search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srilanka Economy Crisis"

    ராஜபக்சே குடும்பத்தினர் அரசியலில் இருந்து விலகினால் மட்டுமே எங்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
    கொழும்பு:

    இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 

    இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். அதில் வன்முறை அரங்கேறிய நிலையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.

    இதற்கிடையே, புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவியேற்றார். நிதித்துறை பொறுப்பையும் அவரே ஏற்றுள்ளார். இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக பல்வேறு திட்டங்களை ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு செய்து வருகிறது.

    புதிய அரசு அமைந்தாலும், அந்நாட்டு அதிபர் பதவி விலகக் கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
     
    இந்நிலையில், இலங்கை அதிபர் அலுவலகத்தின் நுழைவு வாயிலை ஆக்கிரமித்து தொடர் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் இன்று போராட்டம் 50-வது நாளை எட்டியுள்ளது. போராட்டம் 50-வது நாள் எட்டியதை குறிக்கும் வகையில் பேரணியும் நடைபெற்றது. 

    இந்தியா சென்று பிழைத்து கொள்ளலாம் என முடிவு செய்து மன்னார் பகுதியில் இருந்து பணம் கொடுத்து பிளாஸ்டிக் படகில் வந்ததாக இலங்கை அகதிகள் தெரிவித்தனர்.
    ராமேசுவரம்;

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோவில் பகுதியில் இன்று 3 அகதிகள் இருப்பதாக மண்டபம் கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் வந்தது.

    அதன் பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார் அவர்களை மீட்டு கடலோர பாதுகாப்பு குழுமம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கொழும்பு, தெமட்டோ கோட்டை பகுதியை சேர்ந்த வரதன் மனைவி ஜெசிந்தா மேரி (வயது 51), வரதன் மகன் பிரிவின் சஞ்சய் (10), லோகநாதன் மகன் அனிஸ்டன் (31) என தெரியவந்தது.

    அவர்கள் இதுபற்றி கூறுகையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தொடர்ந்து எங்களால் கூலி வேலை செல்ல முடியாமல் உணவுக்கு தவித்து வந்ததாகவும், இதனால் இந்தியா சென்று பிழைத்து கொள்ளலாம் என முடிவு செய்து நேற்று மாலை மன்னார் பகுதியில் இருந்து பணம் கொடுத்து பிளாஸ்டிக் படகில் வந்ததாகவும் தெரிவித்தனர்.

    மேலும் 3 அகதிகளும் 1995-ம் ஆண்டு முதல் 2017 வரை குடியாத்தம் அகதிகள் முகாமில் இருந்துள்ளனர் என்றும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    இலங்கை மக்கள் பயன்பாட்டிற்காக 25 டன்களுக்கும் அதிகமான மருத்துவப் பொருட்கள், மண்ணெண்ணெய் ஆகியவற்றை இந்தியா கடந்த வாரம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
    கொழும்பு:

    கடந்த 2016-ம் ஆண்டில் இந்தியா வழங்கிய ரூ.58 கோடி நிதியில் இலங்கையில் சுவா செரியா ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. இத்துடன் இந்தியா இலவசமாக ஆம்புலன்ஸ் வாகனங்களையும் வழங்கியுள்ளது.

    இந்நிலையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    இலங்கை மக்களுக்கு இந்தியா அளித்த மற்றுமொரு வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மார்ச்சில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை வந்தபோது மருந்துகள் பற்றாக்குறை குறித்து சுவா செரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஆவன செய்வதாக மந்திரி உறுதி அளித்தார்.

    அதன்படி 3,300 கிலோ மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவி வருகிறது.
    • இந்தியா சார்பில் இன்று 21 ஆயிரம் டன் உரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    கொழும்பு:

    இலங்கையில் நெருக்கடி முற்றியபோது 57 லட்சம் மக்கள் மனிதநேய அடிப்படையிலான உதவி உடனடியாக வழங்கப்பட வேண்டிய நிலையில் உள்ளனர் என்று ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா சார்பில் இன்று 21 ஆயிரம் டன் உரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, கொழும்பு நகரில் உள்ள இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியதாவது:

    நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்கு நறுமணம் சேர்க்கும் வகையில் 21 ஆயிரம் டன் உரம், இலங்கை மக்களுக்கான இந்தியாவின் சிறப்பு ஆதரவு திட்டத்தின் கீழ் இந்திய தூதர் முறைப்படி வழங்கியுள்ளார் என தெரிவித்துள்ளது.

    கடந்த மாதம் 44 ஆயிரம் டன் உரம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையும் சேர்த்து 2022-ம் ஆண்டில் மொத்தம் அமெரிக்க டாலர் மதிப்பில் 400 கோடி அளவுக்கு உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த உரம் ஆனது உணவு பாதுகாப்பு மற்றும் இலங்கையின் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதில் பங்கு வகிக்கும் என கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இலங்கை வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்துவிட்டு வெளிநாடு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • சட்ட விரோதமான முறையில் சுற்றுலா விசா மூலம் தொழில் செய்ய செல்ல வேண்டாம்

    சுற்றுலா விசாக்கள் மூலம் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளுக்கு அனுப்பும் மோசடியாளர்கள், ஆள் கடத்தல் காரர்களிடம் யாரும் சிக்கி கொள்ள வேண்டாம் என இலங்கை நாட்டு மக்களுக்கு அங்குள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும்போது வேலை மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு முக்கியமானது. எனவே அவர்கள் இலங்கை வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்துவிட்டு வெளிநாடு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சட்ட விரோதமான முறையில் சுற்றுலா விசா மூலம் தொழில் செய்ய செல்ல வேண்டாம் என அந்நாட்டு அமைச்சர் மனுஷ நாணயக்காரா தெரிவித்து உள்ளார்.

    • ராஜபச்சே குடும்பத்தினர் மீது கோபமாக இருப்பதால் மகிந்த ராஜபக்சே அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவார் என்ற பேச்சு அடிபட்டது.
    • ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவை வழி நடத்துவதற்கு நான் தேவையா என்பதை கட்சி தான் தீர்மானிக்க வேண்டும்.

    இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி அந்நாட்டையே ஒரு புரட்டு புரட்டி போட்டு உள்ளது. வரலாறு காணாத வகையில் அத்யாவசிய பொருட்களின் விலை அனைத்தும் உயர்ந்து விட்டதால் பொதுமக்கள் இன்னும் தவியாய் தவித்து வருகின்றனர்.

    அங்கு வாழ வழி தெரியாமல் பல குடும்பங்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் வெகுண்டு எழுந்ததால் அங்கு அரசியல் மாற்றமும் ஏற்பட்டது. அதிபராக இருந்த கோத்தபய ராஜபச்சே சொந்த நாட்டைவிட்டு ஓடி விட்டார். அவர் தற்போது தாய்லாந்து நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ளார்.

    பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவர் வெளிநாட்டுக்கு செல்ல அங்குள்ள கோர்ட்டு தடை விதித்து உள்ளது. இதனால் அவர் எங்கும் தப்பி செல்ல முடியாமல் இலங்கையிலேயே முடங்கி கிடக்கிறார்

    பொதுமக்கள் தொடர்ந்து ராஜபச்சே குடும்பத்தினர் மீது கோபமாக இருப்பதால் மகிந்த ராஜபக்சே அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவார் என்ற பேச்சு அடிபட்டது. இதனை அவர் மறுத்து உள்ளார்.

    இதுதொடர்பாக மகிந்த ராஜபக்சே அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போது இல்லை. நான் தொடர்ந்து அரசியலில் இருப்பேன். நேரம் வரும் போது மட்டுமே ஓய்வு பெறுவேன். அதுவரை நான் அரசியலில் இருப்பேன். ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவை வழி நடத்துவதற்கு நான் தேவையா என்பதை கட்சி தான் தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் நான் ஒரு வக்கீல் என்னால் கோர்ட்டில் வாதாட முடியும். தேவைப்பட்டால் நான் கோர்ட்டுக்கு செல்லவும் தயார்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • இலங்கைக்கு, இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
    • வாழ்க்கையில் மிகவும் கடினமான கட்டத்தை கடக்க அவர்களுக்கு உதவ விரும்புகிறோம் என தெரிவித்தார்.

    திருவனந்தபுரம்:

    கடும் பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் உள்ள பொதுமக்கள் அத்தியாசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்தனர். இதையடுத்து பதறிப்போன கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார்.

    இந்நிலையில், கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, திருவனந்தபுரத்தில் மந்திரி ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையின் தற்போதைய நிலைமை பதற்றமானது மற்றும் சிக்கலானது. இந்தியாவின் அண்டை நாட்டினர் என்பதனால் இலங்கை மக்களுக்கு நமது ஆதரவை அளிக்க வேண்டும். அவர்களின் வாழ்க்கையில் மிகவும் கடினமான கட்டத்தை கடக்க அவர்களுக்கு உதவ நாம் விரும்புகிறோம் என தெரிவித்தார். 

    • மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக இலங்கை பிரதமர் மற்றும் அதிபர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.
    • இதையடுத்து, முக்கிய அமைச்சர்கள் பலரும் ராஜினாமா செய்துள்ளனர்.

    கொழும்பு:

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பல மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, தலைநகர் கொழும்புவில் நேற்று போராட்டக்காரர்கள் பேரணி சென்றனர். அதிபர் கோத்தபயா வீட்டில் நுழைந்த அவர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

    போராட்டத்தின் எதிரொலியாக அதிபர் கோத்தபயா ராஜபக்சே தனது பதவியை வரும் 13-ம் தேதி ராஜினாமா செய்வார் என பாராளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், பிரதமர் மற்றும் அதிபர் பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் முக்கிய அமைச்சர்கள் பலரும் ராஜினாமா செய்துள்ளனர்.

    விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

    அனைத்துக் கட்சிகள் இணைந்து கூட்டாட்சி அரசை அமைக்க வழிவகுக்கும் வகையில் ராஜினாமா செய்ததாக கூட்டறிக்கை வெளியிட்டனர்.

    • கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பல மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • ஆயிரக்கணக்கான மக்கள் அதிபர் மற்றும் பிரதமர் மாளிகையை முற்றுகையிட்டனர்.

    புதுடெல்லி:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர்.

    போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். இந்த கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சிக்கும் அந்நாட்டு மக்களுடன் இந்தியா துணை நிற்கும். இலங்கையும், அதன் மக்களும் எதிர்கொள்ளும் பல சவால்களை இந்தியா அறிகிறது. இலங்கையில் நெருக்கடி சூழலை சமாளிக்க இதுவரை 3.8 பில்லியன் டாலர்கள் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    • பொருளாதார நெருக்கடியால் மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
    • இலங்கை மக்களுடன் காங்கிரஸ் கட்சி துணை நிற்கிறது என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நேற்று கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்து வீட்டை அடித்து நொறுக்கினர். அதிபர் வீட்டை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை எடுத்துச் சென்றனர். மேலும் போராட்டக்காரர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டையும் முற்றுகையிட்டனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடியான சூழலில் அந்நாட்டு மக்களுடன் காங்கிரஸ் கட்சி துணை நிற்கிறது. பொருளாதார சவால்கள், விலைவாசி உயர்வு மற்றும் உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றால் மக்களிடையே பெரிய அளவில் பாதிப்பும், மனஅழுத்தமும் ஏற்பட்டு உள்ளது.

    இலங்கை மக்கள் இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இலங்கை அரசுக்கும், மக்களுக்கும் இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

    மேலும், சர்வதேச சமூகமும் இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவையும் வழங்கவேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

    • இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா சந்தித்துப் பேசினாா்.
    • கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தாராளமாக உதவி அளித்து வருகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் உணவுப் பொருட்கள், எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தாராளமாக உதவி அளித்து வருகிறது.

    இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா சந்தித்துப் பேசினாா்.

    இந்தச் சந்திப்பில் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்தும், இந்தியாவின் ஆதரவு குறித்தும் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடந்தன. மேலும், இலங்கையில் முதலீடுகளை ஊக்குவித்தல், பொருளாதார தொடர்பை வலுப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் விரைவான பொருளாதார மீட்சிக்கு உதவ, இந்தியா தயாராக இருப்பதாக அவா்கள் தொிவித்தனா்.

    இந்தச் சந்திப்பின் மூலம் இருநாட்டு உறவுகளும் மேம்படுத்துவதற்கான உறுதியை இருதரப்பினரும் உறுதிபடுத்தி உள்ளனர் என மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டுவிட்டாில் தொிவித்துள்ளாா்.

    • கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தாராளமாக உதவி அளித்து வருகிறது.
    • இந்தியாவிடம் பெற்ற கடன்களை நாம் கண்டிப்பாக திருப்பி செலுத்த வேண்டும் என இலங்கை பிரதமர் தெரிவித்தார்.

    கொழும்பு:

    இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அன்னிய செலாவணி நெருக்கடியால் இறக்குமதி செய்யவும் போதிய பணம் இன்றி இலங்கை தவித்து வருகிறது. இதனால் உணவுப் பொருட்கள், எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

    கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தாராளமாக உதவி அளித்து வருகிறது. இதன்படி, உணவுபொருட்கள், மருந்துகள், எரிபொருள் போன்றவற்றை இலங்கை இந்தியாவிடம் கடனாக பெற்ற தொகை மூலம் இறக்குமதி செய்து வருகிறது.

    இந்நிலையில், இலங்கை பாராளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியாவின் கடனுதவி திட்டத்தின் கீழ் நாம் 31 ஆயிரம் கோடி அளவுக்கு கடனாகப் பெற்றுள்ளோம். மேலும் கடனுதவி அளிக்க வேண்டும் என்று இந்திய தலைவர்களிடம் நாம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

    ஆனால் இந்தியாவாலும் இந்த முறையில் தொடர்ந்து உதவி அளிக்க முடியாது. அவர்கள் அளிக்கும் உதவிக்கு சில வரைமுறைகள் உள்ளன. மறுபுறம் இந்தியாவிடம் பெற்ற கடன்களை நாம் கண்டிப்பாக திருப்பிச் செலுத்த வேண்டும். இந்தியா அளிப்பது நன்கொடை இல்லை.

    நமது பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. நமக்கு முன்னால் இருக்கும் மிகத்தீவிரமான பிரச்சினை இதுதான். இலங்கை பொருளாதாரம் மீட்சி அடைவதன் மூலம் இந்தப் பிரச்சினைகளை தீர்க்க முடியும். இதற்காக அன்னிய செலாவணி நெருக்கடியை நாம் முதலில் தீர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

    ×