என் மலர்
நீங்கள் தேடியது "பொதுக்கூட்டம்"
- மாநாடு கடந்த 1-ந் தேதி தொடங்கியது.
- புதிய பொலிட் பீரோ உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படலாம்.
மதுரை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு, மதுரையில் கடந்த 1-ந் தேதி தொடங்கியது.
மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக மதுரை தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள திடலில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, வெண்மணி தியாகிகள் நினைவு செங்கொடியை வழங்க, மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் பத்மநாபன் பெற்றுக்கொண்டார்.
பின்னர் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிமன் பாசு செங்கொடியை ஏற்றி வைத்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கட்சியின் பொது மாநாடு தொடங்கியது.

இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினரும், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார், வரவேற்பு குழு தலைவர் பாலகிருஷ்ணன், அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ராஜா, சி.பி.ஐ.எம்.எல். விடுதலை பொதுச்செயலாளர் திபாங்கர் பட்டாச்சார்யா, ஆர்.எஸ்.பி.பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையில் பொது மாநாடு தொடங்கி நடைபெற்றது.
மாநாட்டின் முக்கிய நிகழ்வாக கடந்த 3-ந் தேதி ராஜா முத்தையா மன்றத்தில் நடந்த கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை என்னும் தலைப்பில் மாநில உரிமைகள் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
மாநாட்டில் சாலமன் பாப்பையா, ராஜமுருகன், சசிகுமார், விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, வெற்றி மாறன், பிரகாஷ்ராஜ், மாரி செல்வராஜ், ஞானவேல் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.
மாநாட்டின் நிறைவு நாளான இன்று மாலை செந்தொண்டர் அணி வகுப்பு பேரணி நடைபெற உள்ளது. மதுரை பாண்டி கோவில் எல்காட் அருகில் இருந்து சுமார் 25 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடக்கிறது.
இதனை வாச்சாத்தி போராளிகள் தொடங்கி வைக்கின்றனர். தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு வண்டியூர் ரிங் ரோடு சுங்கச்சாவடி அருகே சங்கரய்யா நினைவு திடலில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் நடக்கிறது.
வெங்கடேசன் எம்.பி. வரவேற்கிறார். ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், கேரளா முதல்-அமைச்சர் உறுப்பினர் ஆகி விஜயன் அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், வாசுகி, சம்பத், உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
வரவேற்பு பொருளாளர் மதுக்கூர் ராமலிங்கம் நன்றி கூற மாநாடு நிறைவு பெறுகிறது. பொதுக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.
மதுரையில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்டு கம்யூ னிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த சீதாராம் யெச்சூரியின் மறைவையடுத்து புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
புதிய செயலாளராக பொலிட் பீரோ உறுப்பினர் எம்.ஏ. பேபி தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் சில பொலிட் பீரோ உறுப்பினர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அசோக் தவாலேவை தேசிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைப்பதால் முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பொலிட் பீரோவில் உள்ள மூத்த தலைவர்களான பிரகாஷ் காரத், பிருந்தா காரத், சுபாஷினி அலி, ஜி. ராம கிருஷ்ணன், பினராய் விஜயன், மாணிக் சர்க்கார் மற்றும் சுர்ஜ்ய காந்த மிஸ்ரா ஆகியோருக்கு 75 வயது நிரம்பி உள்ளதால், அவர்களுக்கு பதிலாக புதிய பொலிட் பீரோ உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இவர்களில் பினராய் விஜயன் மீண்டும் தனக்கு கேரள முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார். இதுகுறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
- குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார்.
சென்னை:
தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பைக் கண்டித்து மத்திய அரசின் செயல்களை மக்களிடம் எடுத்து கூறும் விதமாக "தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்" என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் மார்ச் 12-ந்தேதி மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இந்தி திணிப்பை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
அதேபோல், குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார்.
திருச்சி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
- அ.தி.மு.க. பொன்விழா பொதுக்கூட்டத்தில் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.-நடிகர் வையாபுரி பேசுகிறார்கள்.
- நிலையூரில் இன்று மாலை நடக்கிறது.
மதுரை
மதுரை அருகே நிலையூர் கைத்தறி நகரில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நிலையூர் கைத்தறி நகரில் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணி அளவில் நடக்கிறது.
பொதுக்கூட்டத்திற்கு திருப்பரங்குன்றம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கவுன்சிலர் நிலையூர் முருகன் தலைமை தாங்குகிறார். மாவட்ட இளைஞரணி செயலாளர், திருப்பரங்குன்றம் கிழக்கு பகுதி அ.தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் முன்னிைல வகிக்கிறார்.
ராஜன்செல்லப்பா-வையாபுரி
பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தலைமைக்கழக பேச்சாளர் நடிகர் வையாபுரி, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.
இந்த பொதுக்கூட்டத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்கின்றார்கள்.
மேற்கண்ட தகவலை திருப்பரங்குன்றம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர், ஒன்றிய கவுன்சிலர் நிலையூர் முருகன் தெரிவித்துள்ளார்.
- திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
உடுமலை :
உடுமலை அருகே உள்ள காரத்தொழுவில் அ.தி.மு.க. பொன்விழா நிறைவு, 51ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் திருப்பூர் சி.சிவசாமி சிறப்புரையாற்றினார்.மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.காளீஸ்வரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
- ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது.
- ஸ்ரீ சக்தி திரையரங்கம் முன்பு வருகிற 4-ந் தேதி அன்று மாலை 6மணியளவில் நடைபெற உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் வடக்கு மாவட்டதி.மு.க. செயலாளரும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது. அதன்படி திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருப்பூர் வாலிபாளையம் யூனியன் மில் சாலை ஸ்ரீ சக்தி திரையரங்கம் முன்பு வருகிற 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6மணியளவில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., மற்றும் தலைமை கழக பேச்சாளர் தாம்பரம் ஜின்னா சிறப்புரையாற்றுகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாளை 3-ந்தேதி இந்தி திணிப்பை ஏன் எதிர்க்க வேண்டும் என்கின்ற தலைப்பில் தலைமை கழகத்தால் அனுப்பப்பட்ட துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வீடு வீடாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கவுள்ளார். இதில் மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், நகர, பகுதி, ஒன்றிய, பேரூர், வட்ட கழக நிர்வாகிகள், இந்நாள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், தொ.மு.ச., நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் அனைவரும் கலந்துகொண்டு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டுமெனவும், நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பெரும் திரளாக கலந்துகொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- முதல்-அமைச்சர் கட்டுப்பாட்டை மீறி அமைச்சர்கள் செயல்படுகின்றனர் என செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.
- சிவகங்கையில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது.
சிவகங்கை
சிவகங்கையில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் தலைமையில் அரண்மனை வாசல் முன்பு சண்முகராஜா கலையரங்கத்தில் நடந்தது.
கூட்டத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-
தமிழ்நாட்டின் காவல் துறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை. அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களும் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. அவர் தன்னை மீறி பேசுகின்ற எந்த ஒரு அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறார்.
அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் எம்.எல்.ஏ.க்களை பிரித்து சென்று விடுகிறார்கள் என்று அச்சப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ராஜலெட்சுமி, பாஸ்கரன் மற்றும் நடிகர் சிங்கமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், குணசேகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்பாஸ்கரன், மாநில நிர்வாகிகள் கருணாகரன், தமிழ்செல்வன், நகர செயலாளர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் தசரதன், செல்லமணி, ஸ்டீபன், சேவியர், சிவாஜி, கோபி, பாரதிராஜன், ஜெகதீஸ்வரன், பழனிசாமி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவதேவ்குமார், எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி துணைச் செயலாளர் மணிமாறன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜாங்கம், நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் பாண்டி நன்றி கூறினார்.
- இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நாளை( 4-ந்தேதி ) தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
- துண்டு பிரசுரங்களை டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. தலைமையில் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின் பேரில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நாளை( 4-ந்தேதி ) தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு தஞ்சாவூர் கரந்தை, கோட்டை, கீழவாசல் மற்றும் மருத்துவகல்லூரி பகுதி மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களில் பொதுமக்களிடம் இது தொடர்பான துண்டு பிரசுரங்களை டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. தலைமையில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் மற்றும் பகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. சார்பில், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம், ஓசூரில் நேற்று நடைபெற்றது.
- பகுதி செயலாளர்கள், அணிகளின் பொறுப்பாளர்கள், கட்சியினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம், ஓசூரில் நேற்று நடைபெற்றது.
ராம்நகர் அண்ணா சிலையருகில் நடந்த கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏவுமான ஒய்.பிரகாஷ் தலைமை தாங்கி பேசினார். இதில், தலைமைக்கழக பேச்சாளர்கள் ஈரோடு இறைவன் திருப்பூர் கோவிந்தசாமி மற்றும் ஓசூர் மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ.பி.முருகன் ஆகியோர் கண்டனவுரையாற்றினர்.
இதில், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், பொருளாளர் சுகுமாரன், துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ். சீனிவாசன், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய பேரூராட்சி நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், அணிகளின் பொறுப்பாளர்கள், கட்சியினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- திருப்பத்தூரில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் ஒன்றிய தலைவர் சண்முகவடிவேல் செய்திருந்தார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள அண்ணா சாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க ஒன்றிய தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு பேச்சாளர்களாக வி.பி. ராஜன், இலக்கிய அணி தலைவர் தென்னவன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, தலைமை கழக பேச்சாளர் ஒப்பிலாமணி ஆகியோர் பங்கேற்று இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்து அனைவரும் ஓரணியில் நின்று பாடுபட வேண்டும் என்று பேசினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் ஒன்றிய தலைவர் சண்முக வடிவேல் செய்திருந்தார்.
- தமிழகத்தில் மீண்டும் இந்தி மொழியை திணிக்க முயன்று வருகிறார்கள்.
- இந்தியை திணிப்பதன் மூலம் சமஸ்கிருதத்தை உள்ளே புகுத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது
நாகர்கோவில்:
நாகர் கோவில் மாநகர தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நேற்று செம்மாங்குடி சாலையில் நடைபெற்றது.
மாநகர செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கி னார். கிழக்கு பகுதி செயலா ளர் துரை வரவேற்று பேசினார். மாநகர மேயரும், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் மாநில பேச்சாளர் பொன்னேரி சிவா கூறியதாவது:-
தமிழகத்தில் மீண்டும் இந்தி மொழியை திணிக்க முயன்று வருகிறார்கள். முதல் முதலாக சென்னை, சென்னை ராஜ்தானியாக இருந்தபோது ராஜாஜி இந் தியை புகுத்தினார். இதற்கு எதிராக பெரியார் மற்றும் அண்ணா தலைமையில்பெ ரும்போராட்டம் நடைபெ ற்றது. மொழிக்காகமுதல் முதலில் சின்னச்சாமி உயிர் தியாகம் செய்தார். 1938-ல் மொழிக்காக சிறையில் சாகடிக்கப்பட்ட நடராஜன் மறைவிற்கு அண்ணாமலை செட்டியார் தனது காரை வழங்கினார். 1975-ம் ஆண்டு ஐ.நா. சபை முகப்பில் தமிழ கத்தைச் சேர்ந்த கணியன் பூங்குன்றன் எழுதிய யாதும் ஊரேயாவரும்கேளிர் என்ற வாசகம் பொறிக்கப்பட்டது.
தமிழ் மொழியின் சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தி.மு.க. செய்தி தொடர்பு துணை செயலாளர் தமிழன் பிர சன்னா கூறியதாவது:-ஆர்.எஸ்.எஸ். உத்தரவுக்கு ஏற்ப மோடி, அமித்ஷா அகியோர் இந்தியை திணித்து வருகின்றனர். நாடு முழுவதும் மருத்துவ கல்லூரி உள்பட அனைத்து கல்விநிறுவனங்க ளிலும் இந்தி கட்டாயமாக்கப்படும்.
இவ்வாறு இந்தியை திணிப்பதன் மூலம் சமஸ்கி ருதத்தை உள்ளே புகுத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது. சமஸ்கிருதம் வரும்போது, சனாதானமும் தானாக வந்து விடும். இதுவே ஆர்.எஸ்.எஸ்.சின் நோக்கம். இவ் வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், மாவட்ட பொருளாளர் கேட்சன், முன் னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், பொர்னார்டு, ராஜன், மாவட்ட நிர்வாகிகள் தில்லைசெல்வம், ஜோசப் ராஜ் பூதலிங்கம்,
பார்த்த சாரதி, சதாசிவம், தாமரைபாரதி, ஒன்றிய, செயலார்கள் லிவிங்ஸ்டன், சுரேந்திரகுமார், செல்வம், பிராங்கிளின், மதியழகன், பாபு, தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணை தலைவர் இ.என்.சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கோட்டார் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எம் .ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மேயர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்திருந்தனர்
நாகர்கோவில் :
நாகர்கோவில் செம்மங்குடி ரோட்டில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் மேயர் மகேஷ் பாரதிய ஜனதா கட்சியினரை விமர்சித்து பேசியதாக கூறி பாரதிய ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேயர் மகேஷ் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோட்டார் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எம் .ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோட்டார் இன்ஸ்பெக்டர் ராமர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையே மேயர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் நாகர்கோவில் மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணை தலைவர் தேவ், மாநில செயலாளர் மீனாதேவ்,மாநகராட்சி கவுன்சி லர்கள் அய்யப்பன், சுனில் அரசு, வீரசூர பெருமாள்,ரோசிட்டாள், ரமேஷ் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகநாதன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பாரதிய ஜனதாவினரை விமர்சித்து பேசிய மேயர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நாளை 10-ந்தேதி நாகர்கோவில் செம்மங்குடி ரோட்டில் மாலை 5 மணிக்கு கண்டன பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்று மாவட்ட தலைவர் தர்மராஜ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மேயர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாரதிய ஜனதா கட்சியினர் எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்தனர்.
- தைப்பூச இருமுடி பொதுக்கூட்டம் தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
- பக்தர்கள் மஞ்சள் உடை தரித்து இருமுடி ஏந்தி பக்தியுடன் செல்ல வேண்டும்.
தருமபுரி,
மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் 82-ம் ஆண்டு அவதார விழாவையொட்டி தருமபுரி மாவட்ட ஓம் சக்தி மன்றங்களின் தைப்பூச இருமுடி பொதுக்கூட்டம் தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த பொதுக்கூட்ட நிகழ்விற்கு தருமபுரி மாவட்ட தலைவி பழனியம்மாள் மனோகரன் தலைமை ஏற்று பேசும்போது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி விழா வரும் 23-ம் தேதி தொடங்கி வரும் 4.2.2023 வரை நடைபெற உள்ளது. மறு நாள் 5.2. 2023 மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி பெருவிழா நடைபெற உள்ளது.
இதனை ஒட்டி தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஓம் சக்தி செவ்வாடை பக்தர்கள் முதலாம் ஆண்டு முதல் 9 ஆண்டு வரை கோயிலுக்கு இருமுடி ஏந்தி செல்பவர்கள், செவ்வாடை அணிந்து ஒழுக்கம், கட்டுப்பாடு, அறநெறியுடன், இருமுடி ஏந்தி செல்ல வேண்டும். அதேபோல் 9 வருடம், அதற்கு மேல் வாழ்நாள் முழுவதும் செல்லும் பக்தர்கள் மஞ்சள் உடை தரித்து இருமுடி ஏந்தி பக்தியுடன் செல்ல வேண்டும்.
இவ்வாறு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் மல்லிகா லட்சுமணன், மாவட்ட செயலாளர் சண்முகம், மாவட்ட பொருளாளர் வீரன், மாவட்ட வேள்வி குழு இணை செயலாளர் மகாலிங்கம், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் ராஜ்குமார், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் அம்மணியம்மாள்சுகுமார், மாவட்ட பிரச்சாரக் குழு இணை செயலாளர் பஸ்வராஜ், மாவட்ட தணிக்கை குழு இணைச் செயலாளர் ராமசாமி, உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மற்றும் தரு மபுரி வட்ட தலைவர்கள், பெண்ணாகரம் வட்ட தலைவர்கள், பாலக்கோடு வட்ட தலைவர்கள், பாப்பிரெட்டிப்பட்டி வட்ட தலைவர்கள், அரூர் வட்ட தலைவர்கள், மன்ற நிர்வாகிகள், செவ்வாடை தொண்டர்கள், சக்தி பீட நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்து கூறினர்.