என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "studies"
- கல்லூரிப் படிப்பை நிறைவு செய்து, வேலைக்குச் செல்லும் அவரை அழைத்து வாழ்த்தினேன்.
- பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவி ஷோபனாவின் கல்லூரி படிப்புக்கு உதவியது தொடர்பாக நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
படிக்க உதவிட வேண்டும் என 2021-ஆம் ஆண்டு மாணவி ஷோபனா எனக்குக் கடிதம் எழுதினார். அவர் கல்லூரியில் சேரவும் படிக்கவும் உதவினேன்.
மூன்றாண்டுகளில் தனது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்து, வேலைக்குச் செல்லும் அவரை அழைத்து வாழ்த்தினேன்.
ஒரு பெண் கற்கும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாய் விளங்கும் என்பதையுணர்ந்து, பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
படிக்க உதவிட வேண்டும் என 2021-ஆம் ஆண்டு மாணவி ஷோபனா எனக்குக் கடிதம் எழுதினார். அவர் கல்லூரியில் சேரவும் படிக்கவும் உதவினேன்.மூன்றாண்டுகளில் தனது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்து, வேலைக்குச் செல்லும் அவரை அழைத்து வாழ்த்தினேன்.ஒரு பெண் கற்கும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாய்… pic.twitter.com/Y6MEtLfz5G
— M.K.Stalin (@mkstalin) November 10, 2024
- தனது ஆய்வறிக்கையை 2018-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பிரியா சமர்ப்பித்தார்.
- தகுந்த முடிவை எடுத்ததற்காக கோழிக்கோடு பல்கலைக்கழக சிண்டிகேட் பாராட்டப்பட வேண்டும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் செம்புக்கா அழகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜன்-மெர்சி தம்மதியின் மகள் பிரியா. இவரது கணவர் பியூஸ் பால். பிரியாவுக்கு ஆராய்ச்சி படிப்பில் டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்பது கனவாக இருந்துள்ளது.
ஆகவே அவர் திருமணமான பிறகும் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். அவர் திருச்சூர் மாவட்டம் இருஞ்சாலக்குடா கிறிஸ்து கல்லூரியின் விலங்கியல் துறையில் ஆராய்ச்சி மாணவியாக இருந்து வந்தார். அவரது ஆய்வு 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை நீடித்தது.
தனது ஆய்வறிக்கையை 2018-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பிரியா சமர்ப்பித்தார். அவரது ஆய்வறிக்கைக்கு அதே ஆண்டு ஜூலை மாதம் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து முனைவர் பட்டம் பெற பிரியா தகுதியானார்.
இந்நிலையில் பிரசவத்துக்காக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது பிரியா பரிதாபமாக இறந்தார். இதனால் அவர் டாக்டர் பட்டத்தை பெற முடியாமல் போனது. டாக்டர் பட்டம் பெறுவது பிரியாவின் நீண்டநாள் கனவாக இருந்ததால், அவருக்கான பட்டத்தை, அவருடைய மகளிடம் வழங்கவேண்டும் என்று பல்கலைக்கழகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆய்வறிக்கை சமர்ப்பித்த வர் இல்லாதநிலையில், பிரியாவின் பட்டத்தை யூ.கே.ஜி.படிக்கும் அவரது மகளிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்கலைக்கழக சிண்டிகேட் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து பிரியாவின் டாக்டர் பட்டம், யூ.கே.ஜி. படித்துவரும் அவரது மகள் ஆன்ரியா பெற உள்ளார்.
இந்த தகவலை கேரள மாநில உயர்கல்வித்துறை மந்திரி பிந்து தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:-
ஆராய்ச்சி தாயின் நீண்ட நாள் கனவை அவரது மகள் ஆன்ரியா பெறப்போகிறார் என்பது நமக்கு என்றென்றும் மறக்க முடியாக நினைவாக இருக்கும். பிரியா இல்லாத நேரத்தில் அவரது முயற்சிகள் மற்றும் அற்புதமான சாதனைகளுக்கு வணக்கம் செலுத்துவோம். இந்த விவகாரத்தில் தகுந்த முடிவை எடுத்ததற்காக கோழிக்கோடு பல்கலைக்கழக சிண்டிகேட் பாராட்டப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- நடைபெற்று கொண்டிருக்கின்ற பணிகள் குறித்து பார்வையிட்டார்.
- நுண்ணுயிர் உரம் தயாரித்தல் மையத்தை ஆய்வு செய்தார்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை தமிழ்நாடு மத்திய தணிக்கை துறை தலைமை கணக்காயர் நெடுஞ்செழியன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போத பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2021, 22,23 ஆகிய 3 ஆண்டுகளில் இதுவரை நடைபெற்று முடிந்த வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ராஜகிரி ஊராட்சியில் நுண்ணுயிர் உரம் தயாரித்தல் மையம், கிராம சேவை மைய கட்டிடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிட பணிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மரக்கன்று நட்டு வைத்தார்.
ஆய்வின் போது உடன் முதுநிலை தணிக்கையாளர் முரளி, மேற்பார்வையாளர் மனோகர், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, ஒன்றிய பொறியாளர்கள் சாமிநாதன் ,சரவணன், ராஜகிரி ஊராட்சி மன்ற சமீமா பர்வீன்ஆகியோர் உடன் இருந்தனர்.
- புதுவை சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
- மாணவர்கள் 30 நிமிடம் முன்பாக உரிய சான்றிதழ்கள், ஆவணங்களுடன் வர வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சென்டாக் கூடுதல் ஒருங்கிணை ப்பாளர் அமன்சர்மா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இளநிலை நீட் அல்லாத தொழில்முறை படிப்பான பி.எஸ்.சி. விவசாய படிப்பில் உள்ள சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு காமராஜர் மணி மண்டபத்தில் நடக்கிறது.
இதேபோல காரைக்கால் பொறியியல் கல்லூரி, மாகி, ஏனாம் அரசு கலைக்கல்லூரியிலும் கலந்தாய்வு நடக்கிறது. மாணவர்கள் 30 நிமிடம் முன்பாக உரிய சான்றிதழ்கள், ஆவணங்களுடன் வர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கும்பகோணம்:
கும்பகோணம் அடுத்த திருப்புறம்பியம் ஊராட்சி உத்திரை கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ., கிராமத்திற்கு நேரில் சென்று ஒரு வீட்டின் தின்னையில் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், உத்திரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 24 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 2 புதிய வகுப்பறை கட்டிட பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் புதிதாக சமையல் கூடம் கட்டும் பணிகள் மற்றும் 14-வது நிதிக்குழு மானியத்தின் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் பராமரிப்பு பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்குழலி, ஊராட்சி தலைவர் வைஜெயந்தி சிலம்பரசன், தி.மு.க. பகுதி செயலாளர் கோவிந்தராஜன், நிர்வாகி முத்துசாமி மற்றும் பலர் உள்ளனர்.
- மாணவர்கள் 150 பேர் செஞ்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
- கல்வெட்டுகள், வரலாற்று நினைவிடங்கள் ஆகிய வைகளை ஆய்வு செய்தனர்.
விழுப்புரம்:
தரமணியில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் 150 பேர் செஞ்சி பகுதியில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் வரலாற்று நினைவிடங் களை ஆய்வு மேற்கொண்டனர்.
செஞ்சி அருகே உள்ள ஜெயினர்களின் நிறை விடமான திருநாதங்குன்று, நெகனூர், பட்டி, ஆகிய இடங்களில் அவர்கள் ஆய்வு செய்தனர். மேலும் செஞ்சிக்கோட்டை செஞ்சி அருகே உள்ள வெடால், தொண்டூர், சீயமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்வெட்டுகள், வரலாற்று நினைவிடங்கள் ஆகிய வைகளை ஆய்வு செய்த னர். இடங்களை பேரா சிரியர்கள் வசந்தி, ஜீவா, தமிழரசு ஆகியோர் மாண வர்களுக்கு விளக்கி கூறி னார்கள். அப்போது அகிம்சை நடை ஒருங்கி ணைப்பாளர் ஸ்ரீதரன், சேட்டு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- படிப்பை போல விளையாட்டும் வாழ்க்கைக்கு முக்கியமானது என கலெக்டர் மேகநாதரெட்டி பேசினார்.
- மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர் மற்றும் மாணவிகளை தேர்வு செய்து 44-வது ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
விருதுநகர்
விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.
இதையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 152 அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இடையே சதுரங்க போட்டி நடந்தது. அதனை கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதா வது:-விருதுநகர் மாவட்டத்தில், சதுரங்க விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவி லான சதுரங்க போட்டிகள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.
இப்போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர் மற்றும் மாணவிகளை தேர்வு செய்து 44-வது ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், அனைத்து பெற்றோர்களும் ஊக்கப்ப டுத்தக்கூடிய ஒரே விளையாட்டு சதுரங்க விளையாட்டு. ஏனென்றால் இந்த விளையாட்டு விளை யாடுவதால் மூளை திறன் அதிகரிக்கும், மூளை நல்ல வளர்ச்சி அடையும், மாணவர்கள் கணித பாடத்தில் நன்றாக சாதிக்க முடியும், மற்ற பாடத்தில் நல்ல கவனம் செலுத்த முடியும். இந்தியாவில் நிறைய பேர் இந்த விளையாட்டில் சாதித்து உள்ளனர். மாணவர்கள் படிப்பிற்கு இணையாக இது போன்ற விளையாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் இது போன்ற விளையாட்டு மூலம் தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்ற நல்ல வாழ்க்கைக்கு தேவை யான விஷயங்களை கற்றுக்கொண்டு மாணவர்கள் எளிதில் சாதிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறி னார்.
இந்த நிகழ்ச்சியில், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி கணேஷ்குமார், உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) ஜெயக்குமார் உள்பட மாணவ, மாணவி கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவாரூர்:
தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருக்கும் சிலைகளின் தன்மை பற்றி சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்யும் படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தொல்லியல் துறையினருடன் இணைந்து சிலைகளின் உண்மை தன்மை பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
முதல்கட்டமாக தஞ்சை பெரிய கோவில், மற்றும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உள்ள சிலைகளை ஆய்வு செய்தனர். நவீன கருவிகளை கொண்டு இந்த சோதனை நடந்தது. மேலும் கோவிலில் உள்ள பழைய ஆவணங்கள்படி சிலைகளின் உயரம், எடை, உலோகத்தின் தன்மை இருக்கிறதா? என்று ஆய்வு செய்து அதை குறிப்பெடுத்து கொண்டனர்.
திருவாரூர் கோவிலில்
இதையடுத்து திருவாரூர் தியாகராஜர் கோவிலில் கடந்த மாதம் 21-ந் தேதி முதல்கட்டமாக சிலைகள் ஆய்வு பணிகள் தொடங்கின.
கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள சுமார் 4635 சிலைகளை சோதனை செய்யும் பணி நடந்தது.
இதையடுத்து கடந்த 1-ந் தேதி முதல் 2-வது கட்டமாக திருவாரூர் கோவிலில் மீண்டும் ஆய்வு பணி நடைபெற்றது. நேற்றுடன் 3-வது நாளாக நடைபெற்ற இந்த சோதனையில் இதுவரை மொத்தம் 560 சிலைகள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டன.
சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மலைச்சாமி, பழனிவேல் ஆகியோர் தலைமையில் தொல்லியல் துறையினர் , சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் என 50-க்கும் மேற்பட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த பணிகளை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் சிலைகள் ஆய்வு பணி இன்றும் 4-வது நாளாக தொடர்கிறது.
இன்று தொல்லியல் துறையினர், தாங்கள் தங்கியிருந்த திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆய்வு பணியை மேற்கொண்டனர். இதில் தொல்லியல் துறையினர், தாங்கள் திருவாரூர் கோவிலில் குறிப்பெடுத்த சிலைகளின் தன்மைகளை, பழைய ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்து அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை ஆய்வு செய்த 560 சிலைகளின் உண்மையான விவரங்களை அறிக்கையாக தயார் செய்து வருகின்றனர். #ArchaeologyDepartment #Tiruvarurtemple
தமிழகம் முழுவதும் கோவில்களில் உள்ள சாமி சிலைகள் காணாமல் போனது குறித்தும், கோவில்களில் உள்ள சிலைகள் உண்மையானவையா என்பது குறித்தும் தொல்லியல் நிபுணர்கள் மற்றும் சிலை கடத்தல் பிரிவினர் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் 4,359 -க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் திருவாரூர் , தஞ்சாவூர் , நாகப்பட்டினம், கடலூர். மாவட்டங்களில் உள்ள 626 சிறிய கோவில்களுக்குரிய ஐம்பொன் சிலைகள் ஆகும்.
இந்தநிலையில் பாதுகாப்பு மையத்தில் உள்ள இந்த சிலைகளின் உண்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் தலைமையில் கடந்த 21-ந் தேதி முதல் ஆய்வு நடைபெற்றது.
இந்த நிலையில் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இன்று 2-வது கட்டமாக சிலை கடத்தல் பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர்.
இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு கோவிலில் உள்ள பழங்கால சிலைகள், கற்தூண்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. கோவில் ஆவணங்களில் உள்ளப்படி சிலைகள் உள்ளதா? என்று நவீன கருவிகளை கொண்டு ஆய்வு செய்ய உள்ளனர்.
அதன்படி இன்று காலை சிலைகள் கடத்தல் பிரிவு ஏ.டி.எஸ்.பி. ராஜாராமன் , தொல்லியல் துறை மண்டல இணை இயக்குனர் நம்பிராஜன் ஆகியோர் முன்னிலையில் சுமார் 15-க்கும் மேற்பட்ட குழுவினர் சிலைகளை ஆய்வு செய்தனர்.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இன்று நடைபெற்று வரும் சிலைகள் ஆய்வை ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் பார்வையிட்டார்.
முன்னதாக நேற்று தஞ்சை மாவட்டம் அய்யம் துறை கிராமத்தில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தயாநிதீஸ்வரர் கோவிலில் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் ஆய்வு செய்தார்.
தனது மெய்க் காவலர்களுடன் தனியாக வந்த ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கோவிலின் உள்ளே சென்று வெளியாட்கள் யாரும் உள்ளே வராதபடி கதவுகளை சாத்த உத்தரவிட்டார். இதையடுத்து கோவிலின் பாதுகாப்பு அறையில் உள்ள உலோகம் மற்றும் கல் சிலைகளை ஆய்வு செய்தார்.
பின்னர் கோவில் குருக்கள் ராஜிவிடம் பாதுகாப்பாக உள்ள சிலைகள் பற்றி விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து கிராம மக்களை ஒவ்வொருவராக உள்ளே அழைத்து இந்த கோவிலின் பழமை பற்றியும் அதில் தற்போது ஏதாவது மாற்றம் தெரிகிறதா? என்றும் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பொது மக்களிடம் பேசியதாவது:-
தினமும் பொதுமக்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய வேண்டும். அப்போதுதான் கோவிலில் உள்ள சுவாமி சிலைகளில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் கண்டுபிடிக்க முடியும் என்றும் கூறினார்.
பிறகு கோவில் ஊழியர்களிடம் பேசிய அவர், இந்த கோவில் சிலைகள் பாதுகாப்பாக உள்ளது. மேலும் கூடுதல் பாதுகாப்புடன் சிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். #ArchaeologyDepartment #Tiruvarurtemple
சுவாமிமலை:
கும்பகோணம் அருகே கடிச்சம்பாடி மேலத்தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகள் தரண்யா (வயது 18). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி திறந்ததையொட்டி கல்லூரிக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது தனது தாய் விஜயாவிடம் கல்லூரி கட்டணம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால் முருகேசனும், விஜயாவும் நீ கல்லூரிக்கு செல்ல வேண்டாம். கல்லூரிக்கு பணம் கட்ட வசதி இல்லை என்று கூறி கண்டித்தனராம். இதனால் மனமுடைந்த தரண்யா வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அவரது தாய் விஜயாவும், அதிர்ச்சியில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
அக்கம் பக்கதினர் 2 பேரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி தரண்யா நேற்று இறந்தார். விஜயா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் ரேகாராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்