என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலை"

    • சவரன் ரூ. 40,608-ல் இருந்து ரூ.40,688ஆக அதிகரித்து உள்ளது. இன்று கிராம் 10 ரூபாயும் பவுன் 80 ரூபாயும் அதிகரித்து உள்ளது.
    • வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி கிராம் ரூ.74-க்கும் கிலோ ரூ.74 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது.

    சென்னை:

    சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று கிராம் ரூ.5076-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ.5086-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுன் ரூ. 40,608-ல் இருந்து ரூ.40,688ஆக அதிகரித்து உள்ளது. இன்று கிராம் 10 ரூபாயும் பவுன் 80 ரூபாயும் அதிகரித்து உள்ளது.

    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி கிராம் ரூ.74-க்கும் கிலோ ரூ.74 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது.

    • ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 840-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 105 ஆக உள்ளது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.74 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.60-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.152 அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 840-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 105 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.74 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.60-க்கு விற்கிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40,920-க்கு விற்பனையாகிறது.
    • தங்கத்தை போலவே வெள்ளி விலையும் சற்று அதிகரித்து இருக்கிறது.

    சென்னை:

    சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று கிராம் ரூ.5,095-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ.5,115 ஆக அதிகரித்து உள்ளது. பவுன் நேற்று ரூ. 40,760 ஆக இருந்தது. இன்று ரூ.160 உயர்ந்து ரூ.40,920 ஆக விற்கப்படுகிறது. பவுன் ரூ.41 ஆயிரத்தை நெருங்கி உள்ளதால் நகை வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் சற்று அதிகரித்து இருக்கிறது. கிராம் ரூ.74-ல் இருந்து ரூ.74. 50 ஆகவும் கிலோ ரூ. 74 ஆயிரத்தில் இருந்து ரூ. 74,500 ஆகவும் உயர்ந்து உள்ளது.

    • பாதுகாப்பான முதலீடு என்பதால் பலர் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்து வருகின்றனர்.
    • தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் பவுன் ரூ.39 ஆயிரத்துக்கு விற்ற தங்கம் இம்மாத தொடக்கத்தில் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு அவ்வப்போது தங்கத்தின் விலை சற்று குறைந்த போதிலும் அதிகளவு விலை ஏற்றத்துடன் காணப்பட்டது.

    இதனால் இன்று பவுன் ரூ 41 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சியை அளித்து உள்ளது. நேற்று கிராம் ரூ.5115-க்கு விற்பனை ஆனது, இன்று இது ரூ.5130 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று பவுன் ரூ.40,920-க்கு விற்கப்பட்டது. இன்று இது அதிகரித்து ரூ.41,040-க்கு விற்பனை ஆகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் கிராம் ரூ.15-ம் பவுன் ரூ.120-ம் உயர்ந்து உள்ளது.

    பாதுகாப்பான முதலீடு என்பதால் பலர் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலை இந்தளவு உயர்ந்து இருப்பதாக நகை கடை அதிபர்கள் தெரிவித்தனர். தங்கம் உச்சத்தை தொட்டு உள்ளதால் நகை வாடிக்கையாளர்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    ஆனால் வெள்ளி விலை குறைந்து உள்ளது. வெள்ளி கிராம் ரூ 74.50-ல் இருந்து ரூ.74.30 ஆகவும். கிலோ ரூ.74,500-ல் இருந்து ரூ.74.300 ஆகவும் குறைந்து உள்ளது.

    • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.41 ஆயிரத்து 200-க்கு விற்கிறது.
    • ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 150-ஆக உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 31-ந்தேதி பவுன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலையில் உயர்வு காணப்பட்டது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.41 ஆயிரத்து 200-க்கு விற்கிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 150-ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.74 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.50-க்கு விற்கிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்தது.
    • வெள்ளி விலை இன்று கிராமுக்கு 50 காசு குறைந்து ரூ.75-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 10 நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 31-ந்தேதி தங்கம் விலை பவுன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகும் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்று 1 பவுன் தங்கம் ரூ.41,528-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு மேலும் ரூ.136 அதிகரித்து ரூ.41,664-க்கு விற்கப்படுகிறது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5,191-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.17 அதிகரித்து ரூ.5208-க்கு விற்கப்படுகிறது.

    அதே நேரத்தில் வெள்ளி விலை இன்று குறைந்து உள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.75.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 50 காசு குறைந்து ரூ.75-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.75 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

    • மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மல வேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்புகின்றனர்.
    • ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.
    • ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து ஒரு சவரன் ரூ.41,768-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயர்ந்து ரூ.74 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.40-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.304 குறைந்து ரூ.41 ஆயிரத்து 520-க்கு விற்றது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.248 அதிகரித்து ரூ.41 ஆயிரத்து 768-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5 ஆயிரத்து 221-ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயர்ந்து ரூ.74 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.40-க்கு விற்கிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்தது.
    • வெள்ளி ஒரு கிராம் ரூ.74.90-ல் இருந்து ரூ.73.70 ஆகவும், கிலோ ரூ.74,900-ல் இருந்து ரூ.73,700ஆகவும் குறைந்து இருக்கிறது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்ததால் நேற்று பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது. இந்தநிலையில் நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.184 குறைந்துள்ளது. நேற்று பவுன் ரூ.42,080க்கு விற்பனை ஆனது. இன்று ரூ.41,896-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.23 குறைந்து ரூ.5,260-ல் இருந்து ரூ.5,237ஆக விற்கப்படுகிறது.

    இதே போல் வெள்ளி விலையும் குறைந்து இருக்கிறது. கிராம் ரூ.74.90-ல் இருந்து ரூ.73.70 ஆகவும், கிலோ ரூ.74,900-ல் இருந்து ரூ.73,700ஆகவும் குறைந்து இருக்கிறது.

    • பொங்கல் பண்டிகை வருகிற 15- ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தேவை அதிகரித்து, சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
    • கடந்த வாரம் மல்லிகை ஒரு கிலோ ரூ.1200, ரூ.1400, ரூ.1600 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.ஊ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பொங்கல் பண்டிகை வருகிற 15- ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தேவை அதிகரித்து, சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

    கடந்த வாரம் மல்லிகை ஒரு கிலோ ரூ.1200, ரூ.1400, ரூ.1600 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக மல்லிகை பூ கிலோ இன்று ரூ.2000- க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மற்ற பூக்களும் கணிசமாக விலை உயர்ந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்கள் இருக்கும் நிலையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது குறித்து வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் ( 1 கிலோ கணக்கில் ) வருமாறு :-

    மல்லிகை - ரூ.2000, முல்லை - ரூ.2000, ஜாதி மல்லி - ரூ.1000, காக்கட்டான் - ரூ.1000, கலர் காக்கட்டான் - ரூ.1000, மலை காக்கட்டான் - ரூ.900, சி.நந்தியா வட்டம் - ரூ.150, சம்பங்கி - ரூ.100, சாதா சம்பங்கி - ரூ.100, அரளி - ரூ.360, வெள்ளை அரளி - ரூ.360, மஞ்சள் அரளி - ரூ.360, செவ்வரளி - ரூ.400, ஐ.செவ்வரளி - ரூ.400, நந்தியா வட்டம் - ரூ.150.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் ரூ.42 ஆயிரத்தை தொட்டுள்ளது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    2 மாதங்களுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் ரூ.37 ஆயிரத்தை தாண்டி விற்கப்பட்டது. அதன் பிறகு ரூ.38 ஆயிரம், ரூ.39 ஆயிரம், ரூ.40 ஆயிரம், ரூ.41 ஆயிரம் என தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    கடந்த 9-ந்தேதி தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது. அன்று ரூ.42,080-க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்தது.

    நேற்று 1 பவுன் தங்கம் ரூ.41,888-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ. 42 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

    அதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.42 ஆயிரத்தை தொட்டுள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,236-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.14 அதிகரித்து ரூ.5,250-க்கு விற்கப்படுகிறது.

    அதே நேரத்தில் வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. இன்று 1 கிராம் வெள்ளி ரூ.74-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.74 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

    • பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • மல்லிகை பூக்களின் வரத்து குறைவாலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் பூக்கள் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    கடந்த வாரம் குண்டுமல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1300- க்கும், முல்லை ரூ.1000-க்கும், காக்கட்டான் ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.70- க்கும், செவ்வந்தி ரூ.60-க்கும், அரளி ரூ.250- க்கும், ரோஜா ரூ.150-க்கும் விற்பனையானது.

    நேற்று நடந்த ஏலத்தில், குண்டு மல்லிகை பூ கிலோ ரூ.5000-க்கும், சம்பங்கி ரூ160- க்கும், அரளி ரூ.450- க்கும், ரோஜா ரூ.400-க்கும், முல்லைப் பூ ரூ.4000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200- க்கும், கனகாம்பரம் ரூ.1700-க்கும், காக்கட்டான் ரூ.1800-க்கும் விற்பனையானது.

    மல்லிகை பூக்களின் வரத்து குறைவாலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் பூக்கள் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. பூக்களின் விலை உயர்வடைந்து உள்ளதால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×