என் மலர்
நீங்கள் தேடியது "வேலைவாய்ப்பு"
- வருகிற 17-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
- முகாமில் கலந்து கொள்ளபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துவிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகம் வாயிலாக மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக வருகிற 17-ந்தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில் 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ./டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடையவர்கள் விருதுநகர், சிவகாசி, கோவை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 17-ந்தேதி நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனத்தினர் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.
இந்த தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரி வித்துள்ளார்.
- அழகு சாதனவியல், சிகை அலங்காரம் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- அழகு நிலையங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணாக்கர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னையிலுள்ள மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் மூலமாக புகழ் பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும் மற்றும் சுய தொழில் தொடங்கு வதற்கும் அழகு சாதன வியல் மற்றும் சிகை அலங்காரம் செய்வதற்கான பயிற்சியினை தாட்கோ சார்பில் அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் ஆதி திராவிடர், பழங்குடியி னத்தைச் சார்ந்த பத்தாம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும்.
சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும், இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாடு அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சியினை பெற்றவர்கள் தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெறலாம். மற்றும் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ மூலமாக ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும். இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
- வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
அவ்வாறு பதிவு செய்தோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் பள்ளி, கல்லூரி முடித்தவர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள், காது கேளாதோர் என மொத்தம் 67 லட்சத்து 55 ஆயிரத்து 466 நபர்கள் பதிவு செய்து காத்திருப்பதாக வேலை வாய்ப்பு மற்றும் பதிவுத்துறை அறிவித்து உள்ளது.
- தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.
- www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வர வேண்டும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக நாளைமறுநாள்(17-ந் தேதி) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் மாற்றுத்திறனா ளிகளுக்கென சிவகாசி மற்றும் விருதுநகரில் உள்ள CIEL Services Pvt Ltd., Lovely Offset மற்றும் Pentagon போன்ற நிறுவனங்களும், சாய்ராம் அறக்கட்டளை போன்ற 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்களும் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டிஐ., டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த வாய்ப்பை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 17-ந் தேதி நடக்கும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வர வேண்டும். முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.
தனியார் வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரையில் இன்று காவல்துறை குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
- மதுரை விமான நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முகாம் இன்று தொடங்கியது.
மதுரை
தமிழ்நாடு காவல்துறை குடும்ப உறுப்பினர்க ளுக்கான மெகா சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் மற்றும் பயிற்சி துறை, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு , இந்திய தொழில் கூட்டமைப்பு, வெளிநாட்டு மனிதவள நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவற்றுடன் இணைந்து சென்னை, வேலூர், கோவை, ஓசூர், திருச்சி மற்றும் தென் மாவட்டங்களுக்காக மதுரை ஆகிய 6 இடங்களில் நடத்தியது.
தென்மண்டல காவல் துறை தலைவர் அஸ்ரா கார்க், அறிவுறுத்தலின் படியும், மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் பொன்னி, வழிகாட்டுதலின் படியும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத், தென்மண்டல காவல் துறையினர், சிறை துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினரின் குடும்ப உறுப்பினர்களுக்கான மெகா சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் இன்று 25-ந் தேதியும் மற்றும் நாளை (26-ந் தேதி) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.
இந்த முகாம் காலை 8.30 மணிக்கு தொடங்கி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. மதுரை விமான நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முகாம் இன்று தொடங்கியது. இந்த முகாமில் கலந்து கொள்ள தகுதியானநபர்கள் நுழைவுப்படிவம் பெற்று வருகைப்பதிவேட்டில் பதிந்து கொள்ள வேண்டும்.
முகாமில் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த முக்கிய தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
எனவே இந்த வேலை வாய்ப்பு முகாமில் தமிழ்நாடு காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறை துறை மற்றும் ஊர்க்காவல் படையினரின் குடும்பத்தினர் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
- தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
- “Tamil Nadu Private Job Portal” (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தி லும் வேலைநாடும் இளை ஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாதம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ள லாம். இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப் படிப்பு வரை முடித்த வேலை நாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெறலாம்.
முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வேலைநாடுநர்கள் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் வருகிற
21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் கலந்து கொள்ளலாம்.
இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறு வதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலி க்கப்படும். தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் "Tamil Nadu Private Job Portal" (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதள சேவை வழ ங்கப்ப டுகிறது. இந்த இணைய தளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவன ங்களும் வேலை தேடும் இளை ஞர்களும் பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கப்படும்.
- சுயஉறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலைவாய்ப்பு அலுவ லகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் உயிர்ப் பதிவேட்டில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசின் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. முறையாக பள்ளியில் பயின்று 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வியுற்ற வர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கிக் கணக்கில் காலாண்டுக்கு ஒரு முறை வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லகத்தில் தங்களின் கல்வித்தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும்.
தொடர்ந்து, பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது.
எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெறலாம். மேலும், இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத் திறனாளிகள் இந்த உதவித தொகை பெற விண்ணப் பிக்கலாம்.
10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவா்களுக்கு மாதம் ரூ.600 வீதமும், பிளஸ்-2 தோ்ச்சி பெற்ற வா்களுக்கு மாதம் ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1,000 வீதம் காலாண்டுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகை பெற சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்துக் கல்விச்சான்றுகள், வேலை வாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை உதவித்தொகை பெறாத தகுதியானவர்கள் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து விண்ணப் பத்தை அலுவ லகத்தில் வேலை நாளில் நேரில் சமர்ப்பித்து பயனடையலாம். ஏற்கனவே, உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 வருடம் வரை உதவித்தொகை பெற நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுய உறுதி மொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைத்து தொடர்ந்து உதவித்தொகை பெற்றுக் கொள்ளலாம்.
சுயஉறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இந்திய ஒன்றியத்தில் கல்வியில் மிகச் சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது.
- வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களையும் வழங்கி வருகிறார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுக் கல்வித் துறை சார்பில் தென்னை விஞ்ஞானி டாக்டர் செல்வம் அறக்கட்ட ளையின் முதலாமாண்டு விழா நடைபெற்றது.
துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமை வகித்தார்.
இந்த விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு பேசியதாவது:-கல்வியில் நமது மாணவர்கள் முன்னேற வேண்டும் என்பதற்காகத் முதல்-அமைச்சர் அளித்து வருகிற சலுகைகள், திட்டங்கள் அனைத்தும் இந்தியாவிலேயே தமிழகத்தை மிகச் சிறந்த மாநிலமாகக் கொண்டு செல்லும்.
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் மிகச் சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது.
இந்திய ஒன்றிய அரசு உயர் கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கையை 51 சதவீதமாக உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்தது.
மற்ற மாநிலங்களில் உயர் கல்வி பெறுபவர்களின் விகிதம் 26 சதவீதமாக இருந்ததே இதற்குக் காரணம். ஆனால், தமிழகத்தில் உயர் கல்வி பெறுபவர்களின் விகிதம் ஏற்கனவே 52 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனவே, தமிழகத்தில் இன்னும் 5 ஆண்டுகளில் உயர் கல்வி பெறுபவர்களின் எண்ணி க்கை நிச்சயமாக 100 சதவீதத்தை எட்டும்.
முதல்-அமைச்சர் அறிவித்த புதுமைப் பெண் திட்டத்தின் மூலம், தமிழகத்திலுள்ள பெண் குழந்தைகள் நிச்சயமாக கல்லூரிக் கல்வியை முடிப்பர்.
பெண் குழந்தைகள் படிப்பதால், அந்தக் கட்டாயத்தின் காரணமாக ஆண் குழந்தைகளும் உயர் கல்வி படிக்கும் சூழல் ஏற்படும்.
இதன் மூலம், 5 ஆண்டுகளில் தமிழகம் 100 சதவீத உயர் கல்வியைப் பெற்றிருக்கும்.
இதேபோல, வேலைவாய்ப்பு வழங்கு வதற்கும் முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களையும் வழங்கி வருகிறார் .இவ்வாறு அவர் பேசினார்.
- மதுரை வேலைவாய்ப்பு மையத்தில் 19-ந் தேதி ஆட்கள் தேர்வு முகாம் நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் தனியார்துறை சார்பில் ஆட்கள் தேர்வு முகாம் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
10-ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ பட்டதாரிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். முகாமில் பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மதுரை புதூரில் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் தனியார் ஆட்கள் தேர்வு முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் கல்விச் சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் போட்டோவுடன் 19-ந் தேதி காலை 10 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். தனியார் நிறுவனங்களில் பணி பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எந்த வகையிலும் பாதிக்காது.
மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.
- மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாமில் மத்திய மந்திரி பங்கேற்றார்.
- ரெயில்வே உதவி மேலாளர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரை
மத்திய அரசின் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 45 இடங்களில் இன்று சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பணிநியமன ஆணைகளை வழங்கினார். அரசுத்துறை மற்றும் அமைப்புகளில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 71 ஆயிரம் பேருக்கு பணி ஆணைகள் வழங்கப் பட்டன.
மதுரையில் இது தொடர்பான தொழில் வர்த்தக சங்கத்தில் இது தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய அரசு சார்பில் இணை மந்திரி ஸ்ரீபாத் யசோ நாயக் கலந்து கொண்டு பணி ஆணைகளை வழங்கினார். மதுரை தபால் துறை தலைமை அதிகாரி வி.எஸ்.ஜெயசங்கர், மதுரை மண்டல ரெயில்வே உதவி மேலாளர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தபால் துறை மற்றும் ரெயில்வே துறை சார்பில் 200 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.இவர்களுக்கு ஆன்லைன் மூலம் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் துறை ஊழியர், ரெயில்வே பயணச்சீட்டு எழுத்தர், இளநிலை எழுத்தர் மற்றுத் தட்டச்சர், தண்டவள பராமரி ப்பாளர், ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிக ளுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
- மதுரை மாவட்ட ஊரக வேலைவாய்ப்பு திட்ட குறைதீர்க்கும் அலுவலர் நியமிக்கப்பட்டார்.
- இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் 27 -ஆவது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக புகார் அளிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறை தீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்திற்கான குறை தீர்ப்பாளராக பாலசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.அவரை 93804 14023 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் ombudsperson.mdu@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தெரிவிக்கலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
- விருதுநகரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
- பதிவு மூப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகம் வாயிலாக மாதத்தின் 3-ம் வெள்ளி கிழமையில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப் பட்டு வருகிறது. அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக நாளை 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் 25-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ கல்வித் தகுதி உடையவர்கள் விருதுநகர், சிவகாசி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 19-ந் தேதி நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வர வேண்டும்.
முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும். தனியார் வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்க ளது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. அதனை பயன்படுத்தி அனைத்து தரப்பினரும் பயன்பெற வேண்டும். மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.