என் மலர்
நீங்கள் தேடியது "tag 108818"
- வேதாரண்யம் ஆர்.டி.ஓ பெளலின் நாற்காலியில் அமராமல் பொதுமக்களுக்கு மதிப்பளித்து அவர்களிடம் இருந்து மனுக்களை நின்று கொண்டு பெற்றுக்கொண்டார்.
- ஊழியர்களிடம் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் சக ஊழியர்களுக்கு தகுந்த மரியாதை அளித்து அவரின்உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில்கடந்த 7ஆம் தேதி முதல்வேதாரண்யம் ஆர்.டி.ஓ. பெளலின் தலைமையில்ஜமாபந்தி துவங்கி நடைபெற்று வருகிறது.
ஜமாபந்தியில் நேற்று வரை 244மனுக்கள் பெறப்பட்டு அதற்கான உடனடி திர்வும் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று தகட்டூர் தாணிக்கோட்டகம் ,வாய்மேடு, தென்னடார் பஞ்சநதிக்குளம் மேற்கு ஆகிய வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி நடைபெற்றது இதில் 55 மனுக்கள் பெறப்பட்டு 6 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுமுதியோர் உதவித்தொகை வழங்க ப்பட்டது.வழக்கமாக கோட்டாட்சி யர்கள் பொதுமக்களிடம் மனுக்களை நாற்காலியில் அமர்ந்தபடி தான் வாங்கி வருவது வழக்கம் ஆனால் வேதாரணியம் கோட்டாட்சியர் பெளலின் நாற்காலியில் அமராமல் பொதுமக்களுக்கு மதிப்ப ளித்து அவர்களிடம் இருந்து மனுக்களை நின்று
கொண்டு பெற்றுக் கொண்டு இருக்கும் போது தென்னடார் ஊராட்சி மனுக்கள் பெறும் நேரம் வந்தது அப்போது அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் உடல்நிலை சரி இல்லாமல் நடந்து வந்தார்இதை பார்த்த கோட்டாட்சியர் பெளலின் உடனடியாக அவரை நாற்காலியில் அமரச் செய்தார்.அதற்கு கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் அமர மறுத்து விட்டார் பிறகுகோட்டாட்சியர் பெளலின் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் உடல் நிலையை கருத்தில் கொண்டுவற்புறுத்தி அவரை தனது அருகே நாற்காலியில் அமரச் செய்தார்.
பிறகுதான் தான் நின்று கொண்டே பொது மக்களிடம் மனுக்களை வாங்கினார் ஊழியர்களிடம் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் சக ஊழியர்களுக்கு தகுந்த மரியாதை அளித்து அவரின்உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக மனுக்களை பெற்றுகிராம நிர்வாக அலுவலரைவீட்டுக்கு செல்ல அறிவுறுத்தினார் இந்த மனிதாபிமான செயலை வருவாய்த்துறை ஊழியர்கள் வெகுவாக பாராட்டினர்ஜமாபந்தி முகாமில் தாசில்தார் ரவிச்ச ந்திரன் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வேதையன் மண்டலதுணை வட்டாட்சியர் ரமேஷ் தேர்தல் துணை வட்டாட்சியர் ராஜா வேதாரண்யம் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் உள்ளிட்ட வருவாய்துறையினர் கலந்து கொண்டனர்.
- போலீஸ் கமிஷனர்பாபு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
- மொத்தம் 15 மனுக்கள் பெறப்பட்டது.
திருப்பூர் :
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீஸ் துறை மானிய கோரிக்கையில், ஒவ்வொரு மாவட்டத்திலும்போலீசார் குறைகேட்பு கூட்டம்நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.அதன்படி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாதம் முதல் மற்றும் மூன்றாவது புதன்கிழமை குறைகேட்பு கூட்டம்நடத்தப்படுகிறது. நேற்று நடந்த கூட்டத்துக்கு போலீஸ் கமிஷனர்பாபு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர். அதன்படிமொத்தம் 15 மனுக்கள் பெறப்பட்டது. இருவாரங்களுக்குள்உரியநடவடிக்கை எடுப்பதாக,மனுதாரர்களிடம் தெரிவிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் துணை கமிஷனர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
கீழ்பவானி முறை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் கடைமடை பகுதியான மங்கலப்பட்டிக்கும்மங்களப்பட்டியை அடுத்துள்ள மொஞ்சனூர், அஞ்சூர் கிராமங்களுக்கு முற்றாக வராமல் நின்றுபோனது.மங்களப்பட்டி பகுதிக்கு மிகமிகக் குறைவான அளவில் தண்ணீர் வந்துவயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
நெல் நாற்றங்கால் தயாரிக்கநாற்றங்கால்களுக்கு தண்ணீர் விட முடியாமலும் மிகப்பெரிய சிக்கலுக்கு ஆளாகியுள்ளோம். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கீழ் பவானிக் கால்வாயில் திருப்பூர்மாவட்டத்தில் உள்ள ஆயக்கட்டு நிலங்களுக்கு போதிய தண்ணீரைப் பெற்று கொடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு.சரவணத்தேவர் எஸ்.பி. ஜவகரிடம் மனு அளித்தார்.
- குருபூஜை விழா பங்கேற்க உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதி சீட்டு ஆகியவைகள் வழங்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு.சரவணத்தேவர் மற்றும் கட்சியினர் நாகை மாவட்ட எஸ்.பி. ஜவகரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் ஜெயந்தி விழா, அக்டோபர் 24ம் தேதி சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் குருபூஜை விழா மற்றும் வாளுக்குவேலி அம்பலம் பெருவிழா நடைபெற உள்ளது.
முக்குலத்து புலிகள் கட்சியினர் வருடாவருடம் கலந்து கொள்ளும் இவ்விழாவில் பங்கேற்க உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதி சீட்டு ஆகியவைகள் வழங்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ, மற்றும் எஸ்.பி ஜவகரிடம் மனு அளித்தனர்.
கட்சியின் தலைவர் ஆறு.சரவணன் தேவர் அக்டோபர் 30 மற்றும் 24ம் தேதிகளில் உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
- விசாரணையில் 9 பேரிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை.
- கைதிகளுக்கு வழங்கப்படும் சட்ட அறிவுரை மற்றும் நீதிமன்றம் சார்ந்த சட்ட உதவிகள் பற்றி எடுத்துரைத்தார்.
கும்பகோணம்:
சென்னை உயர் நீதிமன்ற தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவு படியும், தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் செயலர் வழிகாட்டுதல்படி, கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவருமான.சண்முகப்பிரியா ஜெயில் அதாலத் என்று அழைக்கப்படும் சிறைச்சாலை நீதிமன்றம், தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நடத்திட நீதிபதிகளை நியமித்து உத்தரவிட்டார்கள்.
அதன்படி திருவிடைமருதூர் கிளைசிறைச்சாலையில் மாவட்ட உரிமை இயல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர்சிவபழனி சிறைச்சாலை நீதிமன்றத்தை நடத்தினார்.
விசாரணை கைதிகளாக இருந்த சிறைவாசிகள் 49 பேரிடம் அவர்களின் வழக்கு விபரம் குறித்து நேரடியாக உரையாடி, அவர்களில் யாருக்கேனும் வட்ட சட்டப் பணிகள் குழு மூலம் வழக்கறிஞர் நியமனம் தேவைப்படுகிறதா என்று கேட்டறிந்தார்கள். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 9 பேரிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சட்டப்படி தகுதியுள்ள இருவரிடம் மட்டும் ஜாமீன் மனுக்கள் எழுதிப் பெறப்பட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்தார்.
முடிவில் வட்ட சட்டப் பணிகள் குழு மூலம் விசாரணை கைதிகளுக்கு வழங்கப்படும் சட்ட அறிவுரை மற்றும் நீதிமன்றம் சார்ந்த சட்ட உதவிகள் பற்றி எடுத்துரைத்தார்.
கும்பகோணம் கிளை சிறையில் பாரதிதாசன், நீதித்துறை நடுவர் எண்1 ஏற்று நடத்தினார். 51 விசாரணை கைதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறைவாசிகள் 4 பேர் மட்டும் வழக்கறிஞர் நியமனம் கோரி மனு அளித்தனர்.
அதில் இருவர் மனுக்கள் மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வழக்கறிஞர் நியமித்திட பரிந்துரை செய்தார்.
ஏற்பாடுகளை நீதிமன்ற ஊழியர்கள், சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து கும்பகோணம் சட்டப் பணிகள் குழுவின் தன்னார் வலர்கள்ராஜேந்திரன் மற்றும்குணசீலன் செய்திருந்தனர்.
- சுவாமி நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாணத் திருவிழா வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது.
- தற்போது சேரன்மகாதேவி ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனிடம் திருவனந்தல் வழிபாட்டு குழு சார்பாக ஒரு மனு கொடுக்கபட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:-
நெல்லை டவுன் காந்திமதி அம்மன் உடனுறை சுவாமி நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாணத் திருவிழா வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை ) நடைபெற உள்ளது.
காந்திமதி அம்மனுக்கு, சுவாமி காட்சி தரும் நிகழ்ச்சிக்காக 21-ந்தேதி அன்று காந்திமதி அம்பாள் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி பேட்டை ரோடு வழியாக கம்பை நதிக்கரை காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வார்.
அதேபோல் 22-ந் தேதி காலை அம்பாளுக்கு காட்சி கொடுப்பதற்காக சுவாமி நெல்லையப்பரும் எழுந்தருளி பேட்டை ரோடு வழியாக காட்சி மண்டபத்திற்கு செல்ல வேண்டும். தற்போது சேரன்மகாதேவி ரோடு (பேட்டைரோடு) குண்டும் குழியுமாக உள்ளதால் சுவாமி சப்பரங்கள் செல்வதற்கும், பக்தர்கள் செல்வதற்கும் இடையூறாக உள்ளது. எனவே மாநகராட்சி சார்பில் போர்கால நடவடிக்கை எடுத்து சாலையை சீர்படுத்தி தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சுடுகாட்டுப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு அளிக்கப்பட்டது.
- மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர்
அரியலூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன.
இதில் ஆண்டிமடம் அருகே உள்ள மேலக்காடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், சுடுகாட்டிற்கு செல்லும் புதுப்பாதையினை, சிலர் பட்டா அவர்களின் பெயரில் இருப்பதாக கூறி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் சுடுகாட்டிற்கு செல்வதற்கு பெரும் இடையூறாக உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் இது குறித்து விசாரணை நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என்று கூறியிருந்தனர். அரியலூர் குருவிக்காரன் காலனியை சேர்ந்த ராமராஜன் அளித்த மனுவில், கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி போக்குவரத்து துறை அமைச்சரால் 34 நபர்களுக்கு கயர்லாபாத் கிராமத்தை சேர்ந்த லிங்கத்தடிமேடு அருகே பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை எங்களது நிலத்தை அளந்து ஒதுக்கீடு செய்யவில்லை. உடனடியாக ஒதுக்கீடு செய்தால் நாங்கள் அப்பகுதியில் குடியேறுவதற்கு வசதியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
- சோலாா் பேனல் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கும் நெட்வொா்க் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எல்.டி.சி.டி. 3பி பிரிவில் நேரடி கட்டணமாக யூனிட்டுக்கு ரூ.1.15 உயா்த்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:
மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளா் சங்க நிா்வாகிகள் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் மனு அளித்தனா்.இது குறித்து அவா்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
மின் கட்டண உயா்வால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் கடுமையாக பாதித்துள்ளது. 24 மணி நேரமும் இயங்கக் கூடிய இத்தொழிலில், மின் நுகா்வு என்பது மற்ற துறைகளைக் காட்டிலும் மிக அதிகம்.
எல்.டி.சி.டி. 3பி பிரிவில் நேரடி கட்டணமாக யூனிட்டுக்கு ரூ.1.15 உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், 8 மணி நேர பீக் ஹவா் கட்டணமாக யூனிட்டுக்கு ரூ. 7.50 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், யூனிட்டுக்கு மேலும் ரூ.1.88 உயா்த்தப்பட்டுள்ளது. இதுதவிர நிலையான கட்டணத்தை கிலோ வாட்டுக்கு ரூ.35இல் இருந்து ரூ.150ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
ஹெச்.டி. இணைப்புக்கு நேரடி கட்டணம் யூனிட்டுக்கு 40 பைசாவும், பீக் ஹவா் கட்டணம் 8 மணி நேரமாகவும் உயா்த்தப்பட்டுள்ளது. நிலையான கட்டணம் ரூ. 350இல் இருந்து ரூ.550ஆக உயா்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணமானது யூனிட்டுக்கு 30 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்டுதோறும் 6 சதவீத கட்டண உயா்வு என்பது எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாது. இது போன்ற காரணங்களால் தொழில் மிகக் கடுமையான பாதிப்புக்கு தள்ளப்பட்டுள்ளது.
சோலாா் பேனல் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கும் நெட்வொா்க் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசைத்தறிகளைபோல, சிறு, குறு தொழில் வரிசையில் நாங்கள் உள்ளோம். எனவே மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சா் மு.பெ.சாமிநாதன், விரைவில் மின் துறை அமைச்சருடன் பேசி ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தாா்.
- தீபாவளி அன்று தற்காலிக பட்டாசு கடை வ.உ.சி திடலில் அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
- வ .உ. சி. திடலை சுற்றி சுமார் 50-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் தள்ளுவண்டி கடைகள் மற்றும் கடை அமைய உள்ளது.
விழுப்புரம்:
திண்டிவனம் சப்-கலெக்டர் அமித்யிடம் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபு மனு அளித்தார். மனுவில் வருகின்ற தீபாவளி அன்று தற்காலிக பட்டாசு கடை வ.உ.சி திடலில் அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. வ .உ. சி. திடலில் பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த நகராட்சி நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்ட இடம் ஆகும். வ .உ. சி. திடலை சுற்றி சுமார் 50-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் தள்ளுவண்டி கடைகள் மற்றும் கடை அமைய உள்ளது. பின்புறம் எண்ணை குேடான்கள் உள்ளது.
இந்த இடத்தில் பட்டாசு கடை அமைக்க பொருத்தமான இடம் இல்லை. இந்த இடம் அதிகமாக போக்குவரத்து ஏற்படும் இடமாகும்.
திண்டிவனத்தில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பஸ் அனைத்தும் இந்த வழியாக தான் செல்லும் பயணிகள் அதிகளவில் நின்று செல்லும் இடமாக இது உள்ளது. வ.உ.சி. திடலில் பின்புறம் 3 ஹோட்டல்கள் உள்ளன திடீரென ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் மிகப்பெரிய அளவில் உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
எனவே இந்த இடத்தில் தீபாவளிக்கு பட்டாசு கடை வைக்க அனுமதி தரக் கூடாது என இந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
- ஓய்வூதியர்கள் மனு அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது
- குறைதீர்க்கும் கூட்டத்திற்கு முன்பாக
அரியலூர்
அரியலூர் மாவட்ட ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதி காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது. எனவே, ஓய்வூதியர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) கலெக்டர் அலுவலகத்தில் 2 பிரதிகளுடன் விண்ணப்பித்து, குறை தீர்க்கும் கூட்டத்திலும் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது."
- திருமுருகன் பூண்டி சம்பவங்கள் போல் மீண்டும் நடைபெறாமல்தடுக்க தகுந்த நடவடிக்கை செய்ய வேண்டும்.
- மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து பொதுதொழிலாளர் நல அமைப்பின் பொது செயலாளர் ஈ.பி.அ.சரவணன் மனு அளித்தார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருப்பூர் அவினாசி சாலையிலுள்ள திருமுருகன் பூண்டிபகுதியிலுள்ள விவேகானந்தா சேவாலயத்தில் பரிதாபமாக 3பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனைஅளிக்கிறது.
மேலும் இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில்திருப்பூர் பகுதி முழுவதும் இயங்கி வரும் பள்ளி மாணவ -மாணவிகள்தங்கும் விடுதிகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.
திருமுருகன் பூண்டி சம்பவங்கள் போல் மீண்டும் நடைபெறாமல்தடுக்க தகுந்த நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகளை மனுக்களாக அளிக்கலாம்.
- தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;-
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், வருவாய் வட்டாட்சியர்கள், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர்கள், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள், இணை இயக்குநர் சுகாதாரபணிகள் ஆகிய துறைகளை கொண்டு மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வருகின்ற 13.10.2022 அன்றுகாலை 11 மணிஅளவில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகவளாகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மாற்றுத்தி றனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவையை மனுக்களாக அளிக்கலாம்.
மேலும் இது நாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் தாங்கள் மாற்றுத்தி றனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அனைத்து பக்கங்களின் நகல் மற்றும் மருத்துவ சான்றுநகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் அளிவிலான தற்போதைய போடடோ 1, கைப்பேசி எண், ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.