என் மலர்
நீங்கள் தேடியது "suicide"
- காதல் விவகாரத்தில் 2 வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
காரியாபட்டி அருகே உள்ள கீழஉப்பிலிக்குண்டு வைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் சதுரகிரி (20). இவர் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்து கொள்வதற்கான விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள் சிறிது காலம் ஆகட்டும் என கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த சதுரகிரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
ஸ்ரீவில்லிபுத்தூர் இடையபொட்டல் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சிவராமன் (27). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். திருமணத்திற்கு சம்மதம் கேட்டபோது, பெற்றோர்கள் கடன்களை அடைத்துவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த சிவராமன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டாஸ்மாக் விற்பனையாளர் தூக்கிட்டு தற்கொலை ெசய்து கொண்டார்.
- அண்ணன் சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு செய்ய முடியவில்லை
கரூர்
குளித்தலையை அடுத்த தண் ணீர்ப்பள்ளியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், (வயது 45). இவர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இவரது அண்ணன் மோகன்குமாருக்கு கடந்த ஓராண்டாக உடல் நலமின்றி சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் அவரது மேல் சிகிச்சை செலவுக்கு பணம் ஏற்பாடு செய்ய முடியாத நிலையில், கோபாலகிருஷ்ணன் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று, கோபாலகிருஷ்ணன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவி ராதா. ஒரு மகன், மகள் உள்ளனர். ராதா அளித்த புகாரின்படி, குளித்தலை போலீசார் வழக் குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- மனநிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே ஆலம்பாடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் செல்வபாண்டியன். இவரது மனைவி ஜீவா (வயது 40). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். செல்வபாண்டியன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ஜீவாவுக்கு உதவியாக அவருடன், அவரது தாய் சின்னம்மாள் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக ஜீவா சற்று மனநிலை பாதிக்கப்பட்டு, அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மதியம் சின்னம்மாள் கடைக்கு சென்றிருந்தபோது, வீட்டில் இருந்த ஜீவா திடீரென்று மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ உடல் முழுவதும் பரவியதால் அலறியபடி ஜீவா வீட்டின் வெளியே ஓடி வந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் ஜீவா மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சோ்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜீவா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பெரம்பலூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- கடலூர் அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
- வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் பாதிரிக்கு ப்பத்தை சேர்ந்தவர் ரங்கதாஸ் (வயது 64) இவருக்கு நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிப்பு இருந்து வந்தது. சம்பவத்தன்று தனது வீட்டில் எலி பேஸ்ட் சாப்பிட்டு மயக்க நிலையில் இருந்தார். இதனை பார்த்த இவரது உறவினர்கள் ரங்கதாசை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ரங்கதாசுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சங்கரன்கோவில் ஆதிமூல விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் கூலி தொழிலாளி
- தெற்கு சங்கரன்கோவில் பகுதியில் ஒரு கோவில் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கிடந்தார்.
நெல்லை:
சங்கரன்கோவில் ஆதிமூல விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 39). கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் சின்னகோவிலான்குளம் அருகே உள்ள தெற்கு சங்கரன்கோவில் பகுதியில் ஒரு கோவில் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கிடந்தார். தகவல் அறிந்த சின்னகோவிலான்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்று முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
- கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு
- போலீசார் விசாரணை
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த சென்ன சமுத்திரம் டோல்கேட் நகரை சேர்ந்தவர் பிச்சைமணி. இவரது மகன் கார்த்தி (வயது 22). இவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. மேலும் குடிப்பழக்கத்தால் கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
அதைத்தொடர்ந்து கார்த்தியின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கார்த்தி வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாலாஜா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கார்த்தியின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் அம்மாப்பேட்டை குஞ்சாங்காட்டை சேர்ந்தவர் சரவணன். இவர், உடற்பயிற்சி கூடத்திற்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.
- இவர் குடும்ப பிரச்சினையால் அவர் தூக்குப்போட்டு தற்கொலைசெய்திருப்பது தெரியவந்துள்ளது.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை குஞ்சாங்காட்டை சேர்ந்தவர் சரவணன். இவர், உடற்பயிற்சி கூடத்திற்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவருக்கு சக்திவேல் (வயது 18) என்ற மகனும், 2 மகள்களும் இருந்தனர். சக்திவேலுக்கு 5 வயதாக இருக்கும்போது அவனது தாய் இறந்துவிட்டார். அதன்பிறகு சிறுவனின் தந்தை சரவணன் வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சக்திவேல் தனது தந்தையுடன் கடையில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கு சென்றுவிட்டு சக்திவேலின் தங்கை வீட்டுக்கு வந்து கதவை தட்டினார். ஆனால் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு விரைந்து வந்த சரவணன், கதவை திறந்து பார்த்தபோது, உள்ளே மகன் சக்திவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பரபரப்பு தகவல்
இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினையால் அவர் தூக்குப்போட்டு தற்கொலைசெய்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
- வயிற்றுவலியால் அவதிபட்டு வந்தார்
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்தி விடுதியை சேர்ந்தவர் ராஜா மகன் ராஜ்குமார் (வயது 24) இவர் வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இவரது தந்தை உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். வயிற்று வலியும், தந்தை இறந்த சோகமும் இவரால் தாங்கமுடியாமல் மனவிரக்தியில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்பை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ஏலச்சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
- ஏல சீட்டில் பணம் எடுத்த சிலர் அதை திருப்பி தராமல் இருந்ததாக தெரிகிறது.
சேலம்:
சேலம் டவுன் ஜலால் புறா வீதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 64). இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி யுவராணி, நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு, இரவு 8 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டில் ராஜேந்திரன் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதைக் கண்ட யுவராணி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், ராஜேந்திரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராஜேந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் சேலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ராஜேந்திரன் நடத்தி வந்த ஏல சீட்டில் பணம் எடுத்த சிலர் அதை திருப்பி தராமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் பணம் கட்டியவர்கள், பணத்தை கேட்ட போது அதை தர முடியாததால் கடும் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாழப்பாடி அடுத்த சிட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்பவருக்கும், 16 ஆண்டுக்கு முன் திருமணமாகி, 12 வயதில் மகன் உள்ளான்.
- மனைவி வர மறுத்ததால் மதுபோதையில் இருந்த தங்கராஜ் மனமுடைந்து, பூச்சிக்கொல்லி விஷத்தை குடித்துள்ளார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்த
நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழி லாளி தங்கராஜ் (வயது 38). இவருக்கும் வாழப்பாடி அடுத்த சிட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்பவருக்கும், 16 ஆண்டுக்கு முன் திருமணமாகி, 12 வயதில் மகன் உள்ளான்.
தங்கராஜிற்கு குடிப்ப ழக்கம் ஏற்பட்டதால், கண வன் –மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே, தீபாவளி பண்டிகை தருணத்தில், நடுப்பட்டியில் இருந்து சிட்டாம்பட்டியிலுள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு ஆனந்தி சென்றுள்ளார். ஒரு வாரம் கடந்தும் இவர் தனது கணவர் வீட்டிற்கு திரும்பவில்லை.
இந்நிலையில், நேற்று மாலை, சிட்டாம்பட்டி யிலுள்ள மாமனார் வீட்டிற்கு சென்ற தங்கராஜ், தனது மனைவியை தன்னுடன் வீட்டிற்கு வரு மாறு அழைத்துள்ளார். மனைவி வர மறுத்ததால் மதுபோதையில் இருந்த தங்கராஜ் மனமுடைந்து, பூச்சிக்கொல்லி விஷத்தை குடித்துள்ளார்.
மயங்கிக்கிடந்த இவரை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாப மாக உயிரிழந்தார். இது குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்
- கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தார்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கோமாபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் தினேஷ் குமார் (வயது19).இவர் கந்தர்வகோட்டை அருகே முதுகுளம் கிராமத்தில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கோழிப்பண்ணை அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்த கந்தர்வகோட்டை காவல்துறை ஆய்வாளர் செந்தில் மாறன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
- திருமணி முத்தாறு பகுதியில் உள்ள கருவேல மரத்தில் இன்று காலை தூக்கில் பிணமாக தொங்கினார்.
- இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்ட்டது.
சேலம்:
சேலம் செவ்வாய்பேட்டை, சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள பெரியார் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கந்தன். இவரது மகன் முருகன் (25). கூலித்தொழிலாளி. இவர் அருகில் உள்ள திருமணி முத்தாறு பகுதியில் உள்ள கருவேல மரத்தில் இன்று காலை தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்ட்டது. சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாய்ப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் மற்றும் போலீசார், முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, முருகன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.