என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்தரங்கு"

    • பயோமெடிக்கல் துறையில் சாப்ட்வேர் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கு நடந்தது.
    • சிறப்பு விருத்தினராக புனே ‘‘பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்’’ தலைமை பொறியாளர் தங்கராஜ் கலந்துகொண்டார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் பயோமெடிக்கல் துறையின் சார்பில் ''பயோமெடிக்கல் துறையில் சாப்ட்வேர் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு'' என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு நடந்தது.

    பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். டீன் மாரிச்சாமி வாழ்த்துரை வழங்கினார்.

    துறையின் 3-ம் ஆண்டு மாணவி நூரூல் பெர்த்ஹெஸ் வரவேற்றார். மாணவி சோபியா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். பயோமெடிக்கல துறையின் தலைவர் மணிகண்டன் வாழ்த்துரை வழங்கினார்.

    சிறப்பு விருத்தினராக புனே ''பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்'' தலைமை பொறியாளர் தங்கராஜ் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், நவீன காலத்தில் பயோமெடிக்கல் துறையின் பங்களிப்பானது சமுதாயத்திற்கும், மருத்துவத்துறைக்கும் மாற்றத்தை ஏற்படுத்திய துறை ஆகும்.

    ஏெனனில் கொரோனா காலக்கட்டத்தில் நோயின் தீவிரத்தை கண்டறிய பி.சி.ஆர். கிட், தடுப்பூசிகள் போன்றவை பயோமெடிக்கல் துறையின் வளர்ச்சிகள் ஆகும். இன்று மருத்துவ துறையில் உள்ள அனைத்து விதமான எலக்ட்ரானிக்ஸ் கருவிகளான (இ.சி.ஜி., சி.டி., எம்.ஆர்.ஐ., பல்ஸ் ஆக்சிமீட்டர்) வெப்ப நிலைமானி, ரத்த அழுத்தமானி, புற்றுநோய் சிகிச்சைக்கான கதிர்வீச்சு கருவி, ரோபோக்கள் மூலம் அறுவை சிகிச்சை கருவிகள் அனைத்தும் ''எம்படட்'' தொழில்நுட்ப த்தின் மூலம் கருவிகள் ஆகும்.

    எம்படட் தொழில்நுட்பம் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பைப் பெறுவது எளிதானது என்றார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர்கள் கீர்த்திகா, காளீஸ்வரி மற்றும் துறையின் பிற பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • வேளாண்மை அறிவியல் நிலையம், அட்மா திட்டம் சார்பில் உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.
    • கருத்தரங்கில் நாமக்கல், கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்வராஜூ சிறப்புரை ஆற்றினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையம், அட்மா திட்டம் சார்பில் உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சியை நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி தலைமை தாங்கி ெதாடங்கி வைத்தார்.உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் நாச்சிமுத்து முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் நாமக்கல், கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்வராஜூ சிறப்புரை ஆற்றினார் .

    மேலும் சேலம், சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையம், திட்ட ஒருங்கிணைப்பாளர், ஜெகதாம்பாள், நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுதுரை, உதவி பேராசிரியர்கள் முருகன், சங்கர், சத்யா, முத்துசாமி, பால்பாண்டி, தேன்மொழி ஆகியோர் விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களின் சந்தேகங்களை கேட்டறிந்து விளக்கம் அளித்தனர்.

    கண்காட்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய முறையில் சிறுதானிய மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் பி.ஜி.பி வேளாண்மை கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகள் வாயிலாக இயற்கை வேளாண்மை குறித்தும், சிறுதானியங்கள் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினர். முடிவில் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் தனலட்சுமி நன்றி கூறினார்.

    • ஊடகத்துறையில் மகளிர் பங்களிப்பு எனும் தலைப்பில் தனியார் கல்லூரியில் கருத்தரங்கு நடைபெறுகிறது.
    • ஊடகத்துறையில் மகளிர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சர்வதேச கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது.

    சென்னையில் உள்ள பிரபல மகளிர் தனியார் கல்லூரியில் ஊடகங்களில் மகளிர் பங்களிப்பு என்ற தலைப்பில் வரும் 3ஆம் தேதி முதல் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைப்பெற இருக்கிறது.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவி மகளிர் கல்லூரியில் ஊடகப்பிரிவு தொடர்பான பாடப்பிரிவில் பயின்ற மகளிர் ஊடகத்துறையில் சிறந்து விளங்குகின்றனர். இந்த நிலையில் அந்த கல்லூரியில் ஊடகங்களில் மகளிரின் பங்களிப்பு என்ற தலைப்பை மையமாகக் கொண்டு சர்வதேச கருத்தரங்கம், நடைபெற உள்ளது.

    பிப்ரவரி 3 மற்றும் 4 தேதிகளில் நடக்கும் இந்த கருத்தரங்கில், அதே கல்லூரியில் பயின்று வெளி நாடுகளில் பணியாற்றுபவர்கள் பங்கேற்கிறார்கள். ஊடகத்துறையில் மகளிரின் பங்களிப்பு மாற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சர்வதேச கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கருத்தரங்கு நடந்தது.
    • இதில் 270 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் சார்பில் ''ஜும்பா உடற்பயிற்சி (கற்றுநர் மற்றும் தகுதி யாகுதல்)'' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.

    முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர்- கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் பொறுப்பாளர் பாபு பிராங்கிளின் அறிமுக உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மதுரை ஜும்பா உடற்பயிற்சி பயிற்சி யாளர் சுதா தயாளன் கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், ஜூம்பா உடற்பயிற்சி என்பதன் பொருள், மற்ற உடற்பயிற்சிகளை விட இதிலுள்ள உற்சா கமான விஷயம் உடலில் உள்ள கலோரிகளை எரித்தல், மனதிலும், உடலிலும் ஏற்படும் ஆரோக்கியமான மாற்றங்கள் பற்றி எடுத்து ரைத்தார். மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

    வணிகவியல் துறை முதலாமாண்டு மாணவி ஹேமியஸ்ரீ தொகுத்து வழங்கினார். மாணவி ஜமுனாதேவி வரவேற்றார். மாணவி ஜெயராசாத்தி நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவி பேராசிரியர், ஜூனியர் ஜேசிஸ் விங் பொறுப்பாளர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார். இதில் 270 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது.
    • நிறைவு விழாவில் 4-ம் ஆண்டு மாணவி பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பியல் துறை சார்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கை (ELCOWARZ-2023) நடத்தியது.

    பி.எஸ்.ஆர். கல்விக் குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தொடங்கி வைத்தார். இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

    டீன் மாரிச்சாமி வாழ்த்துரை வழங்கினார். மின்னணுவியல் துறைத்தலைவர் வளர்மதி கருத்தரங்கின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார். 4-ம் ஆண்டு மாணவர் அய்யனார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கோவை ''மைண்ட்நோடிக்ஸ் டெக்னாலஜிஸ்'' நிறுவனர் சதீஷ்குமார் சேட்டு கலந்து கொண்டார். அவர் பேசுகையில், மாணவர்கள் தங்களுக்கென்று ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றவாறு செயல்புரிய வேண்டும்.

    மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். புதுமையான செயல்திறன் மிக்க கண்டுபிடிப்புகளை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஆய்வு கட்டுரைகளை உருவாக்க வேண்டும் என்றார்.

    கருத்தரங்கில் தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர். கனெக்சன். போன்ற தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகளும், தொழில் நுட்பம் சாராத போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

    நிறைவு விழாவில் 4-ம் ஆண்டு மாணவி பிரியதர்ஷினி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசியர் ஒருங்கினைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ராமலட்சுமி மற்றும் துறைப்பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் இணைந்து செய்திருந்தனர்.

    • ஒற்றை சாளர முறை தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.
    • குண்டூசி முதல் விமான உதிரி பாகங்கள் வரை தயார் செய்யப்படுகிறது.

    ஓசூர்,

    ஓசூரில், வழிகாட்டி தமிழ்நாடு மற்றும் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், ஒற்றை சாளர முறை தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.

    ஓசூர் மூக்கண்டபள்ளி பகுதியில் உள்ள ஓட்டல் ஹில்ஸ் கூட்டரங்கில் நடந்த கருத்தரங்கினை, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், தொடங்கி வைத்து பேசியதாவது: -

    முன்னேறி வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 110 பெருநிறுவனங்கள், ஏராளமான சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் உள்ளன. இந்த நிறுவனங்களில் குண்டூசி முதல் விமான உதிரி பாகங்கள் வரை தயார் செய்யப்படுகிறது.

    மேலும், கிரானைட் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களான மா, காய்கறிகள், கொய்மலர்கள் போன்ற ஏற்றுமதி செய்யக்கூடிய மலர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி 14 - ஆம் தேதி, காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு ரூ 4 கோடி முதல் 5 கோடி வரை ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.மோட்டார் வாகன உதிரி பாகங்கள் மற்றும் விவசாயம் சார்ந்த உற்பத்தி பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில், 15 சதவீதம் இந்த மாவட்டத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    ஒற்றைச் சாளர முறையில் உணவு பாதுகாப்பு மருத்துவம், தீயணைப்பு, நகர கட்டமைப்பு, மின்சார உற்பத்தி, வேளாண்மை சார்ந்த தொழில்கள் குறித்து வரப்பெற்ற 367 மனுக்களில் 317 மனுக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு, தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளான சாலை, போக்குவரத்து, மின்சாரம், குடிதண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளை தங்குதடையின்றி வழங்க தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஆகவே, தொழில் முனைவோர்கள் அரசின் வழிகாட்டுதலின்படி தொழில் தொடங்கி, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, கலெக்டர் தீபக் ஜேக்கப் கருத்தரங்கில் பேசினார். 

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் கருத்தரங்கு நடந்தது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் (கணினி பயன்பாட்டியல்) துறை சார்பில் வணிகத்தில் சமீபத்திய கணினி தொழில்நுட்ப பயன்பாடு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஸ்ரீ செளடாம்பிகா பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவர் முத்துக்குமார் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் இரண்டாமாண்டு மாணவி பத்மகலா அனைவரையும் வரவேறறார். முதல்வர் பாலமுருகன் பேசுகையில் மாணவர்களின் போட்டியிடும் திறனை வளப்படுத்த இத்தகைய கருத்தரங்குகள் அவசியம் என்றார்.

    சிறப்பு விருந்தினர் முத்துக்குமார் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பல்வேறு பயன்பாடுகளை சுட்டிக்காட்டினார். மேலும் நிலையான வளர்ச்சிக்கு கணினி சார்ந்த தொழில்நுட்பத்தின் தற்போதைய கண்டுபிடிப்புகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். நிறைவாக, இரண்டாமாண்டு மாணவி அபிலட்சுமி நன்றி கூறினார். துறை தலைவர் நளாயினி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர் கிருஷ்ணன் செய்திருந்தார். இந்தக் கருத்தரங்கில் வணிகவியல் (கணினி பயன்பாட்டியல்) துறையைச் சேர்ந்த 238 மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கருத்தரங்கு நடந்தது.
    • நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நிறுவன புதுமையாக்க அமைப்பின் சார்பில் "வடிவமைப்பு சிந்தனை, விமர்சன சிந்தனை மற்றும் புதுமை வடிவமைப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. கோவை சி.வி.ஓ. விட்டி வைஸ் நிறுவனர் சன்மதி கார்த்திக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், வடிவமைப்பு சிந்தனையை விமர்சன சிந்தனையுடன் இணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களை மைய மாக கொண்ட தீர்வுகளை வழங்கும் படைப்பாற்றலை புதுமை தூண்டுகிறது என்றார். வடிவமைப்பு சிந்தனை என்பது புதிய மற்றும் பழைய தீர்வுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கு வதற்கான உலக ளாவிய பயன்பாடாகும்.

    வணிகத் துறையில் உள்ள இடைவெளியைக் கண்டறிந்து புதுமைகளைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் விளக்கினார். நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் வர வேற்றார். தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர் முருகன் நன்றி கூறினார். இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 114 மாணவர்கள் பங்கேற்றனர். நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • இயற்பியல் துறை சார்பாக கருத்தரங்கு நடந்தது.
    • தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பேராசிரியர் கதிரவன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    தருமபுரி, 

    தருமபுரியை அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய இயற்பியல் துறை சார்பாக இரண்டு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது.

    இதன் தொடக்க விழாவில் பெரியார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பேராசிரியர் கதிரவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் கொச்சின் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ராஜப்பன், சென்னை செயின்ட் பீட்டர்ஸ் பல்கலைக்கழக புலமையர் பேராசிரியர் குணசேகரன், தெலுங்கானா மாநில வாரங்கல், கக்காட்டியா பல்கலைக்கழக பேராசிரியர் ரமணா ராவ், பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் செல்வ பாண்டியன், பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பிரசாத் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.

    இந்நிகழ்ச்சியில் ஆராய்ச்சி மைய இயக்குனர் மோகனசுந்தரம் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து சென்னை ஐ.எஸ்.பி.ஏ. அறிவியல் கழகத்தின் சார்பாக ஆந்திர பிரதேச செஞ்சூரியன் பல்கலைக்கழக பேராசிரியர் சாந்தம்மாவுக்கு சிறந்த பெண் விஞ்ஞானி விருதும், கொச்சின் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜப்பனுக்கு சிறந்த விஞ்ஞானி விருதும், கோவை என்.ஜி.பி கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பிரசாத்துக்கு டாக்டர் குணசேகரன் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் துறை தலைவருமான பேராசிரியர் செல்வ பாண்டியன் வரவேற்புரை வழங்கினார். இறுதியாக இக்கருத்தரங்கின் துணைத் தலைவர் முனைவர் பிரசாத் நன்றி உரை வழங்கினார். 

    • விருதுநகரில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
    • மாணவர்களின் சந்தேகங்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதிலளித்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர்- நுகர்வோர் நீதிபதி சேகர் தலைமையில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகம் மாவட்ட நுகர்வோர் ஆைணயத்தில் நடந்தது.

    மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர்கள் சவுந்தரராஜன், சாந்தி ஆண்டியப்பன், கிருஷ்ணப்பேளளரி காமாக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் மற்றும் அலுவலக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கருத்தரங்கில் தலைவர் நுகர்வோர் பாதுகாப்பு சட்டடத்தில் உள்ள சிறப்பு அம்சங்களை விளக்கினார். நுகர்வோர் ஆணையத்தில் எவ்வாறு நுகர்வோர் பயனடையலாம்? என்பதை பற்றியும் விளக்கமளித்தார்.

    மாணவர்களின் சந்தேகங்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதிலளித்தனர். எந்த ஒரு நுகர்வோரும் எளிமையாக வழக்கு தொடரலாம் என்றும் கூறினர்.

    • இவ்விழாவில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.
    • 25 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

    மொரப்பூர், 

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய மற்றும் பண்னாட்டு வாணிகத்தின் புதுமையான யுக்திகள் என்ற தலைப்பில் பண்னாட்டு தேசிய கருத்தரங்கு கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் மோகனராசு தலைமை வகித்து கருத்தரங்கை தொடங்கி வைத்தார். செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சாமிக்கண்ணு, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் பொன் வரதராஜன், கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளியின் தாளாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் குணசேகரன் வரவேற்று பேசினார். பண்னாட்டு தேசிய கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கிழக்கு ஆப்பிரிக்கா எத்தியோபியாவில் உள்ள சமரா யுனிவர்சிட்டியில் அக்கவுண்டிங் மற்றும் பைனான்சிஸ் துறை பேராசிரியர் சின்னையா அன்பழகன் சிறப்புரை ஆற்றினார்.

    இவ்விழாவில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.இதில் 25 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இக் கருத்தரங்கில் கொங்கு கல்வி அறக்கட்டளை இயக்குனர்கள் ராமு, வெற்றி செல்வன், குணசீலன், நாகராஜன், கணேசன், தமிழரசு, பரமசிவம் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

    • குளித்தலையில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு நடைபெற்றது
    • நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லுாரியில் எக்ஸ்னோரா, பொதுப்பணித்துறை, நீர் வளத்துறை மற்றும் சுற்றுச்சூழல் குழுமம் சார்பில், நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நீர் வளத்துறை பொறியாளர் ராஜகோபால் கருத்துரை வழங்கி பேசினார். தொடர்ந்து நீர் நிலைகள் பராமரிப்பில் இளையோரின் பங்கு என்ற தலைப்பில் நீர்வளத்துறை முன்னாள் பொறியாளர் சேகர், தமிழாய்வு துறை தலைவர் ஜெகதீசன், திருச்சி எக்ஸ்னோரா மண்டல தலைவர் விமல் ராஜ் கருத்துரை வழங்கினர். இதில் கல்லுாரி எக்ஸ்னோரா மாணவர்கள், பிற துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


    ×