என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாடிக்கையாளர்"

    • காரில் பெட்ரோல் நிரப்பியபிறகு அங்கிருந்த கழிவறைக்கு ஜெயகுமாரி சென்றார்.
    • பத்தினம்திட்டா நுகர்வோர் கோர்ட்டில் ஜெயகுமாரி வழக்கு தொடர்ந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் எழம்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமாரி. பள்ளி ஆசிரியையான இவர், கடந்த ஆண்டு மே மாதம் 8-ந்தேதி தனது காரில் காசர்கோட்டில் இருந்து எழம்குளத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு 11 மணியளவில் கோழிக்கோடு பய்யோலி தேனாங்கல் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றார்.

    காரில் பெட்ரோல் நிரப்பியபிறகு அங்கிருந்த கழிவறைக்கு ஜெயகுமாரி சென்றார். ஆனால் அவரை கழிப்பறையை பயன்படுத்த பங்க் ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இதுகுறித்து பத்தினம்திட்டா நுகர்வோர் கோர்ட்டில் ஜெயகுமாரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டது.

    வாடிக்கையாளரை கழிப்பறையை பயன்படுத்த அனுமதிக்காததால் பெட்ரோல் பங்கின் உரிமையாளரான பாத்திமா ஹன்னாவுக்கு ரூ1.65 லட்சம் அபராதம் விதித்து ஆணைய தலைவர் பேபிச்சன் வெச்சச்சிரா, உறுப்பினர் நிஷாத் தங்கப்பன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அதில் ரூ1.50 லட்சத்தை இழப்பீடாகவும், ரூ.15 ஆயிரத்தை கோர்ட்டு செலவுக்காகவும் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    • உணவை சாப்பிட்ட குழந்தைக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது.
    • பல்வேறு உணவுப் பொருட்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

    புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் பர்மான். இவர் டெலிவரி ஆப் மூலம் புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள தனியார் மாலில் இயங்கி வரும் சர்வதேச உணவகத்தில் 4 கோழி இறைச்சி பர்கர் மற்றும் கோழி நகட்ஸ் ஆர்டர் செய்தார். அந்த உணவை சாப்பிட்ட அவரது குழந்தைக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது.

    பின்னர் மீதமுள்ள பர்கரை எடுத்து பார்த்தபோது, அதில், வேகாத கோழி இறைச்சி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, பர்மான், உணவகத்திற்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடம் வேகாத கோழி இறைச்சி பர்கரை காண்பித்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

    இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, உணவகத்தின் நிர்வாக அதிகாரியிடம் இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியதுடன், அங்கிருந்த பர்கர் மற்றும் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

    அதோடு 2 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவில்லை எனில் உணவகத்திற்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

    • ஓட்டலில் வாடிக்கையாளரை தாக்கிய 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டன்.
    • வாடிக்கையாளர் சாப்பிட்ட 2 தோசைக்கு ரூ.80-யை பில் கொடுத்ததால் தகராறு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் சங்ககிரி அருகே குப்பனூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 53). நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையம் வந்த கண்ணன், அங்குள்ள ஓட்டலில் உணவருந்தினார்.

    இதையடுத்து கடை ஊழியர்கள் ரூ.80-க்கு பில் கொடுத்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி–யடைந்த கண்ணன், 2 தோசைக்கு ரூ.80 கட்டணமான ஓட்டல் ஊழியர்களிடம் கேட்டுள்ளார். இதில் கண்ணனுக்கும், ஓட்டல் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த ஓட்டல் ஊழியர்கள், அங்கிருந்த நாற்காலியால் கண்ணனை சரமாரியாக தாக்கினர்.

    இதில் பலத்த காயமடைந்த கண்ணன், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மேலும் இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கண்ணனை தாக்கிய வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த அப்துல் ரஹீம் (39), விழுப்புரம் சூரி நாய்க்கன்பட்டியை சேர்ந்த ஆனந்த் (27) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • தினமும் சராசரியாக 2.50 லட்சம் சிலிண்டர் வினியோகம் செய்யப் படுகிறது.
    • சிலிண்டர் தீர்ந்து விடும் சமயத்தில் சமைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    திருப்பூர்:

    இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு தமிழகத்தில் 1.48 கோடி வீட்டு வாடிக்கையாளர் உள்ளனர். தினமும் சராசரியாக 2.50 லட்சம் சிலிண்டர் வினியோகம் செய்யப் படுகிறது.

    இந்தியன் ஆயிலின் கட்டணமில்லா தொலைபேசி எண், இணையதளம், மிஸ்டு கால், வாட்ஸ் ஆப் எண் ஆகியவற்றின் வாயிலாக சமையல் கியாஸ் சிலிண்டருக்கு முன்பதிவு செய்யலாம். வாடிக்கையாளர்கள் சில நேரங்களில், வேலை நிமித்தம் காரணமாக, சிலிண்டர் முன்பதிவு செய்ய மறந்து விடுகின்றனர். இதனால் சிலிண்டர் தீர்ந்து விடும் சமயத்தில் சமைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    இதை தவிர்க்க தற்போது, சிலிண்டர் பதிவு செய்வது குறித்து நினைவூட்டல் எஸ்.எம்.எஸ்., அனுப்பும் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

    அந்த எஸ்.எம்.எஸ்.,-ல் கடைசி சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்ட தேதி மற்றும் சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டிய மிஸ்டு கால் எண், இணையதள, 'லிங்க்' ஆகியவையும் அனுப்பப்படுகிறது.

    • பல ஆயிரக்கணக்கான திருப்தியான வாடிக்கையாளர்களை தனக்கென கொண்டு உள்ளது.
    • 100-க்கும் மேற்பட்ட சோபா செட், கட்டில், டைனிங் டேபிள், பீரோக்கள் புதிதாக வந்துள்ளன

    நாகர்கோவில் :

    பர்னிச்சர்கள் என்றாலே குமரி மாவட்ட மக்களின் நினைவுக்கு வருவது ராயல் பர்னிச்சர் தான். நாகர்கோவில் பீச்ரோடு சந்திப்பு அருகில் மறவன்குடியிருப்பில் அமைந்துள்ளது ராயல் பர்னிச்சர் நிறுவனம். கடந்த 20 ஆண்டுகளாக வாடிக்கை யாளர் சேவையில் சிறப்பான பெயர் பெற்று, தென் தமிழ கத்தின் மிக பெரிய ஷோரூமாக இது விளங்கி வருகிறது.

    இங்கு தரமான பொருட்கள், நியாயமான விலை, கனிவான சேவை என்பதையே தாரக மந் திரமாக கொண்டு செயல்படுவதால், பல ஆயிரக்கணக்கான திருப்தியான வாடிக்கையாளர்களை தனக்கென கொண்டு உள்ளது.

    இங்கு புது, புது டிசைன்க ளில் இம்போர்ட்டடு பர்னிச்சர்கள், உள்நாட்டு பர்னிச்சர்கள், ஸ்டீல் பர்னிச்சர்கள், புதிய மாடல் ஷோபாக்கள், நவீன மாடல் கட்டில்கள், டைனிங் மற்றும் டிரஸ்சிங் டேபிள்கள், டி.வி. ஸ்டாண்டுகள், வித, விதமான கம்ப்யூட்டர் டேபிள்கள் மற்றும் ரோலிங் இருக் கைகள், அலுவலகங்க ளுக்குரிய மேஜைகள், புக் செல்ப், பைல் ரேக் போன்ற அனைத்து விதமான பர்னிச்சர்களும் ஏராளமான மாடல்களில் உள்ளன.

    இங்கு வாடிக்கையா ளர்களுக்கான சுலப தவணை திட்ட வசதியும் செயல்ப டுத்தப்பட்டு வருகி றது. குறிப்பிட்ட தொகைக்கு பொருள்கள் வாங்கும் வாடிக் கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவ ரியும் செய்கிறோம். மர பர்னிச்சர் களை பொறுத்தவரையில் வாடிக்கையாளர்கள் விரும்பும் படியான மாடல்களில் பர்னிச்சர் களை தங்களது சொந்த தொழிற்சா லையில், உயர்தர தேக்கு, ஈட்டி மரங்களிலிருந்து தர மானதாக மிக நேர்த்தியாக, லைப்டைம் உத்திரவாதத்து டன் திறமை யான தொழிலாளர்களை கொண்டு செய்து கொடுக்கின்ற னர். இந்த நிறுவனத்தில் இம்போர்ட்டடு பர்னிச்சர், ஸ்டீல் பர்னிச்சர், அலுவலக பர்னிச்சர் என்று ஒவ்வொன் றிற்கும் தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டு, வாடிக்கை யாளர்கள் குடும்பத்துடன் வருகை தந்து பொருட் களை தேர்வு செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்ட சோபா செட், கட்டில், டைனிங் டேபிள், பீரோக்கள் புதிதாக வந்துள்ளன. வாடிக்கை யாளர்கள் தங்க ளிடம் உள்ள வீட்டு உபயோக பொருட்களை அதிக விலைக்கு கொடுத்து, புதிய பொருட்களை வாங்கி கொள் ளும் எக்சேஞ்ச் வசதியும் எப்போதும் உண்டு. மேற்கண்ட தகவல்களை ராயல் பர்னிச்சர் உரிமையாளர் ஆரோக்கிய வினோ தெரிவித்தார். 

    • நேஷனல் ஷாப்பிங் மாலில் பரிசுகளுடன் வாடிக்கையாளர்களுக்கு சலுகை கொடுக்கப்படுகிறது.
    • மேலும் விபரங்களுக்கு 97881 01122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா, நெற்குப்பை அருகே உள்ள பொன்னமராவதி பஸ் நிலையத்தின் அருகே உள்ள அஞ்சப்பர் டவர் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் நேஷனல் ஷாப்பிங் மால் பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார பகுதி யில் பிரபலமான கடையாக உள்ளது.

    இங்கு மளிகை சாமான் கள் முதல் வீட்டில் அன்றாட பயன்பாட்டுக்கு தேவை யான அனைத்து பொருட்க ளும் குறைவான விலையில் விற்கப்படுகிறது. இங்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 12-ந்தேதி வரை ஏராளமான காம்போ ஆபர்கள், பரிசு களுடன் சிறப்பு சலுகை விற்பனை அறிவிக்கப்பட் டுள்ளது. இத்துடன் பிளாஸ் டிக் பக்கெட்டு இலவசமாக வழங்கபடுகிறது.

    மேலும் ரூ.1,449-க்கு மேல் மளிகை பொருட்கள் வாங்குவோருக்கு பிளாஸ் டிக் டப், ரூ.2,999-க்கு மேல் வாங்குவோருக்கு பக்கெட், ரூ.4,999-க்கு மேல் வாங்கு வோருக்கு சேர், குலோப் ஜாமூனுக்கு பாக்கெட்டுக்கு பாக்கெட் இலவசத்துடன் வாளியும் வழங்கப்படுகிறது.

    இந்த ஆபர்களை பயன்ப டுத்தி வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி, பரிசு களையும் பெற்றுச் சென்று தீபாவளி பண்டி கையை சிறப்பாக கொண்டாடிட பொன்னமராவதி நேஷனல் ஷாப்பிங் மால் நிறுவனத் தார் அழைப்பு விடுத்துள்ள னர். மேலும் விபரங்களுக்கு 97881 01122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கப்பட் டுள்ளது.

    • ஓட்டல் ஊழியர்கள் உருட்டு கட்டைகளை எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர்களை தாக்கினர்.
    • வாடிக்கையாளர்களை ஓட்டல் ஊழியர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    ஐதராபாத் அமிட்சில் பழமை வாய்ந்த பிரபல ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் ஐதராபாத் பிரியாணி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    புத்தாண்டு தினத்தையொட்டி ஓட்டலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது வாடிக்கையாளர்கள் கும்பலாக பிரியாணி சாப்பிட வந்தனர்.

    அவர்களுக்கு பிரியாணி பரிமாறப்பட்டது. அந்த பிரியாணி சூடாக இல்லை. மேலும் ருசியாகவும் இல்லை என வாடிக்கையாளர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

    இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கும் ஓட்டல் ஊழியர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    திடீரென அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஓட்டல் ஊழியர்கள் உருட்டு கட்டைகளை எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர்களை தாக்கினர்.

    மேலும் சேர்களை தூக்கி அவர்கள் மீது வீசினர். இதனைக் கண்ட பொதுமக்கள் ஓட்டலில் இருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

    இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருதரப்பினரையும் போலீஸ் நிலையம் அனைத்து சென்று விசாரித்தனர்.

    ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.அதில் ஓட்டல் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் மீது கட்டை மற்றும் சேர்களை கொண்டு தாக்குவது பதிவாகி இருந்தது.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்:

    பிரியாணி சூடாக இல்லை என்றதால் இந்த பிரச்சனை நடந்துள்ளது.முதலில் வாடிக்கையாளர் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது திடீரென இந்த வாடிக்கையாளர் ஓட்டல் ஊழியரை தாக்கியதால் நிலைமை மோசமாகியுள்ளது.

    இது தொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    வாடிக்கையாளர்களை ஓட்டல் ஊழியர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • பல உணவு பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது.
    • பில்லின் புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார்.

    துருக்கியை சேர்ந்தவர் பிரபல சமையல் கலை நிபுணர் நுஸ்ரெட் கோட்சே என்ற சால்ட் பே. இவர் துபாயில் ஒரு உணவகம் நடத்தி வருகிறார். அங்கு சமீபத்தில் ஒரு வாடிக்கையாளர்கள் குழுவாக சென்று உணவு சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு வந்த பில் தொகையை சால்ட் பே தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    மிகப்பெரிய உணவு பில்லான அதில், மொத்தம் ரூ.90 லட்சம் பில் தொகை இருந்தது. 'பணம் வரும்... போகும்...' என்ற தலைப்புடன் அந்த பில்லின் புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார். அந்த பில்லில், பிரெஞ்ச் பொறியல், கோல்டன் பக்லாவா, பழத்தட்டு, துருக்கிய காபி மற்றும் சமையல்காரரின் கையொப்பம் கொண்ட இறைச்சி உணவுகள் உள்ளிட்ட பல உணவு பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    உணவை தவிர பல விலை உயர்ந்த பானங்களையும் அருந்தியதற்கான தொகையும் பில்லில் இருந்தது. அதோடு வாடிக்கையாளர்கள் தாராளமாக சுமார் ரூ.20 லட்சத்தை டிப்ஸ்சாக வழங்கி இருந்ததும் பில்லில் இடம் பெற்றிருந்தது. இந்த பில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நாள்தோறும் பல லட்சக்கணக்கான மக்கள் பசியால் அவதிப்படும் போது ஒரு நேர உணவுக்காக இவ்வளவு செலவழிப்பது வெட்கக்கேடானது என ஒரு பயனரும், பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என மற்றொரு பயனரும் பதிவிட்டுள்ளனர்.

    • உலகளவில் 184 நாடுகளில் சேவைகளை தடையின்றி டேட்டா சேவைகளை பெற அனுமதி அளித்திருந்தது.
    • ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு புதுபுது வசதிகளை செய்து வருவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.

    2022 டிசம்பர் மாதம் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்காக ஏர்டெல் வேர்ல்ட் பாஸ் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் உலகளவில் 184 நாடுகளில் சேவைகளை தடையின்றி டேட்டா சேவைகளை பெற அனுமதி அளித்திருந்தது. எனவே ஏர்டெல் வாடிக்கையாளர்கள் விமான நிலையத்திற்குச் சென்றாலும் அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்தாலும், இந்த ஒரு பேக் இப்போது அனைத்து ரோமிங் தேவைகளுக்கும் ஏற்றதாக இருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

    அதன்படி வெளிநாடுகளில் அதிகம் தங்குபவர்கள் அல்லது அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களுக்கென சிறப்பு ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பேக்குகள் மலிவு விலையில் சுமார் 1 வருடம் வரை செல்லுபடியாகும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உலகின் எந்த மூலையிலிருந்தும் வாடிக்கையாளருக்கு 24X7 கால் சென்டர் மூலம் வாடிக்கையாளர் சேவையை முற்றிலும் இலவசமாக பெறலாம் என்றும் தெரிவித்து அதை நடைமுறைபடுத்தி இருந்தது. இந்த மூலம் வெளிநாடுகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்விக்கும் விதமாகவும், பயனுள்ளதாக இருந்தது.


    இதை தொடர்ந்து இந்த ஆண்டு ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதவாது.

    வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் வாடிக்கைகாளர்கள் அந்தந்த நாட்டில் புதிய சிம் கார்டுகளை வாங்குபதை தவிர்க்கும் வகையில் 'அனைத்து நாடுகளுக்கும் ஒரே பிளான்' என்ற பெயரில் 'புதிய சர்வதேச ரோமிங்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி, 10 நாட்களுக்கு 1GB இணைய சேவையுடன் 100 நிமிடங்கள் டாக் டைம் கொண்ட இந்த புதிய திட்டம் 899 ரூபாய் கட்டணத்தில் கிடைக்கும். அதே போல் 30 நாட்களுக்கான கட்டணம் ரூபாய் 2998 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெளிநாடு செல்லும் பயணிகளுக்கும் மிகவும் உபயோகமானதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

    • கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை
    • ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது

    கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

    2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட திருத்த நடவடிக்கை விதிமுறைகளை தனது ஐடி கட்டமைப்பில் கடைபிடிக்க கோடக் மஹிந்திரா வங்கி தவறியுள்ளது.

    ஆகவே தகவல் பாதுகாப்பு குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    ரிசர்வ் வங்கியின் இந்த தடையால் தற்போது இவ்வங்கி வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களின் பணம், வாடிக்கையாளர்களின் சேவை ஆகியவற்றில் எவ்விதமான பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆனாலும், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது. காரணம் இவ்வங்கி தனது பெரும்பாலான புதிய வாடிக்கையாளர்களை ஆன்லைன் வாயிலாகவும், மொபைல் சேவை வாயிலாக தான் பெறுகிறது.

    • கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை
    • ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது

    கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

    2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட திருத்த நடவடிக்கை விதிமுறைகளை தனது ஐடி கட்டமைப்பில் கடைபிடிக்க கோடக் மஹிந்திரா வங்கி தவறியுள்ளது.

    ஆகவே தகவல் பாதுகாப்பு குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    ரிசர்வ் வங்கியின் இந்த தடையால் தற்போது இவ்வங்கி வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களின் பணம், வாடிக்கையாளர்களின் சேவை ஆகியவற்றில் எவ்விதமான பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆனாலும், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது. காரணம் இவ்வங்கி தனது பெரும்பாலான புதிய வாடிக்கையாளர்களை ஆன்லைன் வாயிலாகவும், மொபைல் சேவை வாயிலாக தான் பெறுகிறது.

    இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 13% வரை சரிவை கண்டுள்ளது.

    இதன்மூலம், கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனரான உதய் கோடக் தனது சொத்து மதிப்பில் சுமார் 10,831 கோடி ரூபாயை இழந்துள்ளார். நேற்றைய நிலவரப்படி அவரிடம் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருந்தது என ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் தெரிவித்துள்ளது.

    • சுரேஷ் பாபு என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஸ்விக்கிக்கு எதிராக புகார் ஒன்றை அளித்தார்.
    • சுரேஷ் பாபுவுக்கு ஸ்விக்கி நிறுவனம் இழப்பீடாக ரூ.35,453 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    வாடிக்கையாளரை ஏமாற்றி அதிக பணம் வசூலித்ததாக ஸ்விக்கி நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூ.35,000 அபராதம் விதித்துள்ளது.

    ஐதராபாத்தில் வசிக்கும் சுரேஷ் பாபு என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஸ்விக்கிக்கு எதிராக புகார் ஒன்றை அளித்தார்.

    அந்த புகாரில், "ஸ்விக்கி மெம்பர்ஷிப்பை நான் வாங்கியுள்ளேன். இதன்மூலம் குறிப்பிட்ட தூரத்திற்குள் உணவு இலவசமாக டெலிவரி செய்யப்படும். ஆனால் நவம்பர் 1 அன்று ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்தேன். எனது வீட்டிற்கும் உணவகத்திற்கும் இடையிலான தூரம் 9.7 கிமீ ஆகும். ஆனால் 9.7 கி.மீ-ஆக இருந்த டெலிவரி தூரத்தை வேண்டுமென்றே 14 கி.மீ-ஆக அதிகரித்து என்னிடமிருந்து அதற்காக 103 வசூலித்தார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுரேஷ் பாபுவுக்கு ஸ்விக்கி நிறுவனம் இழப்பீடாக ரூ.35,453 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 45 நாட்களுக்குள் இந்த இழப்பீடு தொகையை ஸ்விக்கி நிறுவனம் வழங்கவேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×