என் மலர்
நீங்கள் தேடியது "tag 111741"
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் முரசொலி மாறன் நகரை சேர்ந்தவர் வெங்கடரமணன் (60). நேற்று வெங்கட்ராமன் தனது உறவினர்களுடன் விடுமுறையை கொண்டாட ஊட்டிச் செல்வதற்காக வேன் ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த வேன் அவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வேனின் முன்பு ஆட்டோ ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்ட வெங்கட்ரமணன் அந்த ஆட்டோவை எடுக்குமாறு கூறினார்.
அப்போது அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த ரகு அவரது உறவினர் சண்முகம் ஆகியோர் அவருடன் தகராறு செய்து அவரை தாக்கினார்கள். இதைக் கண்டு தடுக்க வந்த வெங்கட்ராமனின் மகன் கார்த்திக் (47) என்பவரையும் அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கத்தியால் வயிறு மற்றும் கையில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் காயமடைந்த தந்தை மகன் 2 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நடந்த சம்பவம் குறித்து வெங்கட் ராமன் மணவாள நகர் போலீசில் புகார் செய்தார்.
மணவாளநகர் போலீசார் இதுகுறித்து ரகு, சண்முகம் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆம்பூர்:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த நெக்கினி மலை கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது மாணவி. அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருடைய தந்தைக்கும் அதே பகுதியை சேர்ந்த குமார் குடும்பத்துக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.
நேற்று இரவு மாணவி மற்றும் அவரது தந்தை வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலை 2 மணியளவில் குமார் உள்பட 5 பேர் கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் மாணவியை தூக்கி கொண்டு மலை பகுதிக்கு சென்றனர். அங்கு வைத்து மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. திடீரென கண் விழித்து பார்த்த மாணவியின் தந்தை தூங்கி கொண்டிருந்த மகள் இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அப்போது இளம்பெண் அந்த கும்பலிடம் இருந்து தப்பி வீட்டுக்கு ஓடிவந்தார். நடந்த சம்பவம் குறித்து தனது தந்தையிடம் கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை அங்கு நின்று கொண்டிருந்த குமாரிடம் சென்று தட்டிக்கேட்டார். வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறியது.
அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் தந்தை குமாரின் வயிற்றில் குத்தினார். இதில் குமார் படுகாயமடைந்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மாணவியின் தந்தையை பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர். இது குறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் நெக்கினி மலை கிராமத்திற்கு சென்று மரத்தில் கட்டி வைத்திருந்த மாணவியின் தந்தையை மீட்டனர். பாதிக்கப்பட்ட மாணவி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள எடுக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மனைவி ஜெனீபர் அகல்யா (வயது 26). கணவன்- மனைவி இருவரும் தென்னம் பாளையம் அவினாசி மார்க் கெட்டில் வாழைப்பழம் மற்றும் வாழை இலை வியாபாரம் செய்து வருகின்றனர்.
சின்னராஜூக்கு அவரது மனைவியின் நடத்தையில் சந்தேம் ஏற்பட்டது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று சின்னராஜ் தனது மனைவியை மேட்டுப்பாளையம் பாரதி நகரில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு அழைத்து சென்றார். பின்னர் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார். இரவு குடிபோதையில் வீட்டுக்கு திரும்பிய அவர் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் 2 பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சின்னராஜ் அங்கு இருந்த கத்தியை எடுத்து ஜெனீபர் அகல்யாவின் கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் குத்தி கிழித்தார். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஜெனிபர் அகல்யாவை அங்கு இருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்து கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (27). என்ஜினீயர். சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
அதே கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் விவசாயி. இவர் நண்பர் விஜயகுமாருடன் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
இதனை சுதாகர் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பூபாலனும், விஜயகுமாரும் சேர்ந்து கத்தியால் சுதாகரை குத்தினர். பலத்த காயம் அடைந்த அவருக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து பென்னாலூர் பேட்டை இன்ஸ்பெக்டர் பாலு வழக்கு பதிவு செய்து பூபாலனை கைது செய்தார். தலைமறைவான விஜயகுமாரை தேடி வருகின்றனர்.
வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 52) தனியார் கம்பெனியில் வேலை செய்யும் இவரது மகள் ரஞ்சிதா (19) என்பவரை நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கூட்ரோட்டில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது ஜெயின் கோவில் அருகே சென்ற போது பின்னால் சைக்கிளில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த உலகநாதன் (55) (கூலித் தொழிலாளி) என்பவர் ரஞ்சிதா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றார். பின்னால் துரத்தி சென்ற ஜீவா ஏன் எனது மகள் மீது மோதிவிட்டு நிற்காமல் செல்கின்றாய் என கேட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜீவாவை மறைத்து வைத்திருந்த கத்தியால் உலகநாதன் வெட்டியுள்ளார்.
மேலும் உலகநாதனுக்கு ஆதரவாக அவரது மகன் அஜித்குமார் (19) என்பவர் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த ஜீவா வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக ஜீவா வந்தவாசி வடக்கு போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து உலகநாதனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அஜித்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.