என் மலர்
நீங்கள் தேடியது "Sri Lanka"
- தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்.
- மீனவர்களின் படகுகளையும் சிறைபிடித்தனர்.
தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர் கதையாகி உள்ளன. ஒவ்வொரு முறையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை செய்வதோடு அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது.
அந்த வகையில், மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை 11 மீனவர்கள் கைது செய்தது. மேலும், மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தது.
நடுக்கடலில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மட்டுமின்றி தமிழக மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
- தமிழ்நாடு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளன. மேலும், மீனவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை கடற்படை வழக்கமாக கொண்டுள்ளது. மீனவர் கைது சம்பவங்களை கண்டித்து நேற்று தமிழ்நாட்டில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 11 பேரை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. மேலும், தமிழ்நாடு மீனவர்களுக்கு சொந்தமான இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
ஒவ்வொரு முறை தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் போதும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறைபிடிக்கப்படும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு கடிதம் எழுதி வருகிறார்.
- 2015-ல் இருந்து 4-வது முறையாக இலங்கை செல்ல இருக்கிறார்.
- இருநாடுளுக்கு இடையில் புதிய பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது.
இந்திய பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடக்கத்தில் இலங்கை செல்ல இருப்பதாக என இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி விஜிதா ஹெராத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அனுர குமார திசநாயகே இந்தியா வந்திருந்தார். அப்போது இந்திய பிரதமர் மோடி இலங்கை வருவது உறுதி செய்யப்பட்டது.
நாங்கள் அண்டை நாடான இந்தியாவுடன் நெருங்கிய நட்பை பேணி வருகிறோம். இந்தியாவுக்கான எங்களுடைய முதல் மூலோபாய சுற்றுப் பயணத்தின்போது இருநாட்டு ஒத்துழைப்பு தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்திய பிரதமர் மோடி இலங்கை வரும்போது, இருநாடுளுக்கு இடையில் புதிய பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது. தேசிய நலனை பேணும் விதமாக வெளிநாட்டு கொள்கையில் எந்தவொரு நாட்டிற்கும் ஆதரவாக இல்லாமல் தொடர்ந்து நடுநிலையாக செயல்படுவோம் என விஜிதா ஹெராத் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு இலங்கை மின்சார வாரியமும் இந்தியாவின் NTPC-யும் கிழக்கு திருகோணமலையின் சம்பூர் நகரில் 135 மெகாவாட் சூரிய மின் நிலையம் கட்ட ஒப்புக்கொண்டன. பிரதமர் மோடி பயணத்தின்போது இந்த சூரிய மின் நிலையம் திறந்து வைக்கப்பட இருக்கிறது.
பிரதமர் மோடி கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து 4-வது முறையாக இலங்கை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
- யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு முதல் சர்வதேச விமானம் சென்னையில் இருந்து வந்து தரையிறங்கியது.
- தற்போதுள்ள ஓடுபாதையில் 75 இருக்கை கொண்ட விமானங்களை மட்டுமே கையாள முடியும் என்று அமைச்சர் கூறினார்.
கொழும்பு:
இலங்கையின் வடக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமானங்களை இயக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறுவதுடன், நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் உதவியாக இருக்கும்.
இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய ஆதாரமாக சுற்றுலாத்துறை விளங்குகிறது. எனினும், 2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்று பரவி, சுற்றுலாத் துறையை கடுமையாக முடக்கியது. அத்துடன், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று.
தற்போது யாழ்ப்பாணத்தின் பலாலியில் இருந்து இந்தியாவுக்கான விமானங்கள் விரைவில் இயக்கப்படும், அநேகமாக டிசம்பர் 12ம் தேதிக்குள் விமான சேவை தொடங்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா தெரிவித்தார். ஓடுபாதையை விரிவாக்கம் செய்யும் பணிகள் செய்யவேண்டியிருப்பதாகவும், தற்போதுள்ள ஓடுபாதையில் 75 இருக்கை கொண்ட விமானங்களை மட்டுமே கையாள முடியும் என்றும் அவர் கூறினார்.
இந்த விமான நிலையம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என 2019ல் பெயர் சூட்டப்பட்டது. முதல் சர்வதேச விமானம் சென்னையில் இருந்து வந்து தரையிறங்கியது. 2019ல் இந்தியா மற்றும் இலங்கை இணைந்து இந்த விமான நிலையத்தை மறுசீரமைப்பு செய்தது. முன்னதாக, இந்தியாவின் அலையன்ஸ் நிறுவனம், சென்னையில் இருந்து பலாலிக்கு வாரந்தோறும் மூன்று விமானங்களை இயக்கியது.
2019 நவம்பரில் இலங்கையின் ஆட்சிமாற்றத்திற்குப் பின்னர், விமான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 படகுகளில் வந்தனர்.
- கரைதிரும்பியது மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தில் மீனவர்கள்புகார் செய்துள்ளனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா புஷ்பவனம் மீனவர் தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன்.
இவருக்கு சொந்தமான பைபர் படகில் முனீஸ்வரன், அதே பகுதியை சேர்ந்த முகுந்தன், காளியப்பன் மற்றும் வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் மீன் பிடிக்க சென்றனர்.
புஷ்பவனத்திற்கு தென்கிழக்கே சுமார் 24 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 2 படகுகளில் வந்த அடையாளம் தெரியாத இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள், இவர்கள் விரித்திருந்த வலையில் சுமார் ரூ, 4 லட்சம் மதிப்புள்ள 450 கிலோ வலையை வெட்டி எடுத்துச் சென்று விட்டனர்.
இந்நிலையில் இன்று காலை புஷ்பவனம் கடற்கரைக்கு திரும்பிய மீனவர்கள் இது குறித்து வேதாரண்யம் கடற்கரை போலீசில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ரெயில்வே துறை தெரிவித்தது.
- வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
கொழும்பு :
வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில், குறிப்பாக கண்டி மாவட்டத்தில், நேற்று முன்தினம் அதிகாலை முதல் தொடர் கனமழை பெய்தது.
இதன் காரணமாக, கிறிஸ்துமஸ் தினமான நேற்று கண்டி மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளநீரால் சூழப்பட்டன.
கண்டி ரெயில் நிலையம், அக்குரணை நகரம் உள்பட பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கின.
கடைகளில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்ததுடன், சில வாகனங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
கண்டி மாவட்டத்தின் அலவாத்துகொடாவில் உள்ள ஒரு வீட்டின் மீது பாறை உருண்டு விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பலியாகினர். மூவர் காயமடைந்தனர்.
வெள்ளம் காரணமாக கண்டி-மாத்தளை சாலை முற்றிலும் பாதிக்கப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டது. எனவே மாற்று வழிகளில் வாகனங்கள் இயக்கப்பட்டன.
மத்திய இலங்கையின் சில பகுதிகளில் பாறைகள் உருண்டு விழுந்ததாலும், நிலச்சரிவு ஏற்பட்டதாலும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ரெயில்வே துறை தெரிவித்தது.
4 மாவட்டங்களில் மேலும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தொடர் கனமழையால் பல அணைக்கட்டுகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஆறுகளுக்கு அருகில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வங்கக் கடலின் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை, இலங்கை வழியாக நகர்ந்து வருகிறது. இதனால் பலத்த காற்று வீசும்.
அடுத்த 48 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இலங்கை வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
- இலங்கையில் வருகிற மார்ச் 9-ந்தேதி உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது.
- உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
கொழும்பு:
இலங்கை நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால் மக்கள் அவதியடைந்து உள்ளனர்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கடன் உதவி பெற்று இலங்கை அரசு நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளித்து வருகிறது.
இதற்கிடையே இலங்கையில் வருகிற மார்ச் 9-ந்தேதி உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வாக்கு சீட்டு அச்சடிக்கவும், வாகனங்களுக்கு எரிபொருள் மற்றும் வாக்குசாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு நிதி வழங்க கருவூலம் மறுத்து விட்டது. போதுமான பணம் இல்லாததால் தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாத சூழல் நிலவுகிறது.
இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் கூறும்போது, உள்ளாட்சி தேர்தல் குறித்த நேரத்தில் நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் உறுதியளித்திருந்தேன். ஆனால் தேவையான நிதியை அரசாங்கம் விடுவிக்காததால் தேர்தலை எங்களால் நடத்த முடியாது என்று தற்போது கோர்ட்டில் தெரிவித்து உள்ளேன் என்றார்.
இதனால் இலங்கை உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
இந்த தேர்தலுக்கு சுமார் ரூ.228 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. சம்பளம் ஓய்வூதியம் மற்றும் அத்தியாசிய சேவைகளை வழங்குவதற்கு அரசு வருமானம் போதுமானதாக இல்லாததால் தேர்தல் சாத்தியமற்றது என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இலங்கை தொழிலாளர்களின் பெருமையை உலகத்துக்கு எடுத்துக் காட்டுகிறோம்.
- நாட்டின் தொழிலாளர்கள் அனைவரும் கரம் கோர்க்க வேண்டும்.
கொழும்பு :
மே தினத்தையொட்டி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று வாழ்த்துச் செய்தியை வெளியிட்டார்.
அதில், 'நம் நாடு கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார சீர்குலைவுக்கு உள்ளானது. பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்கான கடினமான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளுக்காக நாம் காத்திருந்தபோது, தொழிலாளர்கள் அதற்கு துணிவோடும், பொறுமையோடும் ஆதரவு அளித்தனர். தற்போது மே தினத்தை கொண்டாடும் வேளையில், இலங்கை தொழிலாளர்களின் பெருமையை உலகத்துக்கு எடுத்துக் காட்டுகிறோம்.
வருகிற 2048-ம் ஆண்டு, சுதந்திர நூற்றாண்டை கொண்டாடும்போது இலங்கை ஒரு வளர்ந்த நாடாகும். அதற்கான பணியில் நாட்டின் தொழிலாளர்கள் அனைவரும் கரம் கோர்க்க வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்ட இந்த அர்த்தமுள்ள சர்வதேச தொழிலாளர் தினத்தில் நாம் அவர்களை வாழ்த்துகிறோம்.'
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இப்போது உணவுத் தட்டுப்பாடு இல்லை.
- எந்த ஒரு சமூகத்தையும் நாம் சிதைக்கக்கூடாது.
கொழும்பு :
இலங்கையில் பல பத்தாண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினை தொடர் கதையாகவே நீடிக்கிறது. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
தற்போது இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே இந்த பிரச்சினைக்கு இறுதி தீர்வு காண விரும்புவதாக நேற்று அவர் தெரிவித்தார். உழைப்பாளர் தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு வழங்கிய செய்தியில் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் வகையில், நாட்டின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு விரும்புகிறேன். அப்படி தீர்வு எட்டப்பட்டால் மட்டுமே சர்வதேச நிதியத்தின் உதவியுடன் நாட்டின் தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். ஏனெனில் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பது சர்வதேச நிதியம் விதித்த நிபந்தனைகளில் ஒன்றாகும். இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்துகிறோம்.
அதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் ஏதாவது ஒரு உடன்பாட்டுக்கு வர முடியும் என்று நம்புகிறேன். எந்த ஒரு சமூகத்தையும் நாம் சிதைக்கக்கூடாது. பெரும்பான்மை சிங்களர், தமிழ், முஸ்லிம், பர்கர் மற்றும் ஏனைய சிறுபான்மைக் குழுக்களைப் பாதுகாத்து நாம் முன்னேற வேண்டும். அதை அடைவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்.
நாட்டில் தற்போது பொருளாதார நிலைத்தன்மையை உருவாக்கியுள்ளோம். இப்போது உணவுத் தட்டுப்பாடு இல்லை. நாட்டில் ஜனநாயகம் நடைமுறையில் உள்ளது. அச்சுறுத்தல்கள் இன்றி பாராளுமன்றம் கூடுகிறது. அனைவரும் தங்கள் பணியை தடையின்றி மேற்கொள்கின்றனர்.
சர்வதேச நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதே நமது அடுத்த பணி. 2024-ம் ஆண்டுக்குள் தேவையான சட்டத்தை உருவாக்கி பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவோம்.
இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கூறினார்.
இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண, தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்க வகை செய்யும் 13-வது சட்ட திருத்தத்தை முழுவதுமாக அமல்படுத்த வேண்டும் என ரணில் விக்ரமசிங்கே ஏற்கனவே கூறி இருந்தார்.
ஆனால் இதற்கு சிங்களர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடத்தப்பட்ட பல்வேறு அனைத்துக்கட்சி கூட்டங்களில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த சூழலில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் விடுத்திருக்கும் அழைப்புக்கு சிங்கள கட்சிகள் செவிசாய்க்குமா என்பது போகப்போக தெரியும்.
- மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
- இலங்கை நாடாளுமன்றத்தில் உரிமை பிரச்சினை ஒன்றை எழுப்ப இருந்தார்.
கொழும்பு
இலங்கையில் தமிழ் தேசிய முன்னணியின் மூத்த தலைவர்களில் ஒருவர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இவர் யாழ்ப்பாணம் தொகுதி எம்.பி. ஆவார்.
இவர் இலங்கை நாடாளுமன்றத்தில் உரிமை பிரச்சினை ஒன்றை எழுப்ப இருந்தார். அந்த நேரத்தில், கொழும்பு நகரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
போலீசார் தங்கள் கடமையைச் செய்ய விடாமல் தடுத்த குற்றச்சாட்டின்பேரில், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை போலீசார் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகின.
அவர் அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும் நாடாளுமன்றத்துக்கு செல்லவிருந்த நிலையில் அவர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டது தமிழர்கள் பெருவாரியாக வாழும் வடக்கு மாகாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. கைது பற்றி கூறப்படுவதாவது:-
கடந்த 2-ந்தேதியன்று கஜேந்திர குமார் பொன்னம்பலம் எம்.பி, வடமராச்சி என்ற இடத்தில் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தார். அந்த இடத்தில் கூட்டம் நடத்துவது குறித்து அவரிடம் விசாரணை நடத்துவதற்கு சி.ஐ.டி. அதிகாரிகள் என்று சிலர் சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் வந்து அவரைச் சந்தித்துள்ளனர்.
ஆனால் அவர்களை அடையாள அட்டையை காட்டும்படி அவர் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுத்துள்ளனர். மேலும், அவர் எதிர்ப்பு தெரிவித்தபோது போலீசார் அவரை தாக்கியும் உள்ளனர். வந்த போலீசாரில் ஒருவர் அவரை துப்பாக்கி முனையில் மிரட்டியும் உள்ளார்.
மேலும் அவரை மருதங்கேணி போலீஸ் நிலையத்துக்கு வந்து வாக்குமூலம் அளிக்குமாறு கூறி உள்ளனர்.
ஆனால் அவர் நாடாளுமன்ற சபாநாயகரைத் தொடர்பு கொண்டு பேசி தனக்கு நடந்ததை கூறினார். அதைத்தொடர்ந்து அவர் நாடாளுமன்றத்துக்கு வந்து உரிமை பிரச்சினையை எழுப்பலாம் என்றும் 12-ந்தேதிக்கு பின்னர் போலீசில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கலாம் எனவும் கூறியதாக தெரிகிறது. இதையொட்டி போலீஸ் ஐ.ஜி. அவருக்கு உறுதியும் அளித்துள்ளார். அதையும் மீறித்தான் கைது நடவடிக்கை நடந்துள்ளது.
இவ்வாறு தெரிய வந்துள்ளது.
- ஆகஸ்ட் 31-ம் தேதி தொடங்கும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
- ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தானிலும் இலங்கையிலும் நடைபெறவுள்ளன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றனர்.
பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றால் அதில் பங்கேற்க மாட்டோம் என பி.சி.சி.ஐ. அறிவித்திருந்தது. இதையடுத்து இந்தியாவுடனான போட்டிகளை பொதுவான இடத்திலும், மற்ற நாடுகளின் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தவும் பாகிஸ்தான் பரிந்துரை செய்திருந்தது.
அதன்படி ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தானிலும் இலங்கையிலும் நடைபெறவுள்ளன. 4 லீக் போட்டிகள் பாகிஸ்தானிலும், மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையில் நடைபெறுகிறது.
- "இலங்கையில் உள்ள பெரிய மனித புதைகுழிகளும் வெற்றியடையாத அகழ்வுகளும்" என்ற தலைப்பில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
- அரசியல் தலையீட்டின் பிரதான உதாரணமாக அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோத்தபய ராஜபக்சேவின் நடவடிக்கை ஆகும்.
இலங்கையில் 1988-89 காலகட்டத்தில் நிகழ்ந்த மார்க்சிஸ்ட் கிளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த மோதல்களில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் ஆங்காங்கே கொத்துக்கொத்தாக புதைக்கப்பட்டுள்ளனர். கட்டுமான பணிகளின்போது இந்த புதைகுழிகள் வெளிப்பட்டதையடுத்து, அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதைகுழிகள் தோண்டப்பட்டன.
குறிப்பாக 2013ம் ஆண்டு மத்திய இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் 155 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு இடத்தில் 81 உடல்களும், மற்றொரு இடத்தில் 318 எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில், இலங்கையில் மோதல்கள் நடந்த பல்வேறு காலப்பகுதியைச் சேர்ந்த மனித புதைகுழிகளை இலங்கை அரசு எவ்வாறு கையாண்டது? என்பது தொடர்பாக புள்ளி விவரங்களுடன் சர்வதேச மனித உரிமைகள் குழு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
"இலங்கையில் உள்ள பெரிய மனித புதைகுழிகளும் வெற்றியடையாத அகழ்வுகளும்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில், இலங்கை முழுவதிலும் இன்னும் ஆயிரக்கணக்கான சடலங்கள் புதையுண்டு கிடப்பதாக கூறியதுடன், மனித புதைகுழிகள் தொடர்பான காவல்துறை ஆவணங்களை அப்போதைய ராணுவ அதிகாரியாக இருந்த கோத்தபய ராஜபக்சே அழித்திருப்பதாக குற்றம்சாட்டி உள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-
அகழ்வு பணிகளில் உள்ள பெரிய பிரச்சனை, அதில் உள்ள அரசியல் தலையீடு ஆகும். அரசியல் தலையீட்டின் பிரதான உதாரணமாக அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோத்தபய ராஜபக்சேவின் நடவடிக்கைகை குறிப்பிடலாம். (கோத்தபய ராஜபக்சே 1989 ஜூலை முதல் 1990 ஜனவரி வரை மாத்தளை மாவட்டத்தின் ராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும், பின்னர் இலங்கையின் அதிபராகவும் இருந்தார்). அவர் மாத்தளை மாவட்டம் உள்பட மத்திய மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் இருந்த ஐந்து வருடத்திற்கு முந்தைய கால கோப்புகள் அனைத்தையும் அழித்துவிடுமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. எனவே, சர்வதேச சட்டத்தின்படி கோத்தபய ராஜபக்சே மீது இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.