என் மலர்
நீங்கள் தேடியது "முதியவர்"
- கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 60 வயது முதியவர் ஒருவர் நேரில் வந்தார்.
- பிலஞ்சம் தராத காரணத்தினால் வீடு இல்லை என கூறியதை கண்டித்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இக்கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தீர்வு காண வந்து சென்றனர்.
அதன்படி இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 60 வயது முதியவர் ஒருவர் நேரில் வந்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக முதியவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பண்ருட்டி கீழ்மாம்பட்டு சேர்ந்தவர் சிகாமணி (வயது 65) என தெரிய வந்தது. இவருக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு வந்துள்ளதாக கூறியதாகவும், தற்போது வீடு கட்ட தொடங்கிய பின் 50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.இதன் காரணமாக லஞ்சம் தராத காரணத்தினால் வீடு இல்லை என கூறியதை கண்டித்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து முதியவர் சிகாமணியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
கடலூர்:
வேப்பூர் அருகே ரெட்டாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 57), இவருக்கு மனைவி 3 மகள்கள், 1 மகன் உள்ளனர் கடந்த சிலநாட்களாக சுப்பிரமணியன் உடல் நல குறைவால் இருந்தார். இதில் மனமுடைந்த அவர் வீட்டின் மொட்டை மாடியில் இரும்பு கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- விருதுநகர் மாவட்டத்தில் முதியவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி ஹவுசிங் போர்டு லட்சுமி நகரை சேர்ந்தவர் நந்தீஸ்வரன் (62). இவர் தொடர் மூட்டு வலி காரணமாக அவதி அடைந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த நந்தீஸ்வரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருத்தங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருத்தங்கலை சேர்ந்தவர் ராஜேஸ்கண்ணன் (43). தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். வங்கியில் பெற்ற கடனை செலுத்துமாறு அவருக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இந்தநிலையில் ராஜேஸ்கண்ணனுக்கு உடல் நலபாதிப்பும் ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி பஞ்சவர்ணம் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை ராமானுஜபுரத்தை சேர்ந்தவர் முத்து (45). குடிப்பழக்கம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் தற்கொலை செய்து கொண்டார்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில், திருச்செங்கோடு பஸ் நிறுத்த பகுதியில் இரவு முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.
- பரமத்தி வேலூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில், திருச்செங்கோடு பஸ் நிறுத்த பகுதியில் இரவு முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த கடைக்காரர்கள், பரமத்தி வேலூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்தனர். இறந்தி கிடந்த முதியவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் வெள்ளை நிற அரைக் கை சட்டையும், ஊதா நிறத்தில் கைலியும் அணிந்து இருந்தார். பரமத்திவேலூர், திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு மாத்திரைகளுடன் பஸ் நிலையத்திற்கு வந்திருந்த அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இறந்த 80 வயது மதிக்கத்தக்கவர் யார்? எந்த இடத்தைச் சேர்ந்தவர்? என்று விவரம் தெரியவில்லை
- மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை 80 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் காணப்பட்டார் இது குறித்து சமூக சேவகர் ராஜகோபால் மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
உடன் அவரது வாகனத்தில் குழித்துறை அரசு மருத்துவமனை கொண்டு சென்றார் ஆனால் இவர் யார்? எந்த இடத்தைச் சேர்ந்தவர்? என்று விவரம் தெரிய வில்லை. மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வீட்டுமனை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காததால் தற்கொலைக்கு முயற்சி
- தண்ணீர் பாட்டிலுடன் வந்தவர்களை போலீசார் சோதனை செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடந்தது.
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் அரவிந்த் பெற்றுக்கொண்டார். மனுக்கள் வழங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.
அப்போது திட்டுவிளை பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது 2 மகள்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். திடீரென அவர் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
இதை பார்த்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்தனர். பின்னர் அவரது உடலில் தண்ணீரை ஊற்றினார்கள். இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் வீட்டுமனை பிரச்சனை இருந்து வந்த நிலையில் அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதியவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. மனு அளிக்க வந்த பொதுமக்களின் உடைமைகளை போலீசார் சோதனை செய்த பிறகு கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர். தண்ணீர் பாட்டிலுடன் வந்தவர்களை போலீசார் சோதனை செய்தனர்.
பாட்டில்களில் என்ன உள்ளது என்பதை குறித்து முகர்ந்து பார்த்து சோதனை செய்து உள்ளே அனுப்பினார்கள். கார்களில் வந்தவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பும் டிரைவர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில் இன்றும் முதியவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் வண்டிமேடு பகுதி தச்சன்குட்டையில் வசித்து வருபவர் அண்ணாதுரை (வயது 65). இன்று அதிகாலை வண்டிமேடு பழைய சிக்னல் அருகில் சாலை கடக்க விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேேய வயதானவர் உயிரிழந்தார்.
முயற்சி செய்தார். அப்போது விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேேய வயதானவர் உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் மேற்கு இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் பிரேதத்தை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
- கமலக்கண்ணன் காலை வீட்டில் விஷம் குடித்துரோட்டில் நடந்து வந்தார் .
- அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இவரை தூக்கி கொண்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில்சி கிச்சைக்காக சேர்த்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே கண்டரகோட்டை திருத்து றையூர் ரோட்டில் வசித்து வந்தவர்கமலக்கண்ணன் (வயது 70).இவர், நேற்று காலை வீட்டில் விஷம் குடித்துரோட்டில் நடந்து வந்தார் இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சாலையி ல்மயங்கி விழுந்தார்.
உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இவரை தூக்கி கொண்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில்சி கிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சம்பவத்தன்று சுப்பிரமணி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
- டாக்டர் பரிசோதனை செய்து விட்டு சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள விண்ணப்பள்ளி தனலட்சுமி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (63). இவருக்கு கடந்த ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று சுப்பிரமணி திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரது மனைவி சுசீலா சுப்பிரமணியை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- காலை கோவிலுக்கு செல்வதற்காக சேவூர் சாலையை கடக்க முயன்றார்.
- தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த மாரப்ப கவுண்டர் சம்பவ இடத்திலேயே பலியானார்
அவினாசி :
அவினாசி தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் மாரப்ப கவுண்டர் (வயது 77). இவர் இன்று காலை கோவிலுக்கு செல்வதற்காக சேவூர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த மாரப்ப கவுண்டர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்த புகாரின் பேரில் சேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டவரை தேடும் பணி தீவிரம்
- தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டியும், டியூப்களில் மிதந்து சென்றும் தேடுதல் வேட்டை
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. எனவே அணைகளில் இருந்து ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் குமரி மாவட்ட நீர்நிலைகளில் அதிக அளவு தண்ணீர் ஓடுகிறது.
திருவட்டார் அருகே உள்ள பரளியாற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடு கிறது. இருப்பினும் ஆபத்தை உணராமல் பலரும் ஆற்றில் குளித்து வருகின்றனர். திருவட்டார் கொற்றுபுத்தன் வீடு பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் நாயர் (வயது 52) என்பவரும் இன்று காலை ஆற்றில் குளிக்க வந்தார்.
அவர் தண்ணீரில் இறங்கி குளித்த போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். அப்போது தண்ணீரின் வேகம் அதிக மாக இருந்ததால் அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிகி றது.
ஆனால் இதனை யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து அந்த பகுதி யில் குளித்துக் கொண்டிருந்த வர்கள் மதுசூதனன் நாயரை தேடினர். அப்போது தான் அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
எனவே அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என கருதி தேடினர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து குலசேகரம் போலீசார் மற்றும் தீய ணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விைரந்து வந்து, மதுசூதனன் நாயரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆற்றில் தண்ணீர் அதிக அளவு வேகமாக சென்றதால், தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டியும், டியூப்களில் மிதந்து சென்றும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? எப்படி இறந்தார்? என்பன போன்ற விவரம் எதுவும் தெரியவில்லை.
- பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் போலீஸ் நிலையம் அருகே இன்று காலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியோர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? எப்படி இறந்தார்? என்பன போன்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இது பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.