என் மலர்
நீங்கள் தேடியது "slug 98766"
- மக்கள் குறை தீர்க்கும் நாள் நிகழ்ச்சியில் 274 மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
- வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம் குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொது மக்களிடம் கோரிக்கையில் 274 மனுக்கள் பெற்று உடனை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.மேலும் பெறப்பட்ட மனுக்களில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன. இது குறித்து மாவட்ட கலெக்டர் தெரிவிக்கையில், ஒவ்வொரு வாரமும் பொது மக்களிடம் பெறக்கூ டிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும். தீர்வு வழங்க முடியாத மனுக்கள் குறித்து மனுதாரர்களிடம் உரிய காரணம் குறித்து எடுத்துரைக்க வேண்டும் அப்துபோது தான் அது போன்ற மனுக்கள் திரும்பத் திரும்ப வராது, எனவே பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கந்தசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஆய்வு நடத்தினர்.
- திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
திருப்பூர் :
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆகியோர் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஆய்வு நடத்தினர். பின்னர் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் முன்னிலை வகித்தார். உதவி கமிஷனர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் திட்டம், பொது நிதி, தொகுதி வளர்ச்சி நிதி, 15வது நிதிக்குழு மானியத் திட்டப்பணிகள், வரி உள்ளிட்ட வருவாய் இனம் குறித்த நிலவரம் என அனைத்து பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது. குடிநீர் சப்ளை நடைமுறை குறித்தும் அவர்கள் கேட்டறிந்தனர்.
மாநகராட்சி நிர்வாகத்தில் வரியினங்கள், வாடகை உள்ளிட்ட கட்டண வசூல் ஆகியன விரைவுபடுத்தி வசூல் பணிகள் மேம்படுத்த வேண்டும். வரி மறு சீரமைப்பு பணிகள் துரிதகதியில் செய்து முடித்து நிலுவையின்றி வசூலிக்க வேண்டும். வளர்ச்சிப் பணிகள் குறித்த காலத்துக்குள் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பணிகள் தரமாகவும், எந்த புகாருக்கும் இடம் தராத வகையிலும் முறையாக மேற்கொள்ள வேண்டும்.சுகாதாரப்பணிகள், குடிநீர் வினியோகம் ஆகியன எந்த தடையுமின்றி பொதுமக்கள் நலன் சார்ந்து மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.
- பொதுமக்கள், போக்குவரத்து மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தடையாக உள்ள கேபிள்களை முறையாக அமைப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.
- பெரும்பாலானோர் மின் கம்பங்கள், தெரு விளக்கு கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் வழியாகவும் இஷ்டம் போல் கேபிள்களை கொண்டு செல்கின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் இயங்கும் கேபிள் ஆபரேட்டர்களுடன் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில், நூற்றுக்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் மின் கம்பங்கள், தெரு விளக்கு கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் வழியாகவும் இஷ்டம் போல் கேபிள்களை கொண்டு செல்கின்றனர்.இதனால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் எழுகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கேபிள் ஆபரேட்டர்களுடன் கமிஷனர் கிராந்திகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் நகரப்பகுதியில் பொதுமக்கள், போக்குவரத்து மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தடையாக உள்ள கேபிள்களை முறையாக அமைப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.
- கடந்த ஒரு வருடமாக மஞ்சுளா திருவாரூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்தார்.
- வல்லம் அனைத்து மகளிர் போலீசார் நேரில் சென்று மஞ்சுளாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
வல்லம்:
தஞ்சையை அடுத்த வல்லம் கொல்லுப்பட்டறை தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் விஜயகுமார்(வயது 33). இவருக்கும், திருவாரூரை சேர்ந்த ராமச்சந்திரன் மகள் மஞ்சுளா(29) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பின்னர் மஞ்சுளா மற்றும் விஜயகுமார்ஆகிய இருவரும் வல்லத்தில் வசித்து வந்தனர்.
இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த ஆண்டு 10 மாத ஆண் குழந்தை மஞ்சுளா வயிற்றிலேயே இறந்து பிறந்தது.
இந்த நிலையில் மஞ்சுளா கடந்த ஒரு வருடமாக திருவாரூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வல்லத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு மஞ்சுளா வந்தார்.அப்போது அவரை வீட்டிற்குள் விஜயகுமார் அனுமதிக்கவில்லை என தெரிகிறது.
இதனால் கணவர் வீட்டின் முன்பு தனது குழந்தையுடன் கடந்த 2 நாட்களாக மஞ்சுளா அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மஞ்சுளாவுடன் அவரது உறவினர்களும் இருந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்தியா உத்தரவின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீசார் நேரில் சென்று மஞ்சுளாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் மஞ்சுளா மற்றும் விஜயகுமார் இருவரையும் வல்லம் அனைத்து மகளிர் போலீசார், போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர்.
அங்கு அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்தியா விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில், விஜயகுமார் தற்போது நேரம் சரியில்லாததால் 3 மாதத்திற்குள் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதாக போலீசாரிடம் எழுதிக் கொடுத்து விட்டு சென்றார்.
இதனைத்தொடர்ந்து மஞ்சுளா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
- எந்த ஒரு தவறும் செய்ய மாட்டோம் என ஒப்புதல் கொடுத்து திருந்தி வாழ்வதாக கூறி வெளியே வந்தனர்.
- ஒரு வருட காலம் முடிவதற்குள் இருவரும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ளனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அந்தஉச்சிமேடு பகுதியை சேர்ந்த முக்கூட்டு முருகன் மற்றும் தென்னங்குடி பகுதியை சேர்ந்த சூர்யா.
இவர்கள் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள்.
நன்னடத்தை பத்திரத்தின் கீழ் எந்த ஒரு தவறும் செய்ய மாட்டோம் என ஒப்புதல் கொடுத்து திருந்தி வாழ்வதாக கூறி வெளியே வந்தனர்.
இந்த நன்னடத்தை பத்திரத்தின் படி ஒரு வருட காலம் எந்த ஒரு குற்ற வழக்கிலும் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.
ஆனால் ஒரு வருட காலம் முடிவதற்குள் இருவரும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ளனர்.
சீர்காழி போலீசார் அறிவுறுத்தலின்படி சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா உத்தரவின்படி இருவரையும் குற்றவியல் நடைமுறை சட்டம் 110 விதியின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார், முக்கூ ட்டு முருகன், சூர்யா இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- ராமானுஜபுரத்தை சேர்ந்த கவியரசன் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
- கலெக்டர் உத்தரவுப்படி, கவியரசனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா ராமானுஜபுரத்தை சேர்ந்தவர் கவியரசன் (வயது 28).
இவர் மீது போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இதையடுத்து இவரின் குற்றசெயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் கலெக்டர் உத்தரவுப்படி, கவியரசனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.
- பழுதடைந்த நிலையில் உள்ள பழைய ஆரம்ப சுகாதார கட்டிடத்தினை புதிதாக கட்டுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
- சுமார் 10 கிலோ மீட்டர் வரை கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் 15-வது நிதிகுழு சுகாதார மானியத்தின் கீழ் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜையினை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.
அப்போது கலெக்டர் அருண்தம்புராஜ் கூறும்போது:-
திட்டச்சேரி பேரூராட்சியில் பழுதடைந்த நிலையில் உள்ள பழைய ஆரம்ப சுகாதார கட்டிடத்தினை புதிதாக கட்டுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 15-வது நிதிகுழு மானியம் (சுகாதார மானியம்) கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை தொடங்கி வைக்கப்பட்டு கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறும். இந்த புதிய சுகாதார கட்டிடத்தின் மூலம் திட்டச்சேரியை சுற்றி சுமார் 10 கிலோ மீட்டர் வரை உள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு பயன்பெறுவார்கள் என்றார்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுகாதார பணிகள் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் ஆயிஷா சித்திகா, பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், திட்டச்சேரி திமுக நகர செயலாளர் முகமது சுல்தான், பேரூராட்சி துணைத் தலைவர், பேரூராட்சி உறுப்பினர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் துார் வாரும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
- நகராட்சி ஆணையாளர் மற்றும் பல்லடம் தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
பல்லடம் :
பல்லடம் - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள வடுகபாளையம் பகுதியில் குட்டை உள்ளது .இந்தக்குட்டையை பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் துார் வாரும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
குட்டை துார் வாரும் பணி நடந்து வரும் சூழலில் இங்குள்ள புறம்போக்கு இடத்தில் தனி நபர்களுக்கு புதிதாக வழித்தடம் தடம் விட்டு பணிகள் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே குட்டையை அளவீடு செய்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வார்டு கவுன்சிலர்கள் ஈஸ்வரமூர்த்தி (காங்கிரஸ்), சசிரேகா ரமேஷ்குமார் (பா.ஜ.க,) ஆகியோர் நகராட்சி ஆணையாளர் மற்றும் பல்லடம் தாசில்தார் நந்தகோபாலிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் விரைவில் அளவீடு பணி மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். இந்தநிலையில் குட்டையை அளவீடு செய்து உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொங்கலுார் ஆர்.ஐ., கேத்தனூர் வி.ஏ.ஓ. ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.
- சாராய வியாபாரியான ஹரிகிருஷ்ணன் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
- கலெக்டர் உத்தரவுபடி, ஹரிகிருஷ்ணனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டை மேலக்காட்டை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 43) சாராய வியா பாரி.
இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இதனால் இவரி ன்குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் கலெக்டர் உத்தரவுபடி, ஹரிகிருஷ்ணனை போலீ சார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- மரச்சாமான்கள், இரும்பு பொருட்கள் வகுப்பறைகளில் காணப்படுகின்றன.
- அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
திருப்பூர் :
தமிழகத்தில் பள்ளி கல்வி துறை சார்ந்த அலுவலகங்கள் மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன.கல்வித்துறை சார்ந்த அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் பழுதடைந்த மற்றும் உபயோகமற்ற மரச்சாமான்கள், இரும்பு பொருட்கள் காலங்கடந்து அலுவலகத்தில் உள்ள அறைகளிலும், வெளிப்புறங்களிலும் மற்றும் பள்ளிகளிலுள்ள வகுப்பறைகளிலும் காணப்படுகின்றன.
இதனால் அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், இடம்பற்றாக்குறை ஏற்படுகிறது. அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.சுற்றுச்சூழல் மட்டுமின்றி மாணவ, மாணவிகள் நலன்கள் பாதிப்பு ஏற்படுகிறது.பழுதடைந்த மரச்சாமான்கள் மற்றும் உபயோகமற்ற பொருட்கள் அகற்ற வேண்டியது மிகவும் அவசியமாகிறது.எனவே அப்பொருட்களை அகற்றுவதற்கு முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி அதனை அகற்ற ஏலம் விளம்பரம் மூலம் நடவடிக்கை மேற்கொண்டும், அதற்கான தொகையை உரிய அரசு கணக்கில் செலுத்தவும் திருப்பூர் உள்பட அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இதேபோல் வருவாய் அலகில் பணியாற்றிய இளநிலை வருவாய் ஆய்வா ளர்கள், தட்டச்சர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் 25 பேருக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளர்களாக பதிவு உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.
- தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் பணிபுரிந்த செல்வகுமார், தஞ்சை தனி தாசில்தார் அலுவலகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு ள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர்களை கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதன் பற்றிய விவரம் வருமாறு:-
திருவிடைமருதூர் தாலுகா அலுவலகமுதுநிலை வருவாய் ஆய்வாளர் பரிமளா, கும்பகோணம் தனி தாசில்தார் (ஆலய நிலங்கள்) அலுவலகத்துக்கும், தஞ்சை தனி துணை கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்த சரவணன் கும்பகோணம் தனி தாசில்தார் (ஆதிதிரா விடர் நலத்துறை) அலுவல கத்துக்கும், தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் பணிபுரிந்த செல்வகுமார், தஞ்சை தனி தாசில்தார் அலுவலகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு ள்ளனர்.
தஞ்சை தனி தாசில்தார் அலுவலகத்தில் பணி யாற்றிய சத்யராஜ், பாபநாசம் தாலுகா அலுவலகத்துக்கும், பூதலூர் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்த மதியழகன் தஞ்சை தாலுகா அலுவலகத்துக்கும், இங்கு பணியாற்றிய கலை யரசி தஞ்சை மாவட்ட வழங்கள் மற்றும் நுக ர்வோர் பாதுகாப்பு அலுவல கத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இங்கு பணியாற்றிய ஜெபராஜ் பூதலூர் தனித்துறை தாசில்தார் (குடிமை பொருள் வழங்கல் ) அலுவலகத்துக்கும், ஒரத்தநாடு தாலுகா அலுவலகத்தில் பணியா ற்றிய நரேந்திரன் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகத்துக்கும், திருவையாறு தாலுகா அலுவலகத்தில் பணியா ற்றிய சுமதி பாபநாசம் தாலுகா அலுவலகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு ள்ளனர்.
இதேபோல் வருவாய் அலுவலகில் பணியாற்றிய இளநிலை வருவாய் ஆய்வா ளர்கள், தட்டச்சர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் 25 பேருக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளர்களாக பதிவு உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி வருவாய் அலகில் தட்டச்சர்களாக பணியாற்றிய சீதளா தேவி, சக்தி தேவி, கௌதமன், பிரகாஷ், முத்துக்குமார், மகேஸ்வரி, ஜெயந்திரன், தில்சாத், சத்தியா ஆகியோருக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதே போல் இளநிலை வருவாய் ஆய்வாளர் ரகுராமன், சுஜிதா, கவிதா, சுதா, கவிதா, மனோகரன், இளவரசன், தமிழ்வாணன் ஆகியோருக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்ப ட்டுள்ளது.
இதேபோல் கிராம நிர்வாக அலுவலர்கள் பாரதிதாசன் (திப்பன் விடுதி), ரத்தினவேல் (காலகம்), சக்திவேல் (குருவி க்கரம்பை), ஜெயசீலன் (பழமார்னேரி), ரமேஷ் (செல்லப்பன் பேட்டை), அர்ச்சனா (கண்டியூர்), சங்கீதா (வீரியங்கோட்டை), அசாருதீன் (கொரநாட்டு கருப்பூர்) ஆகியிருக்கும் முதுநிலை வருவாய் ஆய்வா ளர்களாக பதிவு உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவையொட்டி வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறுவதால் அரசு மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
- இந்த நாட்களில் மதுக்கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்:
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவையொட்டி வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறுவதால் அரசு மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தாவது:-
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டத்தில் வல்வில் ஓரிவிழா நடைபெறும் தினங்களில் கொல்லிமலை வட்டத்திற்கு உள்பட்ட செம்மேடு, செங்கரை மற்றும் சோளக்காடு பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகளை வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை 3 நாட்களில் மூட வேண்டும். இந்த நாட்களில் மதுக்கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.