என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Stealing"
- பல்கலைக்கழகத்துக்கு எதிராக உள்ள கோட்ட கவுண்டம்பட்டியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார்.
- 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து உதவி பேராசிரியை சுகன்யா அணிந்து இருந்த 2 பவுன் நகையை பறித்து சென்றனர்.
சேலம்:
சேலம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி உதவி பேராசிரியையாக சுகன்யா (35) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பல்கலைக்கழகத்துக்கு எதிராக உள்ள கோட்ட கவுண்டம்பட்டியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் இவர் பணி முடிந்து தனது மொபட்டில் பல்கலைக்கழகம் பகுதியில் உள்ள பாலத்தின் கீழே சென்று கொண்டு இருந்தார். அங்கு இருந்த 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து உதவி பேராசிரியை சுகன்யா அணிந்து இருந்த 2 பவுன் நகையை பறித்து சென்றார்.
இதுகுறித்து தெரியவந்ததும் கருப்பூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அப்போது உதவி பேராசிரியை சுகன்யாவிடம் நகையை பறித்து சென்றது ஓமலூர் மாட்டு காரன்புதூர் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் உள்பட 2 பேர் என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான வாலிபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பேன்சி கடை, மற்றும் கடைகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தது.
- கண்காணிப்பு கேமராவில் உள்ள உருவத்தை கடைக்காரர்களின் செல்போனுக்கு சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்தனர்.
பல்லடம்
பல்லடம் தினசரி மார்க்கெட் பகுதியில் உள்ள பேன்சி கடை, மற்றும் கடைகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இது குறித்து வியாபாரிகள் பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனாலும் திருடன் சிக்கவில்லை. இதையடுத்து கடைக்காரர்கள் கடைகளுக்கு முன்னும் பின்னும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். சம்பவத்தன்று இரவு பேன்சி கடை, துணிக்கடை உள்ளிட்ட கடைகளில் சுமார் ரூ.2.500 மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது.
கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்த போது, அதில் ஒரு வாலிபர் கடைகளில் புகுந்து திருடுவது தெரிய வந்தது. இதையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளுடன் பல்லடம் போலீஸ் நிலையத்தில் வியாபாரிகள் புகார் அளித்தனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் உள்ள உருவத்தை கடைக்காரர்களின் செல்போனுக்கு சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்தனர்.
இதற்கிடையே நேற்று இரவு கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவம் கொண்ட நபர் மார்க்கெட் பகுதிக்கு வந்தார்.
அவரை வியாபாரிகள் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்த போது அவர் கடைகளில் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு தர்ம அடி கொடுத்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் இது குறித்து பேன்சி கடை நடத்தி வரும் நாகராஜன் (வயது59) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் அவன் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரதி புத்தி பதார் என்பவரது மகன் ராஜு என்கிற சிந்தாமணி (வயது 28) என்பது தெரிய வந்தது.
அவனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பீகார் மாநிலத்தை சேர்ந்த பாரத்சகினி என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மேற்கண்ட 4 பேரையும் பிடித்து கைது செய்தனர்.
பெருமாநல்லூர்:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள தாண்டாகவுண்டன்புதூர் பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பாரத்சகினி என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியை சேர்ந்த காளிமுத்து மகன் திலோத் (வயது 22), கரூரை சேர்ந்த ரங்கன் என்பவரது மகன் சண்முகவேல் ( 23),திருச்சியை சேர்ந்த ரவி மகன் விஷ்வா ( 22), செந்தில்குமார் மகன் அறிவழகன் ( 22) ஆகிய 4 பேரும் சேர்ந்து செல்போனை பறித்து சென்றதாக தெரிகிறது.
இது குறித்து பாரத்சகினி பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையில்சப்-இன்ஸ்பெக்டர் உமா மகேஷ்வரி, மற்றும் போலீசார் அன்பரசன், கார்த்திகேயன்,மயில்சாமி,சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மேற்கண்ட 4 பேரையும் பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் திருப்பூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- பெண்ணிடம் 14½ பவுன்-பணம் திருட்டு போனது.
- நகைகளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை கே.புதூர் சர்வேயர் காலனியை சேர்ந்தவர் கார்த்திகா (வயது42), விவாகரத்தா னவர். இவர் மகனுடன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கே.கே.நகரில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தார்.
அவர்தான் அணிந்திருந்த 10 பவுன் செயின், 3 பவுன் நெக்லஸ், மோதிரம், வளையல்கள், பணம் ரூ.20ஆயிரம், 2 செல்போ ன்கள் ஆகியவற்றை தனது பையில் வைத்து விட்டு குளிக்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அந்த நகைகள், பணம் செல்போன்கள் ஆகியவை காணாமல் போயிருந்தது.
யாரோ மர்ம நபர் அறைக்குள் புகுந்து பணம், நகைகளை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து லாட்ஜில் விசாரித்த போது அங்கிருந்தவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அண்ணா நகர் போலீசில் கார்த்திகா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம், நகைகளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- 6 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.
- கல்வராயன் மலைப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கல்வராயன்மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராய ஊழல்களை கண்டுபிடித்து போலீசார் அழித்து வருகின்றனர். நேற்று முன்தினம் விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் ஜியாவுல்ஹக் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண் டு மோகன்ராஜ் தலைமையில் கொண்ட போலீசார் கல்வராயன் மலைப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது 6 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரி தலைமையிலான போலீசார் நேற்று கல்வராயன் மலைப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது கோவில் மொழிபட்டு கிராமம் அருகே கள்ள சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய மூன்று பிளாஸ்டிக் பேரல்களில் 600 லிட்டர் சாராய ஊறல்களை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் இந்த குற்ற செயலில் ஈடுபட்ட தலைமறைவான குற்றவாளி வெங்கட்ராமன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்.
- மர்ம நபர்கள் சிலர் கோவில் உண்டியலை உடைத்து ரூ.5 ஆயிரம் திருடிச்சென்றனர்.
- போலீசார் 3 பேரை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
சாம்பவர்வடகரை:
சாம்பவர் வடகரை அருகே உள்ள சுந்தர பாண்டிய புரத்தில் சுடலை மாடன் சுவாமி கோவில் மற்றும் திருச்சிற்றம்பலம் கோவில் உள்ளது. இந்த கோவில்களில் மர்ம நபர்கள் சிலர் உண்டியலை உடைத்து ரூ.5 ஆயிரம் திருடிச்சென்றனர். இதுதொடர்பாக சாம்பவர் வடகரை போலீஸ் சப்-இன்ஸ்பக்டர் காசி விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இதற்கிடையே அதே பகுதியில் உள்ள மளிகை கடையில் 3 வாலிபர்கள் சந்தேகத்திற்கு இடமாக சில்லரை காசுகளை மாற்று வதற்காக வந்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, அங்கிருந்த 3 பேரும் தப்பியோட முயன்றனர்.
அவர்களை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது, அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகை குமார்(வயது 27), சின்ன வைரவன் தெருவை சேர்ந்த மேத்தா என்ற கருவாலி (18), முஸ்லிம் தெருவை சேர்ந்த மாடசாமி (21) என்பதும், அவர்கள் கோவில் உண்டியல்களில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
- 4 ந் தேதி இரவு அவர் வீட்டு பின்புறம் இருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
- உடுமலை போலீசில் ராஜேந்திரன் புகார் செய்தார்.
உடுமலை :
உடுமலை அருகே கொடுங்கியத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (46) இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 4 ந்தேதி இரவு அவர் வீட்டு பின்புறம் இருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதுகுறித்து உடுமலை போலீசில் ராஜேந்திரன் புகார் செய்தார். இந்நிலையில் ஆண்டியூர் சோதனை சாவடியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் 2 ஆடுகளுடன் வந்த ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்த செல்வராஜ்( 52) குஞ்சிபாளையத்தை சேர்ந்த சிவகுமார் (33) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்கள்தான் மேற்கண்ட 2 ஆடுகளையும் திருடியது தெரிய வந்தது இதையடுத்து 2 பேரையும் கைது செய்து போலீசார் அவர்களிடமிருந்து ஆடுகளை மீட்டனர்.
- கைரேகை நிபுணர்கள் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
- ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
ஊட்டி
ஊட்டி நகராட்சி மாா்க்கெ ட்டில் உள்ள 19 கடை களின் பூட்டை உடைத்து ரூ.31 ஆயிரம் திருடப்ப ட்டிருந்தது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமை யிலான போலீசார் மார்க்கெட் பகுதிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
அதில் மார்க்கெட்டில் இரவு நேரத்தில் புகுந்த வாலிபர் கடையை உடைத்து பணத்தை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழை க்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
விசார ணையில் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டது ஊட்டி பாம்பேகேசில் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (வயது 22) என்பது தெரயிவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மனோஜை கைது செய்தனர்.
பின்னர் அவர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கணவன்- மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனர்.
- 7 பவுன் தங்க நகைகள், மற்றும் பணம் ரூ. 7 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரில் வசிப்பவர் சிவரஞ்சன். இவர் திருப்பூர் வீரபாண்டி அருகே உள்ள தனியார் பனியன் சாயமிடும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 22-ந்தேதி கணவன்- மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனர். வேலை முடிந்து மாலை திரும்பி வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ, மற்றும் பொருட்கள் சிதறிக்கிடந்தன பீரோவுக்குள் இருந்த, தங்கச் சங்கிலி, வளையல்,மோதிரம் உள்ளிட்ட 7 பவுன் தங்க நகைகள், மற்றும் பணம் ரூ. 7 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து சிவரஞ்சன் பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் பல்லடம் போலீசார் நேற்று சின்னக்கரை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் சிவரஞ்சன் வீட்டில் திருடிய நபர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது அவர்கள் அறிவொளிநகரைச் சேர்ந்த அர்ஜுனன்(38) ,அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் சுரேஷ்(27) என்பதும் இருவரும் கூட்டு சேர்ந்து வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், தொல்லை எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 6 பவுன் நகையை பறிமுதல் செய்து இருவரையும் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- அல்லாளபுரத்தில் நூற்றாண்டு பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
- சிசிடிவி. காட்சிகள் அந்தப்பகுதியில் வைரலாகி வருகிறது.
பல்லடம் :
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி, அல்லாளபுரத்தில் நூற்றாண்டு பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இங்கு அடுத்த மாதம் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்காக, யாக சாலை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக மன்னார்குடி பகுதியில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்டோர் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் செல்போன்களை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்த சிசிடிவி. காட்சிகள் அந்தப்பகுதியில் வைரலாகி வருகிறது. செல்போன்கள் திருடு போனது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- பைனான்சின் கண்ணாடி கதவை மட்டும் பூட்டிவிட்டு சட்டரை பூட்டாமல் வெளியே சென்று விட்டார்.
- ரூ.2 லட்சம் மற்றும் ஆர்.சி. புக் காணாமல் போனது
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் அருகே உள்ள தாசவநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ்(வயது 30). இவர் வெள்ளகோவிலில், பழைய பஸ் நிலையம் அருகே ஆட்டோ பைனான்ஸ் நடத்தி வருகின்றார்.இவர் கடந்த மாதம் ஜூலை29ந் தேதி வெள்ளி கிழமை வழக்கம் போல் காலை 10 மணிக்கு பைனான்சைத்திறந்து, மாலை 4 மணி வரை இருந்துவிட்டு, வசூல் ஆன ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் பைக் ஆர்சி புக் ஆகியவற்றை டேபிளில் வைத்து பூட்டிவிட்டு, பைனான்சின் கண்ணாடி கதவை மட்டும் பூட்டிவிட்டு சட்டரை பூட்டாமல் வெளியே சென்று விட்டார். பிறகு 6 மணிக்கு மேல் வந்து பார்த்தபோது கண்ணாடி கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார், உடனே உள்ளே சென்று டேபிளை பார்க்கும்போது டேபிளினுடைய பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.2 லட்சம் மற்றும் ஆர் சி புக் காணாமல் போனது தெரிய வந்தது, உடனே அக்கம் பக்கம் விசாரித்து பார்த்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை,
இது குறித்து வெள்ளகோவில் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ராஜமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்த ஈரோடு, எல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் சந்தோஷ் (24)என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் இந்த திருட்டுக்கு பயன்படுத்திய பைக்கை கைப்பற்றினர். பின்னர் சந்தோஷை காங்கேயம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். நீதிபதி இந்த மாதம் 25ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தாராபுரம் கிளை சிறையில் சந்தோஷ் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமறைவாக உள்ள 2 பேரை வெள்ளகோவில் போலீசார் தேடி வருகின்றனர்.
- கேத்தனூரில் இரண்டு காற்றாலைகளில் காப்பர் கம்பி மற்றும் உப பொருட்கள் திருடு போனது.
- 10 கிலோ காப்பர் கம்பிகள், 50 கிலோ கோர் பிளேட், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரொக்கம் ரூ. 45 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கேத்தனூரில் தனியாருக்கு சொந்தமான காற்றாலைகள் உள்ளது. இங்கு உள்ள இரண்டு காற்றாலைகளில் காப்பர் கம்பி மற்றும் உப பொருட்கள் திருடு போனது. இதுகுறித்து காற்றாலையின் மேலாளர்கள் ரமேஷ் கண்ணன், கார்த்திக் பிரபு ஆகியோர் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சந்தேகத்துக்கு இடமான நிலையில் 4 பேர் சுற்றித் திரிந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கேத்தனூரை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரது மகன் கவியரசு (வயது 25), தங்கராஜ் மகன் தீபக்( 25), காசிராஜா மகன் தனபால் (25), ராஜாமணி மகன் சதீஷ் (25) என்பதும் காப்பர் கம்பிகளை திருடியதும் தெரிய வந்தது.அவர்களிடமிருந்து 10 கிலோ காப்பர் கம்பிகள், 50 கிலோ கோர் பிளேட், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரொக்கம் ரூ. 45 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்