என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » tag 126608
நீங்கள் தேடியது "tag 126608"
குமாரபாளையத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட தினசரி காய்கறி மார்க்கெட் கட்டப்பட உள்ளது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டப்பட உள்ளது.
கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் பஸ் ஸ்டாண்டில் அமைக்க, சேர்மன் விஜய்கண்ணன், நகராட்சி கமிஷனர், பொறியாளர் மற்றும் கவுன்சிலர்களால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மார்க்கெட் கடைகள் தற்காலிகமாக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் அமைக்கப்பட்டது.
சேலம் மண்டலத்தில் பதிவு துறையை சேர்ந்த 25 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சேலம்:
தமிழ்நாடு அரசு பதிவு துறையை சேர்ந்த சார்பதிவாளர்கள் 25 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் மண்டல இணைப்பதிவாளர் பாலமுருகன் ஆத்தூருக்கு மாற்றப்பட்டார். அவரது பணியிடத்துக்கு சேலம் சரக துணைப்பதிவாளர் ஷோபன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் பெத்தநாயக்கன்பாளையம் பகுதி அதிகாரி அமிர்த லிங்கம் வீரபாண்டிக்கும், கூட்டுறவு அச்சகம் அதிகாரி மூகாம்பிகா, வீட்டு வசதி பிரிவுக்கும், நாச்சியப்பா மேலாண் நிலைய அதிகாரி கமலக்கண்ணன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்துக்கும் என சேலம் மண்டலத்தில் 25 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
×
X