என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிணம்"

    • ரெயில் நடுவழியில் நிறுத்தம்
    • வாகன ஓட்டிகள் அவதி

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி அருகே சுக்குப்பாறை தேரிவிளை பகுதியில் நேற்று மாலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்.

    இது பற்றி நாகர்கோவில் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் கன்னியாகுமரியில் இருந்து புனலூருக்கு பாசஞ்சர் ரயில் வந்தது.

    சுக்கு பாறை தேரிவிளை பகுதியில் ரயில் வந்த போது தண்டவாளத்தில் பிணம் கிடந்ததால் டிரைவர் ரயிலை நடு வழியில் நிறுத்தினார்.சுமார் அரை மணி நேரமாக ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு இருந்தது.

    ெரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு இருந்ததை யடுத்து அந்த பகுதியில் உள்ள ரயில்வே கேட்டுகள் மூடப்பட்டு இருந்தன. மூடப்பட்ட ரயில்வேகேட் திறக்க தாமதம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    அரசு பஸ்கள் இருசக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு இருந்தது. ஒரு சில வாகன ஓட்டிகள் வாகனங்களை திருப்பி மாற்று பாதை வழியாக சென்றனர். சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு தண்டவாளத்தில் கிடந்த உடலை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

    பின்னர் ெரயில் அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கு வந்தது. கன்னியாகுமரி புனலூர் பாசஞ்சர் ெரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்ததால் பயணிகள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். நாக ர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்ற ெரயில்களும் தாமதமாக சென்றது.

    பிணமாக கிடந்தவரின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை போலீசார் இது தொடர்பாக விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • முருகன் குன்றம் அருகே முட்புதருக்குள் இருந்து நேற்று மாலையில் துர்நாற்றம் வீசி யது.
    • அழுகிய நிலை பிணமாக கிடந்தவர் அப்பகுதியில் பிச்சை எடுத்து வந்தவர்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அடுத்துள்ள முருகன் குன்றம் அருகே முட்புதருக்குள் இருந்து நேற்று மாலையில் துர்நாற்றம் வீசி யது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் தென்தாமரை குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்த முட்புதருக்குள் அழுகிய நிலையில் கிடந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வரு கின்றனர். முதல் கட்ட விசாரணையில் அழுகிய நிலை பிண மாக கிடந்தவர் அப்ப குதியில் பிச்சை எடுத்து வந்தவர் எனவும், அவரை பற்றிய வேறு தகவல் எதுவும் தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

    • நாமக்கல் ரெயில் நிலையத்திற்கும், மோகனூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே நேற்று முன்தினம் சுமார் 50 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • இதையடுத்து அவரை உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

    சேலம்:

    நாமக்கல் ரெயில் நிலையத்திற்கும், மோகனூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே நேற்று முன்தினம் சுமார் 50 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில், சேலம் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து அவரை உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 24-ந் தேதி இரவு படுதா ர்கொல்லை ஏரியில் குளிக்க செல்வதாக நாராயணசாமி மனைவியுடன் கூறி சென்றார்.
    • முதியவர் பிணம் குறித்து, திரு.பட்டினம் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் படுதார்கொல்லை ஏரியில் மிதந்த, முதியவர் பிணம் குறித்து, திரு.பட்டினம் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் படுதா ர்கொல்லை முத்தாம் பள்ளம் பேட்டை ச்சேர்ந்தவர் நாரா யணசாமி (வயது70). விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 2 மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நாராயணசாமி மனைவியுன் வசித்து வந்தார்.

    இந்நிலையில், கடந்த 24-ந் தேதி இரவு படுதா ர்கொல்லை ஏரியில் குளிக்க செல்வதாக நாராயணசாமி மனைவியுடன் கூறி சென்றார். நீண்டநேரம் ஆகியும் நாராயணசாமி வீட்டுக்கு வராததால், உறவினர்கள் ஏரி மற்றும் அதன் சுற்று பகுதியில் தேடினர். நாராயணசாமி கிடைக்கவில்லை.

    இந்நிலையில், நாராயண சாமி ஏரியில் பிணமாக மிதப்ப தாக திரு.பட்டினம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார், நாராயணசாமி உடலை கைபற்றி, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்க்கு பிரேத பரிசோதனை க்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    கன்னியாகுமரி:

    பள்ளம் கடற்கரை பகுதியில் இன்று காலை பெண் ஒருவரது உடல் கரை ஒதுங்கியது. இதை பார்த்த பொதுமக்கள் சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    கடற்கரை பகுதியில் பெண் பிணமாக கிடந்ததால் இது குறித்து கன்னியாகுமரி கடலோர காவல் படை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பலதா தலைமையிலான போலீசாரும் அங்கு வந்தனர். பிணமாக கிடந்தவர் 65 வயது மதிக்கத்தக்க பெண் என்பது தெரியவந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

    அவர் இன்று காலை கடலில் குளிக்கும் போது தவறி விழுந்தாரா? இல்லை தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிணமாக கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    • இறந்த 80 வயது மதிக்கத்தக்கவர் யார்? எந்த இடத்தைச் சேர்ந்தவர்? என்று விவரம் தெரியவில்லை
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை 80 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் காணப்பட்டார் இது குறித்து சமூக சேவகர் ராஜகோபால் மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    உடன் அவரது வாகனத்தில் குழித்துறை அரசு மருத்துவமனை கொண்டு சென்றார் ஆனால் இவர் யார்? எந்த இடத்தைச் சேர்ந்தவர்? என்று விவரம் தெரிய வில்லை. மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    6 தீயணைப்பு வீரர்கள் பாலமான் ஓடையில் மிதந்த பிணத்தை மீட்டனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே பாலமான் ஓடை உள்ளது. இதில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. இதைக் கண்ட பொது மக்கள் சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிதம்பரம் நகர தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி சிதம்பரம் நகர தீயணைப்பு நிலைய அதிகாரி பழனிச்சாமி தலைமையில் 6 தீயணைப்பு வீரர்கள் வந்து பாலமான் ஓடையில் மிதந்த பிணத்தை மீட்டனர்.

    பிரேதத்தை கைப்பற்றி போலீசார், சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் கிடந்தார்.

    கடலூர்:

    திட்டக்குடி அ அருகே ராமநத்தத்தில் ராமநத்தம்-கண்டமத்தான் செல்லும் சாலையில் தனியார் ஓட்டல் எதிரே சாலையோரம் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் கிடந்தார். இதனை அவ்வழியே சென்றவர்கள் அருகில் உள்ள ராமநத்தம் நி போலீஸ் லையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன நபர் குறித்து அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என முதல் கட்ட விசாரணை செய்தனர். இதில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டைஅருகே உள்ள நூத்தப்பூர் கிராமத்தில் இவரது தங்கை குமாரி வசிப்பதாக தகவல் கிடைத்தது.

    இவர் கட்டம் போட்ட கைலி, வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தார். இறந்து கிடந்த இடத்திற்கு அருகில் பார்சல் உணவு, தண்ணீர் பாட்டில் இருந்தது.

    இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • தெப்பக்குளத்தில் பிணமாக கிடந்தவர் யார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • ஆரஞ்சு கலர் முழுக்கை டி-சர்ட்டும், கருப்பு டவுசரும் அணிந்திருந்தார்.

    மதுரை

    மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் தியாகராஜர் மாடல் பள்ளி எதிரில் நேற்று (11-ந் தேதி) காலையில் 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. வலது முழங்காலின் கீழ் பழைய காயத்தழும்பும், இடது முழுங்காலில் பழைய காயத்தழும்பும் காணப்படுகிறது.

    ஆரஞ்சு கலர் முழுக்கை டி-சர்ட்டும், கருப்பு டவுசரும் அணிந்திருந்தார். இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் ராமநாதன் கொடுத்த புகாரின்பேரில் தெப்பக்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? எப்படி இறந்தார்? என்பன போன்ற விவரம் எதுவும் தெரியவில்லை.
    • பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் போலீஸ் நிலையம் அருகே இன்று காலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியோர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? எப்படி இறந்தார்? என்பன போன்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இது பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    • பள்–ளி–பா–ளை–யம்-சங்–க–கிரி செல்–லும் சாலை–யில் தெற்கு பாளை–யம் பகு–தி–யில் அடையாளம் தெரியாத ஆண் ஒரு–வர் இறந்து கிடந்–தார்.
    • அடை–யா–ளம் தெரி–யாத ஆண் உடலை மீட்டு பள்–ளி–பா–ளை–யம் அரசு மருத்–து–வ–ம–னைக்கு அனுப்பி வைத்–தார்.

    பள்–ளி–பா–ளை–யம்:

    பள்–ளி–பா–ளை–யம்-சங்–க–கிரி செல்–லும் சாலை–யில் தெற்கு பாளை–யம் பகு–தி–யில் உள்ள வாய்க்–கா–லில் 45 வயது மதிக்–கத்–தக்க ஆண் ஒரு–வர் இறந்து கிடந்–தார். அதைப்–பார்த்த அந்த வழி–யாக வந்–த–வர்–கள் பள்–ளி–பா–ளை–யம் போலீஸ் நிலை–யத்–திற்கு தக–வல் தெரி–வித்–த–னர்.

    சம்–பவ இடத்–திற்கு விரைந்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்–பெக்–டர் செந்–தில்–கு–மார் அடை–யா–ளம் தெரி–யாத ஆண் உடலை மீட்டு பள்–ளி–பா–ளை–யம் அரசு மருத்–து–வ–ம–னைக்கு அனுப்பி வைத்–தார். வாய்க்–கா–லில் இறந்து கிடந்–த–வர் வெள்ளை வேட்டி கட்டி இருந்–தார். சிவப்பு நிற பெட்–ஷீட் போர்த்தி இருந்–தார். அவர் யார்? எந்த ஊர்? என்று தெரி–ய–வில்லை? இது குறித்து வழக்–குப்–ப–திவு செய்து போலீ–சார் விசா–ரணை நடத்தி வரு–கின்–ற–னர்.

    தீயணைப்பு துறையினர் உதவியோடு உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூரில் தேவனாம்பாளையம்-ராமம்பாளையம் பி. ஏ. பி. வாய்க்காலில் சுமார் 40 லிருந்து 55 வயது மதிக்கதக்க ஆணின் சடலம் எலும்புக்கூடாக கிடப்பதாக அவ்வழியே சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து, அவிநாசிபாளையம் போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியோடு உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் வெள்ளை நிறத்தில், ரோஸ் கலரில் கோடு போட்ட அரைக்கை சட்டை அணிந்துள்ளார். அவரை பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் அவிநாசி பாளையம் போலீஸ் நிலையத்திற்கு 94981 01329 என்ற எண்ணில் தகவல் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

    ×