என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வேலைவாய்ப்பு"
- மாவட்டங்கள் தோறும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
- நேற்று மாலை நிலவரப்படி சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.
சென்னை:
தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறையின் கீழ் 34 ஆயிரத்து 774 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுனர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய கூட்டுறவுத்துறை முடிவு செய்தது.
அதன் படி, தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் என 3 ஆயிரத்து 308 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் 9-ந் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும்.
இதற்காக மாவட்டங்கள் தோறும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
இதில், ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்பு கல்வித் தகுதியும், கட்டுனர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு கல்வித் தகுதியும் வரையறுக்கப்பட்டு உள்ளது.
அதே போன்று, ரேஷன் கடை விற்பனையாளர் பதவிக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ.6,250 மாதம் வழங்கப்படும். ஓர் ஆண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.8,600 முதல் ரூ.29,000 வரை வழங்கப்படும். ரேஷன் கடை கட்டுனர் பதவிக்கு தொகுப்பு ஊதியம் ரூ.5,500 வழங்கப்படும். ஓர் ஆண்டுக்கு பிறகு ரூ.7,800 முதல் ரூ.26,000 வரை வழங்கப்படும்.
ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருப்பதாக கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதில், கல்வித் தகுதி 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பாக இருந்த போதிலும் பட்டப்படிப்பு படித்த ஏராளமானோர் இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்திருக்கக் கூடும் என தெரிகிறது. மேலும், இந்த பதவிகளுக்கு மொத்தம் எத்தனை பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்று அல்லது நாளை தெரிய வரும்.
- நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
- மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக தொழிற்சாலைகள் மற்றும் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தொழிற்சாலைகளில் தமிழ்நாட்டில் 15.66% தொழிற்சாலைகல் உள்ளன. தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக குஜராத் (12.25%), மகாராஷ்டிரா (10.44%), உத்தரப்பிரதேசம் (7.54%), ஆந்திரப்பிரதேசம் (6.51%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஒட்டுமொத்த தொழிலாளர்களில் தமிழ்நாட்டில் மட்டும் 15% தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா (12.84%), குஜராத் (12.62%), உத்தரப்பிரதேசம் (8.04%), கர்நாடகா (6.58%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
- இந்தியாவில் ஆப்பிளின் நேரடி பணியாளர்களின் எண்ணிக்கை மார்ச் 2025-க்குள் 2,00,000-ஐ எட்டும்.
- எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஒவ்வொரு நேரடி வேலையும் மூன்று மறைமுக வேலைகளை உருவாக்குகிறது.
2025-ம் நிதியாண்டின் இறுதிக்குள் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 6 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இருக்கிறது. ஐபோன் தயாரிப்பாளரின் அதிகரித்து வரும் செயல்பாடுகள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன என்று அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆப்பிள் நிறுவனம் பகிர்ந்துள்ள மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் ஆப்பிளின் நேரடி பணியாளர்களின் எண்ணிக்கை மார்ச் 2025-க்குள் 2,00,000-ஐ எட்டும். இந்த பணிகளில் 70 சதவீதம் பெண்களே உள்ளனர்.
நிறுவனத்தின் மூன்று பெரிய ஒப்பந்த உற்பத்தியாளர்களான ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகியவை ஏற்கனவே 80,872 நேரடி வேலைகளை உருவாக்கியுள்ளன.
கூடுதலாக டாடா குரூப் (Tata Group), சால்காம்ப் (Salcomp), மதர்ஸ்சன் (Motherson), பாக்ஸ்லிங்க் (Foxlink), சன்வோடா (Sunwoda), ஏடிஎல் (ATL) மற்றும் ஜபில் (Jabil) போன்ற சப்ளையர்கள் கூட்டாக 84,000 நேரடி வேலைகளை உருவாக்கியுள்ளனர்.
2020-ம் ஆண்டில் ஸ்மார்ட்போன் உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து, ஆப்பிள் மற்றும் அதன் கூட்டாளர்கள் சுமார் 1,65,000 நேரடி வேலைகளை உருவாக்கியுள்ளனர் என்று மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.
PLI திட்டம், ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகளில் 2,00,000 வேலைகளை இலக்காகக் கொண்டது. இந்த இலக்கை நான்கே ஆண்டுகளில் எட்டியுள்ளது. இது இந்தியாவில் வேலை உருவாக்கத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்கை பிரதிபலிக்கிறது.
எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஒவ்வொரு நேரடி வேலையும் மூன்று மறைமுக வேலைகளை உருவாக்குகிறது என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. இது ஆப்பிளின் விரிவாக்கம் 2025 நிதியாண்டு இறுதிக்குள் 5,00,000 முதல் 6,00,000 மொத்த வேலைகளை உருவாக்கக்கூடும் என்று கூறுகிறது.
- கனடாவில் வேலை செய்துவரும் இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
- நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையையும் குறைக்க கனடா அரசு திட்டமிட்டு வருகிறது.
கனடாவுக்குக் குடிபெயரும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. இது அதிகப்படியாக கனடாவில் வேலை செய்துவரும் இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
குறைந்த வருமானம் கொண்ட வேலைகளுக்காகக் கனடாவில் தற்காலிகமாக குடிபெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கனேடியர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
எனவே கனேடிய நாட்டவர்களுக்கு முக்கியமாக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்றைய தினம் அறிவித்தார்.
We're reducing the number of low-wage, temporary foreign workers in Canada.The labour market has changed. Now is the time for our businesses to invest in Canadian workers and youth.
— Justin Trudeau (@JustinTrudeau) August 26, 2024
தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்பவும், குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டவர்கள் வேலைக்கு வருவார்கள் என்பதாலும் கடந்த 2022 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டத்தின் கீழ் அதிகம் பேர் அங்கு தற்காலிகமாக குடியேறி வருகின்றனர். இந்த நிலையில்தான் இதன்மூலம் கடந்த ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரித்து, வீட்டு வசதி மற்றும் மற்ற சேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என்ற நோக்கத்தில் அந்த திட்டத்தில் திருத்தம் செய்து குடிபெயர்வோரை தடுக்கும் முடிவை அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது.
இதைத்தவிர்த்து நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையையும் குறைக்க கனடா அரசு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
- இதற்கு 5'7 முதல் 5'11 வரை உயரம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
- அசைவுகளைப் பிரதியெடுக்கும் மோஷன் கேப்ச்யூர் சூட் உடையையும் VR ஹெட் செட்டையும் அணிந்து கொண்டு நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் நடக்க வேண்டும்.
தொழிலதிபர் எலான் மஸ்க் சிஇஓ ஆக உள்ள பிரபல வாகனங்கள் மற்றும் தொழில்நுட்ப பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனம் வேலைக்கு ஆட்கள் எடுத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் 7 மணிநேரம் நடப்பதுதான் அந்த வேலை. அதற்கு நாள் ஒன்றுக்கு இந்திய மதிப்பில் 28,000 ரூபாய் சம்பளமாகவும் டெஸ்லா நிறுவனம் வழங்குகிறது. இதற்கு 5'7 முதல் 5'11 வரை உயரம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
வாகனங்கள் தயாரிப்பதைத் தவிர்த்து அதிநவீன அறிவியல் சாதனங்களைத் தயாரிக்கும் முயற்சியில் எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மனிதனைப் போன்ற ஹியூமனாய்ட் ஆப்டிமஸ் ரோபோக்களை டெல்சா தயாரித்து அதை மனிதர்கள் செய்யும் விஷயங்களைச் செய்யப் பழக்கி வருகிறது. அப்படி அந்த ரோபோவுக்கு மனிதர்களின் செயல்பாடுகளைச் சொல்லித் தரவே இந்த வேலை.
இதன்படி அசைவுகளைப் பிரதியெடுக்கும் மோஷன் கேப்ச்யூர் சூட் உடையையும் VR ஹெட் செட்டையும் அணிந்து கொண்டு நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் நடக்க வேண்டும். அப்படி நடக்கும்போது அந்த அசைவுகளை ரோபோவுக்கு கற்றுத் தர முடியும். டெஸ்லா நிறுவன தலைமையகம் அமைந்துள்ள கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் இந்த வேலைக்கு அப்ளிகேஷன்கள் குமிந்து வருகிறது.
- ஓசூர் நகரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
- பணியாளர்கள் தங்குவதற்கு வீட்டு வசதியும் இதே பகுதியில் வழங்கப்பட இருக்கிறது.
இந்தியாவின் பிரபலமான தொழில் நகரம் ஜாம்ஷெட்பூர். டாடா குழுமத்தால் உருவாக்கப்பட்ட இந்த நகரில் ஸ்டீல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே சிறப்பாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தொழில் நகரமாக ஜாம்ஷெட்பூர் விளங்கி வருகிறது. இந்த வரிசையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் நகரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
பல்வேறு தொழில் நிறுவனங்களின் ஆலைகள், உற்பத்தி கூடங்கள் ஓசூரில் இயங்கி வருகின்றன. 2020 ஆம் ஆண்டு டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது ஆலையை ஓசூரில் கட்டமைத்தது. இந்த ஆலை நாட்டின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி செய்யும் ஆலையாக மாற இருக்கிறது.
உற்பத்தி துறையை விரிவுப்படுத்தும் வகையில் டாடா குழுமம் இதே பகுதியில் இரண்டு புதிய உற்பத்தி மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதோடு பணியாளர்கள் தங்குவதற்கு வீட்டு வசதியும் இதே பகுதியில் வழங்கப்பட இருக்கிறது.
புதிய ஆலைகளை உருவாக்குவதன் மூலம் ஓசூரில் அதிகம் பேருக்கு பணி வழங்கும் நிறுவனமாக டாடா எலெக்ட்ரானிக்ஸ் உருவெடுக்க இருக்கிறது. தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா இது குறித்து பேசும் போது, வளர்ச்சியில் ஜாம்ஷெட்பூரை முந்தும் அளவுக்கு ஓசூரில் அதிக வசதிகள் உள்ளன என்றார்.
இந்த நகரில் உற்பத்தி மட்டுமின்றி பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஓசூரை தகவல் தொழில்நுட்ப மையமாகவும் மாற்ற முடியும் என்று தெரிவித்தார்.
- குஜராத்தில் 25 காலியிடங்களுக்காக ஒரு ஓட்டலில் 15 லட்சம் இளைஞர்கள் திரண்டு வந்தனர்.
- வயதாகி வரும் இளைஞர்களுக்கு கோடிக்கணக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குமாறு வலியுறுத்துகிறோம்.
புதுடெல்லி:
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சில நாட்களுக்கு முன்பு, மும்பையில் பேசிய பிரதமர் மோடி, கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளித்து முந்தைய சாதனைகளை முறியடித்து இருப்பதாக கூறினார்.
இன்று அதே மும்பையில் ஒருசில காலியிடங்களுக்காக வேலையில்லாத இளைஞர்கள் கூட்டம் பெருமளவு திரண்டு வந்த வீடியோ 'வைரல்' ஆகியுள்ளது.
அதற்கு முன்பு, குஜராத்தில் 25 காலியிடங்களுக்காக ஒரு ஓட்டலில் 15 லட்சம் இளைஞர்கள் திரண்டு வந்தனர். அதனால் நெரிசல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டது.
இவற்றையெல்லாம் பார்த்தால், முந்தைய சாதனை நிச்சயமாக முறியடிக்கப்பட்டுள்ளது. அதாவது, அதீத வேலைவாய்ப்பின்மை என்ற சாதனை முறியடிக்கப்பட்டது. நாடு சரித்திர வேலைவாய்ப்பின்மையை சந்தித்து வருகிறது.
எனவே, வெற்று வாக்குறுதிகள் அளிப்பதையும், திசைதிருப்புவதையும் நிறுத்திவிட்டு, இளைஞர்களை பற்றி சிந்திக்குமாறு பிரதமர் மோடியை கேட்டுக்கொள்கிறேன். வயதாகி வரும் இளைஞர்களுக்கு கோடிக்கணக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குமாறு வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நேர்காணல் 10 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
- நேர்காணலில்அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் குவிந்ததால், கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம், அங்கலேஷ்வரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கான நேர்காணலுக்காக 500-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த நேர்காணல் 10 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கலேஷ்வர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேர்காணலில்அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் குவிந்ததால், கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அங்கலேஷ்வரில் உள்ள ஒரு ஓட்டலில், ரசாயனத் துறையில் பணியிடங்களை நிரப்புவதை நோக்கமாகக் கொண்டு, நிறுவனம் வாக்-இன் நேர்காணலை ஏற்பாடு செய்தது.
பி.இ உட்பட பல்வேறு தகுதிகள் கொண்ட விண்ணப்பதாரர்கள், கெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும் ஐடிஐ சான்றிதழ்களில், ஷிப்ட் இன்சார்ஜ், பிளாண்ட் ஆபரேட்டர், சூப்பர்வைசர், மெக்கானிக்கல் ஃபில்டர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பதவிகள் போன்ற பதவிகளுக்கு கோரப்பட்டது.
இந்த நெரிசலான கூட்டத்தின்போது, ஓட்டலின் வாயிலில் தடுப்புக்காக அமைக்கப்பட்டிருந்த பிடி கம்பி அழுத்தம் தாங்காமல் உடைய, அங்கிருந்த இளைஞர்கள் கீழே விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் நடந்த போதிலும், நிறுவனத்தை அணுகுவதற்கான முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், இந்த கூட்டம் வேலையில்லா திண்டாட்டத்தை காட்டுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
- ஒரு வருட தொழிற்பழகுநர் பயிற்சிக்காக விண்ணப்பிக்க அறிவிப்பை வெளியாகியுள்ளது.
- விபரங்களுக்கு www.boat-srp.com (News & Events) என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ), மத்திய தொழிற்பழகுநர் பயிற்சி வாரியத்துடன் இணைந்து ஒரு வருட தொழிற்பழகுநர் பயிற்சிக்காக விண்ணப்பிக்க அறிவிப்பை வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ), மத்திய தொழிற்பழகுநர் பயிற்சி வாரியத்துடன் (தென் மண்டலம் – சென்னை) இணைந்து பட்டய பொறியியலில் (இன்ஜினியரிங் – எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ் & இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம், சிவில் இன்ஜினியரிங் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டயப் படிப்பில் (டிப்ளமோ) 2020, 2021, 2022 மற்றும் 2023-ம் வருடங்களில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டில் வசிக்கும் மாணவர்களிடம் இருந்து, ஒரு வருடம் தொழிற்பழகுநர் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்கூறிய தகுதி உள்ள மாவணவர்கள் Online-ல் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு www.boat-srp.com (News & Events) என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி. 31.07.2024. என்ற அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது.
- வெறும் வார்த்தையாக அல்ல, ஆதாரங்களோடு தான் அவைக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
- ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளோம்.
சென்னை:
முதல்-அமைசசர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை படித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
இளைஞர் நலனை, இளைஞர் எதிர்காலத்தை, இளைஞர்களின் மேன்மையை எப்போதும் மனதில் வைத்து திட்டங்களைத் தீட்டி வருவது திராவிட மாடல் ஆட்சியின் தனித்தன்மை. இளைய சக்தியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மிக மிகக் கவனமாக செயல்பட்டு வருகிறோம். அதனை அடிப்படையாகக் கொண்ட அறிவிப்பைத்தான் இப்போது வெளியிட விரும்புகிறேன்.
வளமான அரசாக, அமைதியான அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. தொழில் வளம் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அதன்மூலம் நமது இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றிடவும் பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறோம். நமது மாணவச் செல்வங்களுக்குத் தரமான பள்ளிக் கல்வியையும் உயர்கல்வியையும் அளிக்கின்றோம்.
அத்துடன் அவர்களது வேலைவாய்ப்புகளைப் பெருக்கிடும் வகையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. கல்வியின் மூலமாக ஒரு அறிவுசார் பொருளாதாரத்தை நாம் உருவாக்கி வருகிறோம்.
இவற்றை மனதில் கொண்டு உருவாக்கப் பட்டவைதான் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்கள். அடுத்த தேர்தலை அல்ல, அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்கும் அரசுதான் நமது திராவிட மாடல் அரசு.
கழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் வாயிலாக 32 ஆயிரத்து 774 நபர்களுக்குப் பல்வேறு அரசுத்துறைகளில் நேரடிப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன.
அதேபோல், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32 ஆயிரத்து 709 இளைஞர்கள் பணிநியமனம் பெற்றனர். மொத்தம் 65 ஆயிரத்து 483 இளைஞர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
அரசுத் துறைகளில் மட்டுமல்லாது, பெருந்தொழில் மற்றும் குறு, சிறு நிறுவனங்களின் மூலமாகவும் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளோம்.
நமது அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னெடுப்பு களின் காரணமாகவும், மிகச்சிறப்பான முறையிலே நடத்தி முடிக்கப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் கிடைக்கப் பெற்ற பெரும் முதலீடுகள் காரணமாகவும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் கடந்த 3 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெறும் வார்த்தையாக அல்ல, ஆதாரங்களோடு தான் இதனை இந்த அவைக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் அமைப்பு சார்ந்த தனியார் துறைகளில் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் குறித்த புள்ளி விவரங்கள் ஒன்றிய அரசின் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தின் மூலம் பெறப்பட்டது.
இது ஒன்றிய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஓர் அமைப்பாகும். இந்த நிறுவனத்தின் தரவுகளின்படி, கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 77 லட்சத்து 78 ஆயிரத்து 999 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களுக்குத் தொழிலாளர் வைப்பு நிதி கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி, என்னுடைய கனவுத் திட்டம் என்று நான் எப்போதும் பெருமையோடு குறிப்பிடக் கூடிய "நான் முதல்வன் திட்டம்" மூலமாகச் சிறப்பு பயிற்சிகள் தரப்பட்டு வருகிறது. இதன் மூலம் படித்த இளைஞர்களின் திறன்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலமாக இதுவரை, 3 லட்சத்து 6 ஆயிரத்து
459 நபர்களுக்குத் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையின் மூலமாக நடத்தப்பட்ட சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக கடந்த 3 ஆண்டுகளில் 2 லட்சத்து ஆயிரத்து 596 இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது.
இந்த இரண்டையும் சேர்த்து, தமிழ்நாடு அரசின் முயற்சியினால், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், மொத்தம் 5 லட்சத்து 8 ஆயிரத்து 55 தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
'நம் இளைஞர்கள்தான் நம் பலம். அவர்கள்தான் நமது எதிர்கால வளத்திற்கு அடிப்படையானவர்கள்!' இதனை உணர்ந்த காரணத்தி னால், தமிழ்நாடு அரசு இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
அரசுப் பணியினை எதிர் நோக்கி இருக்கும் ஆயிரக் கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்குத் தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியினை பேரவையில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வரும் ஜனவரி 2026-க்குள், அதாவது இன்னும் 18 மாதங்களுக்குள் பல்வேறு அரசுப் பணியிடங்களுக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 17 ஆயிரத்து 595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19 ஆயிரத்து 260 ஆசிரியப் பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3 ஆயிரத்து 41 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6 ஆயிரத்து 688 பணியிடங்களும் நிரப்பப்படும்.
அதாவது வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மொத்தம் 46 ஆயிரத்து 584 பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுதவிர, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக இருக்கக்கூடிய 30 ஆயிரத்து 219 பணியிடங்களும் நிரப்பப்படும்.
இவற்றை மொத்தமாக சேர்த்துப் பார்க்கையில், 75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து அமைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் மக்களும் இங்கே என்ன நடக்கிறது என்று ஆச்சர்யமாக பார்க்கின்றனர்.
- பல இடங்களில் வேலைவாய்ப்புக்காக சென்றதாகவும், எங்கு வேலை கிடைக்கும் என்று தெரியவில்லை என நிஷாத் கூறினார்.
அமெரிக்கா, லண்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் படித்தால் வேலைவாய்ப்பு நன்றாக இருக்கும் என்று பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர். இதனால் மேற்படிப்புக்காக ஆண்டு தோறும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்களும் தாய் நாட்டை விட்டு மேல்நாட்டிற்கு பயணம் மேற்கொள்கின்றனர். படிப்பிற்காக பல லட்சங்களும் செலவு செய்யப்படுகிறது. படிப்பு நேரம் போக மீதி நேரத்தில் வேலை பார்ப்பதில் வரும் சம்பளத்தில் மாணவர்கள் தங்களது இதர செலவுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள வீடியோ பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நிஷாத் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில், கனடாவில் பிரபல உணவகமான டிம் ஹார்டனில் வேலைவாய்ப்புக்காக நூற்றுக்கணக்கான மாணவர்கள் வரிசையில் நிற்கின்றனர். நிஷாத்தும் வேலைக்காக அங்கு சென்ற போது நூற்றுக்கணக்கானவர்கள் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். உள்ளூர் மக்களும் இங்கே என்ன நடக்கிறது என்று ஆச்சர்யமாக பார்க்கின்றனர்.
பல மணி நேரம் வரிசையில் நிற்பவர்களிடம் உணவக ஊழியர்கள், அவர்களது விண்ணப்பங்களை வாங்கிக்கொண்டு பிறகு அழைப்பதாக கூறி அனுப்பி விடுகின்றனர். நிஷாத் பல இடங்களில் வேலைவாய்ப்புக்காக சென்றதாகவும், எங்கு வேலை கிடைக்கும் என்று தெரியவில்லை, இது எனது போராட்டம் நிறைந்த நாள் என்று கூறினார்.
- கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்புகள் குறைந்து வருகிறது.
- இண்டீட் நிறுவனம் தனது 8% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
உலகின் முன்னணி வேலை வாய்ப்பு இணைய தளமான இண்டீட்(Indeed) நிறுவனம் சுமார் 1000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதால் தங்கள் நிறுவனத்தின் 8% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக இண்டீட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் ஹைம்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு 2,200 ஊழியர்களை இந்நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்