என் மலர்
நீங்கள் தேடியது "சங்கரன்கோவில்"
- மோட்டார்சைக்கிளில் சென்ற சரவணன் தரப்பினருக்கும், சோலைவேல் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
- காயம் அடைந்த 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாலைசதுரன். இவரது மகன் சாலைமுனீஸ் (வயது 25). இவரது நண்பர் சரவணன் (21).
கத்திக்குத்து
இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று சங்கரன்கோவில் டவுண் பகுதிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓடைத்தெரு பகுதியில் திரு.வி.க. தெருவை சேர்ந்த சோலைவேல் மற்றும் அவரது நண்பர் கதிர்வேல்(26)ஆகியோர் நடுரோட்டில் நின்று பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அவ்வழியே மோட்டார்சைக்கிளில் சென்ற சரவணன் தரப்பினருக்கும், சோலைவேல் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே சாலைமுனீஸ், சரவணன் ஆகியோரை எதிர்தரப்பினர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
கைது
மேலும் தடுக்க வந்த மாரிமுத்து, வீராசாமி , சுவாமிநாதன் ஆகியோருக்கும் சரமாரி குத்து விழுந்தது. இதில் காயம் அடைந்த 5 பேரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் டவுண் போலீசார் கதிர்வேலை கைது செய்தனர். தப்பி ஓடிய சோலைவேலை வலைவீசி தேடி வருகின்றனர்.
- பெருங்கோட்டுரைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவர் கடைக்கு வந்து சிக்கன் சாப்பிட்டு உள்ளார்.
- எண்ணை கொதித்துக் கொண்டிருந்த சட்டியை சுப்பிரமணியன் மீது மாரிச்சாமி தள்ளி விட்டார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் புது மனை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் திருவேங்கடம் சாலை பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று பெருங்கோட்டுரைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவர் கடைக்கு வந்து சிக்கன் சாப்பிட்டு உள்ளார். சாப்பிட்டதற்கு சுப்பிரமணியன் மாரி சாமியிடம் பணம் கேட்டுள் ளார்.
ஆத்திரமடைந்த மாரிசாமி நான் யார் தெரியுமா என கேட்டு எண்ணை கொதித்துக் கொண்டிருந்த சிக்கன் சட்டியை சுப்பிரமணியன் மீது தள்ளி விட்டார். இதில் எண்ணை கொட்டி சுப்பிரமணியன் பலத்த காயமடைந்தார். மேலும் மாரிச்சாமி சுப்பிரமணியனுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
காயமடைந்த சுப்பிர மணியனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் மாரிச்சாமியை தேடி வருகின்றனர்.
- 3 நாட்களாக குழந்தைக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது.
- குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள ஓடைக்கரைப்பட்டி வடக்குதெருவை சேர்ந்தவர் வீரபாண்டி (வயது29). இவருக்கு மதுஸ்ரீ என்ற 11 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. 3 நாட்களாக குழந்தைக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தையை அழைத்து கொண்டு வீரபாண்டி கழுகுமலை அரசு மருத்துவமனையில் மாத்திரை வாங்கி கொடுத்துள்ளார்.
சம்பவத்தன்று குழந்தை பேச்சு, மூச்சு இல்லாமல் இருக்கவே வீரபாண்டி குழந்தையை கழுகுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அய்யாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சங்கரன்கோவிலில் நகர தி.மு.க. சார்பில் இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடந்தது.
- கூட்டத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார்.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் நகர தி.மு.க. சார்பில் இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டம் முப்புடாதி அம்மன் கோவில் அருகே நடந்தது.
வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் பத்மநாபன், மகளிர் அணி செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜதுரை, மனோகரன், புனிதா, முன்னாள் நகர செயலாளர் சங்கரன், இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா, நகர அவை தலைவர் முப்புடாதி, நகர துணை செயலாளர்கள் மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், பொருளாளர் லாசர் என்ற சதாசிவம், நகர இளைஞரணி பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார்.
இதில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான், தனுஷ்குமார் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, சீனிவாசன், பரமகுரு, சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:-
தற்போது தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர்
மு. க. ஸ்டாலின் இந்தி எதிர்ப்பு என்பதில் உறுதி யாக உள்ளார்.
பா.ஜ.க. தலை கீழாக நின்றாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது. உயர் ஜாதி வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது படித்தவர்களுக்கு தெரியும் இதில் பயன்பெறுபவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டும்தான் என்று.
இன்று இந்தியா மட்டுமல்ல உலகமே வியந்து பார்க்கும் வகையில் கட்சியையும் ஆட்சியும் நடத்திய நமது முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் என்பதை இந்த தருணத்திலே நான் குறிப்பிட கடமைப்பட்டிருக்கிறேன்.
தென்காசி வடக்கு மாவட்டத்தை பொருத்த வரை ஒரு ஆற்றல் மிகுந்த செயலாளரை நமது கழகம் பெற்றிருக்கிறது. இளமையிலேயே மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. என்பது தி.மு.க.விற்கு கிடைத்த அளப்பரிய சொத்து.இனிவரும் காலங்களில் சங்கரன்கோவில் தொகுதி தி.மு.க. கோட்டையாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, முத்தையாபாண்டியன், பூசை பாண்டியன் சேர்மத்துரை, கிறிஸ்டோபர், வெற்றி விஜயன், பெரியதுரை, ராமச்சந்திரன், மதிமாரிமுத்து, புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி, பேரூர் செயலாளர்கள் மாரி முத்து, செண்பகவிநாயகம், பாலசுப்ரமணியம், குருசாமி, நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா, சிவகிரி கோமதி, ராயகிரி இந்திரா, பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளத்துரை, வேல்சாமி பாண்டியன், சாகுல் ஹமீது, மாரிசாமி, தேவதாஸ், மாரிசாமி, பராசக்தி, மகேஸ்வரி, மூத்த வழக்கறிஞர் சண்முகையா, அரசு வக்கீல்கள் கண்ணன், அன்புசெல்வன், ஜெயக்குமார் சார்பு அணி அமைப்பாளர்கள் சோமசெல்வபாண்டியன், யோசேப்பு, பத்மநாதன், இளைஞர்அணி சரவணன், மாணவரணி உதயகுமார், கார்த்திக், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜ், குமார், அஜய் மகேஷ்குமார்,
தொண்டரணி முத்துமணிகண்டன் சங்கர், ஆதி மற்றும் வீரமணி, வீரா, சபரிநாத், ஜெயகுமார், பிரகாஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வாழைக்காய் துரைபாண்டியன் நன்றி கூறினார்.
- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தேவநேய பாவாணருக்கு மணிமண்டபம் அமைத்து திறந்து வைத்தார்.
- பரிபூரணம் இறப்பிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
சங்கரன்கோவில்:
தமிழ் மொழியின் சிறப்புகளைப் போற்றி வளர்த்ததோடு அதனை உலகறிய செய்த தமிழறிஞர் பெருமக்கள் பலரில் தேவநேய பாவாணர் குறிப்பிடத்தக்கவர். இவர் சங்கரன்கோவில் அருகே உள்ள கோமதிமுத்துபுரத்தில் பிறந்தவர்.
தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காவும், ஆராய்ச்சிக்காகவும் செலவழித்தவர். அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் நெடுநாள் கோரிக்கையாக இருந்தது. அதை ஏற்று 2007-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி மதுரை அண்ணா நகரில் ரூ.40 லட்சம் செலவில் தேவநேய பாவாணருக்கு மணிமண்டபம் அமைத்து திறந்து வைத்தார்.
அந்த மணிமண்டபத்தை பராமரிக்கும் பொறுப்பை பாவாணரின் பேத்தி ஏ.எம்.டி.பரிபூரணத்திடம் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி ஒப்படைத்தார். அதற்காக பரிபூரணத்திற்கு செய்தி மக்கள் தொடர்பு துறையில் பணி ஆணை வழங்கினார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பரிபூரணம் உடல்நலக் குறைபாட்டால் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அவரது மறைவை ஒட்டி சங்கரன்கோவில் அருகே உள்ள ஆண்டார்குளம் கிராமத்தில் உள்ள இல்லத்து க்கு சங்கரன்கோவில் ராஜா எம்.எல்.ஏ நேரில் சென்று பரிபூரணம் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது தேவநேய பாவாணர் குடும்பத்தினர் மறைந்த பரிபூரணத்திற்கு அப்போதய முதல்-அமைச்சர் கருணாநிதி அரசு வேலை வழங்கியதை போல அவரது மகளான மனோசாந்திக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் குடும்பத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ. இதுகுறித்து முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
- குப்பை கொட்டிய விவகாரத்தில் அருகில் இருந்தவர்கள் சுப்பிரமணியனை தாக்கியதாக கூறப்படுகிறது.
- சுப்பிரமணியன் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் படுத்து உருண்டு, தர்ணா ஈடுபட்டார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் மேல செக்கடி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் பா.ஜ.க. வர்த்தக அணி நகர துணை தலைவராக உள்ளார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் இருந்தபோது அவரது வீட்டின் அருகே குப்பை கொட்டிய விவகாரம் தொடர்பாக அருகில் இருந்தவர்கள் சுப்பிரமணியனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிகிச்சைக்காக சுப்பிரமணியன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சுப்பிரமணியன் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் படுத்து உருண்டு, தர்ணா ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் பா.ஜ.க. நகர தலைவர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் விக்னேஷ், அந்தோணி ராஜ், சங்கர் உள்ளிட்ேடார் அங்கு திரண்டனர். இதைத்தொடர்ந்து சுப்பிரமணியன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
- சங்கரன்கோவிலில் தி.மு.க. சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் விழா நடந்தது
- வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு ராஜா எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் விழா நடந்தது. இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட வக்கீல் அணி மருதப்பன், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், இளைஞர் அணி சரவணன், மாணவரணி கார்த்திக் மற்றும் பாரதிராஜா, சங்கர், வக்கீல் சதீஷ், பிரகாஷ், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- மணிகண்டன் தனது வீட்டின் அருகே கேனில் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார்.
- போலீசார் செல்வராஜை கைது செய்து அவரிடம் இருந்து 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சிவகிரி:
சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதபேரி தர்மாபுரியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 24). இவர் தனது வீட்டின் அருகே கேனில் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார். தகவல் அறிந்த சிவகிரி போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மது, மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தார்.
சங்கரன்கோவில் அருகே உள்ள பந்தபுளி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ்(63) என்பவர் மது விற்றுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற கரிவலம்வந்த நல்லூர் போலீசார் அவரை கைது செய்து, 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- ராஜா எம்.எல்.ஏ., முன்னிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
- நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவரும், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான தலைவன் கோட்டை விஜயபாண்டின் தலைமையில் வாசுதேவநல்லூர் சட்டமன்றத்தில் உள்ள கிராமங்களான தலைவன் கோட்டை, ஈச்சம்பொட்டல்புதூர், நொச்சிகுளம், ஆண்டார்குளம், வடமலாபுரம், நகரம், துரைச்சாமிபுரம், முள்ளிக்குளம், தாருகாபுரம், பாறைப்பட்டி, நெல்கட்டும்செவல், அரியூர், கீழப்புதூர், சங்கனாப்பேரி, மலையடிக்குறிச்சி ஆகிய ஊர்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தி.மு.க.தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி, நகரச் செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, புளியங்குடி நகர செயலாளரும் நகர மன்ற துணைத் தலைவருமான அந்தோணிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்களை மாவட்ட செயலாளர் ராஜா சால்வை அணிவித்து வரவேற்றார்.
- கிராம சபை கூட்டத்திற்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை என அழகு பாண்டியராஜா பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளார்.
- போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படாததால் மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்திற்கு அழகு பாண்டியராஜா புகார் மனு அனுப்பினார்.
நெல்லை:
சங்கரன்கோவில் அருகே உள்ள சீவலராயனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் அழகு பாண்டியராஜா (வயது 37). இவரது மனைவி மகாதேவி.
இவர் களப்பாகுளம் பஞ்சாயத்து 12-வது வார்டு உறுப்பினராக உள்ளார். கடந்த நவம்பர் 1-ந் தேதி நடந்த கிராம சபை கூட்டத்திற்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை என அழகு பாண்டியராஜா பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளார்.
அப்போது அங்கிருந்தவர்கள் அழகு பாண்டிய ராஜாவை சாதி பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அழகுபாண்டியராஜா சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் பஞ்சாயத்து தலைவி சிவசங்கரி தூண்டுதலின் பேரில் அவரது சகோதரர் சண்முகநாதன் மற்றும் வலங்கைபுலி, பசும்பொன், முருகன் ஆகியோர் சேர்ந்து தன்னை திட்டியதாக கூறியிருந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படாததால் மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்திற்கு அவர் தனது புகார் மனுவை அனுப்பினார்.
அதனை விசாரித்த ஆணையம் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய சங்கரன்கோவில் தாலுகா போலீசாருக்கு உத்தர விட்டது. அதன்பேரில் தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருஷாபிஷேக விழாவில் யாக பூஜைகள் நடைபெற்றது.
- பூஜைகளை சக்தி கணேஷ் சுவாமிகள் மற்றும் சிவாச்சாரியர்கள் செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தாலுகா, களப்பாகுளம் பஞ்சாயத்து களப்பாகுளம்-உடப்பன்குளம் இணைப்புச்சாலையில் ஜக்கம்மாள் கோவில் கீழ்புறம் மஹாசக்தி வாராகி அம்பாள் கோவில் 9-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. இதில் ஸ்ரீ வலம்புரி விநாயகர், மஹாசக்தி வராஹி, உன்மத்த பைரவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு யாக பூஜைகளும், தொடர்ந்து கும்ப கலசத்திற்கு புனித நீர் அபிஷேகம், மற்றும் வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், தீபாராதனைகள் நடந்தது.
வருசாபிஷேக பூஜை களை துர்க்கா ப்ரத்யங்கிரா தேவி உபாசகர் சக்தி கணேஷ் சுவாமிகள் மற்றும் சிவாச்சாரியர்கள் செய்தனர். இதில் ஓய்வு பெற்ற பேராசிரியர் முத்துசாமி, தேன்மொழி, செந்தாமரை, அங்கப்பன், சரவணன், கணேசன், சக்திவேல், நகைக் கடை அதிபர்கள் சங்கரசுப்பிரமணியன், அனுசுயா மாரிமுத்து, மூத்த வழக்கறிஞர் சண்முகையா, மாணிக்கம், வெங்கடேஷ், ஆதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை மனோன்மணி அம்பாள் உபாசகர் சக்திவேல், பரமகணேசன், முருகன், ஜெயராம், பலவேசம் மற்றும் திருச்செந்திலாண்டவர் பாதயா த்திரை குழுவினர்கள், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
- மாநில அளவிலான டென்னிகாய்ட் போட்டி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
- இரட்டையர் ஆட்டத்தில் எப்சிபா, தீபா ஆகியோர் மாநில அளவில் 3-ம் இடம் பிடித்தனர்.
சங்கரன்கோவில்:
தமிழக அரசு சார்பில் மாநில அளவிலான டென்னிகாய்ட் போட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இன்பன்ட் மேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 38 மாவட்டத்தில் உள்ள மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு பெண்கள் இளையோர் பிரிவில் இரட்டையர் ஆட்டத்தில் எப்சிபா, தீபா ஆகியோர் மாநில அளவில் 3-ம் இடம் பெற்று சாதனை படைத்தனர். மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் ஊர் பொதுமக்கள் பாராட்டினார்கள்.