என் மலர்
நீங்கள் தேடியது "மது"
- ஒரு குளிர்பானத்தில் 330 மில்லி சர்க்கரை உள்ளது, இவை கலோரிகளை அதிகரிக்கின்றன.
- குளிர்பானத்துடன் மதுவை உட்கொண்டால் சுவை நன்றாக இருக்கும்.
மது பிரியர்கள் ரம், விஸ்கி, ஜின், பிராந்தி எதைக் குடித்தாலும் அதை ஒரு குளிர்பானம் அல்லது தண்ணீரில் கலந்து குடிக்கிறார்கள்.
சரி, இந்த இரண்டில் எது நல்லது, எது கெட்டது என்பது பற்றி நீண்ட விவாதமே நடத்துகிறார்கள். மதுவில் குளிர்பானம் சேர்ப்பது சுவையை அதிகரிக்கிறது. சர்க்கரை மற்றும் கார்பனேற்றம் ஆல்கஹாலின் கடினத்தன்மையைக் குறைக்கின்றன. எனவே, மதுவை எளிதாகக் குடிக்கலாம்.
ரம், கோக், அல்லது ஸ்ப்ரைட் கலந்த ஓட்கா போன்றவை பிரபலம். ஆனால் இவை சுகாதாரக் கண்ணோட்டத்தில் மிகவும் ஆபத்தானவை என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.
ஒரு குளிர்பானத்தில் 330 மில்லி சர்க்கரை உள்ளது, இவை கலோரிகளை அதிகரிக்கின்றன. மதுவுடன் குளிர்பானங்களை உட்கொள்வது உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆய்வுகளின்படி, சர்க்கரை ஆல்கஹால் உறிஞ்சுதலை துரிதப்படுத்துகிறது. இது அதிகப்படியான குடிப்பழக்கத்திற்கு வழிவகுக்கும்.
மதுவில் தண்ணீரைக் கலந்து உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மது அருந்துவது நீரிழப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் தண்ணீர் அதன் செயல்திறனைக் குறைக்கிறது. இது ஆல்கஹாலின் செறிவைக் குறைத்து உடலில் அதன் விளைவைக் கட்டுப்படுத்துகிறது. இன்னொரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், விஸ்கியுடன் தண்ணீரையோ அல்லது வோட்காவுடன் தண்ணீரையோ கலப்பது ஹேங்ஓவரைக் குறைக்கும் என்று தேசிய சுகாதார நிறுவனங்கள் விளக்குகின்றன.
குளிர்பானத்துடன் மதுவை உட்கொண்டால் சுவை நன்றாக இருக்கும். ஆனால் உடல்நலம் விரைவில் மோசமடைய வாய்ப்புள்ளது. ஒரே தண்ணீரை ஒன்றாக எடுத்துக்கொள்வது ஓரளவு நன்மை பயக்கும்.
கூடுதலாக, மதுவை குளிர்பானத்துடன் கலப்பது அதிகப்படியான அளவை ஏற்படுத்தும். இது சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில் அழுத்தத்தை அதிகரிக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதே தண்ணீருடன் சேர்த்து உட்கொள்ளும்போது, அது பல பிரச்சனைகளைக் குறைக்கிறது.
மதுவுடன் தண்ணீரைக் கலப்பது ஹேங்ஓவரை 20 சதவீதம் வரை குறைக்கிறது. மதுவை குளிர்பானத்துடன் கலப்பது தற்காலிக இன்பத்தைத் தரும். ஆனால் நீண்ட கால ஆரோக்கியத்திற்கு தண்ணீர் சிறந்தது.
நீங்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் குடித்துவிட்டு, அதிகமாக குடிக்காமல், தண்ணீரில் கலந்து குடித்தால், உங்கள் உடல்நலம் கட்டுக்குள் இருக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
- கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி:
களியக்காவிளை அருகே தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள மாந்தறை பகுதியை சேர்ந்தவர் சஜித் (வயது 39), மீன் பிடி தொழிலாளி.
இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த சுதீர். 2 பேரும் ஒன்றாக தான் கடலுக்கு மீன் பிடிக்க செல்வார்கள். இவர்க ளுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு.
நேற்று 2 பேரும் கட லுக்கு சென்று திரும்பி யதும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது 2 பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திர மடைந்த சுதீர், தான் மறைத்து வைத்திருந்த வெட்டு கத்தியை எடுத்து நண்பர் என்றும் கூட பார்க்காமல் சஜீத்தை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது 2 கைகளின் மணிக்கட்டு பகுதிகளும் துண்டானது. சஜீத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.
அவர்களை பார்த்ததும் சுதீர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சஜீத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு மாந்தறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருவ னந்தபுரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அயரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சுதீர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். மது தகராறில் நண்பரின் 2 கைகளையும் வாலிபர் வெட்டி துண்டாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- குலசேகரம் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை
- சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
குலசேகரம் மணியங்குழி அன்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 63), தொழிலாளி. இவரது மனைவி சுசிலா. தேவதாஸ் கேரளாவில் வேலை பார்த்து வந்தார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஊருக்கு வந்திருந்தார். கடந்த 24-ந்தேதி வீட்டில் இருந்து நண்பர்களை பார்த்து வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் 26-ந்தேதி மாலையில் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். வெளியே சென்று இருந்த அவரது மனைவி சுசிலா வீட்டிற்கு வந்த போது தேவதாஸ் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே 108 ஆம்புலன்ஸ் மூலமாக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றார். அப்போது தேவதாஸ் தன்னை சிலர் தாக்கியதாக மனைவியிடம் கூறினார்.
இதுகுறித்து குலசேகரம் போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் ஆஸ்பத்தி ரியில் சிகிச்சையில் இருந்த தேவதாஸ் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற் றப்பட்டுள்ளது. சுசிலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு உள்ளனர்.தேவ தாசை தாக்கியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தேவதாஸ் கடந்த 24-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற பிறகு அதே பகுதியை சேர்ந்த சிலருடன் சேர்ந்து மது அருந்தியது தெரியவந்துள்ளது.
மதுபோதையில் ஏற் பட்ட தகராறில் அவரை தாக்கினார்களா? என்பது குறித்து விசாரணை நடத் தப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.
- திருமணம் ஆகாத விரக்தியில் பரிதாபம்
- கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கொட்டாரம் அருகே உள்ள செல்வன்புதூரைச் சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் ரமேஷ் (வயது 29). இவர் டெம்போ டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் வாழ்க்கையில் விரக்தியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு மது போதையில் தனது வீட்டுக்கு வந்து உள்ளார்.இரவுஅவர் தனது வீட்டில்படுத்து தூங்கி உள்ளார். இந்த நிலையில் நேற்றுஅவர் வெகு நேரமாகியும் எழும்ப வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கன்னியா குமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சுபேந்திரன் மது குடித்து விட்டு சக்கரவர்த்தியிடம் தகராறு செய்து வந்தார்.
- படுகாயமடைந்த சுபேந்திரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
மன்னார்குடி:
மன்னார்குடியில் கூலிதொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேலத்திருப்பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி ( வயது 41) விவசாயி. இவரது வீட்டில் அதே பகுதி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சுபேந்திரன் ( வயது 39) என்பவர் 15 ஆண்டுகளுக்கு மேலாக விவசாய கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் சுபேந்திரன் மது குடித்து விட்டு சக்கரவர்த்தியிடம் தகராறு செய்து வந்ததால் அவர் சுபேந்திரனை வேலைவிட்டு நிறுத்தி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுபேந்திரன் அடிக்கடி மது குடித்து விட்டு சக்கரவர்த்தியிடம் தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சக்கரவர்த்தி அரிவாளால் சுபேந்திரனை வெட்டினார். அதில் படுகாயம் அடைந்த சுபேந்திரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பரவக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுபேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சக்கரவர்த்தியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
வெட்டி கொலை செய்யப்பட்ட சுபேந்திரனுக்கு கவிதா என்ற மனைவியும், 1 ஆண் ,2 பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடதக்கது.
- 3 பேர் மீது வழக்கு
- மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியை அடுத்த கல்படி சடையன் விளையை சேர்ந்தவர் ஜோதிநாத் (வயது 41), தொழிலாளி.
இவர் சம்பவத்தன்று அங்குள்ள படிப்பகத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அதே பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ், லிவிங்ஸ்டன், சிவா ஆகி யோர் வந்தனர்.
அவர்கள் படிப்பகம் அருகே மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த ஜோதிநாத், இங்கு வைத்து ஏன் மது அருந்து கிறீர்கள் என கண்டித்தார்.
இது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த 3 பேரும், ஜோதிநாத்தை தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக மணவாளக்குறிச்சி போலீ சில் புகார் செய்யப் பட்டது.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பிரின்ஸ், லிவிங்ஸ்டன், சிவா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- ஈரோடு அழகம்பாளையம் பகுதியில் வரப்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர்.
- சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு அழகம்பாளையம் பகுதியில் வரப்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வாய்க்கால் பகுதியில் அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் வந்தது.
இதன்பேரில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த கார்த்திக் (27) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 13 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ராயர்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் வரப்பாளையம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த நபர் ராயர்பாளையம் மாரியம்மன் கோவில் பின்புற பகுதியை சேர்ந்த பொன்னான் என்ற பொன்னுசாமி (58) என்பதும், அவரது மொபட்டினை சோதனை செய்தபோது 12 மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பொன்னுசாமியை போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஈரோடு முள்ளாம்பரப்பு பகுதியில் மளிகை கடையில் தாலுகா போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கடையின் உரிமையாளரான நாதகவுண்டன் பாளையத்தை சேர்ந்த திலிப்குமார் (31) என்பவரை கைது செய்து கடையில் இருந்த 6 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
- மது அருந்தும் கூடாரமாக ரேஷன் கடை மாறிய நிலை உள்ளது.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. பாளையம் ஏரிக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை உள்ளதால், அங்கு மது பாட்டில்கள் வாங்கி வரும் மது பிரியர்கள், இந்த ரேஷன் கடையில் பட்டப்பகலில் அமர்ந்து மது அருந்துகின்றனர். சிலர் மது போதையில் தகாத வார்த்தைகள் பேசிக்கொண்டு, அந்த வழியாக செல்பவர்களிடம் வேண்டுமென்றே தகராறில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது.
குறிப்பாக விடுமுறை நாட்களில் மது அருந்தும் கூடாரமாக ரேஷன் கடை மாறி உள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியவில்லை. மது போதையில் சிலர் ரேஷன் கடையில் வாந்தி எடுத்து விடுகின்றனர். இதனால் மறுநாள் கடை திறக்கும்போது துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மது பிரியர்களில் சிலர் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடைகளில் அமர்ந்தும் மது அருந்துகின்றனர். இதனால் பயணிகள் நிழற்குடைக்கு செல்ல அச்சமடைந்து சாலையில் நின்று காத்திருந்து பஸ் ஏறி செல்கின்றனர். பெண் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டும், காணாதது போல் சென்று விடுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 180 மதுபாட்டில்கள் பறிமுதல்
- அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்:
திருவள்ளுவர் தினத்தை யொட்டி நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந் தது.
குமரிமாவட்டத்தில் டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்ட நிலையில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தரவின் பேரில் கன்னியா குமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப் டிவிசன்க ளுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அனுமதி யின்றி மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் அனுமதி இன்றி மது விற்பனை செய்ததாக 15 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனுமதியின்றி மது விற்ற 24 பேரை கைது செய்த போலீசார் அவர்களி டம் இருந்து 180 மதுபாட்டில் களை பறிமுதல் செய்துள்ள னர். கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
- பெரம்பலூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
- கூடுதல் விலைக்கு விற்றாலும் மது பாட்டில்கள் கிடைக்கும் இடத்தை தேடி அலைந்து கண்டுபிடித்து மது பிரியர்கள் வாங்கி குடித்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளும், அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்தும் குடியரசு தினத்தையொட்டி நேற்று ஒரு நாள் மட்டும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தன. ஆனாலும் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை படுஜோராக நடந்தது.
போலீசார் சட்ட விரோத மது விற்பனைக்கு பெயரளவுக்கு வழக்குகளை பதிவு செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். நேற்று முன்தினமே டாஸ்மாக் கடைகளில் சிலர் அளவுக்கு அதிகமாக மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து நேற்று அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர். கூடுதல் விலைக்கு விற்றாலும் மது பாட்டில்கள் கிடைக்கும் இடத்தை தேடி அலைந்து கண்டுபிடித்து மது பிரியர்கள் வாங்கி குடித்தனர்.
குறிப்பாக பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் சீகூரில் சட்டவிரோதமாக மதுவிற்பனை அதிகளவில் நடைபெற்றதாகவும், எனவே இங்குள்ள டாஸ்மாக் கடையை இழுத்து மூடும் போராட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அமைப்பு சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற போவதாகவும் கூறப்படுகிறது.
- 419 மது பாட்டில்கள் பறிமுதல்
- குடியரசு தினத்தையொட்டி மதுபானங்கள் விற்க தமிழக அரசு தடை விதித்து இருந்தது.
கன்னியாகுமரி:
குடியரசு தினத்தையொட்டி மதுபானங்கள் விற்க தமிழக அரசு தடை விதித்து இருந்தது.
இதையடுத்து அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன. மேலும் தனியார் மதுபான கடைகளும் திறக்கப்பட வில்லை.
இதனால் குடிமகன்கள் மது வாங்க முடியாமல் தவித்தனர். இதனை பயன்படுத்தி சிலர் மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றனர்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் குலசேகரம் போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் ஒரு வீட்டில் மறைத்து வைத்து விற்பனை செய்த 319 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அங்கிருந்த றாபி (வயது 46) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதுபோல சேக்கல் பகுதியில் அனுமதியின்றி விற்பனை செய்த 55 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இதனை விற்றதாக ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் கல்லடிமாமூடு பகுதியில் அனுமதியின்றி மது விற்ற ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 45 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 419 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- மது, கஞ்சா போன்ற தீமைகள் பற்றியும் மூளை செயல் திறன் குறைவு.
- விழிப்புணர்வு பேரணியாக சென்று ஒலி பெருக்கி மூலம் தெரிவித்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே சோழபுரத்தில் இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு சார்பில் போதை ஒழிப்பு பிரசாரம் நடைபெற்றது.
மேலப்பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர்கள் மற்றும் கீழப்பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் பேரணியை தொடங்கி வைத்தார்.
பேரணி சோழபுரம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மனித குலத்தை சீரழிக்கும் போதை பொருட்கள் மது, கஞ்சா போன்ற தீமைகள் பற்றியும் மூளை செயல் திறன் குறைவு, சுவாச குறைபாடு, கண் சிவத்தல், பார்வை குறைபாடுகளும் இதயத் துடிப்பு அதிகரித்து மரணம் விளைவுகளை ஏற்படுத்தும் என விழிப்புணர்வு பேரணியாக சென்று ஒலி பெருக்கி மூலம் தெரிவித்தனர்.
முன்னதாக கூட்டமைப்பின் சார்பில் சோழபுரம் காவல் நிலையத்தில் மது போதை இல்லாத சோழபுரம் உருவாக கோரிக்கை மனு அளித்தனர்.பேரணியில் சோழபுரம் இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு நிர்வாகிகள் சுமையா, சாதிக், பரக்கத்அலி, ரியாஜ், அர்ஷ் முகமது, தாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.