என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சான்றிதழ்"

    • துளிர் அறிவியல் வினாடி-வினா போட்டியில் 13 பள்ளிகள் பங்கேற்றன.
    • மாணவர்கள் சான்றிதழ்களையும், பரிசுகளையும் வென்று வந்துள்ளனர்.

    சீர்காழி:

    தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டு தோறும் நடத்தும் ஒன்றிய அளவிலான துளிர் அறிவியல் வினாடி -வினா போட்டி சீர்காழியில் நடைபெற்றது.

    13 பள்ளிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இதில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மதன்ராஜ், ஜெய் சபரிவாசன், சந்தோஷ்குமார் ஆகியோர் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில் முதலிடமும், யோஷ்வின், கீர்த்திவாசன், ஸ்ரீவர்சன் ஆகியோர் 9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டியில் முதலிடமும் பெற்று சான்றிதழ்களையும், பரிசுகளையும் வென்று வந்துள்ளனர்.

    இவர்களை பள்ளிச் செயலர் ராமகிருஷ்ண முதலியார், நிர்வாக அலுவலர் தங்கவேலு, முதல்வர் தங்கதுரை, வழிகாட்டி ஆசிரியர் தமிழ்வாணன் மற்றும் துணை முதல்வர்கள் தமிழரசன், கிரிஜாபாய் ஆகியோர் பாராட்டினர்.

    • 40 ஆண்டுகளாக தங்களுக்கு பழங்குடி இன சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை.
    • இவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் தமிழக அரசு மூலமாக கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் பேரூராட்சி, மகாராஜபுரம் ஊராட்சியில் உள்ள பனங்குடம் கிராமத்தில் வசிக்கும் 31 குடும்பங்களை சேர்ந்த 105 இருளர், பழங்குடி இன மக்களுக்கு சாதி சான்றிதழ்களை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வீடு, வீடாக சென்று வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

    மேலும் பட்டுக்கோட்டை பகுதியில் ஆதியன்குடி என்ற பழங்குடி இன மக்களும் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக தங்களுக்கு பழங்குடி இன சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து தமிழக அரசு பழங்குடி இன மக்களுக்கானசாதி சான்றிதழ்களைவழங்கி வருகிறது.

    அதனை த்தொடர்ந்து மகாராஜபுரம் ஊராட்சியில் உள்ள பனங்குடம் கிராமத்தில் வசித்து வரும் 31 குடும்பங்களை சேர்ந்த 105 இருளர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கி உள்ளோம்.

    தஞ்சை மாவட்டத்தில் இதுவரை, 250 குடும்பங்களுக்கு இருளர் மற்றும் ஆதியன்குடி சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

    பொருளாதார மேம்பா ட்டிற்காக இவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் தமிழக அரசு மூலமாக கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கும்பகோ ணம் கோட்டாட்சியர் லதா, திருவிடைமருதூர் தாசில்தார் சுசீலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்குழலி, சூரிய நாராய ணன், ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி இளங்கோவன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். 

    • போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரியை சோந்த மாணவர்ளுக்கு சான்றிதழ்.
    • மொத்தம் ரூ.92 ஆயிரத்திற்கான காசோலையை மாணவர்களுக்கு வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:-

    குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 359 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழா, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரியினை சோந்த 22 மாணவ-மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் சிறப்பு பரிசாக ரூ.2 ஆயிரத்திற்கான காசோலையாக மொத்தம் ரூ.92 ஆயிரத்திற்கான காசோலையினை 22 மாணவ-மாணவியர்களுக்கு வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    • சம்பா மற்றும் தாளடி நடவு செய்த பிறகு சான்றிதழ் வழங்கப்படும்.

    பூதலூர்:

    பூதலூர், திருக்காட்டுப்பள்ளி பகுதியில் சம்பா மற்றும் தாளடி‌ நெல் நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகவும், நடவு பணிகளுக்கு மழை காரணமாக ஆட்கள் கிடைக்காததாலும் நடவு பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில்‌ நடப்பாண்டு சம்பா சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய நாளை மறுநாள் (15.11.22) அன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் பல கிராமங்களில் வாயல்களை நடவு பணிக்கு ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதி நாளை மறுநாள் என்று அறிவிக்கப்பட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பா மற்றும் தாளடி நடவு செய்த பிறகு சான்றிதழ் வழங்க ப்படும் என்று தெரிவித்து விட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நீட்டித்து தர ஆவன செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    • நாளை முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெற உள்ளது.
    • கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் தனி நபர் கடன் திட்டம், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் திருவையாறு வட்ட அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெற உள்ளது.

    மேற்படி கடன் பெறுவதற்கு 18 முதல் 60 வயது உடையர்கள் தகுதியானவர்கள். சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து கடன் மனுக்களுடன் மனுதாராரின் சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் - திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் , கல்விக்கட்டணங்கள் செலுத்திய இரசீது-செலான் (அசல்) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்து உள்ளார்.

    • பாபநாசம் வட்ட அலுவலகத்தில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.
    • மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு சிற்பான்மை யினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொரு ளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் தனி நபர் கடன் திட்டம், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் பாபநாசம் வட்ட அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை ) 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.

    மேற்படி, கடன் பெறுவதற்கு 18 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள். சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு விண்ணப்ப ங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, மனுக்களுடன் மனுதாரரின் சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் / திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது/செலான் (அசல்) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு அனைத்து பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்தவர்கள் கடன் உதவி பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அறிவியல் செயல்பாடுகளை மாணவர்கள் விளக்கி பாராட்டினர்.
    • பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    திருவையாறு:

    திருவையாறு சீனிவா சராவ் மேனிலைப்பள்ளியில் ஜே.சி. போஸ் அறிவியல் மன்றத்தின் அறிவியல் கண்காட்சி நடந்தது.

    கண்காட்சியை பள்ளித் தலைமையாசிரியர் அனந்த ராமன் தொடங்கி வைத்து மாணவ மாணவி களின் அறிவியல்செயல்தி றனைப் பாராட்டிப் பேசினார்.

    பின்னர்,மாணவர்களின் முயற்சியில் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த ஒளி விலகல், புவி அமைப்பு, பருவநிலை மாற்றம், சூரிய சந்திர கிரகணம், மனித உறுப்பு மண்டலம் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் முதலிய 15க்கு மேற்பட்ட அறிவியல் செயல்பாடுகளை மாணவர்கள் விளக்கிச் சொல்லக்கேட்டு மகிழ்ந்து பாராட்டினார்.

    மேலும், தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவில் நடந்த 17 வயதினருக்கிடையேயான தடகளப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று, திருவண்ணா மலையில் நடக்கும் மாநில அளவில் நடக்கும் தடகளப் போட்டியில் கலந்து கொள்ளத் தேர்வாகியுள்ள மாணவன் அஜித்திற்கு பள்ளி செயலர் ரஞ்சன்கோபால் பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    இதனைத் தொடர்ந்து 28ந்தேதி திருவண்ணாமலையில் நடக்கிற மாநிலதடகளப் போட்டியில் கலந்துகொள்ள மாணவர் அஜித் வாழ்த்தி வழியனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்நிகழ்ச்சிகளில் திரளான ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.

    • 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து 436 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மாணவ- மாணவிகளுக்கு சுழற்கோப்பை உட்பட 230 வகையான பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கல்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் அகரம் மெட்ரிக் பள்ளியில் வாய்மேடு இலக்குவனார் சதுரங்க பயிற்சி மையம், நாகை மாவட்ட சதுரங்க கழகம் ஆகியவற்றின் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடந்தது.

    இதில் தஞ்சை, நாகை, திருவாரூர், தேனி உட்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 9 முதல் 19 வயது வரையிலான 436 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 10 பிரிவுகளில் நடந்த போட்டிகளை அகரம் மெட்ரிக் பள்ளி நிறுவனரும், முன்னாள் எம்.பி.யுமான பி.வி.ராஜேந்திரன் தொடக்கி வைத்தார்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சுழற்கோப்பை உட்பட 230 வகையான பரிசுகள், சான்றிதழ்களை பள்ளி செயலாளர் மகேஸ்வரி விவேக் வெங்கட்ராமன், வேதநாயகி, ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர்.

    செஸ் கழக மாநில இணை செயலாளர் பாலகுணசேகரன், தலைவா் விஜயன், செயலாளர் சுந்தர்ராஜ், பொருளாளர் அருண்குமார் உட்பட பயிற்சியாளர்கள் நடுவர்களாக இருந்து போட்டியை நடத்தினர்.

    அகரம் பள்ளி முதல்வர் வெற்றிச்செல்வி வரவேற்றார். செஸ் கழக இணை செயலர் மணிமொழி நன்றி கூறினார்.

    • போட்டியில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
    • கல்வியாளர் ஆனந்த சேகர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரைப்படி மதுக்கூர் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலைத்திருவிழா நிறைவு விழா கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு பள்ளி அளவிலான கலைத்திருவிழா நிகழ்ச்சி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வராசு தலைமையேற்று நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் ஜமீலா மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    இந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் மனோகரன், ஒன்றிய குழு உறுப்பினர் அன்புச்செல்வி விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், துணைத் தலைவர் கார்த்திகேயன், பி.டி.ஏ. துணைத் தலைவர் ரங்கசாமி, பொருளாளர் பிரசன்னா, பள்ளி மேலாண்மை குழு தலைவி நிர்மலா தேவி, கல்வியாளர் ஆனந்த சேகர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    முடிவில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசுகளும் நற்சான்றிதழும் வழங்கப்பட்டது.

    மேலும் வானவில் மன்றம் தொடக்க விழாவும் நடைபெற்றது.

    • பலூன் உடைத்தல், இசை கேட்டு இடம்பிடித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.
    • போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    அதன்படி நேற்று29-ந்தேதி மதுக்கூர் வட்டார வளமை யத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    இதில் ஓட்டப்பந்தயம், பலூன் உடைத்தல், தண்ணீர் பாட்டில் நிரப்புதல், இசை கேட்டு இடம்பிடித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. 30- க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    மதுக்கூர் வட்டார கல்வி அலுவலர் வெ.மனோகரன் போட்டியை தொடங்கி வைத்தார்.

    போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது.

    போட்டி ஏற்பாடு களை வளமைய மேற்பார்வையாளர் தங்கம், ஆசிரியர் பயிற்றுநர் வீரப்பராஜா, பிரகாஷ், சிறப்பாசிரியர்கள் புஷ்பா, இருதயராஜ், பழனிவேல் ஆகியோர் செய்தனர்.

    • பெரியகுளம் அருகில் உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்த ஒருவர் தனது மகனுக்கு சாதி, மதம் அற்றவன் என்ற சான்றிதழை பெற்று பள்ளியில் அளித்துள்ளார்.
    • சுந்தரராஜபெருமாள் தனது மகனுக்கு சாதி, மதம் அற்றவன் என்ற சான்றிதழ் வழங்குமாறு பெரியகுளம் தாசில்தாரிடம் விண்ணப்பம் அளித்திருந்தார்.

    பெரியகுளம்:

    குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போதே சாதி, மதம் உள்ளிட்ட விபரங்கள் விண்ணப்பத்தில் பதிவிட வேண்டும் என அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதுமட்டுமின்றி படித்து முடித்து வேலைவாய்ப்பு மற்றும் அரசின் சலுகைகளை பெறுவதற்கும் இந்த தகுதி அவசியமாகிறது.

    இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்த ஒருவர் தனது மகனுக்கு சாதி, மதம் அற்றவன் என்ற சான்றிதழை பெற்று பள்ளியில் அளித்துள்ளார். இப்பகுதியை சேர்ந்த சுந்தரராஜபெருமாள் தனது மகன் முகிலன்(7) என்பவனுக்கு சாதி, மதம் அற்றவன் என்ற சான்றிதழ் வழங்குமாறு பெரியகுளம் தாசில்தாரிடம் விண்ணப்பம் அளித்திருந்தார்.

    ஏற்கனவே பலருக்கு இதுபோன்ற சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி தனது மகனுக்கும் அதுபோன்ற சான்றிதழ் வழங்கவேண்டும் என அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார். இதனை பரிசீலித்த தாசில்தார் காதர்செரிப், மாணவன் முகிலனுக்கு சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட சுந்தரராஜபெருமாள் அவன் படிக்கும் பள்ளியில் அளிக்க முடிவு செய்தார்.

    • சதுரங்க போட்டி மயிலாடுதுறை சில்வர் ஜூப்ளி மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூலில் நடைபெற்றது.
    • 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்றுனர்.

    தரங்கம்பாடி:

    சோழமண்டலம் அளவிலான சதுரங்க போட்டி மயிலாடுதுறை சில்வர் ஜூப்ளி மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூலில் நடைபெற்றது.

    இதில் சோழமண்டலத்துக்குள் தஞ்சை, நாகை, திருவாரூர்,மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்றனர.

    வெற்றி பெறும் முதல் 10 இடங்களை பிடிக்கின்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்படும்.

    போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

    நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் மயிலாடுதுறை மாவட்ட சதுரங்க கழக செயலர் வெற்றிவேந்தன் தலைமை தாங்கினார்.

    பொருளாளர் அசோக், துணைச் செயலாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆனந்த் தமிழ் வேந்தன் வரவேற்றார். ஏராளமான மாணவ.மாணவியர்கள் கலந்து கொண்டு சதுரங்கம் விளையாடினர்.

    ×