search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவடி"

    • நேற்று இரவே திருப்பரங்குன்றத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
    • முருகப்பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முத லாம் படை வீடாக போற் றப்படும் திருப்பரங்குன்றம் கோவிலில் கொண்டாடப் படும் விழாக்களில் வைகாசி விசாகப் பெருவிழா முக்கி யத்துவம் வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்காண விசா கத்திருவிழா, கடந்த 13-ந் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு தினமும் இரவு 7 மணிக்கு புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகன்-தெய்வானையுடன் உற்சவர் சன்னதியில் இருந்து புறப்பட்டு கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு நீர் நிரப்பப்பட்ட தொட்டியின் மீது அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித் தார். 9-ம் நாளான நேற்று வசந்த உற்சவத்தின் நிறைவு விழா நடைபெற்றது.

    10-ம் நாளான இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். வெளியூர்களில் இருந்தும் நேற்று இரவே திருப்பரங்குன்றத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். காலை 5 மணிக்கு சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், பாலாபிஷேகமும் நடை பெற்றது. 6 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் உள்ள விசாக கொறடு மண்டபத் தில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி னர்.

    அங்கு காலை முதல் மாலை வரை, பக்தர்கள் நேர்த்திக்கடனாக தலையில் வைத்து சுமந்து வந்த பாலில் முருகப்பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடைபெற்றது. அவ்வாறு அபிஷேகம் செய்த பால் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    வைகாசி விசாகத்தை யொட்டி மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாக வந்திருந்த பக்தர்கள் திருப் பரங்குன்றம் ரத வீதிகளில் குவிந்து அரோகரா கோஷம் எழுப்பினர். பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்தி ருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். நகரில் பல்வேறு பகுதிகளில் இருந் தும் பக்தர்கள் சாரை சாரையாக கோவிலை நோக்கி படையெடுத்தனர்.

    குறிப்பாக கோரிப்பாளை யம், சிம்மக்கல், நேதாஜி ரோடு, மாசி வீதிகள், ஆண்டாள்புரம், வசந்தநகர், பழங்காநத்தம், பைக்காரா, பசுமலை, மூலக்கரை, திரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையே தெரியாத அள வுக்கு பக்தர்கள் பால் குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். அதிலும் குழந்தை கள் பால்குடங்களை தலை யில் சுமந்து வந்ததை வழி நெடுகிலும் நின்று பார்த்த பக்தர்கள் பரவசத்துடன் வரவேற்றனர்.

    கடந்த வாரம் அக்னி நட்சத்திர வெயில் கொளுத் திய நிலையில் சில நாட்க ளாக பெய்து வரும் கோடை மழையால் வெயிலின் தாக்கமின்றி சாலைகளில் பக்தர்கள் பாதயாத்திரை யாக கோவிலை நோக்கி சென்றனர். அதேபோல் கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்குள் பால்குடம் எடுத்து வரும் பக்தர்களுக்கு தனி வரிசை, சுவாமி தரிச னம் செய்ய வருபவர்களுக்கு தனி வரிசை என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்.

    மேலும் கோவிலுக்குள் கூடுதலாக மின்விசிறி மற்றும் ஏர்கூலர் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. அதி காலை 6 மணி முதல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவி லுக்கு செல்லும் வழிநெடுகி லும் சாலையின் இருபுறமும் பக்தர்களுக்கு சுடச்சுட அன்னதானம், நீர்மோர், பானகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. ஆங் காங்கே மருத்துவம் உள் ளிட்ட அடிப்படை வசதிக ளும் செய்யப்பட்டிருந்தது.

    விழாவையொட்டி, மதுரை மற்றும் பல்வேறு பகுதியிலிருந்தும் வருகை தந்திருந்த பக்தர்கள் திருப்ப ரங்குன்றம் ரத வீதிகளில் குவிந்து விண்ணதிர அரோ கரா கோஷம் எழுப்பினர். விழாவிற்கான ஏற்பாடு களை அறங்காவலர் குழு தலைவர் சத்தியபிரியா அறங்காவலர்கள் சண்முக சுந்தரம், பொம்ம தேவன், மணி செல்வம், ராமையா, கோவில் துணை ஆணையர் சுரேஷ், மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந் தனர்.

    இதேபோல் முருகப்பெரு மானின் 6-வது படை வீடான அழகர்மலையில் அமைந்துள்ள பழமுதிர்ச் சோலை முருகன் கோவிலி லும் வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் வெள் ளத்தில் சிறப்பாக நடை பெற்றது. மலையடிவாரத் தில் இருந்து நூற்றுக்க ணக்கான பக்தர்கள் பால் குடம், பல்வேறு காவடிகள் எடுத்து மலைமேல் உள்ள நூபுர கங்கை புனித தீர்த்தத் தில் நீராடி பின்னர் பழ முதிர்ச்சோலை முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

    • முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தன.
    • திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    போரூர்:

    பிரசித்தி பெற்ற வட பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரவிழா கடந்த 21-ந் தேதி தொடங்கியது. கடந்த 3 நாட்களாக தினசரி காலை மற்றும் மாலையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தன.

    இந்த நிலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வடபழனி முருகன்கோவிலில் இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு உச்சி காலத்துடன் தீர்த்தவாரி மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    விருகம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து ஏராளமான பெண்கள், ஆண்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும், பால் குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    இன்று இரவு 7மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சாமி புறப்பாடு நடக்கிறது. இதைத்தொடர்ந்து நாளை முதல் வருகிற 27-ந்தேதி வரை 3 நாட்களும் இரவு 7 மணிக்கு திருக்குளத்தில் தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

    பாரிமுனை, ராசப்பா செட்டி தெருவில் உள்ள கந்தக்கோட்டை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    குன்றத்தூர் முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜபெருமாள் கோவிலில் கருட சேவையுடன், கோபுர தரிசனமும், திருவீதி உலாவும் நடைபெற்றது.

    மேலும் 3 பெருமாளும் கோவிலின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவில் வளாகத்தை சென்றடைந்தனர். மற்ற கோவில்களில் ஒரு கருட சேவை மட்டும் நடைபெறும். ஆனால் இங்கு மட்டும் 3 கருட சேவை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மாலையில் 3 பெருமாளுக்கும், திருக்கச்சி நம்பிகளுக்கும் அலங்கார திருமஞ்சனமும், திருப்பாவை சாற்று முறை தீர்த்த பிரசாத விநியோகமும் நடைபெறுகிறது.

    திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, தங்கவேல், தங்கக் கீரிடம், வைர ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடு முறை மற்றும் பங்குனி உத்திரம் என்பதால் மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்து இருந்தனர். இதனால் பொது வழியில் மூலவரை தரிசிக்க பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

    • முருக பக்தர்கள் காவடி எடுப்பதற்கு ஒரு புராணக்கதை கூறப்படுகிறது.
    • பூமியை சரிசமமாக செய்வதற்கு சிவ பெருமான் அகத்திய முனிவரை தென் திசைக்கு அனுப்பி வைத்தார்.

    முருகன் கோவில்களில் பழனி கோவிலில் பங்குனி உத்திரம் விழா மிகச் சிறப்பாக நடைபெறும்.

    இந்த விழாவின்போது பழனிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள்.

    பழனி முழுவதும் காவடி காட்சிகளாக இருக்கும்.

    முருக பக்தர்கள் காவடி எடுப்பதற்கு ஒரு புராணக்கதை கூறப்படுகிறது.

    பார்வதிதேவிக்கும் பரமசிவனுக்கும் திருமணம் நடந்த சமயம் தேவர்களும் முனிவர்களும் மற்றும் எல்லோரும் தெய்வீக திருமணத்தைக் காண கயிலை செல்கின்றனர்.

    இதனால் வடபுறம் தாழ்ந்து தென்புறம் உயர்ந்தது.

    பூமியை சரிசமமாக செய்வதற்கு சிவ பெருமான் அகத்திய முனிவரை தென் திசைக்கு அனுப்பி வைத்தார்.

    அகத்திய முனிவரும் தென்திசையில் பொதிய மலையில் தங்கினார்.

    அகத்திய முனிவர் அங்கிருந்த காலத்தில் தாம் வழிபட சிவகிரி, சக்திகிரி என்னும் இரு சிகரங்களைக் கொண்டு வருமாறு தன் சீடனாகிய இடும்பாசுரனிடம் கட்டளையிட்டார்.

    இடும்பாசுரன் மிகப்பெரிய பக்திமான்.

    தன் குருவான அகத்தியர் இட்ட கட்டளையை நிறைவேற்ற தன் மனைவி இடும்பியுடன் கயிலை சென்று முருகப்பெருமானுக்கு உரிய கந்தமலையில் உள்ள சிவகிரி, சக்திகிரி என்னும் இரு குன்றுகளையும் பெயர்த்தெடுத்து ஒரு பெரிய பிரமதண்டத்தின் இரு புறங்களிலும் காவடியாகக் கட்டினான்.

    தன் தோள் மீது பிரமதண்டத்தின் மையப் பகுதியை வைத்துக்கொண்டு பொதிய மலைக்குத் திரும்பி வரும் வழியில் திருவாவினன் குடிக்கு மேலே ஆகாயத்தில் பறந்தபோது முருகப்பெருமான் அவ்விரு மலைகளையும் அங்கேயே இறங்குமாறு செய்து அவ்விடத்திலேயே நிலைபெறச் செய்து விட்டார்.

    தன்னையறியாமல் தரையில் இறங்கிய இடும்பன் எவ்வளவு முயன்றும் பிரமதண்டத்தின் ஓரங்களில் கட்டிய மலைகளை அசைக்கமுடியாமல் திகைத்து நின்றான்.

    மறுபடி அக்காவடியைத் தூக்க முயன்றபோது சிவகிரி குன்றின் மீது ஓர் அழகிய சிறுவன் கோவணத்துடன் ஆண்டியின் உருவில் சிரித்துக் கொண்டு நிற்பதைக் கண்டான்.

    அச்சிறுவனால் தான், மலையை அசைக்கக் கூட முடியவில்லை எனக்கருதிய இடும்பாசுரன் அச்சிறுவனை மலையில் இருந்து இறங்கும்படி அதட்டினான்.

    சிறுவனோ "மலை தனக்கே சொந்தம்" என வாதிட்டான்.

    சினம் கொண்ட இடும்பாசுரன் சிறுவனை தாக்க முயன்றான்.

    தாக்க வந்த இடும்பன் வேரற்ற மரம் போல் சாய்ந்துவிட அவன் மனைவி இடும்பி கணவனை காப்பாற்ற சிறுவனை வேண்டினாள்.

    தன் தவ வலிமையால் நிகழ்ந்தவற்றை அறிந்த அகத்தியர் முருகப்பெருமானை வணங்கினார்.

    அக்கணமே இடும்பாசுரனும் உயிர்பெற்று எழுந்து முருகப்பெருமானின் திருவிளையாடல் அறிந்து மூவரும் முருகப்பெருமானை வணங்கி பக்தியோடு துதித்தனர்.

    குரு பக்தியை மெச்சிய முருகப் பெருமான் இடும்பனை பழனி தலத்தின் காவல் தெய்வமாக இருக்கும்படி பேரருள் செய்தார்.

    இரு குன்றினையும் காவடிபோல் தூக்கி வந்த இடும்பாசுரன் முருகப் பெருமானின் திருவருளைப் பெற்றது போல் இன்றும் பக்தர்கள் காவடி தூக்கிச்சென்று முருகப்பெருமானின் பேரருளைப் பெறுகின்றனர்.

    இளவரசனாக முருகன் இடும்பனுக்குக் காட்சியளித்ததால் இன்றும் பழனி முருகனுக்கு ராஜ அலங்காரம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

    • காவடியின் இரு பக்கமும் வெள்ளி சொம்புகள் கட்டி தொங்க விடப்பட்டு இருக்கும்.
    • அன்று காலை 10 மணிக்கு முருகருக்கு பாலாபிஷேகம் செய்யப்படும்.

    சித்தர்காடு தலத்தில் தாத்ரீஸ்வரருக்கு குமரன் குருக்களும், விஸ்வநாதன் சிவாச்சாரியரும் 26வது தலைமுறையாக பூஜைகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    அதற்கேற்ப தாத்ரீஸ்வரர் அந்த பரம்பரைக்கு ஆண் வாரிசு வழங்கி உள்ளார்.

    ஒருதடவை ஆண் குழந்தை பிறக்காத நிலை இருந்தது.

    இதையடுத்து குருக்களின் முன்னோர்கள் தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் பால் காவடி எடுத்து வந்து அபிஷேகம் செய்வதாக வேண்டிக் கொண்டனர்.

    இதன் மூலம் குருக்கள் குடும்பத்துக்கு ஆண் வாரிசு கிடைத்தது.

    இதையடுத்து தாத்ரீஸ்வரருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தை மாதம் பூசம் நட்சத்திரத் தினத்தன்று பிரமாண்டமான காவடி செய்து வேண்டுதலை நிறை வேற்றினார்கள்.

    அன்று முதல் இன்று வரை தை பூசம் காவடி நடந்து வருகிறது.

    அன்றைய தினம் காலை 7 மணிக்கு குருக்கள் காவடியுடன் மாட வீதி சுற்றி வருவார்.

    காவடியின் இரு பக்கமும் வெள்ளி சொம்புகள் கட்டி தொங்க விடப்பட்டு இருக்கும். மத்தியில் வெள்ளி வேல் இருக்கும்.

    குழந்தை இல்லாத தம்பதியர் அந்த இரு சொம்புகளிலும் பால் விட்டு மனதார பிரார்த்தனை செய்து கொண்டால் போதும் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    அன்று காலை 10 மணிக்கு முருகருக்கு பாலாபிஷேகம் செய்யப்படும்.

    • அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு திருப்பரங்குன்றம்.
    • சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்.

    திருப்பரங்குன்றம்:

    தமிழ்க்கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு என்ற பெருமை கொண்டது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு தைப்பூச திருவிழாவை யொட்டி அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி, பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்தும், நீண்ட அலகு குத்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தனர்.

    இதில் இலவச தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனத்தில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத் திருவிழாவையொட்டி மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன.

    இதேபோல மூலஸ்தானத்தில் உள்ள கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. திருப்பரங்குன்றத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மலைக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள பழனியாண்டவர் கோவிலில் பழனியாண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இங்கு தைப்பூசத்தை முன்னிட்டு பழனி ஆண்டவருக்கு பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றன. இதில் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்சோலை எனப்படும் சேலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 16-ந்தேதி கொடியேற்றம் நடந்தது. அப்போது முதல் தினமும் சுவாமி சிம்மாசனம், பூத, அன்ன, காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும், பூச்சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

    9-ம் திருவிழாவான நேற்று உற்சவமூர்த்திக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி தங்கத் தேரில் எழுந்தருளி, மாலையில் யாகசாலை பூஜை நடைபெற்று வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு ஆனார். 10-ம் திருவிழாவான இன்று (25-ந்தேதி) காலை 5 மணிக்கு யாக சாலை பூஜைகள், தீபாராதனை நடந்தது. காலை 10 மணிக்கு சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடும், 10.30 மணிக்கு மேல் 10.45 மணிக்குள் தீர்த்தவாரி தைப்பூசம், மகா அபிஷேகம், யாகசாலை கலச அபிஷேகம் நடைபெற்றது.

    • இன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.
    • கோவில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 6-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோசம் முழங்க கண்டு தரிசனம் செய்தனர்.

    இதனைதொடர்ந்து வெள்ளித்தேரில் சாமி வீதிஉலா நடைபெற்றது. தைப்பூச திருவிழாவின் 7-ம் நிகழ்ச்சியாக இன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது. இதனைமுன்னிட்டு தோழுக்கினியானில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை சண்முகநதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு சாமி திருத்தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெறுகிறது.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாகவே பழனியில் பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகளவில் காணப்பட்டது. கூட்டம் கூட்டமாக வரும் பக்தர்களுக்கு வழி நெடுகிலும் பல்வேறு அமைப்புகளால் அன்னதானம், பழங்கள், இளநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    கோவில் நிர்வாகம் சார்பில் தற்காலிக கழிப்பறைகள், குளியல்அறைகள், பக்தர்கள் தங்கும் இடங்கள் ஆகியவை ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளன. இடும்பன்குளம், சண்முகாநதி பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் திரண்டு நீராடி வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பான முறையில் குளித்து செல்வதை உறுதி செய்யும் வகையில் அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முக்கிய இடங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் சுமார் 2000-ககும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருக்கல்யாண நிகழ்ச்சியை நாளை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 1லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் பழனியில் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் பழனி நகரமே குலுங்கியது.

    தைப்பூசத்தை முன்னிட்டு பழனி கோவில் பாரவேல் மண்டபம் உள்பட முக்கிய இடங்களில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது.


    • முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் இன்று தைப்பூச திரு விழா.
    • முருகர் தனித்தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் இன்று தைப்பூச திரு விழா நடைபெற்றது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தைப்பூச திருவிழா நடைபெற்றது.

    தைப்பூசத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. தீபாராதனைக்கு பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரத வீதியில் உள்ள இல்லத்தார் தைப்பூச மண்டபத்திற்கு வந்து அங்கு சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி தனித்தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு கோவில் சேர்கிறார்.

     தைப்பூச திருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். திரளான பக்தர்கள் காவி மற்றும் பச்சை நிற ஆடை அணிந்து காவடி எடுத்தும், பல்வேறு அடி நீள அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் வந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் குழுக்களாக, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் முருகபெருமானின் உருவப் படத்தை வைத்தும், அவரது திருப்புகழை பாடியவாறும் பாதயாத்திரையாக வந்தனர்.

    நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் சாலையில் திருச்செந்தூருக்கு பக்தர்கள் அணிவகுத்து சென்றனர். திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் கோவில் வளாகம், கடற்கரை, மண்டபங்கள், விடுதிகளில் தங்கினர். திருச்செந்தூர் நகரில் காணும் இடமெல்லாம் முருக பக்தர்களாகவே காட்சியளிப்பதால் விழாக்கோலம் பூண்டது.

     இன்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்தால் கடற்கரை, கோவில் வளாகம் நிரம்பி வழிகிறது.

    • முருகர் பார்வதிதேவியிடம் இருந்து வேல் பெற்ற நாளே தைப்பூச விழா.
    • அனைத்து முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்தநாள். தமிழர்கள் இந்த நன்னாளை தைப்பூச விழாவாக கொண்டாடுகிறார்கள். இது, ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும் பவுர்ணமியும் கூடி வரும் நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். கேரளாவில் இந்த விழா `தைப்பூசம்' என்று அழைக்கப்படுகிறது.

    சூரபத்மனை அழிப்பதற்காக முருகப்பெருமான் தனது தாயார் பார்வதிதேவியிடம் இருந்து வேல் பெற்ற நாளே தைப்பூச விழாவாக கொண்டாடப்படுவதாக பெரும்பாலான வரலாற்று பதிவுகள் மற்றும் புராணங்கள் கூறுகின்றன.

    தமிழகத்தில் பழங்காலம் முதலே முருகன், சிவன் கோவில்களில் இந்த விழா கொண்டாடப்பட்டு வந்துள்ளது. சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது குறித்து தேவார பதிகங்களில் குறிப்புகள் உள்ளன. திருஞானசம்பந்தர் தனது பாடலில் தைப்பூசம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். பிற்கால சோழர் ஆட்சியில் தைபூசத்தன்று கோவில்களில் கூத்துகள் நடத்தப்பட்டன.

    தைப்பூச தினமான இன்று அதிகாலையில் பக்தர்கள் எழுந்து குளித்துவிட்டு முருகப்பெருமானை வேண்டி வழிபடுவார்கள். முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் காவடி எடுத்துச் சென்றும், பால்குடம் சுமந்து சென்றும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

     அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும் தைப்பூச விழா இன்று மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள்.

    அவர்கள் பலநாட்கள் விரதமிருந்து மயில் காவடி, மச்சக்காவடி, தீர்த்தக்காவடி, பால் காவடி, பறவைக்காவடி என பல்வேறு வகையான காவடிகளை எடுத்து வருகிறார்கள். பலர் அலகு குத்தி வருகிறார்கள். காவடி எடுப்பவர்கள் வழிநெடுக பாடி வரும் பாடல்கள் காவடிச்சிந்து என்று அழைக்கப்படுகிறது.

    கடற்கரை தலமான திருச்செந்தூரிலும் தைப்பூசம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் முதலே பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து காவடி எடுத்து பாதயாத்திரையாக வருகிறார்கள்.

    வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாதத்தில் புனர்பூச நட்சத்திரத்தன்றுதான் ஒளியானார். இதையொட்டி கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள ஞானசபையில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

    தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜையும், திருக்கல்யாணமும் மற்றும் அன்னதானமும் நடைபெறுகிறது.

    தமிழகம் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் தமிழர்கள் தைப்பூச விழாவை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

     மலேசியாவில் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பத்துமலை முருகன் கோவில், இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிகவும் முக்கியமானது ஆகும். சுண்ணாம்பு பாறைகளாலான புகழ்பெற்ற இந்த மலைக்கோவிலுக்கு செல்ல 272 படிகள் உள்ளன. இந்த மலையையொட்டி சுங்கை பத்து என்ற ஆறு ஓடுகிறது.

    இங்கு நடைபெறும் தைப்பூச விழா உலகப்புகழ் பெற்றது. தைப்பூசத்தின் போது மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலில் இருந்து அதிகாலை முதல் பக்தர்கள் பத்துமலைக்கு ஊர்வலமாக நடந்து வருவார்கள். ஏராளமானோர் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நோத்திக்கடன் செலுத்துவார்கள்.

     மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் ஜார்ஜ் டவுன் அருகே உள்ள தண்ணீர் மலை கோவிலிலும் தைப்பூச விழா ஆண்டு தோறும் 3 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசத் திருநாளை பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

    இதேபோல் குனோங் சீரோ என்ற இடத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலிலும் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மலேசியாவில் நடைபெறும் தைப்பூச விழாவில் ஏராளமான சீனர்களும் கலந்து கொள்கிறார்கள்.

     இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் ஊரில் உள்ள முருகன் கோவில்களில் பால் குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தத்தம் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.

    சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் தைப்பூச விழாவை மிகவும் எழுச்சியுடன் கொண்டாடுகிறார்கள். இங்குள்ள முருகன் கோவிலில் வேல் தான் மூலவர். ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று முருகன் வெள்ளித் தேரில் எழுந்தருளி லயன் சித்தி விநாயகர் கோவில் வரை பவனி சென்று மீண்டும் கோவிலை வந்தடைவார். பக்தர்கள் தேரை இழுத்துச்செல்வார்கள். அப்போது பலர் காவடி எடுத்தும், அலகு குத்தியபடியும் சென்று நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். சீனர்கள் கூட முருகப்பெருமானை வேண்டி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

     மொரீஷியசில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் நடைபெறும் தைப்பூச விழாவில் காவடி எடுப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்கள் இங்கும் உண்டு.

    தென் ஆப்பிரிக்காவில் டர்பன் நகரில் உள்ள ஸ்ரீ சிவா சுப்பிரமணியர் கோவிலில் தமிழர்கள் காவடி எடுத்து தைப்பூச விழாவை கொண்டாடுகிறார்கள். கேப்டவுன் நகரிலும் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

    இதேபோல் பிஜி தீவில் வசிக்கும் தமிழர்கள் நாடி என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவா சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழாவை கொண்டாடுகிறார்கள்.

     ஆஸ்திரேலியா நாட்டில் விக்டோரியாவில் உள்ள சிவா விஷ்ணு கோவிலில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகமும், தேரோட்டமும் நடைபெறும். பக்தர்கள் பால் குடம் எடுப்பார்கள். அன்னதானமும் வழங்கப்படும்.

    • பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தண்டாயுதபாணியை தரிசனம் செய்வார்கள்.
    • காவடிகள் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் தைப்பூசத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்வார்கள். மேலும் அலகு குத்தியும், பால், பன்னீர், பறவை உள்ளிட்ட காவடிகள் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா நேற்று முன்தினம் பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்கு முன்னரே வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாக வரத் தொடங்கினர்.

    தற்போது பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கூட்ட நெரிசலை சமாளிக்க மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் செல்ல ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

    நேற்று தை மாத கார்த்திகை என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அடிவாரம், கிரி வீதிகளில் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பழனி மலைக்கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    • தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள்.
    • வள்ளல் பெருமான் தைப்பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்.

    வள்ளல் பெருமான் தைப்பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்.

    காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாகும்.

    தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள்.

    மகரம் என்பது முடிந்த நிலையினை குறிப்பதாகும்.

    அகரம்+உகரம்+மகரம்=ஓம்

    தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற நாள் சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில் இருக்கும்.

    அப்போது ஞானசபையில் இருந்து அக்னியான ஜோதி காண்பிக்கப்படும். அதாவது சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி

    * சந்திரன் என்பது மனஅறிவு.

    * சூரியன் என்பது ஜீவ அறிவு.

    * அக்னி என்பது ஆன்மா அறிவு.

    சந்திரன் சூரியனில் அடங்கி, சூரியன் அக்னியில் அடங்கி அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே தைபூசம்.

    மனம் ஜீவனில் அடங்கி, ஜீவன் ஆன்மாவில் அடங்கி, ஆன்மா சிவத்துடன் கலந்து விடும் என்பதை காட்டவே தைபூசம் நமது வள்ளல் பெருமானால் அளிக்கப்பட்டது.

    • கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க,
    • மற்றவர் முற்றிய புதுநெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர்.

    தைப்பூசத்தில் தான் யாழ்ப்பாண மக்கள் புது நெல்லு (புதிர்) எடுப்பர்.

    தைப்பூசம் முருகனுக்கு உரிய சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

    அன்று அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள்,

    தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் என்பவற்றுடன் வயலுக்குச் சென்று,

    கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க,

    மற்றவர் முற்றிய புதுநெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர்.

    அதனைக் குடும்பத்தலைவி பெற்று சுவாமி அறையில் வைப்பார்.

    அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து,

    வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர்.

    அந்த அரிசியுடன் வீட்டில் உள்ள அரிசியையும் கலந்து அன்றைய மதிய உணவு சமைக்கப்படும்.

    ஊரில் உள்ள முருகன் கோவில்களில் பால் குடம் எடுத்தும், காவடி எடுத்தும் தமது நேர்த்திகளை நிறைவேற்றுவர்.

    • வடலூரில் தைப்பூசத்தன்று அருட்பெரும் ஜோதி விழா நடைபெறும்.
    • வருட பூசம் தை மாதத்தில் ஏழு திரை விலக்கி ஜோதி தரிசனம் காட்டுவதைக் காணலாம்.

    வடலூரில் தைப்பூசத்தன்று அருட்பெரும் ஜோதி விழா நடைபெறும்.

    மாத பூசத்தில் ஆறு திரை விலக்கிக் காட்டுவார்கள்.

    வருட பூசம் தை மாதத்தில் ஏழு திரை விலக்கி ஜோதி தரிசனம் காட்டுவதைக் காணலாம்.

    1. கறுப்புத்திரை - மாயசக்தி,

    2. நீலத் திரை- திரியா சக்தி,

    3. சிவப்புத் திரை - இச்சாசக்தி,

    4. பச்சைத் திரை- பராசக்தி,

    5. பொன்திரை- ஞானசக்தி,

    6. வெள்ளைத்திரை- ஆதிசக்தி,

    7. பல வண்ணத்திரை- சிற்பசக்தி.

    ×