என் மலர்
நீங்கள் தேடியது "SP inspection"
- ஏற்காட்டில் அனைத்து இடங்களையும் பார்த்து விட்டு நேற்று மாலை குப்பனூர் வழியாக சேலத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
- வாழவந்தி அடுத்த ஆத்துப்பாலம் பகுதியில் வந்தபோது, ஒரு வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் இருந்த மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
சேலம்:
சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா. இவர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்தி டியூஷன் எடுத்து வருகிறார்.
சுற்றுலா
இந்த நிலையில் நேற்று காலை தன்னிடம் டியூஷன் படிக்கும் 20 மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் உட்பட 30 பேருடன் ஒரு வேனில் ஏற்காடுக்கு சுற்றுலா சென்றார். அனைத்து இடங்களையும் பார்த்து விட்டு நேற்று மாலை குப்ப னூர் வழியாக சேலத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
மரத்தில் மோதி...
வாழவந்தி அடுத்த ஆத்துப்பாலம் பகுதியில் வந்தபோது, ஒரு வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் இருந்த மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. வேனுக்குள் இருந்த மாணவ, மாணவிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பயத்தில் கூச்சலிட்டனர்.
இந்த சத்தத்தை கேட்டு அந்த வழியாக சென்றவர்க ளும், அருகில் இருந்தவர்க ளும் ஏற்காடு போலீசா ருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, வேனுக்குள் சிக்கிய மாணவ, மாணவி களை மீட்க தொடங்கினார்.
படுகாயம்
சிராய்ப்பு காயங்களுடன் மீட்கப்பட்ட மாணவ, மாணவிகளை 108 ஆம்பு லன்ஸ் மூலம் வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த னர். படுகாயம் அடைந்த 3 பேர் சேலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இதுகுறித்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொடரும் விபத்துகள்
மே தினமான கடந்த 1-ந் தேதி, வேலூரில் இருந்து 12 வாலிபர்கள் ஒரு வேனில் ஏற்காட்டிற்கு வந்தனர். அவர்கள் இயற்கையை ரசித்து விட்டு ஊர் திரும்பும்போது கொட்டச்சேடு அருகே வேன் விபத்தில் சிக்கி ரோட்டில் கவிழ்ந்தது. இதில் 11 பேர் படுகாயம் அடைந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல் ஏற்காடு வெள்ளக்கடை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு மைக்செட் போடுவதற்காக ஈரோடு மாவட்டம் பள்ளிப்பா ளையத்தில் இருந்து ஏற்காட்டிற்கு 6 பேர் லாரியில் வந்தனர்.
அவர்கள் நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று அதிகாலை குப்பனூர் வழியாக ஊர் திரும்பிய போது, ஆத்துப்பாலம் பகுதியில் லாரி மரத்தில் மோதிய விபத்தில், ஓமலூர் கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்தவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 3 நாட்களில் நடந்துள்ள, இந்தத் தொடர் விபத்துக்களால் பொதுமக்க ளும், சுற்றுலா பயணிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குண்டும் குழியுமாக..
இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், சேலம் அடிவாரம் வழியாக ஏற்காடு செல்லும் பாதை யில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடுப்புச் சுவர் மற்றும் சாலை பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சேலத்தில் இருந்து குப்பனூர் வழியாக வாகனங்கள் ஏற்காட்டிற்கு சென்று வருகிறது.
தற்போது விடுமுறை சீசன் தொடங்கி விட்டதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குப்பனூர் பாதை குண்டும் குழியுமாக இருக்கிறது. மேலும் அவ்வப்போது ஏற்காட்டில் மழை பெய்வ தால், ஈரப்பதத்தில் வாக னத்தில் உள்ள பிரேக்கு களும் சரியாக பிடிக்காமல் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்துக்கள் நடக்கின்றன. மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர் கார்மேகம் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் ஆகியோர் விபத்து நடந்த பகுதிகளை ஆய்வு செய்தனர்.
- தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.
- பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், போலீஸ் எஸ்.பி கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஜங்களா–புரத்தில், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஜல்லிக்–கட்டு நடைபெற உள்ளது.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இதனையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள மைதானத்தில், மேற்கொள்–ளப்–பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், போலீஸ் எஸ்.பி கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஜல்லிக்கட்டு நடை–பெறும் மைதானத்தில் வாடிவாசல், ஜல்லிக்கட்டு வீரர்கள் மைதானத்துக்குள் வருவதற்கு தனியாக பாதை, மைதானத்தில் பார்வையாளர்கள் நுழையாமல் தடுக்கும் வகையில், இரும்பு தடுப்பு, காளைகள் வெளியேறும் இடத்தில், மைதானத்தை சுற்றிலும் இரண்டு அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. காளைகளை உரிமையாளர்கள் எளிதில் பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு வரும் காளைகளை ஆய்வு செய்ய கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தனியாக பந்தல் அமைத்து இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மருத்துவ குழுவினர் அவசர சிகிச்சை அளிக்க தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு காளைகள் வரும் பாதையில், பாதை முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டுவருகிறது, ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவதற்கு தனியாக வழி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பார்வையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கும் தனியாக இடம் ஒதுக்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்களுக்கு பாதுகாப்பாக தேங்காய்நார் சரியான முறையில் பரப்ப வேண்டும் என்றும், தேவை
யான ஒலிபெருக்கி அமைப்பு கள் ஏற்பாடு செய்யவும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறை களின்படி, தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஜல்லிக்–கட்டு போட்டி ஏற்பாட்டா ளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். நிகழ்ச்சி யில், நாமக்கல் ஆர்.டி.ஓ. மஞ்சுளா, டி.எஸ்.பி. சுரேஷ் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
- இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை, தீயணைப்பு வீரர் பணிக்கான தேர்வு அறிவிக்கப்பட்டு இன்று தமிழகம் முழுவதும் அந்தந்த தலை நகரங்களிலும் மற்றும் முக்கிய நகரங்களிலும் இத்தேர்வு நடைபெற்றது.
- வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் விழுப்புரம் திருவிகா சாலையில் உள்ள சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில்11 மையங்களில் 15670 தேர்வு எழுதினர்
விழுப்புரம்:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை, தீயணைப்பு வீரர் பணிக்கான தேர்வு அறிவிக்கப்பட்டு இன்று தமிழகம் முழுவதும் அந்தந்த தலை நகரங்களிலும் மற்றும் முக்கிய நகரங்களிலும் இத்தேர்வு நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் 11 மையங்களில் 15670பேர் தேர்வு எழுதுகின்றனர். விழுப்புரம் நகரில் அரசு எம்ஜிஆர் மகளிர் கல்லூரி, மற்றும் தனியார் மகளிர் கலைக்கல்லூரியில் 3141மகளிர் தேர்வு எழுதுகின்றனனர். மேலும் விழுப்புரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சரஸ்வதி மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட 7 இடங்களிலும் மற்றும் திண்டிவனத்தில் 2 மையங்களிலும் ஆண்கள் தேர்வு எழுதுகின்றனர். இதில் 1800 காவல் துறையை மற்றும் 140 அமைச்சு பணியாளர்கள் என மொத்தம்1940பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தேர்வுக்கான அனைத்து பணிகளையும் விழுப்புரம்எ ஸ்பி ஸ்ரீநாதா சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து இன்று நடைபெற்றது. இத்தேர்வினை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் விழுப்புரம் திருவிகா சாலையில் உள்ள சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற தேர்வு மையத்தினை பார்வையிட்டார் அவருடன் விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா , ஏடிஎஸ்பி, டிஎஸ்பி ஸ்ரீநாதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- மூலக்கரை என்.வெங்கடேஷ் பண்ணையாரின் 19-வது ஆண்டு நினைவு வீர வழிபாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
- போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஆய்வை மேற்கொண்டார்.
ஆறுமுகநேரி:
அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவையின் நிறுவனர் மூலக்கரை என்.வெங்கடேஷ் பண்ணையாரின் 19-வது ஆண்டு நினைவு வீர வழிபாடு நிகழ்ச்சி வருகிற 26-ந்தேதி அம்மன்புரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு அம்மன்புரம் மற்றும் வெங்கடேஷ் பண்ணையாரின் சொந்த ஊரான மூலக்கரை ஆகிய பகுதிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஆய்வை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருச்செந்தூர் ஆவுடையப்பன், ஸ்ரீவைகுண்டம் மாயவன், மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில், ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், திருச்செந்தூர் உட்கோட்ட தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரகு ஆகியோர் உடன் இருந்தனர்.
- தூத்துக்குடி முத்தையாபுரம் துறைமுக சாலை பகுதியில் புதிய பாலம் வேலை நடைபெற்று வருகிற இடத்தில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது.
- திருச்செந்தூர் சாலையில் நடந்த விபத்தில் ஒரே வாகனத்தில் வந்த 3 பேர் உட்பட இரண்டு நாளில் மொத்தம் 6 பேர் விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையாபுரம் துறைமுக சாலை பகுதியில் புதிய பாலம் வேலை நடைபெற்று வருகிற இடத்தில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது.
இப்பகுதியில் புதுமாப்பிள்ளை ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். துறைமுகம் கேட் வ.உ.சி.சிலை அருகே நடந்த விபத்தில் மெக்கானிக் பலியானார். அத்திமரப்பட்டி சாலையில் நடந்த விபத்தில் கல்லூரி மாணவன் பலியானார்.
அதேபோல் திருச்செந்தூர் சாலையில் நடந்த விபத்தில் ஒரே வாகனத்தில் வந்த 3 பேர் உட்பட இரண்டு நாளில் மொத்தம் 6 பேர் விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்கள் குறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்நிலையில் தூத்துக்குடி பகுதியில் விபத்துக்களை கட்டுப்படுத்துவது குறித்து விபத்து நடைபெற்ற இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்யராஜ், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், நகர உட்கோட்ட தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஞானராஜன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.