என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 97500"
- வாலிபரை தாக்கிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- வெங்கடேஷ் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டி யாதவர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துராஜா (வயது 35). இவர் அங்குள்ள கண்ணகி கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி நடந்த கலை நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது அேத பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் விசிலடித்து அங்கிருந்தவர்களை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனை முத்துராஜா தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. அங்கி ருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு வந்த முத்துராஜா சிறிது நேரம் கழித்து மீண்டும் கலை நிகழ்ச்சி களை பார்ப்பதற்காக சென்றார். அப்போது அங்கு வெங்க டேஷ் மற்றும் அவரது உறவினர்க ளான ராகவன், ரமேஷ், முத்து, முத்து சரவணன், லட்சுமி உள்ளிட்ட 11 பேர் அவரை வழி மறித்து தகராறு செய்த னர். மேலும் அவரை தாக்கினர். இதை தடுக்க வந்த முத்துராஜாவின் தந்ைத முத்தையா, ராமகிருஷ்ணன், ஆதிமுகிலா ஆகியோருக்கும் அடி-உதை விழுந்தது. இதில் காயம் அடைந்த வர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இதுகுறித்து முத்துராஜா கூமாப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய் தார். அதன்பேரில் போலீசார் வெங்கடேஷ் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
- சிவகுமார் (வயது 49). இவர், தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
- 6 பேர் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது.
ஏற்காடு:
ஏற்காடு டவுன் பகுதியில் காய்கறி கடை நடத்தி வருபவர் சிவகுமார் (வயது 49). இவர், தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கி ளில் சென்றார். அப்போது 6 பேர் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது.
இதைக்கண்ட சிவ குமார், மோட்டார் சைக்கிளில் 'ஹார்ன்' அடித்தார். இதனால் சாலையில் நின்றவர்களுக்கும். சிவகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே அவர்கள் சிவகுமாரை தாக்கி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான புகாரின் பேரில் ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த னர். அவர்கள் யார் என்பதை அடை யாளம் காண அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து சிலர் அதில் உழுது நாற்று நட முயற்சித்தனர்.
- ஊராட்சி தலைவியின் கணவர் காளிதாஸ் தடுத்தார். மேலும் ஆக்கிரமிப்பாளர்களை கண்டித்தார்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளைமேனி ஊராட்சிமன்ற தலைவர் சாந்தி. இவரது கணவர் காளிதாஸ் (45). சூளைமேனி கிராம எல்லையில் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பில் மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது.
வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து சிலர் அதில் உழுது நாற்று நட முயற்சித்தனர்.
இதனை ஊராட்சி தலைவியின் கணவர் காளிதாஸ் தடுத்தார். மேலும் ஆக்கிரமிப்பாளர்களை கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த தகராறில் காளிதாஸ் தாக்கப்பட்டார். இதில் காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில் காளிதாஸ் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து அவரது மனைவியும் ஊராட்சி தலைவியுமான சாந்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சூளைமேனியில் ஊத்துக்கோட்டை- பெரியபாளையம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- இசக்கியப்பனுக்கும், முருகேசனுக்கும் தகராறு ஏற்பட்டது.
- ஆத்திரம் அடைந்த முருகேசன், இசக்கியப்பனை கம்பால் தாக்கினார்.
களக்காடு:
ஏர்வாடி அருகே உள்ள வேப்பங்குளம் கீழூர், நடுத்தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 65). தொழிலாளி. நேற்று இவரது மாடுகள் கருங்கண்ணன் குடியிருப்பு தெற்கு தெருவை சேர்ந்த விவசாயி முருகேசனுக்கு (48) சொந்தமான தோட்டத்தில் மேய்ந்ததாக கூறப்படுகிறது.
இதில் இசக்கியப்பனுக்கும், முருகேசனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகேசனை தேடி வருகின்றனர்.
- ஜெயங்கொண்டம் அருகே பா.ஜ.க. பெண் நிர்வாகி வீட்டின் கொட்டகை அடித்து நொறுக்கப்பட்டது
- அடித்து நொறுக்கிய மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(வயது 45). இவரது மனைவி பரமேஸ்வரி(35). பல் டாக்டரான இவர், பா.ஜ.க. மருத்துவர் அணி மாவட்ட தலைவராக உள்ளார். ஆனந்தராஜ், பரமேஸ்வரி ஆகியோர் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் மற்றும் வயல்களை பரமேஸ்வரியின் தந்தை பாலசுப்பிரமணியன் பராமரித்து வருகிறார். இதில் நாகல்குழி சாலையில் ஆனந்தராஜுக்கு சொந்தமான வீடும், தோட்டமும் உள்ளது. அதனை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டிற்கு முன்பு ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுடன் கூடிய 2 கொட்டகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை, அவரது மகன் ஹரிஹரசுதன், அவரது சம்பந்தி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கொண்ட கும்பல் சேர்ந்து, இடம் சம்பந்தமான முன்விரோதம் காரணமாக ஆனந்தராஜின் இடத்தில் அத்துமீறி புகுந்து வீட்டை சுற்றி இருந்த கம்பிவேலி, அருகில் இருந்த கம்பி வேலி, கொட்டகை ஆகியவற்றை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து பரமேஸ்வரியின் தந்தை பாலசுப்பிரமணியன் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணாதுரை, ஹரிஹரசுதன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.
- நக்சலைட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் தேகமேடா மலைப் பகுதி அருகே இன்று காலை 10.30 மணியளவில் குண்டு வெடித்தது. இதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.
நக்சலைட்டுகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 2 ராணுவ வீரர்களும் ராய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் நக்சலைட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
- நாய் வளர்க்கும் தகராறில் கணவன் - மனைவி மீது தாக்குதல் நடந்தது.
- காயமடைந்த இருவரும் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
மேலூர்
மேலூர் அருகே உள்ள பூதமங்கலத்தை சேர்ந்தவர் தினகரன் (வயது 55), விவசாயி. இவரது வீட்டின் அருகே வசிப்பவர் சத்தியமூர்த்தி (44). இவர் வளர்க்கும் நாய் தினகரன் குடும்பத்தினர் மற்றும் அவரது வீட்டுக்கு வருபவர்களைப் பார்த்து குரைத்து விரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் தினகரன் வீட்டின் அருகே நடந்துவந்த போது, அவரை வழிமறித்து இரும்பு கம்பியால் சத்தியமூர்த்தி தாக்கியுள்ளார். அதைப் பார்த்து தடுக்க வந்த தினகரன் மனைவி ஜெயசீலாவுக்கு அடி விழுந்தது. இதில் காயமடைந்த இருவரும் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து தினகரன் கொடுத்த புகாரின் பேரில் கீழவளவு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க சொன்ன கண்டக்டருக்கு சரமாரி அடி - உதை விழுந்தது
- 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலை
திருச்சி,
திருச்சி துவாக்குடி வாழவந்தான் கோட்டை காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் காந்தி ராஜன் (வயது 48). இவர் துவாக்குடி அரசு போக்குவரத்து கழக டெப்போவில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து துவாக்குடிக்கு செல்லும் பஸ்சில் காந்திராஜன் கண்டக்டராக பணியில் இருந்தார்.அப்போது அரியமங்கலம் எஸ்.ஐ.டி. பஸ் நிறுத்தம் பகுதியில் 2 வாலிபர்கள் முன்பக்க படிக்கட்டு வழியாக ஏற முயற்சித்தனர். இதைப் பார்த்த கண்டக்டர் முன்பக்கத்தில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் பின்பக்க படிக்கட்டு வழியாக ஏறும்படி அறிவுறுத்தினார். அதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் முன்பக்க படிக்கட்டு வழியாக 2 பேரும் ஏறினர். கண்டக்டர் அவர்களிடம் பின்னால் தள்ளிச் செல்லும்படி கூறி டிக்கெட் எடுக்க சொன்னார். அப்போது டிக்கெட் எடுக்க மறுத்த அந்த வாலிபர்கள் 2 பேரும் கண்டக்டரை தகாத கெட்ட வார்த்தைகளால் திட்டி கைகளால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து காந்தி ராஜன் அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அரசு பேருந்தில் பணியில் இருந்த கண்டக்டரை வாலிபர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 18 பேர் மீது வழக்கு
- படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் :
கோட்டார் ஊட்டு வாழ்மடம் பகுதியை சேர்ந்த வர் ஹரிஹர செல்வம் (வயது 34).
மேல காமரா ஜர்புரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (40). இவர்கள் இருவரும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆவார்கள். இவர்கள் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரி பகுதி யில் நின்று கொண்டிருந்த னர்.
அப்போது அங்கு வந்த நாம் தமிழர் கட்சி நிர்வா கிகள் பெர்லின் ஜோ, விஜய ராகவன், ஜெயரின் மற்றும் கண்டால் தெரியும் 18 பேர் சேர்ந்து ஹரிஹர செல்வம், சதீஷ்குமார் இருவரையும் சரமாரியாக தாக்கினார்கள். இரும்பு கம்பியாலும் தாக்கப் பட்டனர். இதில் ஹரிஹர செல்வம், சதீஷ்குமார் இருவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஹரிஹர செல்வம் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பெர்லின் ஜோ, விஜயராகவன், ஜெயரின் மற்றும் கண்டால் தெரியும் 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 294பி, 323, 324, 506 2 ஐபிசி ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
- உமர், முஜீபுர் ரகுமானிடம் சென்று பஸ்சை நகர்த்து மாறு கூறினார்.
- உக்கடம் போலீசார், முஜீபுர் ரகுமான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கோவை,
கேரளாவை சேர்ந்தவர் உமர்(வயது49). இவர் கேரள அரசு பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பணியில் இருந்த இவர் உக்கடம் பஸ் நிலையத்தில் பயணிகளுக்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது இவரது பஸ்சுக்கு முன்பு மற்றொரு கேரள அரசு பஸ் நின்று கொண்டு இருந்தது. அந்த பஸ்சை கேரளாவை சேர்ந்த முஜீபுர் ரகுமான்(48) என்பவர் ஓட்டினார். அவர், பின்னால் வந்த பஸ்சுக்கு வழிவிடவில்லை என தெரிகிறது.
இதையடுத்து உமர், முஜீபுர் ரகுமானிடம் சென்று பஸ்சை நகர்த்து மாறு கூறினார். இதயைடுத்து அவர் பஸ்சை நகர்த்தினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த முஜீபுர் ரகுமான், தகாத வார்தைகளால் திட்டி டிரைவர் உமரை கையால் சரமாரியாக தாக்கினர். இதில் உமர் படுகாயம் அடைந்தார்.
இதனால் சிறிது நேரம் உக்கடம் பஸ் நிலையத்தில் போக்குவரத்து பாதிப்பானது.
பின்னர் காயம் அடைந்த உமரை அருகில் இருந்த வர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கேரள அரசு பஸ் டிரைவர் உமர் அளித்த புகாரின் பேரில் உக்கடம் போலீசார், முஜீபுர் ரகுமான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிலர் அவரை இரும்பு கம்பியால் தாக்கினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரே மாநகராட்சி வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பாண்டியன் என்பவர் ரெடிமேடு ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
இவர் அந்த மாநகராட்சி வணிக வளாகத்தில் வியாபாரிகள் சங்க பொருளாளராகவும் உள்ளார். சம்பவத்தன்று இரவு பாண்டியன் கடையை அடைத்து விட்டு கீழ்தளத்தில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனத்தை எடுக்க வந்தார். அப்போது அங்கு வந்த சிலர் அவரை இரும்பு கம்பியால் தாக்கினர்.
இதில் பாண்டியன் மண்டை உடைந்தது. அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வணிக வளாகத்தில் மது அருந்துவதை தட்டிக்கேட்டது தொடர்பான தகராறில் அவரை தாக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து பாண்டியன் தஞ்சை நகர கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோபமடைந்த நாக அர்ஜுன் இரும்பு கம்பியை எடுத்து ராதாகிருஷ்ணனின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.
- நாக அர்ஜுன் அங்கிருந்து புறப்பட்டு தென்காசிக்கு பஸ்சில் தப்பி வந்துள்ளார்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பாரதி நகர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் நாக அர்ஜுன் (வயது 22).
ஒரே அறையில்
இவரும், திருவனந்தபுரம் தெக்குபாரா ஆனந்த பவன் ஹவுஸ் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(47) என்பவரும் கறி வெட்டும் கடையில் ஒன்றாக வேலைபார்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரே அறையில் தங்கியிருக்கும் இவர்கள் 2 நாட்களுக்கு முன்பாக மது அருந்தியபோது, வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
தென்காசி
இதனால் கோபமடைந்த நாக அர்ஜுன் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து ராதாகிருஷ்ணனின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ராதாகிருஷ்ணன் மயங்கி விழுந்ததால், நாக அர்ஜுன் அங்கிருந்து புறப்பட்டு தென்காசிக்கு பஸ்சில் தப்பி வந்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த கூத்தாட்டுகுளம் போலீசார் தென்காசி மற்றும் செங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி தென்காசி பஸ் நிலையத்தில் ரோந்து சென்ற போலீசார், அங்கு சுற்றித்திரிந்த நாக அர்ஜுனை கைது செய்து கூத்தாட்டு குளம் போலீ சாரிடம் ஒப்படைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்