என் மலர்
நீங்கள் தேடியது "திருவிழா"
- பெண்கள் கம்பத்திற்கு நீர் ஊற்றி வழிபாடு செய்து வந்தனர்.
- அனைத்து கோவில்களிலும் கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருச்செங்கோட்டில் பழமைவாய்ந்த பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இதுதவிர மண்ணுக்குட்டை மாரியம்மன், தொண்டிக்கரடு மகா மாரியம்மன், சேலம் சாலை சாட்டை மாரியம்மன், நாமக்கல் சாலை சமயபுரத்து மாரியம்மன், 5 ரோடு அழகுமுத்து மாரியம்மன், சி.எச்.பி. காலனி மாரியம்மன் கோவில் என நகரை சுற்றி உள்ள 15 மாரியம்மன் கோவில்களிலும் கடந்த 1-ந் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கி கம்பங்கள் நடப்பட்டன.
தினமும் ஏராளமான பெண்கள் கம்பத்திற்கு நீர் ஊற்றி வழிபாடு செய்து வந்தனர். இதையடுத்து தீர்த்தகுடம் எடுத்தல், மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
திருவிழா நிறைவாக அனைத்து கோவில்களிலும் கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதலில் பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பம் எடுக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் கம்பம் எடுக்கப்பட்டு தெற்கு ரத வீதியில் ஒன்றாக இணைந்து ஊர்வலமாக சென்று திருச்செங்கோடு- ஈரோடு ரோட்டில் உள்ள பெரிய தெப்பக்குளத்தில் கம்பங்கள் விடப்பட்டன. கம்பங்களுக்கு முன்பு பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து சென்றனர். வழி நெடுகிலும் குவிந்திருந்த திரளான பக்தர்கள் கம்பங்களின் மீது உப்பு, மிளகு போட்டு அம்மனை வழிபட்டனர்.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள பேச்சியம்மன் சிலை புதுப்பிக்கப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியையொட்டி பரமேஸ்வரர், மாசாணியம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன், பேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- வருகிற 24-ந்தேதி தொடங்கி டிசம்பர் 3-ந்தேதி வரை நடக்கிறது. 24-ந்தேதி காலை 6.15 மணிக்கும், 8 மணிக் கும் திருப்பலி நடக்கிறது
- ஆடம்ப ரக்கூட்டுத் திருப்பலி கோட்டார் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஹிலேரியஸ் தலைமையில் நடக்கிறது
நாகர்கோவில்
கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.
இது குறித்து பேராலய பங் குதந்தை ஸ்டேன்லி சகாய சீலன், உதவி பங்குத்தந்தை ஆன்றோ ஜெராபின், பங்கு பேரவை துணைத்தலை வர் ஜேசுராஜா, செயலர் ராஜன், துணைச்செயலர் ராஜன் ஆராச்சி, பொருளர் ஜார்ஜ் பிரகாஷ் ராபின் ஆகியோர் நேற்று நிருபர்க ளிடம் கூறியதாவது:-
கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரி யார் பேராலயம் திருவிழா வருகிற 24-ந்தேதி தொடங்கி டிசம்பர் 3-ந்தேதி வரை நடக்கிறது. 24-ந்தேதி காலை 6.15 மணிக்கும், 8 மணிக் கும் திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.
தொடர்ந்து ஆடம்ப ரக்கூட்டுத் திருப்பலி கோட்டார் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஹிலேரியஸ் தலைமையில் நடக் கிறது. 25-ந்தேதி காலை 5.30 முதல் 11 மணி வரை திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஆடம்பரக் கூட் டுத்திருப்பலி நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் காலையில் திருப் பலி, மாலையில் ஆடம்பரக் கூட்டுத்திருப்பலி நடக்கும். 8-ம் நாள் திருவிழாவான டிசம்பர் 1-ந்தேதி காலை முதல் மதியம் 12.30 மணி மரை திருப்பலியும் மாலை 6.30 மணிக்கு ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி முன் னாள் ஆயர் பீட்டர் ரெமி ஜியூஸ் தலைமையிலும் நடைபெறுகிறது. இரவு 10.30 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.
2-ந்தேதி காலை 5.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆகியவை ஆயர் நசரேன் சூசை தலைமை யில் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு தேர்பவனி நடக் கிறது.
10-ம் திருவிழாவான 3-ந்தேதி காலை 6 மணிக்கு பெருவிழாத்திருப்பலி ஆயர் நசரேன் சூசை தலைமை யில் நடக்கிறது. 8 மணிக்கு மலையாளத்திருப்பலியும், 11 மணிக்கு தேர்பவனி நடக் கிறது. மாலை 7 மணிக்கு தேரில் ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நடக்கிறது.
8-ம் நாள் நடக்கும் தேர் பவனியில் சவேரியார், மிக் கேல் ஆண்டவர் தேரும், 9-ம் நாளில் சவேரியார். மாதா தேரும். 10-ம் நாள் தேர்பவனியின் போது சவேரியார், மாதா, மிக்கேல் ஆண்டவர், செபஸ்தியார் ஆகிய 4 தேர் பவனி நடக்கிறது. திருவிழாவின் கடைசி 3 நாட்கள் 7 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்கிறோம்.
அவர்களுக்கு வசதியாக குடிநீர் வசதி, மருத்துவவ சதி, கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்படும். சவேரி யார் பேராலயம் அருகே உள்ள மாநகராட்சிக்கட்டிட கழிப்பறையை பக்தர்கள் பயன்படுத்த இலவசமாக வழங்க மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள் ளோம். பக்தர்களின் வசதிக் காக இலவச பேருந்துகள் இயக்க போக்குவரத்து நிர் வாகத்திடம் மனு கொடுத் துள்ளோம்.
பாதுகாப்பு வழங்கு வது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டிடம் கோரிக்கை வைத்துள்ளோம். திருவி ழாவின் 10-ம் நாள் வருடந் தோறும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு வருகிறது. இந்த வருடமும் 10-ம் திருவிழா 3-ந்தேதி வருகிறது. அன்று உள்ளூர் விடுமுறை விட கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவரும் விடுமுறை விட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித் துள்ளார் என்றனர்.
- வருகிற 3-ந்தேதி மகா தேரோட்டம் நடக்கிறது.
- 6-ந்தேதி 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. காலை, இரவு என இருவேளையில் சாமி வீதி உலா நடைபெறும்.
7-ம் நாளான வருகிற 3-ந்தேதி மகா தேரோட்டமும் 6-ந்தேதி அன்று அதிகாலை 4 மணி அளவில் கோவில் வளாகத்தில் உள்ள சாமி சன்னதி அருகில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
விழாவினை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
இதில் ஒரு பகுதியாக அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நான்கு வாயில்களில் உள்ள ராஜகோபுரம், அம்மனிஅம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் ஆகிய கோபுரங்களை சுத்தம் செய்தனர்.
தீயணைப்பு வீரர்கள் பிராண்டோ ஸ்கை லிப்ட் 54 மீட்டர் உயரம் வரை செல்லும் அதாவது 162 அடி உயரத்திற்கு மேல் செல்ல கூடிய ராட்சத தீயணைப்பு மீட்பு எந்திரத்தின் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து கோபுரங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
கார்த்திகை தீப திருவிழாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடக்கிறது. இதற்காக தேர்கள் சீரமைக்கப்படுகின்றன. இன்று காலையில் அருணாசலேஸ்வரர் பவனி வரும் பெரிய தேர் சீரமைப்பு பணி தொடங்கியது.
தேர் சக்கரம், அச்சு, உச்சி பகுதிகளில் சீரமைப்பு பணிகள் செய்யப்படுகிறது.
- தானியங்களின் முக்கியத்துவம் குறித்து நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கொந்தளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.
- 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு உணவு திருவிழாவில் கலந்து கொண்டனர்.
பரமத்திவேலூர்:
இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, எதிர்வரும் 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்து உள்ளது. இதையடுத்து தானியங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுதானியங்கள் உற்பத்தியை உயர்த்தவும் பயன்பாட்டினை அதிக ரிக்கவும், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கொந்தளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.
தலைமை ஆசிரியர் சந்திரசேகர் விழாவை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு உணவு திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்ட சிறுதானியங்களை பார்த்து அதன் பயன்கள் பற்றி கேட்டறிந்தனர். மேலும் தங்களது அன்றாட வாழ்வில் சிறுதானியங்களை பயன்படுத்துவது என மாணவ, மாணவிகள் உறுதி எடுத்துக் கொண்டனர். விழாவில் அறிவியல் ஆசிரியர்கள் கார்த்திகேயன், பூங்கொடி, சத்துணவு அமைப்பாளர் கலைச்செல்வி, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாண விகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- பிரம்ம கலசத்தில் அபிஷேகம் நடைபெற்றது.
- 15 யானைகள் அணிவகுத்த முதல் ஸ்ரீவேலி தொடர்ந்து நடைபெற்றது.
கொச்சி அருகே திருப்போனித்துராவில் ஸ்ரீ பூரணத்திரேசியன் கோவில் உள்ளது. இந்த கோவில் விருச்சிக உற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக கொடி மரத்தில் ஆலய தந்திரி புலியனூர் நாராயணன் நம்பூதிரிப்பாடு சிறப்பு வழிபாடு செய்து கொடியேற்றினார். பின்னர் காலை பிரம்ம கலசத்தில் அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 15 யானைகள் அணிவகுத்த முதல் ஸ்ரீவேலி தொடர்ந்து நடைபெற்றது. இதில் குடை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதனை ஏராளமானோர் கண்டு களித்தனர்.
மேலும் படிங்காரே தட்டு மாளிகை அருகே நடைபெற்ற ஓட்டம் துள்ளல் நிகழ்ச்சியில் ஆராட்டுப்புழா பிரதீப், கலா மண்டலம் ராஜேஷ், பாலா கே.ஆர்.மணி மற்றும் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- அஷ்ட பைரவர் யாகம் நடந்தது.
- 6 நாட்களும் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
திருப்பத்தூரில் குன்றக்குடி ஐந்து கோவில் தேவஸ்தானத்திற்குட்பட்டது திருத்தளிநாதர் கோவில். இக்கோவிலில் உள்ள யோகபைரவருக்கு ஆண்டுதோறும் சம்பக சஷ்டி விழா தொடர்ந்து 6 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இதையொட்டி இந்தாண்டு இந்த விழா நேற்று முன்தினம் காலை யோக பைரவர் சன்னதி முன்பு யாகசாலையில் பூர்வாங்க பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து பாஸ்கர் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் அஷ்ட பைரவர் யாகம் நடத்தினர். தொடர்ந்து பூர்ணாகுதி, தீபாரதனைகள் நடைபெற்று யாக கலசங்கள் மூலவர் சன்னதிக்கு புறப்பாடு நடைபெற்று மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
சுவாமிக்கு மஞ்சள்காப்பு அலங்காரம், மஞ்சள் வஸ்திரம் சாத்துதல் நிகழ்ச்சியும், மாலையில் அஷ்ட பைரவர் யாகமும் நடந்தது. இதேபோல் 6 நாட்களும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை சம்பக சஷ்டியினர் செய்து வருகின்றனர்.
- 5-ந்தேதி சனி பகவானுக்கு அலங்கார சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
- 6-ந்தேதி ஹோமங்களும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது.
கூடலூர் 27-வது மைல் பகுதியில் சனி பகவான் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீப திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் தீப திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 9 மணிக்கு கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 3-ந் தேதி காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புன்யாகவாசனம், நவகிரக பூஜை நடக்கிறது.
தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. பின்னர் பரிவார தெய்வங்களுக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. 4-ந் தேதி காலை 6 மணி முதல் பல்வேறு விசேஷ பூஜைகள், அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மாலை அய்யப்ப பக்தர்களின் பஜனை வழிபாடு நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. பின்னர் 5-ந் தேதி காலை 6 மணிக்கு விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு விசேஷ பூஜைகள், தொடர்ந்து இரவு 8 மணி வரை சனி பகவானுக்கு அலங்கார சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 6-ந் தேதி காலை 5 மணிக்கு ஹோமங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு கார்த்திகையை ஒட்டி தீப திருவிழா நடக்கிறது. தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
- ஜனவரி 4-வது சனிக்கிழமை (28.01.2023) அன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
- 3-ந்தேதி அன்று குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவை யான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
கோட்டார் சவேரியார் பேராலய திரு தூய விழாவினை முன்னிட்டு வருகிற 3-ந்தேதி (சனிக்கிழ மை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவ னங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தர விடப்படுகிறது.
3-ந்தேதி அன்று அறி விக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2023 ஜனவரி 4-வது சனிக்கிழமை (28.01.2023) அன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
3-ந்தேதி அன்று குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவை யான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
- 7-ம் திருவிழாவான நேற்று ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்
- 9-ம் நாள் விழாவில் நாளை (2-ந்தேதி) மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு ஆராதனை
நாகர்கோவில் :
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வரும் 3-ந்தேதி சனிக்கிழமை வரை நடக்கிறது.
7-ம் திருவிழாவான நேற்று ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். 8-ம் நாள் திருவிழாவான இன்று (1-ந்தேதி) மாலை 6.30 மணிக்கு ஆம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட் டர் ரெமிஜியூஸ் தலைமை வகிக்கிறார். இரவு 10.30 மணி முதல் தேர் பவனி நடக்கிறது.
9-ம் நாள் விழாவில் நாளை (2-ந்தேதி) மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நச ரேன் சூசை தலைமையில் சிறப்பு ஆராதனை, நற்க ருணை ஆசீர் ஆகியன நடக் கிறது. இரவு 10.30 மணிக்கு தேர் பவனி நடக்கிறது.
10-ம் நாள் விழா டிசம்பர் 3-ந்தேதி நடக்கிறது. இதில் காலை 6 மணிக்கு பெரு விழா திருப்பலி கோட்டார் மறை மாவட்ட ஆயர் நச ரேன் சூசை தலைமையில் நடக்கிறது. தொடர்ந்து மலையாள திருப்பலி பேரருட்பணி கிளாடின் அலெக்ஸ் தலைமையில் நடக்கிறது. பின்னர் காலை 11 மணி முதல் தேர் பவனி யும், இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி யும் நடக்கிறது.
தேர் பவனியையடுத்து 3-ந்தேதி குமரி மாவட்டத் திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படடுள்ளது.
- 2-ம் நாள் திருவிழாவான 10-ந்தேதி காலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து 10.30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலி
- இரவு 9 மணிக்கு திருச்சப்பர பவனி நடக்கிறது. 8-ம் நாள் திருவிழா வான16-ந்தேதிநடைபெறும் ஜெபமாலை மற்றும் சிறப்பு திருப்பலி
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்ட த்தில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தலம் முதன்மையானது. இங்கு ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவதுவழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 9- ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடை பெறுகிறது. தொடர்ந்து காலை 8மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடிகள் பவனி நடக்கிறது.
மாலை 6.30 மணிக்கு திருக்கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.இதனைத் தொடர்ந்து நடைபெறும் திருப்பலிக்கு குழித்துறை மறை மாவட்ட செயலாளர் அருட்பணி ரசல்ராஜ் தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்துகிறார்.2-ம் நாள் திருவிழாவான 10-ந்தேதி காலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து 10.30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலியும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை மற்றும் திருப்பலியும் நடக்கிறது.
இந்தநிகழ்ச்சிக்கு ஆயர் இல்ல அதிபர் அருட்பணி பஸ்காலிஸ் தலைமை தாங்குகிறார். கோட்டாறு வட்டார முதல்வர் அருட் பணி ஆனந்த் மறை உரை நிகழ்த்துகிறார். இரவு 9 மணிக்கு பள்ளி மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
7-ம் நாள் விழாவான 15-ந்தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் ஜெபமாலை மற்றும் சிறப்பு திருப்பலிக்கு கன்னியாகுமரி வட்டார முதல்வர் அருட்பணி எஸ்.பி.ஜான்சன் தலைமை தாங்குகிறார். புதுக்கிராமம் பங்குத்தந்தை அருட்பணி நியூமன் மறையுறை ஆற்றுகிறார்.
இரவு 9 மணிக்கு திருச்சப்பர பவனி நடக்கிறது. 8-ம் நாள் திருவிழா வான16-ந்தேதிநடைபெறும் ஜெபமாலை மற்றும் சிறப்பு திருப்பலிக்கு ஆலஞ்சி வட்டார முதல்வர் அருட்பணி தேவதாஸ் தலைமை தாங்குகிறார். திட்டுவிளை பங்குத்தந்தை அருட்பணி சஜு மறை வுரையாற்றுகிறார். 9-ம் நாள் திருவிழாவான 17-ந்தேதி அஞ்சுகூட்டு விளைபங்குஇறைமக்கள்சிறப்பிக்கின்றனர்.
காலை10.30 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலி நடக்கிறது. கீழமணக்குடி பங்குத்தந்தை அருட்பணி ஆன்றனி பிரபு திருப்பலியை நிறைவேற்றி மறையுரையும் நிகழ்த்து கிறார். மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை நடைக்கிறது. திருநயினார்குறிச்சி பங்குத்தந்தை அருட்பணி லியோன் எஸ். கென்சன் தலைமை தாங்குகிறார். மயிலாடி பங்குத்தந்தை அருட்பணி சைமன் மறையுறை ஆற்றுகிறார். தொடர்ந்து வானவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது.
அதைத் தொடர்ந்து சூசையப்பர் தேர் பவனி நடக்கிறது.10-ம் நாள் திருவிழாவான18-ந்தேதி காலை 4.30 மணிக்கு தங்கத்தேரில் திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து காலை 6 மணிக்கு திரு விழா நிறைவு திருப்பலி அருட்பணி சுவக்கின் தலைமையில் நடக்கிறது. அருட்பணியாளர் மில்லர் மறைவுரை ஆற்றுகிறார்.
தொடர்ந்து காலை 8 மணிக்கு ஆங்கில திருப்பலியை அருட்பணி ஆன்சல் ஆன்றனி நிகழ்த்து கிறார். கன்னியா குமரி புனித ஜோசப் கலசான்ஸ் பள்ளி முதல்வர் அருட்பணி ஜீன்ஸ் மறைவுரையாற்றுகிறார்.தொடர்ந்து காலை 9 மணிக்கு மாதா மற்றும் சூசை யப்பர்ஆகிய இரு தங்கதேர்ப்பவனி நடக்கிறது.
இந்த தேர்பவனியில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமான இறைமக்கள் கலந்து கொள்கின்றனர். 10.30 மணிக்கு மலையாள திருப்பதியை கலசான்ஸ் மழலையர் பள்ளி பொறுப்பா ளர் அருட்பணி ஜில்லோ வர்கீஸ் நடத்துகிறார். புனித ஜோசப் கலசான் குழும அதிபர் ஆல்பர்ட் கிளீஸ்டஸ் மறை உரையாற்றுகிறார்.
தொடர்ந்து பகல் 12 மணிக்கு வடசேரி பங்கு தந்தை அருட்பணி புருணோ தலைமையில் திருப்பலி நடக்கிறது. மாலை 6மணிக்கு திருக்கொடி இறக்கம் மற்றும் நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழா வுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர்ஆன்றனிஅல்காந்தர், இணை பங்கு தந்தையர்கள் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியர் அருள்நாதன், பங்கு பேரவை துணைத் தலைவர் ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக், துணைச் செயலாளர் வினோ மற்றும் பங்கு மக்கள் பங்கு பேரவையினர் அருட் சகோதரிகள் செய்து வருகின்றனர்.
- திருஏடு வாசிப்பு திருவிழா இன்று (2-ந்தேதி) தொடங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது.
- கார்த்திகை மாதம் அய்யா வைகுண்டசாமி தன்னுடைய சீடர்களுக்கும், பக்தர்களுக்கும் அகிலத்திரட்டு நூல் மூலம் கூறிய கருத்துக்களை திருஏடாக வாசிப்பது வழக்கம்.
கன்னியாகுமரி:
சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அய்யா வைகுண்டசாமி தன்னுடைய சீடர்களுக்கும், பக்தர்களுக்கும் அகிலத்திரட்டு நூல் மூலம் கூறிய கருத்துக்களை திருஏடாக வாசிப்பது வழக்கம்.
இந்த ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா இன்று (2-ந்தேதி) தொடங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு திருநடை திறப்பு, காலை 6 மணிக்கு பணிவிடை, நண்பகல் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு ஆகியவை நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு மலர் அலங்காரத்துடன் வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடை, 5 மணிக்கு ஏடு வாசிப்பு தொடங்க ப்பட்டு,சாமிதோப்பு தலைமைப்பதி தலைமைகுரு பால ஜனாதிபதி விளக்கவுரையாற்றுகிறார்.இரவு 8 மணிக்கு வாகன பவனி நடைபெறுகிறது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பும், மாலை ஏடு வாசிப்பு, இரவு வாகன பவனி, அன்னதர்மம் ஆகியவை நடைபெறுகிறது.
விழாவின் 15-ம் நாளான வருகிற 16-ந் தேதி திருக்கல்யாண ஏடு வாசிப்பு, மாலை அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, தொடர்ந்து வைகுண்டசாமிக்கு பக்தர்கள் திருக்கல்யாண சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி, திருக்கல்யாண திருஏடு வாசிப்பு முடிவில் இனிமம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 18-ந் தேதி ஏடு வாசிப்பு, அய்யா வைகுண்டசாமிக்கு பட்டாபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது.