என் மலர்
நீங்கள் தேடியது "உறுதிமொழி"
- ரெயில் நிலையத்தில் புகை பிடிக்காத தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
- 50 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
புகை பிடிக்காத தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மற்றும் திருப்பூர் ரெயில் நிலையமும் இணைந்து ரெயில் நிலையத்தில் புகை பிடிக்காத தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார், நிலைய துணை மேலாளார் (பொறுப்பு) மகேஸ்வரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முதன்மை வணிக ஆய்வாளர் சரவணகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். சேலம் கோட்ட பயணிகளின் ஆலோசக குழு உறுப்பினர் சுரேஷ் குமார் வாழ்த்துரை வழங்கினார்.
மாணவச் செயலர்கள் சுந்தரம், காமராஜ், பூபாலன், பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு புகை என் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது, இதனால் அருகாமையில் இருப்பவர்க ளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்வேன் போன்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
- கண்தானம் பெறப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- அனைவரும் கண்தான உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் வசித்து வந்த ரவிச்சந்திரன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து, குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் மூலம் கண்தானம் பெறப்பட்டு மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கண் தானம் வழங்கிய குடும்பத்தினருக்கு பாராட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை தாங்கி, ராய் டிரஸ்ட் சார்பில் கண்தான சான்றிதழை குடும்பத்தினரிடம் வழங்கினார்.
இதில் கருணாநிதி, ராய் டிரஸ்ட் நிறுவனர் துரை ராயப்பன், சென்னை ரவிச்சந்திரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
இது குறித்து ராய் டிரஸ்ட் நிறுவனர் துரை ராயப்பன் கூறுகையில்:-
அனைவரும் மண்ணுக்கு போகும் கண்ணை தானம் செய்து அடுத்தவரின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என்றார்.
தொடர்ந்து, அனைவரும் கண்தான உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
- மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றனர்.
- அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மதுரை
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 14-ந்தேதியை சமத்துவ நாளாக கடைப்பிடிக்க தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. இதில் அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி ஒதுக்கப்பட்டவர்க ளுடைய உரிமைகளுக்காக வும், ஒடுக்கப்பட்ட வர்களுடைய சமத்துவத் திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமை களை பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியல மைப்பு சட்டத்தை வகுத்து தந்த அம்பேத்கர் பிறந்த நாளில் சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சகமனிதர்களிடம் சமத்து வத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என்று இந்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் நாகராஜன், துணை ஆணையாளர்கள்முஜிபூர் ரகுமான், தயாநிதி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி ஆணையாளர் (கணக்கு) விசா லாட்சி, உதவி ஆணை யாளர் (பணி) ஆறுமுகம், கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் சமத்துவநாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூகஅடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடையஉரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள்எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்பு சட்டத்தை வகுத்து தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தைஅமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களை சாதியின்பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம்சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என அனைத்துத்துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது)விஜயராஜ், (நிலம்) துரை, தனிதுணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) அம்பாயிரநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நலஅலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
- அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- சமத்துவ நாள் உறுதிமொழி அனைவரும் ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
நாமக்கல்:
தமிழ்நாடு முதல்- அமைச்சர் ஸ்டாலின், நமது அரசியலமைப்பு சட்டத்தை வகுத்துத்தந்த அண்ணல் அம்பேத்காரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டா டப்படும் என்று அறிவித்து, சமத்துவ நாள் உறுதிமொழி அனைவரும் ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையொட்டி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய, அண்ணல் அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உறுதி மொழியை வாசித்தார். அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உறுதி மொழியை ஏற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவ சுப்பிரமணியம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுகந்தி, கலால்துறை உதவி கமிஷனர் செல்வி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- கல்லூரி மாணவிகளுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு நலக்கல்வி அளிக்கப்பட்டது.
- அனைவரும் டெங்கு குறித்த சுகாதார உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை துணை இயக்குனர் சுகாதார பணிகள் விஜயகுமார் உத்தரவின் பேரில் பொரவாச்சேரி ஆண்டவர் நர்சிங் கல்லூரியில் தேசிய டெங்கு தினம் மே 16 கடைபிடிக்கப்பட்டது.
மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அதிகாரி மரு. லியாக்கத் அலி மாவட்ட நல கல்வி அலுவலர் மணவாளன் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் நேர்முக உதவியாளர் கோகுல்நாதன் வட்டார சுகாதார மேற்பா ர்வையாளர் பொறுப்பு செந்தில்குமார் ஆண்டவர் கல்லூரியின் தாளாளர் நடராஜன் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர்கள் களப்பணி உதவியாளர்கள் டெங்கு காய்ச்சல் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கல்லூரியில் பயிலும் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பேரணி சென்றனர் கல்லூரி மாணவிகளுக்கு டெங்கு பற்றிய விழிப்புணர்வு நலக்கல்வி அளிக்கப்பட்டது மேலும் டெங்கு பற்றிய சுகாதார உறுதிமொழியை சுகாதார ஆய்வாளர் மணிமாறன் வாசித்தார்.
முடிவில் வடுகச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையசுகாதார ஆய்வாளர் சுத்தானந்த கணேஷ் நன்றி கூறினார்.
- மதுரை அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
- வீடு, வீடாகச் சென்று குப்பைகளை தரம் பிரித்து வழங்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும் கேட்டுக் கொண்டனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வாவிடமருதூர் ஊராட்சியில் ''நம்ம ஊரு சூப்பரு'' மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்கள் முன்னிலையில் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசர், யூனியன் அலுவலர் வடிவு, ஊராட்சி செயலாளர் ஸ்டாலின் முன்னிலையில் வீடு, வீடாகச் சென்று குப்பைகளை தரம் பிரித்து வழங்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும் கேட்டுக் கொண்டனர். இது தொடர்பான விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
- பணியாளர்கள் உறுதிமொழியை சமூக இடைவெளியை கடைபிடித்து எடுத்துக் கொண்டனர்.
கரூர்,
கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் "உலக புகையிலை ஒழிப்பு தினம்" உறுதிமொழி தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள கால அலுவலகத்தின் அருகில் உறுதிமொழி ஏற்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் உற்பத்தி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பு முதன்மை பொது மேலாளர் வரதராஜன், எலக்ட்ரிக்கல் அன்ட் இன்ஸ்ட்ரூமென்டேசன் உற்பத்தி பொது மேலாளர்கள் ராஜலிங்கம், மகேஷ், பாதுகாப்பு துணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், ஐடி உதவி பொது மேலாளர் பாலமுருகன் மற்றும் மனிதவளம் முதுநிலை மேலாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழியை சமூக இடைவெளியை கடைபிடித்து எடுத்துக் கொண்டனர்.
- குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
- அனைவருக்கும் தொடக்கக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
மதுரை
தமிழ்நாடு அரசு குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிடும் நோக்கில் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சிறார் அனைவருக்கும் தொடக்கக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட் டுள்ளது. கல்வி இடை நிற்றலை தடுப்பதற்கும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் குழந்தைகளின் அடிப்ப டை உரிமைகள் குறித்தும், குழந்தைத் தொழி லாளர் முறையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பொது மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி குழந்தைத் தொழி லாளர் முறை எதிர்ப்புத் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்புத்தினத்தை முன்னிட்டு கலெக்டர் சங்கீதா தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், சமூக பாது காப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சவுந்தர்யா, மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் கார்த்தி கேயன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
- கையெழுத்து இயக்கத்தை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார்.
அரியலூர்,
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்பை வாசிக்க அனைத்து அரசு அலுவலர்களும் அதனை திரும்ப கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
முன்னதாக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மு.தர்மசீலன். தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் தேவேந்திரன், குழந்தைகள் நலக்குழு தலைவர் செந்தில்குமார், பாதுகாப்பு அலுவலர் ஜெ.செல்வராசு மற்றும் குழந்தைகள் இலவச உதவி மையம் 1098 உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
- மாவட்ட கலெக்டர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்
பெரம்பலூர் :
தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு உலக குழந்தை தொழிலாளர் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் தலைமையிலும், அனைத்து துறை அரசு அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: 14 வயதிற்குட்பட்ட எந்தவொரு குழந்தையையும் எவ்வித பணியிலோ அல்லது தொழிலிலோ ஈடுபடுத்தக்கூடாது. அவ்வாறு மீறி அமர்த்தினால் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்து ரூ.50 ஆயிரம் அபராதமோ அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்க நேரிடும்.
பொதுமக்கள், குழந்தை தொழிலாளர் பணிபுரிவதை கண்டால் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் எவறும் இல்லை என்ற நிலையினை உருவாக்கிட பாடுபட வேண்டும், என்றார். மேலும் பெரம்பலூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையிலும், மாவட்ட போலீசார் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
- உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் பனியன் நிறுவனத்தில் அனுசரிக்கப்பட்டது.
- குழந்தைகளை வேலைக்கு பணியமர்த்துவதை தடுக்க வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 சார்பாக உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் பனியன் நிறுவனத்தில் அனுசரிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக தொழில் அதிபர் மெஜஸ்டிக் கந்தசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறுகையில், குழந்தைகள் நமக்கு தெய்வம் தந்த வரம், அவர்கள் எதிர்காலம் சிறக்க நல்ல குழந்தைகளாக வளர்க்க வேண்டும். குழந்தைகளை வேலைக்கு பணியமர்த்துவதை தடுக்க வேண்டும்.அவர்களுக்கு நல்ல கல்வியை தரவேண்டும். பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளிக்கு செல்ல ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
மேலும் ஒவ்வொரு குழந்தை தொழிலாளி உருவாகும் போது எண்ணற்ற சாதனையாளர்களை இழக்கிறோம்.நாட்டின் எதிர்காலம் இருண்டு விடும் என்றார். பிறகு மாணவ செயலர்கள் விஜய், ராஜபிரபு, பூபதிராஜா ஆகியோர் தலைமையில் பனியன் தயாரிக்கும் நிறுவனத்தில் அனைவருக்கும் சமூகநீதி, குழந்தை தொழிலாளர் முறைக்கு முடிவு கட்டுங்கள் என்ற மைய கருத்தை வலியுறுத்தி அங்குள்ள தொழிலாளர்களுடன் இணைந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.