என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைக்கிள்"

    • நீண்ட தூர பயணத்திற்கான கார்பன்-ஃபைபர் பிரேம் உடன் வருகிறது.
    • கார்பன் ஹேண்டில்பார்கள் மற்றும் பெரிய அளவுகளில் 630Wh ஷிமானோ பேட்டரி இடம்பெற்றுள்ளது

    பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான போர்ஷே தனது ஐந்தாவது தலைமுறை மின்சார சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.

     இந்த கிராஸ் (Cross) இ-பைக் சைக்கிள் மொத்தம் நான்கு வகைகளில் வருகிறது.

    ஆரம்ப நிலை மாடலான, கிராஸ் ( £4,994), கிராஸ் பெர்பார்மன்ஸ் (£7,471), கிராஸ் பெர்பார்மன்ஸ் EXC மற்றும் பிரீமியம் மாடலான ஸ்போர்ட் ( £8309) விலையுடன் முறையே அறிமுகமாகியுள்ளன.

    4 கிராஸ் மாடல்களும் மிகவும் ஒத்தவையாகவே உள்ளன. அனைத்தும் ஒரே மாதிரியான ஷிமானோ (SHIMANO) EP801 மோட்டாரைக் கொண்டுள்ளன. 62lb அடி முறுக்குவிசை, நீண்ட தூர பயணத்திற்கான கார்பன்-ஃபைபர் பிரேம், 12-ஸ்பீட் கியர்ஷிஃப்ட், சைக்கிளின் முன்னாள் மற்றும் பின்னால் சூப்பர்-ப்ரைட் விளக்குகள் மற்றும் இலகுரக கார்பன் வீல் செட்கள் இடம்பெற்றுள்ளன.

    கிராஸ் அடிப்படை மாடலில் டிரெயில் டிஸ்க் பிரேக்குகள், ஒரு சிறிய 504Wh பேட்டரி மற்றும் ஒரு டெலஸ்கோபிக் சீட் போஸ்ட் ஆகியவை உள்ளன. கிராஸ் பெர்பார்மென்ஸ் மாடலில் நான்கு-பிஸ்டன் மகுரா டிஸ்க் பிரேக்குகள், கார்பன் ஹேண்டில்பார்கள் மற்றும் பெரிய அளவுகளில் 630Wh ஷிமானோ பேட்டரி இடம்பெற்றுள்ளது

    பிரீமியம் மாடலான ஸ்போர்ட் வேரியண்டில் கிராஸ் பெர்பார்மென்ஸ் அம்சங்களுடன் சேர்ந்து, 21.6 கிலோகிராமே எடை கொண்ட அல்ட்ரா-லைட் கார்பன் பிரேம் இடம்பெற்றுள்ளது.

    இந்த பிரீமியம் ஸ்போர்ட் வேரியண்டில் உள்ள அதிக முறுக்கு-எதிர்ப்பு கார்பன் ஹேண்டில்பார்கள் மற்றும் 120 மில்லிமீட்டர் டிராவலுடன் கூடிய சூப்பர் ஃபேன்ஸி சஸ்பென்ஷன் ஃபோர்க் உள்ளது. பயணிக்கும்போது கை மற்றும் கால் வலியை குறைக்கும் வடிவமைப்புடன் ஸ்போர்ட் உருவாக்கப்பட்டுள்ளது. 

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வடகரையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் கடந்த 5 வருடங்களாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார்.
    • இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டுவதற்காக வெளியில் இருந்த பொருட்களை எடுத்து உள்ளே வைத்துவிட்டு வெளியில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை பார்த்தபோது திடீரென காணவில்லை.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வடகரையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (37). இவர் ஜேடர்பாளையம் சரளைமேட்டில் கடந்த 5 வருடங்களாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டுவதற்காக வெளியில் இருந்த பொருட்களை எடுத்து உள்ளே வைத்துவிட்டு வெளியில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை பார்த்தபோது திடீரென காணவில்லை. பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடி பார்த்தும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை .இது குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • ரூ. 9 ஆயிரம் மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்களை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 328 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவவாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 8 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ. 9000 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்களை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர்சாமிநாதன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தொப்பூர் காமராஜர் நகர் அருகில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த மகேஸ்வரி தவறி கீழே விழுந்தார்.
    • அப்பொழுது பின்னால் வந்த வாகனம் மகேஸ்வரி மீது ஏறியதில் சம்பவ இடத்தில் அவர் பலியானார்.

    காடையாம்பட்டி:

    தர்மபுரி மாவட்டம் கலெக்டர் அலுவலகம் அருகில் வசித்து வருபவர் முனுசாமி. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 42).இவர்கள் கொத்தனார் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் தருமபுரியில் இருந்து சேலத்தை நோக்கி வரும்போது தொப்பூர் காமராஜர் நகர் அருகில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த மகேஸ்வரி தவறி கீழே விழுந்தார். அப்பொழுது பின்னால் வந்த வாகனம் மகேஸ்வரி மீது ஏறியதில் சம்பவ இடத்தில் அவர் பலியானார். முனுசாமி லேசான காயத்துடன் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 12 ஆயிரத்து 830 கிலோ மீட்டர் தூரத்தை 14 மாதத்தில் கடந்து வந்தார்
    • இளைஞர்களை சந்தித்து பாகுபாட்டை தவிர்த்து தேச ஒற்றுமையை கடைபிடிக்க வலியுறுத்தி பேசி வருவதாக தெரிவித்தார்.

    கன்னியாகுமரி:

    பீகார் மாநிலம் ஜெகானா பாத் மாவட்டத்தை சேர்ந்த வர் தீரஜ்குமார் (வயது 30). இவர் எம். பில். பட்டதாரி ஆவார். இவர் மக்கள் மத்தியில் நிலவும் பாகுபாட்டை களைய வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ந்தேதி பஞ்சாப் மாநிலத்திலிருந்து தனது தேசிய அளவிலான சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார்.

    இவர் இமாச்சலப்பிர தேசம், அரியானா, டெல்லி, உத்திரப்பிரதேசம், பீகார், உத்ரகாண்ட், சிக்கீம், அசாம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோராம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், சட்டிஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா வழியாக கடந்த ஜனவரி மாதம் கும்மிடிப்பூண்டி வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைந்தார். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களை கடந்து நேற்றுகன்னியாகுமரி வந்தார். இவர் 22 மாநிலங்கள் வழியாக 12 ஆயிரத்து830 கிலோ மீட்டர் தூரத்தை1வருடம்2 மாதம் 29 நாட்களில் கடந்து வந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் தனது சைக்கிள் பயணத்தின் போது அந்தந்த மாநிலத்தில் உள்ள இளைஞர்களை சந்தித்து பாகுபாட்டை தவிர்த்து தேச ஒற்றுமையை கடைபிடிக்க வலியுறுத்தி பேசி வருவதாக தெரிவித்தார்.

    கன்னியாகுமரி வந்த அவருக்குகன்னியாகுமரி முக்கடல்சங்கமம்கடற்கரை யில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூரா ட்சி தலைவர் குமரி ஸ்டீபன் அவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில்கன்னி யாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர் தாமஸ், சினிமா நடிகர் ராஜ்குமார், தி.மு.க. நிர்வாகிகள் அன்பழகன், ரூபின், ஷியாம் தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர்

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் ராஜமணி (வயது 75).

    இவர் சம்பவத்தன்றுஇரவு கொட்டாரம் பெருமாள்புரம் பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் இவர் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்ப த்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனும திக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில்கன்னியாகுமரி போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

    பின்னர் அவரது உடல்ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்பிரேதபரிசோதனைசெய்யப்பட் டது. இது குறித்து கன்னியா குமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மல்லூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய சேலம் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • 2 பேரும் சேர்ந்து கனகராஜின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    சேலம்:

    மல்லூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய சேலம் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மோட்டார் சைக்கிள் திருட்டு

    சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி கிராமம் சிலம்பன் காடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 32), டிரைவர்.

    இவர் கடந்த 8-ந் தேதி இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.

    மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை.

    சேலம் வாலிபர்கள் 2 பேர் கைது

    இது குறித்த அவர் மல்லூர் போலீசில் புகார் அளித்தார். இந்த திருட்டு சம்பவம் குறித்து சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சேலம் தாதகாப்பட்டி பங்களா தோட்டம் பகு தியை சேர்ந்த தினேஷ் (23), தாதகாப்பட்டி அம்பாள் ஏரி பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத் (19) ஆகிய 2 பேரும் சேர்ந்து கனகராஜின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    கைதான 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் வேறு எங்கும் கைவரிசை காட்டியுள்ளனரா? என்றும் விசாரணை நடக்கிறது.

    • மல்லூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய சேலம் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • 2 பேரும் சேர்ந்து கனகராஜின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    சேலம்:

    மல்லூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய சேலம் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மோட்டார் சைக்கிள் திருட்டு

    சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி கிராமம் சிலம்பன் காடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 32), டிரைவர்.

    இவர் கடந்த 8-ந் தேதி இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.

    மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை.

    சேலம் வாலிபர்கள் 2 பேர் கைது

    இது குறித்த அவர் மல்லூர் போலீசில் புகார் அளித்தார். இந்த திருட்டு சம்பவம் குறித்து சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சேலம் தாதகாப்பட்டி பங்களா தோட்டம் பகு தியை சேர்ந்த தினேஷ் (23), தாதகாப்பட்டி அம்பாள் ஏரி பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத் (19) ஆகிய 2 பேரும் சேர்ந்து கனகராஜின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    கைதான 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் வேறு எங்கும் கைவரிசை காட்டியுள்ளனரா? என்றும் விசாரணை நடக்கிறது.

    எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் திருநங்கைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்

    கன்னியாகுமரி, பிப்.26-

    மத்திய பிரதேச மாநிலம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் மிஸ்கான் ரகுவன்சி (வயது 22). கல்லூரி மாணவியான இவர் ஒரே பாரதம், உண்மையான பாரதம் மற்றும் பெண்கள் உரிமை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

    கடந்த 1-ந்தேதி காஷ்மீரில் இருந்து புறப்பட்ட அவர் 3 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரத்தை 25 நாட்களில் கடந்து கன்னியாகுமரி வந்தார். பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

    எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் பணக்குடியை சேர்ந்த திருநங்கைகள் வினோதினி, முஜி, வாணி ஆகியோர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    சைக்கிள் பயண வீராங்கனை மிஸ்கான்ரகுவன்சி கூறுகையில், தான் தினமும் 100 முதல் 150 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டதாகவும், நாட்டில் பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்புக்கு கேள்விக்குறி எழுந்து உள்ளதால் அதனை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு முன்பு நர்மதை நதிக்கரையில் 3200 கிலோமீட்டர் தூரத்தை 19 நாட்களில் சைக்கிள் மூலம் பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

    • ஒரு பகுதியாக சாலைகளில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • சைக்கிள் நிறுத்த வசதிகளை அறிமுகம் செய்வது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டன.

    சென்னை பெருநகருக்கான 3-வது மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சாலைகளில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சென்னையில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு தனிப்பாதை அமைப்பது, அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது, மெட்ரோ ரெயில் நிலையங்களில் சைக்கிள் வசதி ஏற்படுத்துவது, சைக்கிள் ஷேரிங் திட்டத்தை மேம்படுத்துவது, சைக்கிள் நிறுத்த வசதிகளை அறிமுகம் செய்வது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டன. இந்த வசதிகளை நெதர்லாந்து நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது.

    • தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள நெருப்பாண்டி குப்பம் பகுதியை சேர்ந்தவர் உறவினரை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சேலம் அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவிற்கு வந்தவர்.
    • உள்ளே சென்று உறவினரை பார்த்துவிட்டு திரும்பி வந்தார். அப்போது இவரது மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் மாற்றுச் சாவி மூலம் திறந்து கொண்டிருந்தார்.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள நெருப்பாண்டி குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமஜெயம் (வயது 33). இவர் நேற்று மாலை உறவினரை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சேலம் அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவிற்கு வந்தவர்.

    அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, உள்ளே சென்று உறவினரை பார்த்துவிட்டு திரும்பி வந்தார். அப்போது இவரது மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் மாற்றுச் சாவி மூலம் திறந்து கொண்டிருந்தார்.

    இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராமஜெயம் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து, அரசு ஆஸ்பத்திரி புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள தேக்கலூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நந்தகுமார் (26) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சுற்றுச்சூழல் உடல்நலம் சார்ந்த பிரசாரத்தோடு 20 ஆயிரம் கி.மீ. தூரத்தை சைக்கிளில் கடந்து சாதனை.
    • சைக்கிளில் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய சாலை விதிகள்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மிதிவண்டி பயணம் உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் நலன் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதற்கு பள்ளி தலைமையாசிரியர் நித்தையன் தலைமை வகித்தார்.

    பட்டதாரி ஆசிரியர் செல்வசிதம்பரம் வரவேற்று பேசினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக சுற்றுச்சூழல் உடல்நலம் சார்ந்த பிரசாரத்தோடு 20 ஆயிரம் கி.மீ. தூரத்தை மிதிவண்டியில் கடந்து சாதனை படைத்துள்ள அரசுப்பள்ளி ஆசிரியர் சுரேஷ் மாணவர்களுக்கு உடல் நலன், சுற்றுச்சூழல் நலன், மிதிவண்டியில் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய சாலை விதிகள் மற்றும் மிதிவண்டி தொடர்பான ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

    இதில் கல்விக்குழு தலைவர் மெட்ரோ மாலிக், வட்டார வளமைய பயிற்றுனர்கள் ஸ்ரீதர், சுரேஷ், ஆசிரியர்கள் ஆரோக்கிய அந்தோணி ராஜா, அன்பரசு, முத்துலட்சுமி, இந்திரா, அமிர்தம், பெல்சி ராணி, வனிதா, செல்வக்குமார், சங்கீதா, விதைக்கும் கரங்கள் நந்தா ஜீவானந்தம், கலாம் கனவு இயக்க பொருளாளர் கிஷோர் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

    ×