என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராட்டு"

    • மாணவர்கள் ஓழுங்கீனமாக சிகை அலங்காரம் செய்து வருவதாக பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அழகு சாதன நிலையத்திற்கு அழைத்துச்சென்று முடி திருத்தம் செய்துபள்ளிக்கு அனுப்பிவைத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி பகுதியிலுள்ள அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஓழுங்கீனமாக சிகை அலங்காரம் செய்து வருவதாக பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீஸ் டி.எஸ்.பி. ஷபியுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் சரண்யா மேற்பார்வையில் பயிற்சி சப்.இன்ஸ்பெக்டர் விஜய் பள்ளி வளாகத்திற்கு இன்று நேரில்சென்று பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார். பின்னர்ஒழுங்கீனமாகவும்,தாறுமாறாகவும்சிகை அலங்காரம்செய்து வந்தமாணவர்களைஅழகு சாதன நிலையத்திற்கு அழைத்துச்சென்று முடி திருத்தம் செய்துபள்ளிக்கு அனுப்பிவைத்தார். போலீசாரின் செயலை பொதுமக்கள் பாராட்டினார்.

    • 19 வயதுடையவருக்கான சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம்.
    • 17 வயது பிரிவு ஆண்கள் கபடி போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாமிடம்.

    பேராவூரணி:

    பேராவூரணி அரசு மேல்நிலைப்பள்ளி, 12 ஆம் வகுப்பு மாணவர் இன்பன் கார்த்தி, பாபநாசத்தில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற, 19 வயதுடையவருக்கான சைக்கிள் பந்தயப் போட்டியில் கலந்து கொண்டு, மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்றார்.

    இதன் மூலம் இவர் மாநில அளவிலான போட்டிக்கு பங்கு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதேபோல் இப்பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், 17 வயது பிரிவு ஆண்கள் கபடிப் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.

    வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை, பள்ளித் தலைமை ஆசிரியர் முதல்வன், உடற்கல்வி ஆசிரியர்கள் திருநாவுக்கரசு, சோலை, முத்துராமலிங்கம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • இந்த சாலையை செப்பனிடக்கோரி பொதுமக்கள், வர்த்தக சங்கத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
    • புல்டோசர் எந்திரம் மூலம் மெகா பள்ளங்களை சரி செய்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி - சென்னை சாலை, பண்ருட்டி -கும்பகோணம் சாலைகுண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறி உள்ளது. இந்த சாலையை செப்பனிடக்கோரி பொதுமக்கள், வர்த்தக சங்கத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால்அ.தி.மு.க. வார்டு கவுன்சிலர் லாரி வெங்கடேசன் தனது சொந்த செலவில் டிப்பர் லாரிகளில் ஜல்லி, தார் ஆகியவை எடுத்து வந்து புல்டோசர் எந்திரம் மூலம் மெகா பள்ளங்களை சரி செய்தார். இவரது முயற்சியை பொது மக்கள் பாராட்டினர்

    • 7 வாலிபர்களை போலீசார் பிடித்து ஆயுதங்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
    • 48 மணி நேரத்தில் கொலையாளிகளை பிடித்த போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு.

    வல்லம்:

    தஞ்சை அருகே மாதாக்கோட்டை டான்போஸ்கோ தெருவை சேர்ந்தவர் செபஸ்டின்.

    இவருடைய மகன் பிரின்ஸ்லாரா என்ற சின்னா(வயது28).

    இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.

    சம்பவத்தன்று திருக்கானூர்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு மாதாகோட்டையில் இருந்து சின்னா மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    இதனை அறிந்த ஒரு மர்ம கும்பல் 3 மோட்டார் சைக்கிள்களில் சின்னாவை பின் தொடர்ந்து சென்று அவரை சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி சாய்த்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    சின்னாவை அக்கம்பக்கத்தினர் மற்றும் வல்லம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னா உயிரிழந்தார்.

    இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் கொலையாளிகள் பதுங்கி இருந்த இடம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன் பேரில் வல்லம்- மருத்துவக்கல்லூரி சாலை அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு வளாக பகுதியில் மறைந்திருந்து அவ்வழியாக 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7 வாலிபர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட 7 பேரையும் போலீசார் வல்லம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் தஞ்சை மாதாக்கோட்டை பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 20), ராஜேஷ்(23), புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை சேர்ந்த விஜய்(26), ஒரத்தநாட்டை சேர்ந்த விக்னேஸ்வரன்(21), நாஞ்சிக்கோட்டை ரோடு பகுதியை சேர்ந்த அஷ்ரப்அலி(19), கோரிகுளம் பகுதியை சேர்ந்த ஆகாஷ்(19), தஞ்சை விளார் ரோடு பகுதியை சேர்ந்த ஜெகதிஸ்வரன்( 28) என்றும் முன்விரோதம் காரணமாக இவர்கள் 7 பேரும் சேர்ந்து சின்னாவை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

    இவர்களை போலீசார் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

    பின்னர் 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கொலை நடந்த 48 மணி நேரத்தில் கொலையாளிகளை பிடித்த போலீசாருக்கு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பாராட்டு தெரிவித்தார்.

    • மாணவி வா்ஷினிக்கு பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.
    • குத்துச்சண்டைப் போட்டியில் ஆா்வமுள்ள இவா் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயிற்சி பெற்று வந்தாா்.

    திருப்பூர்:

    வெள்ளக்கோவில் - கரூா் சாலையில் உள்ள அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீ வா்ஷினி (16). குத்துச்சண்டைப் போட்டியில் ஆா்வமுள்ள இவா் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயிற்சி பெற்று வந்தாா்.

    திருப்பூா் ஜெய்வாபாய் பள்ளியில் நடைபெற்ற திருப்பூா் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்தாா். இதையடுத்து மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு பெற்றாா். மாணவி வா்ஷினிக்கு பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

    • பள்ளி மாணவர்கள் 6 போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம்.
    • தருமபுரம் ஆதீனம் மாணவர்களை பாராட்டி அருளாசி வழங்கினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாணவர்களுக்கிடையே போட்டி நடைபெற்றது.

    இந்தப் போட்டியில் குருஞான சம்பந்த மிஷன் மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 6 போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

    அவர்களை பள்ளியின் புரவலர் தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசீக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பாராட்டி அருளாசி வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆட்சி மன்ற குழுவின் தலைவர் ஸ்ரீமத் சிவகுருநாதன் தம்பிரான் சுவாமிகள், துணைத் தலைவர் முருகேசன், நிர்வாக செயலர் பாஸ்கர், செயலாளர் பாஸ்கர், முதல்வர் சரவணன், போட்டிக்கு தயார் செய்த ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏ.டி.எம்., சென்டரில் 500 ரூபாய் நோட்டுகளாக 10 ஆயிரம் ரூபாய் கிடந்துள்ளது.
    • விவசாயி வரதராஜனின் நேர்மையை பாராட்டிய போலீசார், பணம் யாருடையது என விசாரித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் நெருப்பெரிச்சல் அடுத்த வாவிபாளையத்தை சேர்ந்தவர் வரதராஜன்(வயது 43). விவசாயி. இவர் அங்குள்ள கனரா வங்கி ஏ.டி.எம் சென்டரில் பணம் எடுக்க சென்றுள்ளார். ஏ.டி.எம்., சென்டரில் 500 ரூபாய் நோட்டுகளாக 10 ஆயிரம் ரூபாய் கிடந்துள்ளது. அதனை எடுத்த அவர் திருமுருகன் பூண்டி போலீசில் ஒப்படைத்தார்.விவசாயி வரதராஜனின் நேர்மையை பாராட்டிய போலீசார், பணம் யாருடையது என விசாரித்து வருகின்றனர்.

    • சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • சாலை அகலம் இல்லாததால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் இருந்து திருக்கருகாவூர் வழியாக சாலியமங்களம் வரையிலான நெடுஞ்சாலையில் பல இடங்களில் குண்டு, குழி பள்ளங்கள் உருவாகி இருந்தன அதனால் வாகன ஓட்டிகள் தினசரி சிரமப்பட்டு வந்தனர்.

    நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இதனை அடுத்து சாலியமங்களத்தில் இருந்து பாபநாசம் வரையிலான சாலையை அகலப்படுத்தி புதுப்பிக்கும் பணி நடைபெற்றது இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சாலை புதுப்பிக்கும் பணிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது

    பாபநாசம் சாலியமங்களம் முக்கிய நெடுஞ்சாலையில் தினசரிநூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், இலகுரக, இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன அதனால் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது சாலை அகலம் இல்லாததால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

    தற்போது சாலையை விரிவாக்கம் செய்து அகலமாக சாலையை புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    இதனால் இந்த சாலையை பயன்படுத்தகூடிய பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சாலை புதுப்பிக்கும் பணியால் போக்குவரத்து நெரிசல் குறையும் என நினைக்கிறோம் என தெரிவித்தனர்.

    • அடைப்புகளை அகற்றிய ஏட்டுவுக்கு கமிஷனர் பாராட்டு தெரிவித்தார்.
    • துணை கமிஷனர்கள் சீனிவாச பெருமாள் (தெற்கு), மோகன்ராஜ் (வடக்கு) ஆகியோர் உடனிருந்தனர்.

    மதுரை

    மதுரை கல்பாலம் வைகை ஆற்றின் மதகுகளில் செடி-கொடி, குப்பைகள் மற்றும் ஆகாயத்தாமரை காரணமாக அடைப்பு ஏற்பட்டது. வைகை ஆற்று வெள்ளம், இரு கரைகளையும் தாண்டி சாலைக்கு வந்தது.

    செல்லூர் போலீஸ் ஏட்டு ராமன் ஆற்றுக்குள் துணிச்சலாக இறங்கி, மதகுகளில் இருந்த அடைப்புகளை அகற்றினார். இதன் காரணமாக வைகை ஆற்றங்கரையில் தண்ணீர் வடிந்தது. இதனை கேள்விப்பட்ட மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், ஏட்டு ராமனை நேரில் வரவழைத்து பாராட்டினார். துணை கமிஷனர்கள் சீனிவாச பெருமாள் (தெற்கு), மோகன்ராஜ் (வடக்கு) ஆகியோர் உடனிருந்தனர்.

    • தாயன்பிற்கு ஈடாக அன்பு காட்டி மனிதநேயத்தை வளர்த்து அதன்வழி ஆக்கப்பூர்வமான காரியங்களை செயல்படுத்த வேண்டும்.
    • பல்வேறு சமூக நலப்பணிகளிலும் ஜோதி அறக்கட்டளை தொடர்ந்து ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகரத்திற்குட்பட்ட ஏழை, எளிய அன்றாட கூலி தொழில் செய்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையிலும், வருமானம் இல்லாமல் முடங்கி கிடக்கும் மக்களுக்கு உதவி செய்யும் வகையிலும் தேர்வு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு ஜோதி அறக்கட்டளை சார்பில் விலையில்லா அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஜோதி அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:- மனிதனிடம் இருக்கும் பல்வேறு ஆக்கப்பூர்வான எண்ணங்கள் சொல் வடிவம் பெறாமல் போவதற்கு அவர்களுக்கு அன்பும், ஆதரவும், அரவணைப்பும் கிடைக்காமல் போனதே காரணம். இந்த நிலை இருக்க கூடாது.

    தாயன்பிற்கு ஈடாக அன்பு காட்டி மனிதநேயத்தை வளர்த்து அதன்வழி ஆக்கப்பூர்வமான காரியங்களை செயல்படுத்த வேண்டும் என்றார். மேலும், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஆதரவற்றோர் மற்றும் முதியோர் நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற பல்வேறு சமூக நலப்பணிகளிலும் ஜோதி அறக்கட்டளை தொடர்ந்து ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர். பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஸ்குவாட்ஸ் மற்றும் கத்திச்சண்டை போட்டியில் முதலிடம் பெற்றனர்.
    • இந்த மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடந்த ஸ்குவாட்ஸ் மற்றும் கத்திச்சண்டை போட்டியில் முதலிடம் பெற்றனர். மேலும் கைப்பந்து மற்றும் பேட்ச் கைப்பந்து போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் பெற்றனர்.

    வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி யின் தலைமையாசிரியர் முன்னிலையில், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஞான வடிவேல் குமரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் தனபால், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் சிவப்பிரகாசம், பள்ளி மேலாண்மை குழு தலைவி உத்திர குமாரி, மற்றும் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் செந்தில் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ்களையும், கேடயங்களையும் வழங்கினார்கள். இந்த மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.

    • தி.மு.க. மாநில மாணவரணி தலைவராக வழக்கறிஞர் ராஜீவ் காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்காக எவ்வாறு உழைத்து வருகிறார் என்பது குறித்து பேசிவருகிறார்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தேர்போகி கிராமத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் இரா.ராஜீவ் காந்தி. சென்னை உயர்நீதிமன்ற வக்கீலான இவர் தி.மு.க.வின் மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளராக பணியாற்றி வந்தார். தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் இவருடைய கட்சி பணிகள் மிகச் சிறப்பாக இருந்து வந்துள்ளன. இவருடைய செயல்பாடுகள் குறித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு கூட்டங்களில் ராஜீவ் காந்தியைப் பாராட்டி வாழ்த்தி பேசியுள்ளார்.

    மாணவர் இயக்கங்களை ஒன்றிணைத்து செயல்பட க்கூடிய திறமை மிக்கவரான வழக்கறிஞர் ராஜீவ் காந்தியின் கட்சி பணியை பாராட்டி தற்போது அவரை மாநில மாணரவணி தலைவராக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

    சாதாரண கிராமத்தில் பிறந்து வளர்ந்து சென்னை யில் உயர்நீதி மன்ற வழக்கறிஞராக பணியாற்றி வரக்கூடிய ராஜீவ்காந்தி தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் இல்லம் தோறும் இளைஞர் அணி என்ற திட்டத்தின் மூலம் இளைஞர் அணியில் சேரும் உறுப்பினர்களுக்கு திராவிட மாடல் பயிற்சி பாசறை மூலம் தி.மு.க.வின் கொள்கை, வரலாற்று சாதனைகள் குறித்து மாவட்டங்கள் தோறும் நடத்தி வந்த திராவிட மாடல் நிகழ்ச்சிகளில் அதிகமான கூட்டங்களில் கலந்துகொண்டு ராஜீவ்காந்தி பேசினார். மேலும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று திராவிட ஆட்சியின் செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்காக எவ்வாறு உழைத்து வருகிறார் என்பது குறித்து பேசிவருகிறார்.

    மாநில மாணவரணி தலைவராக அறிவிக்க ப்பட்ட இரா.ராஜீவ் காந்தி முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். இதுபோல் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளை வாழ்த்துக்களை பெற்றார்.

    ராஜீவ் காந்தி கட்சியில் இணைந்த சில வருடங்களில் அவரது அயராது கட்சி பணி மூலம் தி.மு.க.வில் உயர்ந்த பதவி வழங்கியிருப்பது வரவேற்பு பெற்றுள்ளன. தி.மு.க.வின் மாநில மாணவரணி தலைவராக பொறுப்பேற்றுள்ள வழக்கறிஞர் ராஜீவ் காந்திக்கு நேரிலும் மற்றும் வலைதளங்களிலும் பாராட்டுக்களும், வாழ்த்து க்களும் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

    ×