என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Survey"

    • வன்னியன் விடுதியில் ஜல்லிகட்டு நடைபெறும் இடத்தில் வருவாய் கோட்டாச்சியர் ஆய்வு செய்தார்
    • 63 ஆண்டுகளாக தற்காலிக வாடிவாசல் அமைக்கப்பட்டு நடை பெற்று வந்த ஜல்லிக்கட்டு இந்தாண்டு புதிய வாடிவாசலில் நடைபெற உள்ளது.
    ஆலங்குடி:


    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன்விடுதி கிராமத்தில் மாயன் பெருமாள் கோவில் 63-ம் ஆண்டு ஜல்லிக் கட்டு விழா வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அமைச்சர் சி.வி.மெய்யநாதன் தலைமையில் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி புதிய வாடி வாசல் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    அப்போது இந்தாண்டு புதிய வாடிவாசலில் இருந்து மாடுகள் அவிழ்ந்து விடப்பட்டு ஜல்லிகட்டு நடைபெற வேண்டும். எனவே வாடிவாசல் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி வாடிவாசல் கட்டுமான பணி நிறைவடைந்தது. இதனால் 63 ஆண்டுகளாக தற்காலிக வாடிவாசல் அமைக்கப்பட்டு நடை பெற்று வந்த ஜல்லிக்கட்டு இந்தாண்டு புதிய வாடிவாசலில் நடைபெற உள்ளது.

    இந்தாண்டு ஜல்லிகட்டிற்கான ஏற்பாடுகளை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில் நாயகி உள்ளிட்ட வருவாய்த்துறையினர் வாடிவாசல் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர்.




    • கரூர் முதல் வீரராக்கியம் வரை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்
    • ரிங் பணிகள் நிறைவு பெற்றதும் கரூர்-திருச்சி ஒன்றரை மணி ேநரத்தில் சென்று வர வசதியாக இருக்கும்.

    கரூர்:

    கரூர்-திருச்சி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கரூர் முதல் வீரராக்கியம் வரை இடங்கள் தேர்வு செய்து கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கரூர் அருகில் நகரும் நடை பாதை விரைவில் துவங்க உள்ளது.

    ரிங் ரோடுகள் 60 அடி அகலம், 29 கிலோமீட்டர் நீளம் போடப்படுகிறது. இந்த ரிங் பணிகள் நிறைவு பெற்றதும் கரூர்-திருச்சி ஒன்றரை மணி ேநரத்தில் சென்று வர வசதியாக இருக்கும். அதன்படி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சந்திரசேகர், கரூர் கோட்டத்திற்குட்பட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது கண்காணிப்பு பொறியாளர் வளர்மதி, கோட்ட பொறியாளர் ரவிக்குமார், கரூர் நெடுஞ்சாலைத்துறை துணை பொறியாளர் கர்ணன் மற்றும் மேற்பார்வையாளர்கள் உடன் சென்றனர்.


    • அரசு நேரடி நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையால் ஒன்றிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்து சேதமடைந்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து கோட்டூர், மேலப்பூதனூர், பெருநாட்டாந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்

    பி.ஆர்.பாண்டியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து மேலப்பூதனூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை பணிகள் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

    எனவே அரசு கூடுதல் ஈரப்பதத்துடன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும், மாவட்ட நிர்வாகம் நேரடியாக கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினார்.

    இந்த ஆய்வின் போது விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • பனை வெல்லம் விற்பனை கூட்டுறவு மையத்தில் கதர் கிராம தொழில் வாரிய தலைமை அலுவலர் ஆய்வு செய்தார்
    • பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் 5 இலட்சம் எண்ணிக்கையிலான பனை விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு, 20 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவ ட்டம், நகராட்சி க்குட்பட்ட கோவில்பட்டியில், தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையத்தின் மூலம் பனை வெல்லம் பொருட்கள் பேக்கிங் செய்து நியாய விலைக்கடைகளுக்கு அனுப்புதல், கும்பகோணம் மற்றும் விழுப்புரம் மண்டத்திற்குட்பட்ட அரசு பேருந்துகளை தூய்மை செய்வதற்காக பனை துடைப்பான்கள் தயார் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. மேலும் பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் 5 இலட்சம் எண்ணிக்கையிலான பனை விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு, 20 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில், கதர் கிராம தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலர்சங்கர், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அலுவலக மற்றும் உற்பத்தி கூட கட்டடங்களை புதுப்பிக்கும் வகையில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் மாநில இணையத்தின் சொந்த நிதியிலிருந்து அமைக்கப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இக்கட்டுமானப் பணிகள் அனைத்தும் விரைவில் முடித்திடவும், இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அதிக அளவிலான பொதுமக்கள் பெற்று பயனடையவும் நடவடிக்கை மேற்கொள்ள கதர் கிராம தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலர்அறிவுறுத்தினார். இந்நிகழ்வில், மண்டல துணை இயக்கு நர்கள் ஜி.பாலகுமரன் (திருச்சி), அருணாச்சலம் (மதுரை), உதவி இயக்குநர் பி.கோபாலகிருஷ்ணன், திட்ட அலுவலர் என்.ஆறுமுகம், வட்டாட்சியர் விஜய லெட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • சோழவந்தான் பேரூராட்சியில் திட்டப் பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.
    • அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

    மூலதன மானியத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் நவீன எரிவாயு தகனமேடை, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்படும் கழிவுநீர் வடிகால் கட்டுமான பணிகள், வளமைப்பு பூங்காவில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்தனர்.

    பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, கூடுதல் இயக்குநர் மலையமான் திருமுடிகாரி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன், பேரூராட்சி செயல் அலுவலர், சகாய அந்தோனியூசின், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • பறவைகள் கணக்கெடுப்பானது இரு நாட்கள் நடந்தது.
    • கணக்கெடுப்பு பணி காலை, 6.30 மணி முதல், 11.00 மணி வரை நடைபெற்றது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் ஒருங்கிணைந்த நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பா னது, வனப்பகுதி மற்றும் வனத்தை ஒட்டிய கிராமங்கள் மற்றும் நகரங்கள் போன்ற பகுதிகளில், இரு நாட்கள் நடந்தது. நில வாழ் பறவைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உடுமலை பகுதியில் நடந்த, கணக்கெடுப்பு பணியில் வனத்துறை பணியாளர்கள், தன்னார்வு தொண்டு நிறுவனத்தினரின் குழுவும் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    கணக்கெடுப்பு பணி காலை, 6.30 மணி முதல், 11.00 மணி வரை நடைபெற்றது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், வனப்பகுதி களுக்கு அருகிலுள்ள கிராமப்பகுதிகளில் மற்றும் சிறிய மற்றும் பெரிய நகரங்கள் போன்றவற்றிலும் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர் வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் கணேஷ்ராம் தலைமையில், உயிரியலாளர் மகேஷ்கு மார்,- பறவைகள் ஆர்வலர் பிளஸ்சோயேசுடியான்-, வனக்காவலர் லட்சுமணன்-, வேட்டை தடுப்பு காவலர் பிரகாஷ்- ஆகியோர் கொண்ட குழு திருமூர்த்திமலை முதல் பொன்னாலம்மன் சோலை வரை உள்ள பகுதியில் கணக்கெடுப்பு மேற்கொண்டனர்.

    இதில், 31 வகையான நிலவாழ் பறவைகள் பதிவு செய்யப்பட்டது. செந்தலைப்பஞ்சுருட்டான், நீலவால் பஞ்சுருட்டான், பச்சை பஞ்சுருட்டான், வெள்ளைப்புருவ சின்னான், வால் காகம், பட்டாணி குருவி, நீல முக செண்பகம், கொண்டை பாம்பு கழுகு, வல்லூறு, பனை உழவாரன், மைனா, வெண்புருவ வாலாட்டி, வெண் கண்ண குக்குறுவான், பச்சை சிட்டு, மரம் கொத்தி, காட்டு சிலம்பன்கள், தையல்காரி, செண்பகம், தேன் சிட்டு, அக்காகுயில் மற்றும் தேன் பருந்து ஆகிய பறவையினங்கள் பதிவு செய்யப்பட்டன.

    • புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • அம்ரித் திட்டத்தில் மேம்பாட்டு பணிகள் தொடர்பாக

    புதுக்கோட்டை:

    தெற்கு ரெயில்வேயில் அம்ரித் திட்டத்தின் கீழ் ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் புதுக்கோட்டை ரெயில் நிலையமும் ஒன்றாகும். இதில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், புதிய கட்டிடங்களை கட்டவும் ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அம்ரித் திட்ட மேம்பாட்டு பணிக்கான தெற்கு ரெயில்வே முதன்மை திட்ட அதிகாரி பொன் பாலசுந்தரம் தலைமையிலான அதிகாரிகள் ரெயில் மூலம் நேற்று மதுரையில் இருந்து திருச்சி வழியாக புதுக்கோட்டை ரெயில் நிலையம் வந்தனர்.புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நடைமேடை, நடைபாதை மேம்பாலம், ரெயில் நிலைய வளாகப்பகுதி உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக திருவப்பூர் ரெயில்வே கேட்டை அவர்கள் பார்வையிட்டனர்.

    ஆய்வுக்கு பின் அம்ரித் திட்டத்தின் தெற்கு ரெயில்வே முதன்மை திட்ட அதிகாரி பொன் பாலசுந்தரம் நிருபர்களிடம் கூறுகையில், ''ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிக்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி தான் பணிகள் தொடங்கப்படும். திருவப்பூர் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைப்பதற்காக மாநில அரசின் ஆணை இன்னும் ரெயில்வே நிர்வாகத்திற்கு வரவில்லை. திருவப்பூர் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியை 1½ ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.

    • ஆலங்குடி அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்
    • பிரேத பரிசோதனை கூடத்திற்கு உடற்கூறு செய்யப்படும் மருத்துவர்கள் உடனடியாக நியமனம் செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை ஆலங்குடி அரசு மருத்துவமனையில் புதுக்கோட்டை இணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் நலப்பணிகள்) டாக்டர் ராமு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளை பார்வையிட்டு அவர் கூறுகையில், மொத்தம் 6 மருத்துவர்கள் இங்கு பணியாற்ற வேண்டும் , அதில் 5 மருத்துவர்கள் தற்போது உள்ளார்கள். ஒரு மருத்துவர் கூடிய விரைவில் நியமிக்கப்படுவர். இந்த மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் தரதேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மருத்துவமனைக்கு அடிப்படை வசதிகள் செய்வதற்கு அதிக அளவில் தொகைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பிரேத பரிசோதனை கூடத்திற்கு உடற்கூறு செய்யப்படும் மருத்துவர்கள் உடனடியாக நியமனம் செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். ஆய்வின் போது புதுக்கோட்டை தேசிய நலவாழ்வு குழும ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சரவணன் மற்றும் ஆலங்குடி மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


    • தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்
    • ரூ.9.08 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார். சீலைப் பிள்ளையார்புத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.9.08 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.சின்னப் பள்ளிபாளையம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.26 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமையலறை, உன்னியூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10.93 லட்சத்தில் கட்டுப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடத்தை ஆய்வு செய்தார்.

    இதேபோல் சீத்தப்பட்டி ஊராட்சி 14-வது மானிய நிதிக் குழு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் செலவில் வி.எஸ் நகரில் அமைக்கப்பட்டு வரும் சிமெண்ட் சாலைப் பணி, கிடாரம் ஊராட்சி 14-வது மானியத் திட்டத்தின் கீழ் ரூ.15.40 லட்சம் மதிப்பீட்டில் சூரம்பட்டி பிரிவு ரோடு முதல் நாமக்கல் மாவட்ட எல்லை வரை அமைக்கப்படும் தார்சாலைப் பணி மற்றும் வாள்வேல்புத்தூரில் குளம் சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

    பின்பு நத்தம் அரசினர் பிற்பட்டோர் நலப்பள்ளி மாணவிகள் விடுதியின் அடிப்படை வசதிகள், உள் கட்டமைப்பு வசதிகள், உணவுப் பொருட்கள் தரம், இருப்பு, பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். எம்.களத்தூர் ஊராட்சி ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.9.75 லட்சத்தில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு சேர்வைக்காரன் பட்டி கிராமத்தில் வழங்கப்பட்டு வரும் குடிநீர் பணியை ஆய்வு செய்தார்.

    ஸ்ரீராமசமுத்திரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தோட்டக்கலைத்துறை சார்பில் நுண்ணூயீர் பாசனத்தின் மூலம் வாழை சாகுபடி செய்யும் பணியை ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் தொட்டியம் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) சரவணகுமார், உதவி பொறியாளர் கலைராஜ் மற்றும் அந்தந்த பகுதி ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    • குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் பஸ் நிலையம் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டது
    • புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் மும்பரமாக நடைபெற்று வருகின்றது.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் பஸ் நிலையம் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் முயற்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4 கோடி 82 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் மும்பரமாக நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகி யோர் குறிஞ்சிப்பாடியில் புதிதாக கட்டுமான பணி களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பேரூராட்சி இயக்குனர் கிரண் குராலா, திருச்சி மண்டல செயற்பொறியாளர் கருப்பையா, உதவி இயக்குனர் வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர் சண்முகம், மாவட்ட கல்வி குழு தலைவர் பொறியாளர் சிவகுமார், பேரூராட்சி தலைவர் கோகிலா குமார், செயல் அலுவலர் கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சிப்பாடி பாலமுருகன், பேரூராட்சி துணைத் தலைவர் ராமர், நகர செயலாளர் ஜெய்சங்கர் கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் சுற்றுலாத்துறை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்
    • சுற்றுலாத்துறையின் மூலம் கட்டப்பட்டுள்ள சுற்றுலா மாளிகை மற்றும் உணவகங்களை ஆய்வு செய்தார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் சுற்றுலாத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரீ, இந்து சமய அறநிலையத்துறை இயக்குனர் முரளிதரன், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, தொல்லியல்துறை இயக்குனர் காந்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் 2023-24-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல்துறையின் சார்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அறிவிக்கப்பட்டு அருங்காட்சியகம், வாகனங்கள் நிறுத்தும் இடம், நுழைவு வளாகம், வழிகாட்டும் பலகைகள் போன்றவற்றுக்கான இடங்கள் தேர்வு செய்யும் பணி மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து, சுற்றுலாத்துறையின் மூலம் கட்டப்பட்டுள்ள சுற்றுலா மாளிகை மற்றும் உணவகங்கள், தங்கும் அறைகள், குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதிகளை மேம்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து அனைத்து வசதிகளும் உடனடியாக சரிசெய்வதற்கான திட்ட அறிக்கையினை உடனடியாக தயார் செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.பின்னர், கங்கைகொண்டசோழபுரம் அருகே உள்ள சலுப்பை ஊராட்சியில் அழகர்கோவிலுக்கு வெளியே நிற்கும் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்ட 8.50 மீட்டர் உயரத்தில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு சாந்துகளால் கட்டப்பட்ட யானையின் ராட்சத நாயக்கர் கால சிற்பத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் இந்த யானை சிற்பத்தினை சுற்றுலா பயணிகள் கண்டு செல்வதற்கு ஏதுவாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரீ, இந்து சமய அறநிலையத்துறை இயக்குனர் முரளிதரன் ஆகியோர் அறிவுறுத்தினர்.இந்த ஆய்வில் இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம், உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. பரிமளம், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • அரியலூர் காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்
    • தலை கவசம், சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை போலீசாருக்கு வழங்கினார்.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா திடீரென உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, ஆண்டிமடம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். அதில் மதுபாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்பவர்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாகவும் ஏதேனும் தகவல் கிடைத்தால் அவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிந்து சிறையில் அடைக்க வேண்டும். அந்தந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் விபத்து தடுக்கும் விதமாக வாகன சோதனையில் ஈடுபட வேண்டும். மேலும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தலை கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிகிறார்களா என்று பார்க்க வேண்டும். தலை கவசம், சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை போலீசாருக்கு வழங்கினார்.

    ×