என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 230629"

    திருவள்ளூர் அருகே லாரியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த சிறுவானூர் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ் பாபு. இவர் லாரி வைத்து தொழில் செய்துவருகிறார்.

    இந்த நிலையில் கை வண்டூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி இருந்த அவரது லாரி மாயமானது. அதனை மர்ம நபர் கடத்தி சென்று இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து சதீஷ்பாபு திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. சந்திரதாசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் தீவிர விசாரணை செய்தனர்.

    இதில் கடத்தப்பட்ட லாரி மப்பேடு அருகே உள்ள கோவிந்த மேடு கிராமத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று லாரியை மீட்டனர்.

    லாரி கடத்தல் தொடர்பாக திருத்தணி வெங்கடாபுரம் அம்பாள் நகரை சேர்ந்த முனிரத்தினம் என்பவரை கைது செய்தனர்.

    விசாரணையில் சதீஷ்பாபுவின் லாரியில் கைதான முனிரத்தினம் டிரைவராக வேலைபார்த்து விட்டு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நின்று இருப்பது தெரிந்தது. அவரை போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    விவாகரத்து தராததால் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி அடுத்த கோர்லகுண்டாவை சேர்ந்தவர் பத்மா இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேணுகோபாலுக்கும் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.

    திருமணமானதில் இருந்தே வேணுகோ பாலுக்கும், பத்மாவுக்கும் தகராறு இருந்து வந்தது.

    மேலும் வேணு கோபாலின் பெற்றோர் பாண்டுரங்கச்சாரி மற்றும் ராணி ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு பத்மாவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பத்மாவிடம் இருந்து விவாகரத்து கோரி வேணுகோபால் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் பத்மா தனது கணவரை விவாகரத்து செய்ய விரும்பவில்லை. இதனால் வேணுகோபால் ஆத்திரமடைந்தார். அவர் பத்மாவை கொலை செய்ய திட்டமிட்டார்.

    ஐதராபாத்தில் தனது அறையில் தங்கியுள்ள கர்நாடகாவை சேர்ந்த சந்தோஷ் என்பவரை காரில் அழைத்துக் கொண்டு திருப்பதிக்கு வந்தார்.

    அவர்கள் பத்மாவின் வீட்டிற்கு சென்று பத்மாவை காரில் அழைத்துக் கொண்டு சத்தியநாராயணபுரத்தில் உள்ள வீட்டிற்கு சென்றனர்.

    அங்கு வேணுகோபால் மரக்கட்டையால் பத்மாவின் தலையில் அடித்தார். இதில் காயமடைந்த அவர் மயங்கி விழுந்து இறந்தார்.

    அங்கிருந்த சந்தோஷ் மற்றும் வேணுகோபாலின் பெற்றோர் ஆகிய 4 பேரும் பத்மாவின் உடலை போர்வையால் போர்த்தி, உடலை இறுக்கி கட்டி காரின் பின்பக்க டிக்கியில் வைத்து வெங்கடாபுரம் குளத்தில் வீசினர்.

    பத்மா தனது கணவர் வேணுகோபாலுடன் ஐதராபாத்தில் இருப்பதாக பத்மாவின் பெற்றோர் நினைத்தனர். விவாகரத்து வழக்குக்காக வேணுகோபால், பத்மாவை கோர்ட்டுக்கு அழைத்து வருவார் என பத்மாவின் பெற்றோர் கருதி இருந்தனர்.

    ஆனால் மே 18-ந் தேதி விவாகரத்து வழக்கை ஒத்திவைக்க வேணுகோபால் வந்தார். கோர்ட்டு வளாகத்தில் பத்மா குறித்து பத்மாவின் பெற்றோர் வேணுகோபாலிடம் கேட்டபோது அவர் சரியான பதில் அளிக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கிழக்கு போலீசில் புகார் செய்தனர்.

    போலீசாரின் விசாரணையில் பத்மாவை கொலை செய்து ஏரியில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மதுரை திடீர் நகர் தெற்கு மெயின் ரோட்டை சேர்ந்த பாண்டி மனைவி விமலா (வயது 35).
    • போலீசார் திடீர்நகர் அவுட் போஸ்ட் பகுதியில் பதுங்கி இருந்த 4 பேரை சுற்றி வளைத்தனர்.

    மதுரை:

    மதுரை திடீர் நகர் தெற்கு மெயின் ரோட்டை சேர்ந்த பாண்டி மனைவி விமலா (வயது 35). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையில் ஏற்கனவே முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில் விமலா நேற்று இரவு வீட்டின் முன்பாக நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த திடீர்நகர் ராஜேந்திரன் மகன் சியாம் (18), யாசின், பாஸ்கர் என்ற சுண்டு, ராஜசேகர் மகன் முத்து (18) ஆகிய 4 பேரும் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டனர். இதில் விமலாவுக்கு சரமாரி அடி உதை விழுந்தது. எனவே விமலா இதுதொடர்பாக திடீர் நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் திடீர்நகர் அவுட் போஸ்ட் பகுதியில் பதுங்கி இருந்த 4 பேரை சுற்றி வளைத்தனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் போலீஸ் வாகனங்கள் மீது சரமாரியாக கல்வீசி தாக்கினார்கள். இதில் போலீஸ் வாகனத்தின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

    இருந்தபோதிலும் திடீர் நகர் போலீசார் ராஜேந்திரன் மகன் சியாம் (18) பாஸ்கர் என்ற சுண்டு, மற்றும் ராஜசேகர் மகன் முத்து (18) ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு மரப்பாலம் ஆலமரத்து வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் . இவர் திருட்டு வழக்கில் சூரம்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • தொடர்ந்து திருட்டு, அடிதடியில் ஈடுபட்டு வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் கலெக்டரிடம் பரிந்துரை செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மரப்பாலம் ஆலமரத்து வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவர் திருட்டு வழக்கில் சூரம்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தொடர்ந்து திருட்டு, அடிதடியில் ஈடுபட்டு வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் கலெக்டரிடம் பரிந்துரை செய்தனர். இதனை ஏற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதனையடுத்து மணிகண்டன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

    • கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்த 400 கிராம் கஞ்சா மற்றும் ரூ.600-ஐ பறிமுதல் செய்தனர்.

    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பிபட்டி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது தம்பிபட்டி தனியார் மில் அருகே பைக்கில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்த போது அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    இருவரையும் வத்திராயிருப்பு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தபோது கூமாபட்டி அமச்சியார்புரம் காலனியைச் சேர்ந்த முத்துச்செல்வம் (25), அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் (18) என்பது தெரியவந்தது. 2 வாலிபர்களையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 400 கிராம் கஞ்சா மற்றும் ரூ.600-ஐ பறிமுதல் செய்தனர். 

    • ஒருவர் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் திவாரி, மற்றொருவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.
    • வேலூர் சத்துவாச்சாரியில் திருடுபோன லாரியை நாமக்கல்லில் மீட்டனர்.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் கடந்த மாதம் 18-ந் தேதி இரவு லாரி ஒன்று திருடு போனது.

    இதனை கண்டுபிடிக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சத்துவாச்சாரி மற்றும் மாநகர பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் 2 பேர் ஒரு காரில் வந்து லாரியை திருடுவது தெரியவந்தது. அந்தக் கார் வேலூரிலிருந்து எங்கு சென்றது என்பதை அறிவதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யத் தொடங்கினர்.

    வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், விருதாச்சலம், ஜெயங்கொண்டம், கும்பகோணம், காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய இடங்கள் வழியாக 700 கிலோ மீட்டர் வரை சென்றது தெரியவந்தது. சுமார் 550-க்கும் மேற்பட்ட கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது குற்றவாளிகளை சரியாக அடையாளம் காண முடியவில்லை. இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் மூலமாக செல்போன்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

    இதில் குற்றவாளிகள் செல்போன் எண் கிடைத்தது. அவர்களில் ஒருவர் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் திவாரி, மற்றொருவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.

    இவர்கள் மீது 6-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது.

    ஓசூரில் பதுங்கி இருந்த 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வேலூர் சத்துவாச்சாரியில் திருடுபோன லாரியை நாமக்கல்லில் மீட்டனர்.

    கைதான 2 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    • ஈரோட்டில் புகையிலை பொருட்கள்- கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடா சலபதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது எண்ணமங்கலம், ராம கவுண்டன் குட்டை பகுதியில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் சோத னை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் - ஹான்ஸ் பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரிந்தது.

    விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்வன் என தெரியவந்தது. இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வனை கைது செய்தனர் அவரிடமிருந்து 105 புகையிலை, ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இதேப்போல் சத்தியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சலீம் தலைமையான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சத்தியமங்கலம்-பவானிசாகர் ரோட்டில் தரைபாலம் அருகே அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசை கண்டதும் தப்பியோட முயன்றார்.

    அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்(27) என்பதும் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்தி ருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • போலி ஆவணம் தயாரித்து ரூ.13 லட்சம் மோசடி செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்த வேலம்பட்டியைச் சேர்ந்தவர் வீரன் (வயது 90). இவர் மதுரை எஸ்.எஸ். காலனி குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

    அதில், எனக்கு சொந்தமான நிலத்துக்கு அரசாங்கம் இழப்பீடாக வழங்கிய ரூ.13 லட்சத்தை, துரைச்சாமி நகர், வீரணன், அவரது மகன் வினோத் ஆகிய 2 பேரும் போலி ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்து விட்டனர் என்று கூறப்பட்டு உள்ளது.

    இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கும் படி மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாசப்பெருமாள் மேற்பார்வையில், திடீர்நகர் உதவி கமிஷனர் ரவீந்திரபிரகாஷ் ஆலோசனை பேரில், எஸ்.எஸ்.காலனி குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் மணிக்குமார் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். மேலும் திண்டுக்கல் முதியவர் வீரனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது அவர் எனக்கும், துரைசாமி நகர் வீரணன் என்பவருக்கும் மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலூகா, செங்குளம் கிராமத்தில் நிலங்கள் உள்ளன. இதில் 85 செண்ட் நிலத்தை தமிழக நெடுஞ்சாலைத்துறை நான்கு வழி சாலைக்காக கையகப்படுத்தி கொண்டது. இதற்காக எங்களுக்கு ரூ.31 லட்சத்து 54 ஆயிரத்து 198 இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் எங்கள் இருவருக்கும் இடையே சமரச உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி நோட்டரி பப்ளிக் முன்னிலையில் ஒப்பந்த பத்திரம் தயாரானது. மொத்த சொத்தில் 57.5 சதவீத பங்கு வீரணனுக்கும், 42.5 சதவீத பங்கு எனக்கும் சொந்தமானது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இதற்கிடையே 4 வழி சாலைக்காக வழங்கப்பட்ட ரூ.31 லட்சத்து 54 ஆயிரத்து 198 தொகையை முழுவதுமாக அபகரிப்பது என்று வீரணனும், அவரது மகன் வினோத்தும் முடிவு செய்துள்ளனர். அவர்கள் என் அனுமதியின்றி ஒட்டு மொத்த பணத்தையும் தனிநபர் வங்கி கணக்குக்கு மாற்றம் செய்து உள்ளனர். இதற்காக அவர்கள் வங்கி அதிகாரிகள் துணையுடன் போலி ஆவணம் தயார் செய்து சமர்ப்பித்து உள்ளனர். அதில் என் கையெழுத்து போலியாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதன் அடிப்படையில் ஒட்டுமொத்த பணமும் வங்கி அதிகாரிகள் துணையுடன் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. எனக்கு 90 வயது ஆகிறது. கடந்த 3 ஆண்டுகளாக கையெழுத்து போட முடியாமல், கை ரேகை மட்டுமே பதிவு செய்து வருகிறேன். எனவே தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கொடுத்த பணத்தை போலி ஆவணம் வாயிலாக வங்கி அதிகாரிகள் துணையுடன் வீரணன் மற்றும் அவரது மகன் வினோத் ஆகிய இரண்டு பேரும் அபகரித்துக் கொண்டனர் என்று தெரிவித்துள்ளார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது வீரனுக்கு சொந்தமான நிலத்துக்கான நிவாரண தொகையை வினோத் தரப்பினர் போலி ஆவணம் தயாரித்து அதற்கான பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் வீரனுக்கு சொந்தமான நிலத்துக்கு போலி ஆவணம் தயார் செய்து ரூ.13 லட்சத்தை மோசடி செய்ததாக எஸ்.எஸ்.காலனி குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வினோத்தை போலீசார் கைது செய்து அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு கருங்கல்பாளையம், பெரியமாரியம்மன்கோவில் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு, ஜூன். 15-

    ஈரோடு கருங்கல்பாளையம், பெரியமாரியம்மன்கோவில் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசை பார்த்ததும் தப்பியோட முயன்றனர்.

    அவர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர்கள் கருங்கல்பாளையம், மாரியம்மன்கோயில் வீதியை சேர்ந்த வினோத்(32), ராஜாஜிபுரம் மணி(30) என தெரியவந்தது.

    அவர்களை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரிடமிருந்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • இளம்பெண் மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை மேலூர் அருகே உள்ள கீழவளவு கக்கன் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது35). கூலி வேலை பார்த்து வரும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்தநிலையில் அவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் வாட்சாம் பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு தனது பகுதியை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தண்ணீர் பிடித்து கொண்டிருந்ததை பார்த்தார்.

    அவரிடம் தனியாக பேச வேண்டும் என கூறியுள்ளார். ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் சிவக்குமாருக்கும், அந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அந்த இளம்பெண் சிவக்குமாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    அப்போது அவரை அங்குள்ள சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்று சிவக்குமார் கற்பழித்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த இளம்பெண் மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.தன்னை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று கற்பழித்ததாக அந்த இளம்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    அதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி சிவக்குமாரை கைது செய்தனர்.

    • குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • இந்த நிலையில் பிரதாப் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் வந்தது.

    மதுரை

    மதுரை அலங்காநல்லூர் காந்தி கிராமம் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரதாப் (வயது 32). இவர் மீது செயின் பறிப்பு, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த நிலையில் பிரதாப் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. எனவே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் பரிந்துரை செய்தார்.

    அதன்படி குண்டர் சட்டத்தின் கீழ் பிரதாப்பை கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

     

    ×