search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stealing money"

    • கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடப்பட்டது.
    • சப்- இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சங்கரன் கோவில் அருகே உள்ள ஐ.என்.டி. யு.சி. நகரில் சிங்கத்து இருளப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பூசாரி மாரியப்பன் பூஜை களை முடித்துவிட்டு இரவு கோவில் கதவை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் இன்று காலை மாரியப்பன் பூஜைக்காக கோவில் கதவை திறப்பதற்காக வந்தார்.

    அப்போது கோவில் கதவு உடைத்து அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப் பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தன்னார்வ பொறுப்பு தக்கார் ராஜா விற்கு, மாரியப்பன் தகவல் கொடுத்தார். அதன் பேரில் தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சார்லஸ், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போய் இருந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள ஆலுச்சம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. ஊரின் நடுவில் இந்த மாரியம்மன் அமைந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் இரவில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் ரூ.ஆயிரத்தை கொள்ளையடித்து எடுத்து சென்றுள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை பூசாரி வந்து பார்த்தபோது உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசா ரணை மேற்கொண்டனர்.

    மேலும் அங்கு பொருத்தப்ப ட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    உண்டியலில் மேலும் ரூபாய் நாணயங்கள் இருந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்த கோவிலின் திருவிழா நடந்து முடிந்தது.

    இதையொட்டி உண்டியல் திறக்கப்பட்டு பணம் எடுக்கப்பட்டது. இதனால் பெரிய அளவில் பணம் கொள்ளையிலிருந்து தப்பியது.

    • நெல்லை புதிய பஸ் நிலையத்தில் சமீப காலமாக பயணிகளிடம் பிக்பாக்கெட், செல்போன் திருடி செல்வது, நூதன முறையில் நகை பறிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றன.
    • இதனை தடுக்கும் பொருட்டு புதிய பஸ் நிலையத்தில் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் சமீப காலமாக பயணிகளிடம் பிக்பாக்கெட், செல்போன் திருடி செல்வது, நூதன முறையில் நகை பறிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றன.

    போலீசார் ரோந்து

    இதனை தடுக்கும் பொருட்டு புதிய பஸ் நிலை யத்தில் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த வியாபாரி கண்ணன் என்பவரிடம் இருந்து 2 பேர் ரூ.300 பிக்பாக்கெட் அடித்த னர். அப்போது அங்கு ரோந்து சென்ற போலீசார் பிக்பாக்கெட் அடித்த 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    போலீசார் நடத்திய விசா ரணையில் அவர்கள் மேலப் பாளையம் குறிச்சியை சேர்ந்த சக்தி வேல் (வயது57), கல்லிடைக் குறிச்சியை சேர்ந்த அருள் துரை (33) என்பது தெரிய வந்தது.

    இவர்கள் இதற்கு முன்பு வேறு பயணிகளிடம் கைவரிசை காட்டி னார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாலிபர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • , பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்து.

    கோவை,

    கோவை கே.ஜி.சாவடியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 53). விவசாயி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றார்.

    பின்னர் மதியம் தங்கவேலு வின் மனைவி வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்து.

    பின்னர் இதுகுறித்து தங்கவேல் கே.ஜி.சாவடி போலீ சில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர்அவரது வீட்டுக்கு கைரேகை

    நிபுணர்கள் வரவழை க்கப்பட்டு அங்குபதிவாகிருந்த கைரேகை களை பதிவு செய்தனர்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வந்தனர். அப்போது கோவை நவக்கரை பகுதியில் தங்கி கூலி வேைல செய்து வரும் விழுப்புரத்தை சேர்ந்த அபுபக்கர் (வயது 22) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அபுபக்கரை கைது செய்து அவரிடம் இருந்து பணத்தை மீட்டனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சென்னிமலை அருகே வீட்டில் இருந்த ரூ.80 ஆயிரம் மதிப்பிலான பணம், நகை திருட்டு.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை- ஊத்துக்குளி ரோடு புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்தான கிருஷ்ணன் (58). விவசாயி. இவரது மனைவி விஜய குமாரி. இந்த கிராமத்தில் இவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் வீடு உள்ளது. விஜயகுமாரியின் தம்பி கிருஷ்ணமூர்த்தி வீட்டை பராமரித்து வருகிறார்.

    கணவன்-மனைவி 2 பேரும் கடந்த 25 ஆண்டு களாக புதுச்சேரியில் குடியிருந்து வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு சில முறை மட்டும் அவர்கள் சொந்த ஊருக்கு வருவார்கள். அப்போது அவர்கள் தோட்டத்தின் வீட்டில் தங்குவது வழக்கம்.

    இந்நிலையில் அந்த வீட்டின் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் பூஜை செய்வதற்காக சென்னிமலையை சேர்ந்த சம்பந்த குருக்கள் அங்கு வந்தார். அப்போது சந்தானகிருஷ்ணனின் வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து வீட்டை பராமரித்து வரும் கிருஷ்ணமூர்த்தியிடம் தகவல் சொன்னார். இதையடுத்து அவர் அங்கு சென்று பார்த்த போது வீட்டின் பீரோ, உள் லாக்கர் ஆகியவை உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது.

    அப்போது வீட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் அரை பவுன் எடையுள்ள 3 மூக்குத்திகள் மற்றும் 10 ராசி கற்கள் ஆகியவை திருட்டுப் போனது தெரியவந்தது. திருட்டுப்போன பணம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.80 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இது குறித்து சென்னி மலை போலீசில் கிருஷ்ண மூர்த்தி புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு திருட்டு பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • இளம்பெண் திடீரென எல்லம்மாள் பணம் வைத்திருந்த பேக்கை திருடி கொண்டு தப்பிக்க முயன்றார்.
    • இதையடுத்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தினியை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மதுரைக்கு பஸ் கிளம்ப தயாரானது. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது ஈரோட்டை சேர்ந்த எல்லம்மாள் என்ற பெண் பஸ்சில் ஏறி அமர்ந்து இருந்தார்.

    அவர் அருகே மற்றொரு இளம்பெண் அமர்ந்திருந்தார். பஸ் கிளம்ப தயாரான போது எல்லம்மாள் அருகே அமர்ந்திருந்த இளம்பெண் திடீரென எல்லம்மாள் பணம் வைத்திருந்த பேக்கை திருடி கொண்டு தப்பிக்க முயன்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடி, திருடி என கூச்சலிட்டார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அந்த இளம்பெண்ணை ஓடி சென்று மடக்கிப் பிடித்தனர்.

    அந்த பெண் திருடிய பையில் ரூ.2000 ரொக்கப் பணம் இருந்தது. இது குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்தப் பெண்ணை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    விசாரணையில் அந்தப் பெண் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த நந்தினி (28) என தெரிய வந்தது. இவர் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது பெரிய வந்தது.

    மேலும் இவர் மீது சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளில் 6 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தினியை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

    செய்யாறு கோர்ட்டில் பெண் ஊழியரின் பையில் இருந்து பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    செய்யாறு:

    செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றம் ஆற்காடு சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கோர்ட்டில் வினோதினி (வயது 27) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று கோர்ட்டு அலுவல்களை முடித்துவிட்டு வினோதினி வெளியே சென்றார். அப்போது, தன்னுடைய பையை அலுவலக மேஜை மீது வைத்திருந்தார்.

    பின்னர் வந்து பையை பார்த்தபோது, அதில் இருந்த 500 ரூபாய் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து கோர்ட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை பார்த்தபோது, வாலிபர் ஒருவர் பணத்தை திருடியது தெரியவந்தது.

    அதைத் தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான வாலிபர் குறித்து விசாரணை செய்தபோது, விண்ணாவாடி கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் (20) என்பது தெரியவந்தது.

    இது குறித்து வினோதினி கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர்.

    ×