என் மலர்
நீங்கள் தேடியது "t20 match"
- இரு அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
- ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமிடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 0-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தநிலையில் 2வது டி20 போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.
அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. இதற்கிடையே, இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உம்ரான் மாலிக்கிற்கு பதிலாக சாஹல் இடம் பெற்றுள்ளார்.
- முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 4 ரன்னில் வெற்றி பெற்றது.
- இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், 3 ஆட்டம் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.
ஐந்து 20 ஓவர் போட்டியில் நடந்த முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 4 ரன்னில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி கயானாவில் இன்று நடக்கிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது.
- அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
- இந்திய அணியில் ரிங்கு மற்றும் ப்ரஷித் கிருஷ்ணா அறிமுகமாகினர்.
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், சஹல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமை தாங்குகிறார். ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ் அகமது, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார், அவேஷ்கான் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணியில் ரிங்கு மற்றும் ப்ரஷித் கிருஷ்ணா அறிமுகமாகினர்.
இந்நிலையில், இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.
இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பும்ரா பவுலிங் தேர்வு செய்தார்.
இதையடுத்து அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
- டி20 வரலாற்றில் 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஸ்டிர்லிங் படைத்தார்.
- இவருக்கு அடுத்த இடத்தில் பாபர் அசாம் 395 பவுண்டரிகள் அடித்துள்ளார்.
துபாய்:
ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. அதில் அயர்லாந்து வெற்றி பெற்றது.
இதில் அயர்லாந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங் 2 பவுண்டரிகள் உட்பட 25 ரன்கள் அடித்தார். இந்தப் போட்டியில் அடித்த 2 பவுண்டரிகள் சேர்த்து இதுவரை டி20 போட்டிகளில் அவர் அடித்த பவுண்டரிகளின் எண்ணிக்கை 401 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் சர்வதேச டி20 வரலாற்றில் 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை அவர் படைத்துள்ளார்.
டி20 போட்டிகளில் அதிக பவுண்டரிகள் அடித்தவர்களின் பட்டியல் வருமாறு:
பால் ஸ்டிர்லிங் - 401 பவுண்டரிகள்
பாபர் அசாம் - 395 பவுண்டரிகள்
விராட் கோலி - 361 பவுண்டரிகள்
ரோகித் சர்மா - 359 பவுண்டரிகள்
டேவிட் வார்னர் - 320 பவுண்டரிகள்.
- பிரிமீயர் கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஓமன் நாட்டில் நடந்து வருகிறது
- இதில் நேபாள வீரர் திபேந்திர சிங் டி20போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசினார்.
அல் அமிராட்:
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பிரிமீயர் கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஓமன் நாட்டில் நடந்துவருகிறது. இதில் அல் அமிராட்டில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் நேபாளம், கத்தார் அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த நேபாளம் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. அந்த அணியின் திபேந்திர சிங் அய்ரீ, வேகப்பந்து வீச்சாளர் கம்ரன் கான் வீசிய கடைசி ஓவரில் 6 பந்துகளையும் தொடர்ந்து சிக்சருக்கு தூக்கி அசத்தினார். இதன்மூலம் திபேந்திர சிங் சர்வதேச டி20 போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசிய 3-வது வீரர் என்ற சாதனை படைத்தார்.
ஏற்கனவே இந்தியாவின் யுவராஜ் சிங் (2007), வெஸ்ட்இண்டீசின் பொல்லார்டு (2021) ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு நடந்த மங்கோலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் திபேந்திர சிங் 9 பந்தில் அரைசதம் அடித்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வங்காளதேசம் அமெரிக்காவில் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
- முதல் போட்டியில் அமெரிக்க அணி வங்காளதேசத்தை வீழ்த்தியது.
ஹூஸ்டன்:
வங்காளதேசம் அணி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று ஹூஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. ஹிருடோய் அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்தார். மஹமதுல்லா 31 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்கா களமிறங்கியது. 14.5 ஓவரில் அமெரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து களமிறங்கிய கோரே ஆண்டர்சன், ஹர்மித் சிங் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில், அமெரிக்க அணி 19.3 ஓவரில் 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
- 28 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.
ஜமைக்கா:
தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 6 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. கேப்டன் பிரண்டன் கிங் அதிகபட்சமாக 85 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. அந்த அணியின் ஹென்ட்ரிக்ஸ் தனி ஆளாகப் போராடி 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் தென் ஆப்பிரிக்கா 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
- முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு183 ரன்களை குவித்தது.
- அதிகபட்சமாக கேப்டன் ஜாஸ் பட்லர் 84 ரன்களும் வில் ஜேக்ஸ் 37 ரன்களும் எடுத்தனர்.
விரைவில் துவங்கவுள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று பர்மிங்காம் நகரில் 2 ஆவது டி20 போட்டி நடைபெற்றது.
அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு183 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜாஸ் பட்லர் 84 ரன்களும் வில் ஜேக்ஸ் 37 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் சாஹின் அப்ரிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் 0, ஆயுப் 2 ரன்களில் வந்த வேகத்தில் நடையை கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த பாபர் ஆசாம் - பக்கர் ஜமான் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
நிதானமாக விளையாடுய ஆசாம் 32 ரன்களிலும் மறுபுறம் அதிரடி காட்டிய பக்கார் ஜமான் 45 (21) ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 19.2 ஓவரில் பாகிஸ்தான் அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடித்தது. அதன் காரணமாக 1 – 0* (4) என்ற கணக்கில் டி20 தொடரில் இங்கிலாந்து முன்னிலை பெற்றது.
- விராட் கோலி, ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
- டி20 உலகக் கோப்பையில் கோப்பையை வெல்லவேண்டும் என்ற கனவு நனவாகிவிட்டது என்றார் ஜடேஜா.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது.
போட்டி முடிந்ததும் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நன்றி நிறைந்த இதயத்துடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடை பெறுகிறேன். ஒரு வலிமையான குதிரை துள்ளிக் குதிப்பதைபோல, எப்போதும் என் நாட்டிற்காக என்னால் முடிந்ததை செய்து வருகிறேன். ஆனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். டி20 உலகக் கோப்பையில் கோப்பையை வெல்லவேண்டும் என்ற கனவு நனவாகிவிட்டது. இது எனது உச்சம். என்னுடைய நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், உங்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
- ஐசிசி டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.
- கோலி வெறும் 2.4 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி 1 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார்
டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது.
போட்டி முடிந்ததும் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவின் முன்னணி ஆல் ரவுண்டராக இருந்த ஜடேஜா 45 புள்ளிகளுடன் 85 ஆவது இடத்தை நிறைவு செய்துள்ளார்.
அதே சமயம் ஜடேஜாவை முந்தி 49 புள்ளிகளுடன் 78 ஆவது இடத்தை விராட் கோலி பிடித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
டி20 கிரிக்கெட்டில் நிறைய ரன்களை எடுத்துள்ள கோலி வெறும் 2.4 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி 1 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
- ஸ்பெயின் அணி தொடர்ந்து 14 டி20 போட்டிகளில் வெற்றிகளை பதிவுசெய்தது.
- இந்தப் பட்டியலில் இந்திய அணி 3- வது இடத்தில் உள்ளது.
துபாய்:
ஐ.சி.சி. நடத்தும் டி20 உலகக் கோப்பை வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான ஐரோப்பிய பிராந்திய தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன.
இதில் ஸ்பெயின் கிரிக்கெட் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் (ஒரு போட்டி முடிவு இல்லை) குரூப் சி பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதில் கிரீஸ் அணியை வென்றதன் மூலம் ஸ்பெயின் அணி தொடர்ந்து 14 டி20 போட்டிகளில் வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் பெற்ற அணி என்ற புதிய உலக சாதனையை ஸ்பெயின் அணி படைத்துள்ளது.
இந்தப் பட்டியலில் இந்திய அணி 12 வெற்றிகளுடன் ஆப்கானிஸ்தான் மற்றும் ருமேனியா அணியுடன் 3-வது இடம் பிடித்துள்ளது.
மேலும், மலேசியா மற்றும் பெர்முடா ஆகிய அணிகள் 13 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
- இந்தியாவில் தற்போது டெல்லி பிரீமியர் லீக் டி20 தொடர் நடந்து வருகிறது.
- முதலில் ஆடிய தெற்கு டெல்லி அணி 20 ஓவரில் 308 ரன்களைக் குவித்தது.
புதுடெல்லி:
இந்தியாவில் தற்போது டெல்லி பிரீமியர் லீக் டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற தெற்கு டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தெற்கு டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷர்தாக் ரேய் 11 ரன்னில் அவுட்டானார். அடுத்து ஜோடி சேர்ந்த ஆயுஷ் பதோனி, பிரியன்ஷ் ஆர்யா இருவரும் சூறாவளியாக சுழன்று அடித்தனர்.
ஆயுஷ் பதோனி அதிரடியாக ஆடி 55 பந்தில் 19 சிச்கர், 8 பவுண்டரி உள்பட 165 ரன்கள் குவித்தார். பிரியன்ஷ் ஆர்யா 55 பந்தில் 10 சிக்சர், 10 பவுண்டரி உள்பட 120 ரன்கள் குவித்தார். தெற்கு டெல்லி அணி பேட்டிங் மொத்தமாக 31 சிக்சர்கள் அடித்துள்ளது.
பிரமாண்ட இலக்கை நோக்கி ஆடிய வடக்கு டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் தெற்கு டெல்லி அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், 19 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையை ஆயுஷ் பதோனி முறியடித்துள்ளார்.
வங்கதேச டி20 லீக் தொடரில் கிறிஸ் கெயில் அதிகபட்சமாக 18 சிக்சர் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.