என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "வளர்ச்சிப்பணிகள்"
- மொத்தம் ரூ.96 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தாா்.
- கேத்தி பேரூராட்சியில் புனரமைக்கப்பட் வளம் மீட்பு பூங்காவை திறந்து வைத்தாா்.
ஊட்டி,
ஊட்டி அருகே உள்ள கேத்தி மற்றும் சோலூா் பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ராமசந்திரன் தொடங்கிவைத்தாா்.
நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் சோலூா் மற்றும் கேத்தி பேரூராட்சி பகுதிகளில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம், சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம் மூலமாக 1.11 கோடி மதிப்பில் கெரடா கெங்குந்தை சாலை அமைத்தல், நீா்கம்பை மயானத்துக்கு நடைபாதைக்கான கல்வெட்டு அமைத்தல், பழங்குடியின தோடா் காலனியில் நடைபாதை அமைத்தல், முக்கட்டியில் சாலை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சா் ராமசந்திரன் தொடங்கிவைத்தாா்.
சிறப்பு மேம்பாட்டுத் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய நியாய விலைக் கடை, பொதுக் கழிப்பிடம், சாலை பலப்ப டுத்துதல், சாலையில் வடிகால் அமைத்தல், தடுப்புச் சுவா் அமைத்தல், நீா்த்தேக்க தொட்டி அமைத்தல் என மொத்தம் ரூ.96 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தாா்.
மேலும், கேத்தி பேரூராட்சியில் புனரமைக்கப்பட் வளம் மீட்பு பூங்காவை திறந்து வைத்தாா். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்து மண்புழு உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கும் திட்டமும் இப்பூங்காவில் நடைமுறை படுத்தப்பட்டது. இதனை அமைச்சா் ராமசந்திரன் திறந்துவைத்து பாா்வையிட்டாா்.
பின்னா் அவா் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சியில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித்திட்டங்களும், சோலூா் பேரூராட்சியில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் குன்னூா் கோட்டாட்சியா் பூஷண குமாா், கேத்தி பேரூராட்சி செயல் இயக்குநா் நடராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
- பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் செய்வது குறித்து விவாதித்து தீர்மானம்
- அங்கன்வாடி கட்டிடம் ஆகியன ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புணரமைத்தல்.
கன்னியாகுமரி :
திருவட்டார் ஊராட்சி ஒன்றியகுழு கூட்டம் தலைவர் ஜெகநாதன் தலைமையில் நேற்று நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யசோதா, சசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் பீனா குமாரி, கவுன்சிலர்கள் அனிதாகுமாரி, ஜெயசோ பியா, ஜெயஸ்ரீ, ராம்சிங், ஷீபா, சகாய ஆன்றணி, ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய பகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் செய்வது குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்ப ட்டது.
2023-2024-ம் ஆண்டு க்கான 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் அண்டூர் வலியாற்று முகம் சாலை, விராலிக்காட்டு விளை-கண்ணனூர் சாலை, முளகுமூடு-வெட்டுக்காட்டு விளை ஆகிய இடங்களில் ரூ.15 லட்சத்துக்கு 75 ஆயிரம் செலவில் மழை நீரோடை அமைப்பது. மேக்குளத்தில் ஆழ்குழாய் கிணறு மற்றும் பைப் லைன் அமைத்தல் பூவன்கோட்டில் உள்ள பஞ்சாயத்து கிணற்றை தூர்வாரி குடிநீர் வசதி செய்தல், சுருளகோடு மருத்துவமனை முன்பு உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து புதிய பைப்லைன் நீட்டி மேம்பாடு செய்தல் ஆகிய பணிகளை ரூ.15 லட்சத்து 75 ஆயிரம் செலவில் மேற கொள்ளவும், மடத்துக்குளம் அருகே தடுப்புச்சுவர் அமைத்தல், சுவாமியார் மடம் சந்திப்பில் இருந்து வேர்க்கிளம்பி செல்லும் சாலையின் இருபுறமும் அலங்கார தரைகற்கள் அமைத்தல், நல்லபிள்ளை பெற்றான்குளம் மேற்குப்ப குதியில் பத்திரகாளி அம்மன் கோவிலின் பின்புறம் தடுப்புச்சுவர் அமைத்தல் ஆகிய பணிகளை ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மேற்கொள்ளுதல்
திருவட்டார், திருவரம்பு, செருப்பாலூர், செங்கோடி, தச்சூர், செங்கோடி, முண்ட விளை ஆகிய இடங்களில் உள்ள தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் மற்றும் குட்டைகாடு அங்கன்வாடி கட்டிடம் ஆகியன ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புணரமைத்தல்.
திருவட்டார் ஊராட்சி ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ் பேச்சிப்பாறை, தோட்டவாரம் பள்ளி கட்டிடம் புணரமைத்தல் அருவிக்கரை, ஏற்றக்கோடு பகுதியில் கான்கிரீட் தளம் அமைத்தல் உட்பட பல்வேறு வேலைகள் ரூ.41 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள் ளுதல் என்பன உள்பட பல் வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
- எம்.ஜி.ஆர். நகரில் சுகாதார வளாக பணிகள் நடைபெற உள்ளது.
- பல்லடம் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம். ஆனந்தன் பூமி பூஜை நடத்தி திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சியில், 15-வது பொது நிதிக்குழு மானிய திட்ட நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சபரி நகரில் கான்கிரீட் சாலை அமைத்தல், எம். ஏ. நகரில் புதிய தார் சாலை அமைத்தல், அய்யாவு நகரில் கப்பி சாலை அமைத்தல், மீனாம்பாறை மயான சாலை, அவரப்பாளையும் இணைப்பு சாலை, உதயம் நகரில் கழிவு நீர் கால்வாய், எம்.ஜி.ஆர். நகரில் சுகாதார வளாகம், உள்ளிட்ட பணிகள் ரூ.1.66 கோடியில் நடைபெற உள்ளது.
இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில், பல்லடம் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம். ஆனந்தன் பூமி பூஜை நடத்தி திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில், முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி. பரமசிவம் மற்றும் அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நகர்ப்புற வறுமையானது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.
- பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
காங்கயம் :
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சி மற்றும் காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி நிர்வாகத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
ஆய்வு குறித்து அவர் கூறியதாவது:-
சமூகத்தில் அனைத்து பிரிவினரையும் பொருளாதார ரீதியான வாய்ப்புகள் சென்றடைய நகர்ப்புற பகுதிகளில் நிலையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் அவசியமாகும். மாநிலத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்துவதும், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பாதகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கடமையாகும்.
நகர்ப்புற வசிப்பிடங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மக்கள் சிறப்பாக வாழ தகுதியான சூழ்நிலையை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நகர்ப்புற வறுமையானது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. அரசு தற்போது பல்வேறு கொள்கைகளை வகுத்து மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல, பல்வேறு உட்கட்டமைப்பு வளர்ச்சிகள் மேற்கொள்வது உள்பட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
காங்கயம் நகராட்சி பகுதிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.13 கோடியே 66 லட்சம் மதிப்பிலும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சத்தில் நடைபெற்று வரும் புதிய வளர்ச்சித்திட்டப்பணிகள், வெள்ளகோவில் நகராட்சியில் கலைஞரின் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 81 லட்சத்தில் நடைபெற்று வரும் வாரச்சந்தை மேம்படுத்தும் பணிகள், உப்புப்பாளையத்தில் ரூ.30 லட்சத்தில் குளம் சீரமைக்கும் பணி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் வெள்ளகோவில் பஸ் நிலையத்தில் பூங்கா அமைக்கும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் தாராபுரம் நகராட்சி, உடுமலை நகராட்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர்கள் மோகன்குமார் (வெள்ளகோவில்), வெங்கடேசன் (காங்கயம்) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.