search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசாரம்"

    புகையிலை ஒழிப்பு பிரசாரம் நடந்தது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, காவேரி நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதியில்  பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் புகையிலை ஒழிப்பு பிரசாரம் நடந்தது. 

    ஜவுளி உற்பத்தியாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி பங்கேற்று, பிரசாரத்தை தொடங்கி வைத்தார். புகையிலை பாக்கெட், பீர் பாட்டில் போன்று வேடமிட்டு வந்து பிரசாரம் செய்தனர்.

    பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி, தே.மு.தி.க. மாவட்ட துணை செயலர் மகாலிங்கம் வழங்கினர். இதற்கான பிரசார வாகனத்தை இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட பலர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
    சோழவந்தானில் தூய்மைப்பணி விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட பேரூராட்சிகள் நிர்வாகத்தினர் பல்வேறு வகையில் தூய்மை பணி குறித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.  

    சோழவந்தான் பேரூராட்சி பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக துப்புரவு பணிகள், பிளாஸ்டிக் பொருட்களை பயன்பாடு ஒழிப்பு, மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து குப்பைகளை உரம் தயாரிக்கும் வழிமுறை, கழிவுநீர் கால்வாய் பயன்படுத்தும் முறை என விழிப்புணர்வு ஏற்படுத்தி  வருகின்றனர். 

    முக்கிய வீதிகளில் கவுன்சிலர்கள் சத்தியபிரகாஷ், செல்வராணி ஜெயராமன், குருசாமி, முத்துசெல்வி தலைமையில் சுகாதார தூய்மை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மேற்பார்வையில், சமூக ஆர்வலர்கள் நாகேந்திரன், கண்ணன், மாரிமுத்து, முத்துபாண்டி ஆகியோரும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    துப்புரவு மேற்பார்வையாளர் சுந்தரராஜன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணி செய்து பிரசாரம் செய்தனர். பேரூராட்சி செயலர் சுதர்சன், பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் ஆலோசனையின் பேரில் தெருமுனை விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
    ×