்சம் அபராதமும் விதித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் திடீர் நடவடிக்கையால் கடத்தல் கும்பல் அச்சத்தில் உள்ளனர்.
- மாணவி கடந்த 10 ஆம் தேதி இரவு 8 மணியில் வீட்டில் இருந்தவர் திடீரென காணவில்லை.
- காந்தி நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் கோகுல கண்ணன் (வயது24) என்பவர் கடத்தி சென்றதாக தகவல் தெரிந்தது.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள சிங்கிரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). இவரது மகள் மொரப்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி கடந்த 10 ஆம் தேதி இரவு 8 மணியில் வீட்டில் இருந்தவர் திடீரென காணவில்லை.
பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் காந்தி நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் கோகுல கண்ணன் (வயது24) என்பவர் கடத்தி சென்றதாக தகவல் தெரிந்தது.
இது குறித்து கண்ணன் மொரப்பூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் மொரப்பூர் போலீஸ்- இன்ஸ்பெக்டர் வசந்தா வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவியையும், கடத்தி சென்ற கோகுல கண்ணனையும் தேடி வருகிறார்கள்.
- 4 வழிச்சாலை பணிகள் தாமதத்திற்கு தி.மு.க. அரசே காரணம்
- முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
நாகர்கோவில்:
முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் ஆதாயத்திற்காக மதரீதியான பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து அமைதி நாடி அனைத்து மக்களும் இருக்கும்போது மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என் கின்ற முனைப்போடு சிலர் செயல்பட தொடங்கி இருக்கிறார்கள்.
30 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பிரச்சனை இல்லாத ஊரில் புதிய பிரச்சினைகள் எல்லாம் எழுப்பி இப்போது பூதாகரமாக கொண்டு வரக்கூடிய நிலை உள்ளது. இது மிகவும் துரதிஷ்ட வசமானது.மாவட்ட ஆட்சியாளரும், காவல்துறை கண்காணிப்பா ளரும் ஒரு அழுத்தங்கள் காரண மாக நெருக்கடிக்கு தள்ளப்படுகிறார்கள்.
அமைச்சர் மனோ தங்கராஜ் பேசும் போது எனக்கு சவால் விட்டு உள்ளார். எங்கு வேண்டு மானாலும் வாருங்கள். விவாதத்திற்கு வாருங்கள் என்று கூறியுள்ளார். நான் அதற்கு தயாராக உள்ளேன். மனோ தங்கராஜ் அவர் சார்ந்துள்ள கட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டும். அவரது செயல் பாடுகள் அந்த நம்பிக்கையை தரவில்லை.
மாவட்டத்திலிருந்து குவாரிகள் மூலமாக வெளிமா நிலங்களுக்கு கற்கள் எடுத்துச் செல்லப்படு கிறது. இதில் ஆணை பிறப்பிக்க வேண்டியது அமைச்சர்தான். அவர், கோரிக்கை வைக்கக் கூடாது. ஆனால் மாவட்ட கலெக்டரிடம் அவர் மனு கொடுக்கிறார்.
கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள 51 டவுன் பஞ்சாயத்துகளுக்கும் ஒவ்வொரு டவுன் பஞ்சாயத்துக்கும் ஏறக்கு றைய 52 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் நிதி இந்த ரூபாயில் 15 சதவீதம் தனியாக தனக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று எழுதப்படாத ஆணை எல்லா பஞ்சாயத்துக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைவிட தலைகுனிவு வேறு ஏதும் உண்டா?.
குமரி மாவட்டத்தில் இருந்த சூழ்நிலைகளை எல்லாம் தமிழக முதல்-அமைச்சர் நேரடி பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். என்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி தலைமையில் 11-ந்தேதியிலிருந்து 15-ந் தேதிக்குள் நேரம் கொடுக்க வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டு இருக் கின்றது. மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் சேர்ந்து சந்திக்க உள்ளோம்.
நாம் அடுத்த கட்டத்திற்கு பயணம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். நான்கு வழி சாலையில் நாங்கள் என்ன செய்ய தவறினோம் என்பதை கூறுங்கள். எம்.எல்.ஏ., எம்.பி. உள்ளீர்கள். நீங்கள் ராஜினாமா கடிதம் எழுதி தாருங்கள். அடுத்த மூன்று மாத காலத்தில் இந்த மாவட்டத்தில் அனைத்து பணிகளும் தொடங்கப்படுகிறதா என்பதை நீங்கள் பாருங்கள்.
தேங்காய் பட்டின துறைமுகத்திற்கு மத்திய அரசு நிதி கோடிக்கணக்கில் கொடுக்கப்பட்டுள்ளது.இதுவரை 27 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். தேங்காய் பட்டினம் துறைமுகத்தை மீண்டும் கட்டிக் கொடுக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். இனி அங்கு ஒரு உயிரிழப்பு ஏற்படக்கூடாது.
கிழக்கு கடற்கரை சாலை எனது முக்கிய திட்டங்களில் ஒன்று. இங்கிருந்து மகாபலிபுரம் வரை அந்த திட்டம் உள்ளது.தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரை ரூ.2600 கோடி திட்டத்தை தற்போது மாநில அரசு கேட்டு வாங்குகிறது. துறைமுகத்தில் தவறு நடந்துள்ளது. அதனை சரி செய்ய கால அவகாசம் கிடைத்துள்ளது. என்ன செய்துள்ளார்கள்? இங்கு மண் இல்லை, ஜல்லி இல்லை. கேரளாவிற்கு கனிமவளங்கள் செல்வதை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? தி.மு.க. ஆட்சி காலத்தில் கனிம வளங்கள் கேரளா செல்லவில்லை என்று கூறுங்கள். நாங்கள் பாராட்டுகிறோம்.
4 வழி சாலை பணிகள் தாமதத்திற்கு தி.மு.க. அரசே காரணம். ஜல்லி, மண், தண்ணீர் கொடுக்கா விட்டால் எப்படி பணிகள் நடைபெறும். உங்களால் முடியவில்லை என்றால் கூறுங்கள். மத்திய மந்திரி நிதின் கட்கரி கடந்த 26-ந்தேதி எனக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் 4 வழிசாலை பணிகளை விரைவாக தொடங்கி முடிப்பதாக கூறியுள்ளார்.இது தொடர்பாக மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, வி.கே.சிங் ஆகியோரை சந்தித்து பேசினேன். மாவட்டத்தின் வளர்ச்சி பற்றி அமைச்சர் மனோ தங்கராஜ் கவலைப்பட வில்லை. தி.மு.க. தலைவ ராக மீண்டும் பொறுப்பேற் றுள்ள முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன், துணைத் தலைவர் தேவ் ஆகியோர் உடன் இருந்தனர்.
- குழித்துறை அருகே கார், ஆட்டோ மூலம் முயற்சி
- வட்ட வழங்கல் அதிகாரி அதிரடி நடவடிக்கை
கன்னியாகுமரி:
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு குழித்துறை அருகே வெட்டுமணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் அந்த கார் நிறுத்தாமல் சென்று விட்டது. தொடர்ந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று உதச்சிக்கோட்டை பகுதியில் வைத்து காரை மடக்கி பிடித்தனர். ஆனால் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். காரை சோதனை செய்து பார்த்த போது அதில் சிறுசிறு மூடைகளாக சுமார் 1000 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும் அதே பகுதியில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்துக்கு இடமாக ஆட்டோ ஒன்று வந்துக் கொண்டிருந்தது.ஆட்டோவை நிறுத்துமாறு சைகைகாட்டியும் ஆட்டோ நிற்காமல் சென்று விட்டது. தொடர்ந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மார்த்தாண்டம் பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். ஆனால் டிரைவர் தப்பி ஓடி விட்டார். ஆட்டோவை சோதனை செய்து பார்த்த போது அதில் சுமார் 500 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்க பட்டது.
இந்த ரேசன் அரிசி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.
பின்னர் ஆட்டோவில் இருந்தும் காரிலிருந்தும் கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் வாக னங்களை வட்டாச்சியர் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய டிரைவர்கள் யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
- வடலூரில் போலீஸ் லாரியில் இரும்பு பொருட்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஆண்டார் முள்ளிபள்ளம்பாலக்குமார் தப்பி ஓடிவிட்டார்.
கடலூர்:
வடலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் வடலூர் 4 முனை ரோட்டில் அதிகாலை 5 மணிக்கு வாகன தணிக்கை செய்தனர் . அப்போது மினி லாரியில் வந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் ஆண்டார் முள்ளி பள்ளம் அம்பேத்கார் நகர் இளையபெருமாள் (வயது34) பெரியப்பட்டு பாண்டியன் தமிழரசன்(36) ஆகியோர் என தெரியவந்தது.
இவர்களுடன் வந்த ஆண்டார் முள்ளிபள்ளம்பா லக்குமார் தப்பி ஓடிவிட்டார். லாரியில் கடத்திய இரும்பு பொருட்கள் கடலூரில்மூடிக்கிடக்கும் கம்பெனி இரும்புஎந்திரங்கள் எனவும் இதன்மொத்த எடை,3.5 டன் என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை
- ஜே.சி.பி. எந்திரத்தை பறிமுதல் செய்து தக்கலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி:
தக்கலை சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை தக்கலை அருகே பள்ளியாடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கனிம வளங்கள் எடுத்து கடத்தப்படுவதாக தக்கலை தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக தாசில்தார் வினோத் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ராஜேஷ், மருதூர்குறிச்சி கிராம அதிகாரி குமார் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அதிகாரிகளை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. உடனே மருதூர்குறிச்சி கிராம அதிகாரி குமார் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கனிம வளம் கடத்த முயன்றதாக டிரைவர் விருதுநகர் தபசுலிங்கம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 25) என்பவரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி. எந்திரத்தை பறிமுதல் செய்து தக்கலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- தொழிலாளி ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
- கைது செய்யப்பட்ட நபர் போலீஸ் காவலில் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றுள்ளார்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36), இவரது மனைவி ஜஸ்லீன் கவுர், இவர்களின் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி மற்றும் உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர் கடத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த திங்கட்கிழமை மெர்சிட் கவுன்டியில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் வைத்து கடத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை தேடிவந்தனர்.
இந்நிலையில், காணாமல் போன 4 பேரின் சடலமும் இண்டியானா சாலை மற்றும் ஹட்ச்ஹின்சன் சாலையை ஒட்டிய பழத்தோட்டத்தில் மீட்கப்பட்டுள்ளது. தொழிலாளி ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக ஜீஸஸ் மேனுவல் சால்கடோ (வயது 48) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த நபர் போலீஸ் காவலில் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டவர்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட சீக்கிய மதத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மும்பை விமான நிலையம் வழியாக போதை பொருள் கடத்த இருப்பதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கைது செய்த அதிகாரிகள், போதை பொருள் கடத்தலில் பினு ஜானுக்கு மேலும் பலருடன் தொடர்பு இருக்கலாம் என கருதுகிறார்கள்.
நாடு முழுவதும் போதை பொருள் கடத்தலை தடுக்க வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விமான நிலையங்களிலும் பயணிகளின் உடமைகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டன.
இந்நிலையில் மும்பை விமான நிலையம் வழியாக போதை பொருள் கடத்த இருப்பதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அதிகாரிகள் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது விமானத்தில் வந்த பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடமைகளை சோதனை செய்தபோது அதில் எதுவும் இல்லை.
இதையடுத்து அந்த வாலிபரின் டிராலி பேக்கை கைப்பற்றி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 16 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.80 கோடி ஆகும்.
இதனை கடத்தி வந்த வாலிபர் கேரள மாநிலத்தை சேர்ந்த பினு ஜான் என தெரியவந்தது. அவரை கைது செய்த அதிகாரிகள், போதை பொருள் கடத்தலில் பினு ஜானுக்கு மேலும் பலருடன் தொடர்பு இருக்கலாம் என கருதுகிறார்கள்.
இது தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 8 மாத பெண் குழந்தை உள்பட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் கடத்தப்பட்டனர்.
- இந்தச் சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36). இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் அமன்தீப் சிங் (39), ஆகியோருடன் வசித்து வருகிறார்.
கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இவர்கள் 4 பேரும் கடத்தப்பட்டனர். இவர்களை கடத்தியது யார், எதற்காக கடத்தப்பட்டனர் என்ற விபரம் தெரியவில்லை. ஆனால் கடத்திய நபர் பயங்கர ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும், அவரை கண்டால் மக்கள் நெருங்கி செல்லாமல் தொடர்பு கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 8 மாத குழந்தை உள்பட இந்திய வம்சாவளியினர் 4 பேர் கடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.