search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்டத்தில் நடந்தது  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க பொதுக்கூட்டம்
    X

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

    தருமபுரி மாவட்டத்தில் நடந்தது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க பொதுக்கூட்டம்

    • தைப்பூச இருமுடி பொதுக்கூட்டம் தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • பக்தர்கள் மஞ்சள் உடை தரித்து இருமுடி ஏந்தி பக்தியுடன் செல்ல வேண்டும்.

    தருமபுரி,

    மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் 82-ம் ஆண்டு அவதார விழாவையொட்டி தருமபுரி மாவட்ட ஓம் சக்தி மன்றங்களின் தைப்பூச இருமுடி பொதுக்கூட்டம் தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த பொதுக்கூட்ட நிகழ்விற்கு தருமபுரி மாவட்ட தலைவி பழனியம்மாள் மனோகரன் தலைமை ஏற்று பேசும்போது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி விழா வரும் 23-ம் தேதி தொடங்கி வரும் 4.2.2023 வரை நடைபெற உள்ளது. மறு நாள் 5.2. 2023 மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி பெருவிழா நடைபெற உள்ளது.

    இதனை ஒட்டி தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஓம் சக்தி செவ்வாடை பக்தர்கள் முதலாம் ஆண்டு முதல் 9 ஆண்டு வரை கோயிலுக்கு இருமுடி ஏந்தி செல்பவர்கள், செவ்வாடை அணிந்து ஒழுக்கம், கட்டுப்பாடு, அறநெறியுடன், இருமுடி ஏந்தி செல்ல வேண்டும். அதேபோல் 9 வருடம், அதற்கு மேல் வாழ்நாள் முழுவதும் செல்லும் பக்தர்கள் மஞ்சள் உடை தரித்து இருமுடி ஏந்தி பக்தியுடன் செல்ல வேண்டும்.

    இவ்வாறு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் மல்லிகா லட்சுமணன், மாவட்ட செயலாளர் சண்முகம், மாவட்ட பொருளாளர் வீரன், மாவட்ட வேள்வி குழு இணை செயலாளர் மகாலிங்கம், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் ராஜ்குமார், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் அம்மணியம்மாள்சுகுமார், மாவட்ட பிரச்சாரக் குழு இணை செயலாளர் பஸ்வராஜ், மாவட்ட தணிக்கை குழு இணைச் செயலாளர் ராமசாமி, உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மற்றும் தரு மபுரி வட்ட தலைவர்கள், பெண்ணாகரம் வட்ட தலைவர்கள், பாலக்கோடு வட்ட தலைவர்கள், பாப்பிரெட்டிப்பட்டி வட்ட தலைவர்கள், அரூர் வட்ட தலைவர்கள், மன்ற நிர்வாகிகள், செவ்வாடை தொண்டர்கள், சக்தி பீட நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்து கூறினர்.

    Next Story
    ×