என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "social activist"
- மைனர் பெண்களின் ஒப்புதலுடனே மைனர் சிறுவர்கள் டேட்டிங் செல்லும் நிலையில் ஏன் சிறுவர்களை மட்டும் கைது செய்ய வேண்டும்
- ஒரே சிறையில் இதுபோன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 20 சிறுவர்களை பார்த்தேன்
சிறுமிகளுடன் டேட்டிங் செய்வதாக மைனர் சிறுவர்கள் கைது செய்யப்படுவது அதிகரிக்கத் தொடங்கியள்ளது. ஆனால் மைனர் பெண்களின் ஒப்புதலுடனே மைனர் சிறுவர்கள் டேட்டிங் செல்லும் நிலையில் ஏன் சிறுவர்களை மட்டும் கைது செய்ய வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் பந்தாரி என்ற சமூக ஆர்வலரால் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்ட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் வெறுமனே சிறுவர்களை கைது செய்வதற்கு பதிலாக நடைமுறை தீர்வுகள் குறித்து ஆராய வேண்டும். பெற்றோரின் புகார் மட்டுமே சிறுவர்களை கைது செய்வதற்கு போதுமானது அல்ல. கைது செய்வதற்கு பதிலாக சிறுவர்களுக்கு அதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறை வழங்கலாம். மாநில அரசு இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து காவல்துறையினருக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். மேலும் மத்திய மாநில அரசுகள் இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
பொதுநல வழக்கு தாக்கல் செய்த பந்தாரி, ஒரே சிறையில் இதுபோன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 20 சிறுவர்களை பார்த்தேன் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஒருநாள் மட்டுமே நமக்கு கொண்டாட்டம்.
- இந்தியாவில் ஜனநாயக முறைப்படி வாக்களித்து நம்மை ஆள்பவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
நத்தம்:
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (45) சமூக ஆர்வலரான இவர் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பஸ் நிலையத்தில் நூதன முறையில் கையிலும், கழுத்திலும் விழிப்புணர்வு பதாகைகளை தொங்க விட்டு பிரசாரம் செய்தார். பணம், பொருள் வாங்காமல் வாக்களிக்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். தியாகிகள் உயிர் கொடுத்து நம் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்துள்ளனர். எனவே மனசாட்சிபடி வாக்களிப்பது மட்டுமே நாம் அவர்களுக்கு செலுத்தும் மரியாதை. ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஒருநாள் மட்டுமே நமக்கு கொண்டாட்டம். ஆனால் 5 ஆண்டுகள் திண்டாட்டம். ஜனநாயகத்தை உயர்த்த பணநாயகத்தை வீழ்த்த வேண்டும். வாக்களிக்க பணம், பொருள் வாங்கினால் நாம் வாழ்வை இழப்பதற்கு சமமாகும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி பிரசாரம் செய்தார். இறித்து அவர் தெரிவிக்கையில், சுதந்திர இந்தியாவில் பணம் கொடுத்து வாக்களிக்க வைப்பது மிகப்பெரிய கேடாகும். வாக்குரிமை என்பது இன்று பல நாடுகளில் பலருக்கு கிடைக்காத நிலை உள்ளது. அதுபோன்ற நிலையில் இந்தியாவில் ஜனநாயக முறைப்படி வாக்களித்து நம்மை ஆள்பவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு ஊர்களில் இதுபோன்ற பிரசாரம் செய்து வருவதாக கூறினார்.
- மாற்றுத்திறனாளியை மாநகர பஸ் ஏற்றாமல் சென்றதால் பஸ்நிறுத்தத்தில் நின்ற மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
- இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூந்தமல்லி:
திருவொற்றியூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி மாநகர அரசு பஸ்(எண்101)சென்றது. பூந்தமல்லி அருகே கல்லறை தோட்டம் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அந்த பஸ் கடந்து சென்றபோது பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்தார்.
ஆனால் அந்த பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாக தெரிகிறது. பார்வையற்ற மாற்றுத்திறனாளியை மாநகர பஸ் ஏற்றாமல் சென்றதால் பஸ்நிறுத்தத்தில் நின்ற மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நேரத்தில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சமூக ஆர்வலர் ஒருவர் உடனடியாக அந்த மாற்றுதிறனாளியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அந்த மாநகர பஸ்சை விரட்டி வந்தார். சிறிது தூரத்தில் அந்த பஸ்சை மடக்க நிறுத்தி மாற்றுத்திறனாளியை ஏற்ற மறுத்து வந்தது தொடர்பாக டிரைவர், கண்டக்டரிடம் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த பஸ்சில் இருந்த கண்டக்டர் ஆவேசமாக சமூக ஆர்வலரை ஒருமையில் தரக்குறைவாக பேசினார். மேலும் எதுவும் செய்யமுடியாது என்று மிரட்டும் வகையில் கூறினார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த மாற்றுத்திறனாளி பின்னர் அந்த பஸ்சில் ஏறி பயணம் செய்தார்.
கண்டக்டரும், டிரைவரும் வாக்குவாதம் செய்யும் காட்சியை சமூகஆர்வலர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவிவருகிறது. இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உரத்தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அமோனியா வாயுவால் மயக்கம் அடைந்த பின்னரே இதுபற்றி வெளியே தெரியவந்தது.
எண்ணூர் கடலில் எண்ணெய் கழிவு கலந்த விவகாரம் முடியாத நிலையில் உரத்தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமோனியா வாயுவை சுவாசித்த எண்ணூரை சுற்றி உள்ள 10 மீனவ கிராமமக்கள் மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டனர். தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்த உடன் நிர்வாகத்தினர் அபாய ஒலி எழுப்பி சுற்றி உள்ளகிராமக்ககளை எச்சரிக்கை செய்யாதது ஏன்? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும் வாயு கசிந்தஉடன் அருகில் உள்ள பொதுமக்களை வாகனங்கள் மூலம் வெளியேற்றி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்று இருக்கலாம் எனவும், நிலைமையின் வீரியத்தை தெரிவித்து இருக்கலாம் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அமோனியா வாயுவால் மயக்கம் அடைந்த பின்னரே இதுபற்றி வெளியே தெரியவந்தது. மக்களின் உயிரோடு தொழிற்சாலை நிறுவனங்கள் விளையாடக்கூடாது என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
- சமூக ஆர்வலரான பிராங்க்ளின் ஆசாத் காந்தி இன்று சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு மகாத்மா காந்தி படத்துடன் கூடிய பதாகையை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டார்.
- கடந்த 40 ஆண்டு காலமாக அத்வைத ஆசிரமரோடு பாலாஜி நகர் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பள்ளிக்குள் சாக்கடை நீர் புகுந்து வருகிறது.
சேலம்:
சேலம் அத்வைத ஆசிரம ரோடு பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் பிராங்க்ளின் ஆசாத் காந்தி (90). சமூக ஆர்வலரான இவர் இன்று சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு மகாத்மா காந்தி படத்துடன் கூடிய பதாகையை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 40 ஆண்டு காலமாக அத்வைத ஆசிரமரோடு பாலாஜி நகர் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பள்ளிக்குள் சாக்கடை நீர் புகுந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தினசரி 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து போராடத்தை தொடங்கி உள்ளேன். அதன்படி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன். இதற்கு தீர்வு கிடைக்கும் வரை அல்லது சாகும் வரை போராட்டத்தில் ஈடுபடுவேன். மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு சாக்கடை நீர் புகுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- அடையாளம் தெரியாத 3 பேர் இவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
- அன்பரசுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கோட்டப்பாளையத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரது மகன் அன்பரசு (வயது 45). சமூக ஆர்வலரான இவர் அந்த பகுதியில் நடைபெறும் பல்வேறு குற்ற சம்பவங்கள் குறித்து புகார் தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் வெளியில் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். கோட்டப்பாளையம் அருகே வந்த போது அடையாளம் தெரியாத 3 பேர் இவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த அன்பரசுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இது குறித்து அன்பரசு கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சமூக ஆர்வலரை மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- குடும்பத்தினர் கை விட்ட நிலையில் நீண்ட தலைமுடி, தாடியுடன் அழுக்கான உடையில் சுற்றித் திரிந்த அவரை சமூக ஆர்வலர் குளிக்க வைத்து புதிய உடைகள் அணிவி த்தார்.
- ஆதரவின்றி சுற்றித் திரிபவர்களுக்கு உணவு மற்றும் புதிய உடைகளை கொடுத்து வருகிறேன். என் வாழ்நாள் முழுவதும் இந்த பணியில் ஈடுபடுவேன் என்றார்.
ஒட்டன்சத்திரம்:
மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் நிஷார்சேட் (வயது 55). இவர் திண்டுக்கல் மாவட்டம் இடை யகோட்டை, கள்ளிம ந்தயம், ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வருகிறார். அப்பகுதியில் சுற்றித் திரியும் ஆதரவற்ற வர்களை மீட்டு அவர்களை சுத்தம் செய்து புதிய ஆடைகள் அணிவித்து உணவு வாங்கி கொடுக்கிறார்.
இடையகோட்டை அருகே வெரியப்பூர் பகுதியில் சுற்றித் திரிந்த 40 வயது மதிக்கத்தக்கவரை அவர் மீட்டார். குடும்பத்தினர் கை விட்ட நிலையில் நீண்ட தலைமுடி, தாடியுடன் அழுக்கான உடையில் சுற்றித் திரிந்த அவரை நிஷார் சேட் குளிக்க வைத்து புதிய உடைகள் அணிவி த்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், தமிழக த்தில் உள்ள அனைத்து மாவ ட்டங்கள் மற்றும் கேரள, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று மன நலம் பாதிக்கப்பட்டு ஆதரவின்றி சுற்றித் திரிபவர்களுக்கு உணவு மற்றும் புதிய உடைகளை கொடுத்து வருகிறேன். என் வாழ்நாள் முழுவதும் இந்த பணியில் ஈடுபடுவேன் என்றார்.
- புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
- கழிவுகளை அகற்ற ரூ.47 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.
வடகிழக்கு பருவமழையில் புழல் ஏரி நிரம்பும்போது கொசஸ்தலை ஆற்றில் உபரிநீர் திறந்துவிடப்படும். அதிக அளவு உபரிநீர் திறந்து விடப்படும்போது கொசஸ்தலை ஆற்றின் கரையோர குடியிருப்புகளில் புகுந்து பலத்த சேதமும் ஏற்படும்.
இந்நிலையில் புழல் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி திருவள்ளூர் நகர பஞ்சாயத்துகளில் வசிக்கும் மக்கள் குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கடந்த வாரம் நாரவாரி குப்பம் ஊராட்சியை சேர்ந்த லாரி ஒன்று புழல் நீர்தேக்கப்பகுதியில் கழிவுகளை கொட்டியதால் சுமார் 250 மீட்டர் தூரத்துக்கு துர்நாற்றம் வீசியது. இந்நிலை நீடித்தால் புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படும்போது கழிவுகளும் அடித்து செல்லப்பட்டு குடியிருப்புகளுக்குள் வர வாய்ப்பு இருப்பதாக அப்பகுதியில் குடியிருப்பவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மாதவரம் குடியிருப்பு நலசங்க தலைவர் நீலகண்ணன் கூறும்போது, கடந்த 2017-ம் ஆண்டு முதல் இதேநிலை தான் நீடிக்கிறது. 2019-ல் இப்பகுதியில் பூங்கா ஒன்று அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு அது கிடப்பில் போடப்பட்டது. பிறகு மீண்டும் இப்பகுதி குப்பை கூடமாக மாறியது. 2020-ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுபணித் துறைக்கு நீர்தேக்கத்தை தூர்வாரி அப்பகுதியை சுற்றி வேலி அமைக்க உத்தரவிட்டது. நாரவாரி குப்பம் பஞ்சாயத்து அதிகாரிகள் குப்பைகளை தரம் பிரிக்கும் பகுதி அருகே ஒரு மயானம் உள்ளது. தற்போது அவர்கள் நீர்தேக்கத்தின் அருகிலேயே கழிவுகளை கொட்டுகின்றனர். பெரும்பாலும் அவர்கள் இரவு நேரங்களில் தான் கழிவுகளை கொட்டுகின்றனர் என்றார்.
இதுகுறித்து நாரவாரி குப்பத்தின் நிர்வாக அதிகாரி கூறும்போது, கழிவுகளை அகற்ற வேறு இடங்களை தேடி வருகிறோம். இதற்கான இடம் பாடிய நல்லூரில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கழிவுகளை அகற்ற ரூ.47 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.
இந்த விவகாரம் குறித்து பரிசீலித்து வருவதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.
- முதியவர்களின் மறுவாழ்வுக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
- ஆதரவற்ற மனிதர்களை தேடி சென்று முடி வெட்டி, குளிக்க வைத்து அழகு படுத்தி புத்தாடை வழங்கி உணவு வழங்கி வருகிறார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம்மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்தவர் கலைவாணன்.
இவர் கடந்த 10 ஆண்டுகளாக உறவுகளால் கைவிடப்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியவர்களின் மறுவாழ்வுக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி திரியும் ஆதரவற்றோர் மற்றும் நாகூர் தர்ஹா, நாகப்பட்டினம் புதிய பேரூந்து நிலையம், சாலைகள், இரயில் நிலையங்கள், சுற்றுலாத்தளங்களில் அழுக்கடைந்து, கிழிந்த உடைகளோடு, தாடி, முடி வளர்ந்து கவனிப்பாளர்களற்று அழுக்கடைந்து கிடக்கும் மனிதர்களை நாம் கடந்து சென்று இருப்போம்.
ஆனால் கலைவாணனோ அப்படிப்பட்ட மனிதர்களை தேடி சென்று அவர்களுக்கு தானே முடி வெட்டி, தாடி, மீசை எடுத்து, குளிக்க வைத்து அழகு படுத்தி அவர்களுக்கு புத்தாடை வழங்கி உணவு வழங்கி வருகிறார்.
மேலும் உறவுகளால் கைவிடப்பட்ட வர்களையும், மன நலம் பாதிக்கப்பட்டவர்களையும் அரவணைத்து அவர்க ளுக்கு மறுவாழ்வுஅளித்து பராமரித்து வருகிறார்.
இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இது போன்றவர்க ளுக்கு மறு வாழ்வு அளித்துள்ள கலைவாணன் எந்த வித எதிர்பார்ப்புகளும் இன்றி இந்த சேவையை செய்து வருகிறார்.
உறவுகளால் கைவிடப்பட்டவர்களை மீட்டு அவர்களின் உறவுகளிடம் சேர்ப்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து தொடர்ந்து அவர்களை பராமறித்து தினம் தோறும் உணவளித்து வருகிறார்.
இதுகுறித்து கலைவாணன் கூறும் போது இது போன்று சாலைகளில் உள்ள மனிதர்கள் ஒருக்காலத்தில் நன்றாக வாழ்ந்து இருக்க கூடியவர்கள்தான் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இப்படி இருக்கும் அவர்களைம் சக மனிதர்களாக நினைத்து அரவணைக்க வேண்டும் என்றார்.
ஆதவறவற்ற மனிதர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் கலைவாணன் செயல் பலராலும் பாராட்டு வருகிறது.
- அதிகமாக வட்டி கேட்டு தகாத வார்த்தையால் திட்டுவதாகவும் வடலூர் போலீசில் புகார் செய்துள்ளார்.
- ரூபாய் 10 ஆயிரத்திற்கும் மேலாக பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
கடலூர்:
வடலூர் மாருதிநகரை சேர்ந்தவர் விமல் ராஜா. இவரது மனைவி வேளாங்கண்ணி இவரிடம் இவரது பெரியப்பா மகள் எஸ்தர் ராணி கடந்த ஆண்டு வட்டிக்கு ரூ.4,40,000 கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் வேளாங்கண்ணி கொடுத்த பணத்தை எஸ்தரிடம் கேட்டுள்ளார். அதற்கு எஸ்தரோ பணத்தை க்கேட்டு வேளாங்கண்ணி தன்னை மிரட்டுவதாகவும் அளவுக்கு அதிகமாக வட்டி கேட்டு தகாத வார்த்தையால் திட்டுவதாகவும் வடலூர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் வடலூர் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு இருவரையும் அழைத்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் வேளாங் கண்ணி் வடலூர் ஆபத்தாரணபுரத்தைச்சேர்ந்த சமூக நல ஆர்வலரார் தனக்கேசவமூர்த்தி (55) கமலநாதன் அறிமுகமானர்கள்.
இருவரும் வேளாங்கண்ணிக்கு பணத்தை மீட்டு தருவதாகவும், மேலும் போலீஸ் நிலையத்தில் இந்த பிரச்சனையை போலீசாரிடம் பேசி சுமுகமாக தீர்த்து வைப்பதாக கூறி ரூபாய் 10 ஆயிரத்திற்கும் மேலாக பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் தனக்கேசவ மூர்த்தி மற்றும் கமலநாதன் பணத்தை வாங்கி ஏமாற்றி யதை அறிந்த வேளாங்கண்ணி பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் இரு வரும் பணத்தை திரும்பிக் கொடுக்க முடியாது என்றும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து வேளாங்கண்ணி வடலூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தனக்கேசவமூர்த்தி கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான கமல நாதன் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்