என் மலர்
நீங்கள் தேடியது "கடல்"
- மாநகராட்சி அங்கு மரத்தால் ஆன நடைபாலத்தை அமைத்துள்ளது.
- மலபார்ஹில் கமலா நேரு பார்க் பகுதியில் தொடங்கி டூங்கர்வாடி வரை வன மரப்பாலம் உள்ளது.
மும்பை:
மும்பை மலபார்ஹில் பகுதியில் அரபிக்கடலையொட்டி மரங்கள் நிறைந்த வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியை பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில் மாநகராட்சி அங்கு மரத்தால் ஆன நடைபாலத்தை அமைத்துள்ளது.
அடர்ந்த மரங்களுக்கு இடையே கடல் மற்றும் இயற்கை அழகை கண்டு ரசிக்கும் வகையில் இந்த மரப்பாலம் ரூ.25 கோடி செலவில் 470 மீட்டர் நீளத்தில் 2.4 மீட்டர் அகலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மலபார்ஹில் கமலா நேரு பார்க் பகுதியில் தொடங்கி டூங்கர்வாடி வரை வன மரப்பாலம் உள்ளது.
இந்த பாலம் அமைக்கும் பணி ஏறக்குறைய முடிந்துவிட்டது. விரைவில் இது பொதுமக்களுக்காக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் மரப்பாலத்தில் நடந்தபடி இயற்றை அழகை ரசிக்க 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டினருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
மரப்பால திட்டம் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த திட்டம் மும்பை சுற்றுலாவுக்கு ஊக்கமாக இருக்கும். பராமரிப்பு, பாதுகாப்பு பணிகளுக்காக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது" என்றார்.
- மீன் பிடித்துக்கொண்டிருந்த பல படகுகள் நிலைகுலைந்தன.
- காஸ்ட்ரோவின் படகு மட்டும் வழிமாறி தனியே பிரிந்தது.
லிமா:
தென் அமெரிக்க நாடான பெருவின் மார்கோனா நகரைச் சேர்ந்த மீனவர் மாக்சிமோ நாபா காஸ்ட்ரோ (வயது 61). இவர் கடந்த டிசம்பர் மாதம் சக மீனவர்களுடன் பசிபிக் பெருங்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தார்.
அங்கு 2 வாரங்கள் தங்கி மீன்பிடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திடீரென அங்கு பலத்த காற்று வீசியது. இதனால் அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்த பல படகுகள் நிலைகுலைந்தன.
இதில் காஸ்ட்ரோவின் படகு மட்டும் வழிமாறி தனியே பிரிந்தது. ஆனால் அவருடன் சென்ற மற்ற மீனவர்கள் பத்திரமாக வீடு திரும்பினர்.
இதனையடுத்து அவர்கள் அளித்த புகாரின்பேரில் கடலோர போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் இணைந்து காஸ்ட்ரோவின் உறவினர்களும் அவரை தேடி வந்தனர். எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோ கடலோர போலீசார் அங்கு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த ஒரு படகில் காஸ்ட்ரோ ஆபத்தான நிலைமையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை மீட்ட போலீசார் பெரு கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதன்பிறகு அவரது உறவினர்களிடம் காஸ்ட்ரோ ஒப்படைக்கப்பட்டார். கடலில் மாயமான காஸ்ட்ரோ 95 நாட்களுக்கு பிறகு திரும்பியதால் குடும்பத்தினர் அவரை கட்டியணைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- காற்றின் வேகம் அதிகரிக்கும் என எச்சரிக்கை
- மீன்வரத்து குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம்
கன்னியாகுமரி:
குளச்சல் துறைமுகத்தில் இருந்து சுமார் 300 விசைப் படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டு மரங்கள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள்வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை சுற்றியுள்ள தென் தமிழக கடல் பகுதியில் 45 கி.மீ.முதல் 55 கி.மீ.வேகம் வரை காற்று வீசக்கூடும் எனவும், 11 மற்றும் 12-ந் தேதிகளில் 65 கி.மீ. அளவிற்கு வேகம் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தகவல் குமரி மாவட்ட அனைத்து கட லோர மீனவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய விசைப்படகுகள் நேற்று மீண்டும் கடலுக்குச் செல்ல வில்லை. அவை குளச்சல் மீன்பிடித்துறை முகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.
இன்றும் பெரும்பாலான விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள், கட்டு மரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இருப்பினும் ஒரு சில வள்ளங்கள் மீன் பிடிக்க சென்றன. இவற்றுள் குறை வான மீன்களே கிடைத்தன.குளச்சலில் நேற்று மீன்வரத்து குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
- அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- தக்க நேரத்தில் கடலில் குதித்து பெண்ணின் உயிரை காப்பாற்றிய மரைன் போலீஸ் மற்றும் மீனவர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
கன்னியாகுமரி:
குளச்சல் மரைன் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ், சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ததேயூஸ்குமார், முதல் நிலை காவலர் சிவகுமார் ஆகியோர் நேற்று பகல் குளச்சல் கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.
குளச்சல் துறைமுக பழைய பாலம் அருகே செல்லும்போது பாலத்தின் மீது நடந்து சென்ற 52 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் திடீரென கடலில் குதித்தார்.இதனை கவனித்த சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ததேயூஸ் குமார் உடனே கடலில் குதித்து அந்த பெண் குதித்த இடத்திற்கு நீந்தி சென்றார்.மணற்பரப்பிலிருந்து இதை பார்த்த மரமடியை சேர்ந்த மீனவர்கள் ராஜ், எப்ரேன் ஆகியோரும் கடலில் குதித்து நீந்தி சென்றனர்.சிறிது நேரத்திற்கு பின்பு தத்தளித்துக்கொண்டிருந்த அந்த பெண்ணை மீட்டு கடலில் மூழ்காமல் பார்த்துக்கொண்டனர்.
இதற்கிடையே அந்த பெண் மயக்கமானார்.உடனே சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ததேயூஸ் குமார் மற்றும் மீனவர்கள் அந்த பெண்ணை தாங்கிக்கொண்டு நீந்தினர்.பின்னர் அந்த வழியாக பைபர் வள்ளத்தில் மீன் பிடிக்க சென்ற குறும்பனை கிறிஸ்து ஜெயந்தன் என்பவரை உதவிக்கு அழைத்தனர்.உடனே கிறிஸ்து ஜெயந்தன் வள்ளத்தை வேகமாக அவர்கள் பக்கத்தில் திருப்பி 4 பேரையும் வள்ளத்தில் மீட்டு மீன் துறைமுகத்தில் கரை சேர்த்தார்.
பின்னர் த.மு.மு.க. ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண் குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்ட்டார்.அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தக்க நேரத்தில் கடலில் குதித்து பெண்ணின் உயிரை காப்பாற்றிய மரைன் போலீஸ் மற்றும் மீனவர்களை பொதுமக்கள் பாராட்டினர். விசாரணையில் அந்த பெண் சாஸ்தான்கரை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர் தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பதை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- படகுகளில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை
- தீவிரவாதிகள் போல் தப்பிசெல்ல முயன்ற 4 பேர் பிடிபட்டனர்
கன்னியாகுமரி:
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க தமிழ்நாட்டில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் உள்ளூர் சட்டம்- ஒழுங்கு போலீ சாரும் இணைந்து "சீ விஜில்" என்னும் கடல் பாதுகாப்பு ஒத்திகையை நேற்று நடத்தினர்.
இன்று 2-வது நாளாக கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 2 அதிநவீன ரோந்து படகுகள் மூலம் கடலுக்குள் சென்று தீவிரவாதிகள் ஊடுருவுகிறார்களா? என்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையில் ஒரு குழுவினர் வங்க கடல் அமைந்து உள்ள கன்னியாகுமரி-உவரி இடையே உள்ள கடல் பகுதியிலும் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் தலைமையில் மற்றொரு குழுவினர் அரபிக்கடல் அமைந்து உள்ள கன்னியா குமரி முதல் குளச்சல் வரை உள்ள கடல் பகுதியிலும் அதிநவீன ரோந்து படகில் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் சின்னமுட்டம், பஞ்சலிங்கபுரம், மகாதான புரம், தேங்காய்பட்டணம், கூடங்குளம் உள்பட 10 இடங்களில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீசுக்கு சொந்த மான சோதனை சாவடி களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாறு வேடங்களிலும் கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் கன்னியா குமரி கடலோர பாது காப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான படையினர் கன்னியா குமரி வாவத்துறை கடற்கரை பகுதி யில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது 4 பேர் கடற்கரை வழியாகதீவிரவாதிகள் போல் நடித்து ஒரு படகில் தப்பிசெல்ல முயன்றனர். அவர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
மேலும் அவர்களிடம் இருந்த ஆவணங்களை சோதனை செய்தனர்.அப்போது அவர்கள் யார்? என்பது தெரிய வந்தது. அதில் 2 பேர் கமாண்டோ படையைச் சேர்ந்த போலீ சார் என்பதும் ஒருவர் இந்திய கடலோர காவல் படையை சேர்ந்தவர் என்பதும் மற்றொருவர் எஸ்.பி.எப்.கமாண்டோ படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் என்பதும் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து கடல் வழியாக படகில் தப்பி செல்ல முயன்ற அவர்களை கண்காணித்து பிடித்த கன்னியாகுமரி கடலோர பாதுகாப்புகுழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீனை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டி னார்கள்.
குளச்சல் கடற்கரை சோதனைச்சாவடியில் மரைன் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ததேயூஸ் குமார், சட்டம் ஒழுங்கு சப் - இன்ஸ்பெக்டர் மோகன் ஜோஸ்லின் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
அந்த வழியாக சென்ற கார், ஆட்டோ, பைக் மற்றும் மீன் லாரிகள் ஆகியவற்றையும் தீவிர சோதனைக்கு பின்பே கடற்கரையில் அனுமதித்தனர்.இதனால் அப்பகுதியில் வாகனம் ஓட்டி வந்த பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
- சின்னமுட்டம் துறைமுகம் வெறிச்சோடியது
- 4 நாட்கள் தொடர் மழை எச்சரிக்கை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் மீன் பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்கள் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து சின்னமுட்டம் துறைமுகத்திலிருந்து 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இதனால் விசைப்படகுகள் அனைத்தும் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி கரையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு மீன் வரத்து அடியோடு நின்றுவிட்டன. இதை தொடர்ந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன் சந்தைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனால் மீன் விலையும் 'கிடுகிடு"என்று உயர்ந்து உள்ளது. இதேபோல ஆரோக்கியபுரம், கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரைகிராமங்களிலும் பெரும்பாலான கட்டுமரம், வள்ளம் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடற்கரை கிராமங்க ளும் வெறிச்சோடி காணப்படுகிறது.
- கடலில் காணாமல் போன மீனவர் குடும்பத்திற்கு உதவித்தொகையை கலெக்டர் வழங்கினார்.
- தமிழ்நாடு மீனவர் நலத்துறை ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலு வலக கூட்டரங்கில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை யின் சார்பில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடை பெற்றது.
இதில் மாவட்ட கலெக்டர் மீனவர்களிடம் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெற்றுக் கொண்டு கடந்த மாதம் மீனவர்களிடம் கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட மனுக்களு க்கான தீர்வுகளை துறை அலுவலர்கள் மூலமாக தெரிவித்தார்.
பின்னர் அவர் பேசிய தாவது:-
மீனவர்கள் தொழில் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றன. ரோச்மா நகர் மீனவர்கள் கிராமத்தில் கடலில் கல் நிரப்பும் பணி ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கான பணி விரைவில் நிறைவடையும். மீனவர்களுக்கான மீன்பிடி அடையாள அட்டை வழங்கு வதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க இனி அந்தந்த பகுதி உதவி இயக்கு னர்கள் மூலம் வழங்கிட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதே போல் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை புதிய பயனாளிகளுக்கு அவர்க ளுடைய வங்கி கணக்கில் தமிழ்நாடு மீனவர் நலத்துறை ஆணையத்தின் மூலம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மகாத்மா என்ற கார்த்திக் என்ற மீனவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மீன்பிடிக்க சென்றபோது காணாமல் போய்விட்டார். அவரது தாயார் கலைய ரசிக்கு தமிழ்நாடு மீனவர் நல வாரியம் மூலம் வழங்க ப்பட்ட ரூ.1 லட்சத்திற்கான நிவாரண உதவித் தொகைக் கான ஆணை யினை வழங்கி னார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மீன்வளத் துறை துணை இயக்குநர் காத்தவராயன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அவர் 21-ந்தேதி இரவே தவறி கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
- கடலில் மாயமான சுனிலுக்கு பேபி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
கன்னியாகுமரி:
தேங்காய்பட்டணம் அருகே உள்ள தூத்தூரை சேர்ந்த பாஸ்டின், சொந்தமாக விசைப்படகு வைத்து கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.
இவரது படகில் குமரி மாவட்டம் மற்றும் பாண்டிச்சேரி, ஆந்திரா, கேரளாவை சேர்ந்த தொழிலாளர்களும் மீன்பிடி தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். வழக்கம்போல் இவரது படகில் 16 தொழிலாளர்கள் கடந்த 21-ந்தேதி மாலை தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்றனர்.
இதில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சுனில் (வயது 41) என்பவர் முதன்முதலாக மீன்பிடித்தொழிலுக்கு சேர்ந்திருந்தார்.படகு மறுநாள் தேங்காய்பட்டணம் கடல் பகுதி 50 நாட் டிங்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டி ருக்கும்போது படகிலிருந்த சுனிலை காணவில்லை. அவர் 21-ந்தேதி இரவே தவறி கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. உடனே உடன் சென்ற தொழிலாளர்கள் மாயமான சுனிலை தேடும் பணியில் ஈடுபட்டனர். 4 நாட்கள் கடலில் தங்கி தேடியும் சுனில் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.இதனால் மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். பின்னர் இந்த சம்பவம் குறித்து படகு ஓட்டுனர் வர்கீஸ் குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார்.
மரைன் சப் - இன்ஸ் பெக்டர் சுரேஷ் வழக்குப் பதிவு செய்து மாயமான மீனவர் சுனிலை தேடி வருகிறார்.கடலில் மாயமான சுனிலுக்கு பேபி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கண்டுகொள்ளாத கடலோர பாதுகாப்பு குழும போலீசார்
- கன்னியாகுமரி காந்தி மண்ட பத்தின் பின்பகுதி முதல் சன்செட் பாயிண்ட் கடற்கரை வரை ஆழமான ஆபத்து நிறைந்த பகுதி இருப்பதால் அந்த பகுதிக்கு செல்லக்கூடாது
கன்னியாகுமரி:
கன்னியா குமரியில் முக்கடலும் சங்க மிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடலில் ஆனந்த குளியல் போடு கிறார்கள். அதைத் தொடர்ந்து பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் உள்பட பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள். இதற்கி டையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் ஆர்வ முடன் பயணம் செய்து பார்வையிட்டு வருகி றார்கள்.
இது தவிர கன்னியா குமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமரா ஜர் மணி மண்டபம், அரசு அருங்காட்சியகம், மியூசியம், மீன்காட்சி சாலை, பொழுதுபோக்கு பூங்கா, காட்சி கோபுரம், மெழுகு சிலை கண்காட்சி வட்டக்கோட்டைபீச், சொத்த விளைபீச் போன்ற இடங்களுக்கும் சென்று பொழுதைகழிக்கிறார்கள். மாலையில் சன்செட் பாய்ண்ட் கடற்கரைக்கு சென்று சூரியன் மறையும் அற்புத காட்சியை கண்டு ரசிக்கிறார்கள்.
இதற்கிடையில் கன்னி யாகுமரி காந்தி மண்ட பத்தின் பின்பகுதி முதல் சன்செட் பாயிண்ட் கடற்கரை வரை ஆழமான ஆபத்து நிறைந்த பகுதி இருப்பதால் அந்த பகுதிக்கு செல்லக்கூடாது என்பதற்காக கடற்கரையை யொட்டி பாறாங்கற்களை குவித்து தடுப்புச் சுவர்கள் அமைத்து உள்ளனர். ஆனால் சுற்றுலா பயணி கள் இந்த தடுப்புச் சுவர்க ளையும் தாண்டி கடலில் இறங்கி ஆனந்த குளியல் போடுகிறார்கள்.
இந்தப் பகுதி பல உயிர்களை பலி வாங்கிய ஆபத்தான ஆழம் நிறைந்த பகுதி என்பதை அறியாமல் சுற்றுலா பயணி கள் ஆனந்த குளியல் போடு வதை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கண்டு கொள்வதில்லை.
எனவே உயிர் பலி ஆகுவ தற்கு முன்பு இந்த பகுதியில் ரோந்து செல்லும் கடலோர பாதுகாப்பு குடும்ப போலீ சார் சுற்றுலாப் பயணிகள் ஆபத்துநிறைந்த இந்த ஆழமான பகுதிக்கு சென்று கடலில் குளிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று சுற்றுலா பயணி களும் சமூக ஆர்வ லர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற முக்கியமான நாட்களில் கன்னியாகுமரி கடலில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது
- பவர்ணமி தினமான நேற்று இரவு கன்னியாகுமரியில் கடல் “திடீர்” என்று உள்வாங்கி காணப்பட்டது
கன்னியாகுமரி :
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி ஏற்பட்ட சுனாமி என்னும் ஆழிப்பேரலைக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற முக்கியமான நாட்களில் கன்னியாகுமரி கடலில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, கடல் உள்வாங்குவது, கடல் நீர் மட்டம் தாழ்வது, கடல் நீர் மட்டம் உயர்வது, கடல் நிறம் மாறுவது, கடல் அலையே இல்லாமல் அமைதியாக குளம் போல் காட்சி அளிப்பது, போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் பவர்ணமி தினமான நேற்று இரவு கன்னியாகுமரியில் கடல் "திடீர்" என்று உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி இருந்தது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. இதைப் பார்த்து கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள்கடலில் இறங்கி கால்நனைக்க அச்சப்பட்டனர். ஆனால் எந்தவித அச்சமுமின்றி மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு கரைக்கு திரும்பினர்.
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை பகுதியில் கடல் உள்வாங்கி இருந்தாலும் கன்னியாகுமரியில் வங்ககடல் பகுதியில் கடலின் தன்மை இயல்பு நிலையில் காணப்பட்டதால் கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர்நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது. சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வருகிறார்கள்.
அதேசமயம் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள்ஆனந்த குளியல் போட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
- கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கால்நனைக்க அச்சப்பட்டனர்.
- மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு கரைக்கு திரும்பினர்.
கன்னியாகுமரி:
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக இன்று கன்னியாகுமரியில்கடல் அலையே இல்லாமல் அமைதியாக குளம் போல் காணப்பட்டது.
இதைப் பார்த்து கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கால்நனைக்க அச்சப்பட்டனர். ஆனால் எந்தவித அச்சமுமின்றி மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு கரைக்கு திரும்பினர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை பகுதியில் கடல் உள்வாங்கி இருந்தாலும் கன்னியாகுமரியில் வங்க கடல் பகுதியில் கடலின் தன்மை இயல்பு நிலையில் காணப்பட்டதால் கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை8மணிக்கு வழக்கம் போல் படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது.
சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வருகிறார்கள். அதேசமயம் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அலையே இல்லாமல் அமைதியாக கடல் குளம் போல் காணப்பட்டதுஇதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட முடியாமல் திகைத்துபோய் நின்றனர்.
- 10-க்கும் மேற்பட்ட படகுகளில் காரைக்கால் மீனவர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
- கடல் சீற்றமாக இருந்ததால் தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
வேதாரண்யம்:
காரைக்கால் பகுதியில் இருந்து ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த சிவா (வயது 28) என்பவரும் கடந்த 4-ந்தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்று ள்ளனர்.
இவர்கள் மீன்களை பிடித்து கொண்டு 5-ந்தேதி அதிகாலையில் கரை திரும்பிக்கொண்டிருந்த போது மீனவர் சிவா படகில் இருந்து தவறி கடலில் விழுந்து மூழ்கி மாயமானார்.
இதைத்தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட படகுகளில் காரைக்கால் மீனவர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாண்டஸ் புயல் காரணமாக கடல் சீற்றமாக இருந்ததால் தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
புயல் கரையை கடந்ததால் நேற்று காரைக்கால் மீனவர்கள் 10 படகுகளில் கோடியக்கரை கடற்பகுதிக்கு வந்து மாயமான மீனவர் சிவாவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இன்னும் தேடும் பணி நடந்து வருகிறது.