என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மைப்பணி"

    • அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
    • 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்

    வேங்கிக்கால்;

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்வான மகா தீப தரிசனம் நவம்பர் 26-ந்தேதி நடைபெற உள்ளது.

    அதனை முன்னிட்டு பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வரும் கிரிவல பாதையை இன்று காலை தூய்மை அருணை தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் அதன் நிறுவனரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு தூய்மை செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.

    தூய்மை அருணை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இந்த தூய்மை பணியில் கலெக்டர் பா.முருகேஷ், கூடுதல் கலெக்டர் ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், சி.என். அண்ணாதுரை எம்.பி., நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், தொழிலாளர் நல மேம்பாட்டு பிரிவு அரசு பிரதிநிதி இரா. ஸ்ரீதரன், சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, ஒன்றிய குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசன், அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜ்குமார், உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், கோட்டாட்சியர் மந்தாகினி, வட்டாட்சியர் தியாகராஜன், ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன் உட்பட 1000-க்கும் மேற்பட்ட தூய்மை அருணை உறுப்பினர்கள், அனைத்து துறை தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தானில் தூய்மைப்பணி விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட பேரூராட்சிகள் நிர்வாகத்தினர் பல்வேறு வகையில் தூய்மை பணி குறித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.  

    சோழவந்தான் பேரூராட்சி பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக துப்புரவு பணிகள், பிளாஸ்டிக் பொருட்களை பயன்பாடு ஒழிப்பு, மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து குப்பைகளை உரம் தயாரிக்கும் வழிமுறை, கழிவுநீர் கால்வாய் பயன்படுத்தும் முறை என விழிப்புணர்வு ஏற்படுத்தி  வருகின்றனர். 

    முக்கிய வீதிகளில் கவுன்சிலர்கள் சத்தியபிரகாஷ், செல்வராணி ஜெயராமன், குருசாமி, முத்துசெல்வி தலைமையில் சுகாதார தூய்மை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மேற்பார்வையில், சமூக ஆர்வலர்கள் நாகேந்திரன், கண்ணன், மாரிமுத்து, முத்துபாண்டி ஆகியோரும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    துப்புரவு மேற்பார்வையாளர் சுந்தரராஜன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணி செய்து பிரசாரம் செய்தனர். பேரூராட்சி செயலர் சுதர்சன், பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் ஆலோசனையின் பேரில் தெருமுனை விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
    • தூய்மைப்பணியில் மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, என்.சி.சி. மாணவர்கள் சுமார் 48 பேர் ஈடுபட்டனர்.
    • மோகனூர் காவிரி நதிக்கரையினை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    15 பட்டாலியன் என்.சி.சி கமாண்டிங் ஆபீசர் கர்னல் ஜெய்தீப் ஆணைப்படியும் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபீசர் லெப்டினன்ட் கர்னல் கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டுதல் படியும், மோகனூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அருணாசலம் தலைமை–யில் மோகனூர் காவிரி நதிக்கரையினை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    இந்த தூய்மைப்பணியில் மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, என்.சி.சி. மாணவர்கள் சுமார் 48 பேர் ஈடுபட்டனர். தூய்மைப்பணியின் போது பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள், நீரில் தேங்கியிருந்த ஆடைகள் போன்றவற்றை அகற்றி மோகனூர் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை அதிகாரி சங்கர் செய்திருந்தார்.

    • தூய்மை பணியாளர் மூக்காண்டியை பாராட்டி பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி, சுந்தர வடிவேலு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
    • தீவிர தூய்மைப்பணி முகாம் முக்கிய பகுதிகளில் நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சிறப்பாக செயல்பட்டு, வார்டு பகுதியை தூய்மையாக மாற்றி குப்பைகளை தரம் பிரித்து சிறப்பாக செயல்பட்ட 17-வது வார்டு தூய்மை பணியாளர் மூக்காண்டியை பாராட்டி பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி, சுந்தர வடிவேலு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

    செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், கவுன்சிலர்கள், நியமனக்குழு உறுப்பினர் விக்னேஷ், ரத்தினராஜ், அருணாசலம், முத்துலட்சுமி, பேரூராட்சி அலுவலர்கள், சக பணியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் லாசர் எட்வின், தூய்மை மேற்பார்வையாளர் குமார், குழு மேற்பார்வையாளர் தினேஷ்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து சிவகிரி பேரூராட்சி சார்பாக தீவிர தூய்மைப்பணி முகாம் 15-வது வார்டு நாடார் கடை பஜாரில் உள்ள பாலம், வடகால் ஓடை மற்றும் முக்கிய பகுதிகளில் நடைபெற்றது.

    • சிங்கம்புணரி பேரூராட்சி சார்பில் நீர் நிலைகள், கரைப்பகுதி சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.
    • சுமார் 30-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பேரூராட்சி சேர்மன் மற்றும் துணை சேர்மன் முன்னிலையில் நடப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தேர்வு பேரூராட்சிக்கு உட்பட்ட நீர்நிலை கரை பகுதிகள் மற்றும் பொது இடங்களில் மரம் நடுதல், நீர் நிலைகளை சுத்தப்படுத்துதல் பணி நகரங்களின் துாய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தொடங்கியது.

    சிவகங்கை மாவட்ட கலெக்டரின் அறிவுரைக்கு ஏற்ப சிங்கம்புணரி வண்ணான் குண்டு, வெட்டியான் குண்டு பகுதியில் நடந்த இந்த நிகழ்வில் சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து தலைமை தாங்கினார். துணை சேர்மன் செந்தில் முன்னிலை வகித்தார். இதில் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    நீர்நிலை பகுதிகளை கரையோரங்களில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு மரங்கள் நடப்பட்டன. அதை தொடர்ந்து சிங்கம்புணரி சிறுவர் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பேரூராட்சி சேர்மன் மற்றும் துணை சேர்மன் முன்னிலையில் நடப்பட்டது.

    இதில் கவுன்சிலர்கள் திருமாறன், அப்துல்லா, ஷாஜகான், ஜெயக்குமார், மணி சேகரன் மற்றும் பொதுமக்களும், பெண்கள் சுய உதவி குழு உறுப்பினர்களும் சேவுக அரிமா சங்க உறுப்பினர்களும் பங்கேற்றனர். செயல் அலுவலர் ஜான் முகமது நன்றி கூறினார்.

    • சிவத்தையாபுரத்தில் தீவிர தூய்மைப்பணி மற்றும் எனது குப்பைக்கு நானே பொறுப்பு என்ற பெயரில் விழிப்புணர்வு முகாம் தூரிதப்படுத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
    • சாயர்புரம் பேரூராட்சியை தூய்மையான பகுதியாக மாற்றுவோம் என பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சி சார்பில் சிவத்தையாபுரத்தில் தீவிர தூய்மைப்பணி மற்றும் எனது குப்பைக்கு நானே பொறுப்பு என்ற பெயரில் விழிப்புணர்வு முகாம் தூரிதப்படுத்துதல் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பாக்கியலெட்சுமி தலைமை தாங்கி மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    இதில் சாயர்புரம் பேரூராட்சி பகுதியை தூய்மையான பகுதியாக மாற்றுவோம் என பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பிரவினா சொரிமுத்துபிரதாபன், சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தலைவர் அறிவாழி, ஸ்ரீவைகுண்டம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சிவத்தையாபுரம் சொரிமுத்துபிரதாபன், பேரூராட்சி மேஸ்திரி கல்யாண் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர் ஒருவர் தலைமையில் குழு அமைத்து சுகாதாரம், கட்டுமான பணிகள் நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
    • ஒவ்வொரு ஆண்டும் பள்ளி துவங்கும் போது, தூய்மை, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

    திருப்பூர்:

    கோடை விடுமுறை முடிந்து நாளை 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக துவக்க, நடுநிலைப்பள்ளிகள் மட்டும் துவங்கப்பட உள்ளதால், பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டது.

    இதையடுத்து ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர் ஒருவர் தலைமையில் குழு அமைத்து சுகாதாரம், கட்டுமான பணிகள் நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. பள்ளி வகுப்பறை, வளாகம், மைதானம் சுத்தப்படுத்தும் பணி முடுக்கி விடப்பட்டது.3 வாரங்களாக பள்ளி செயல்படாததால், மின் வயர்கள், குடிநீர், மேல்நிலை, கீழ்நிலை நீர்தேக்க தொட்டி நிலை, தண்ணீர் இருப்பு, கழிப்பிடங்கள் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.அவை சுத்தப்படுத்தப்பட்டன.

    பள்ளி திறக்கும் நாளிலே புத்தகங்கள் வழங்கவும், அட்மிஷன் துவங்கவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கு பள்ளிக்கு தலா இரு ஆசிரியர்களுக்கு பணி, பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நகர பகுதியில் அதிக மாணவர்கள் படிக்கக்கூடிய பள்ளிகள் மாநகராட்சி சுகாதார ஊழியர் மூலமும், புறநகரில் மண்டல அலுவலகங்களில் இருந்து ஊழியர்களை அனுப்பியும் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

    மாவட்டத்தின் பிற பகுதியில் உள்ள துவக்க, நடுநிலைப்பள்ளிகள், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உதவியுடன் பராமரிப்பு பணிகளை இன்றைக்குள் முடிக்க வட்டார கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து திருப்பூர் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் பள்ளி துவங்கும் போது, தூய்மை, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. பள்ளி கல்வித்துறை, பெற்றோர், ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர் மூலம் தேவையான அடிப்படை வசதிகள், உதவிகள் செய்து தருகின்றனர். ஓரிரு மாதங்களில் மீண்டும் பழைய நிலை வந்து விடுகிறது.

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மூலம் பள்ளிக்கென தனியே ஒரு சுகாதாரக் குழு அமைத்து,தூய்மை பணி, பராமரிப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்து விட்டால் பள்ளி திறப்பு நாளில் இருப்பது போன்று பிற நாட்களிலும் பள்ளிகள் பளிச்சிடும். தூய்மை, பராமரிப்பு பணி செயல்பாடுகள் வரும் காலங்களில் தொடர வேண்டும்என்றனர்.

    • பிளாஸ்டிக் விழிப்புணர்வு மற்றும் தூய்மைப்பணிமேற்கொள்ளப்பட உள்ளது.
    • தன்னார்வலர்கள்இந்த சேவை பணியில் ஈடுபடுத்திக்கொள்ளலாம்.

    திருப்பூர்,

    திருப்பூர் மாநகராட்சி பகுதியை தூய்மை மாநகராட்சியாகமாற்றும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. என்குப்பை-என் பொறுப்பு-என் நகரம்-எனது பெருமை என்பதற்கேற்ப குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனதரம் பிரித்து வழங்க வேண்டும் என்று பொதுமக்களுக்குமாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நாளை (சனிக்கிழமை) வடக்கு உழவர் சந்தை,தென்னம்பாளையம் தினசரி மற்றும் வார சந்தை பகுதியில்காலை பிளாஸ்டிக் விழிப்புணர்வு மற்றும் தூய்மைப்பணிமேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்கள், தன்னார்வலர்கள்இந்த சேவை பணியில் ஈடுபடுத்திக்கொள்ளலாம் என்றுஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

    ×