என் மலர்
நீங்கள் தேடியது "அக்னிபாத் திட்டம்"
- 23 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் நான்கு வருடம் ராணுவத்தில் பணிபுரிய முடியும்.
- பின்னர் 25 சதவீதம் பேர் 15 ஆண்டுகள் பணிகள் நீடிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.
அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ராணுவ வீரர்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவது. அவர்களுக்கு தியாகிகள் என்ற பெயர் கிடைக்காது எனக் கூறினர். ஆனால் மத்திய மந்திரிகள் அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் இந்த திட்டத்தை ஆதரித்து பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தின்கீழ் பணிபுரிந்த முன்னாள் அக்னிவீர்களுக்கு (வீரர்கள்) மத்திய ஆயுத போலீஸ் படையின் கான்ஸ்டபிள் வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மத்திய தொழில்துறை பாதுகாப்புப்படையில் (Central Industrial Security Force) உடல்திறன் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஐஎஸ்எஃப் டைரக்டர் ஜெனரல் நீனா சிங், இது தொடர்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அக்னிபாத் திட்டம் 2022-ம் ஆண்டு ஜூன் 14-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் முப்படைகளுக்கும் 17 1/2 வயது முதல் 21 வரையிலான இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் நான்கு வருடம் பணிபுரிந்த பின்னர் வெளியேறிவிடுவார்கள். அதன்பின் 15 வருடத்திற்கு 25 சதவீதம் பேரை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது. வயது வரம்பை பின்னர் 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒருவேளை பணிக்காலத்தின்போது உயிரிழந்தால் இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோது ராஜ்நாத் சிங் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 23 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் 4 வருடம் ராணுவத்தில் பணிபுரிய முடியும்.
- அதன்பின் 25 சதவீதம் பேர் 15 ஆண்டு பணிகள் நீடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
சண்டிகர்:
அக்னிபாத் திட்டம் 2022-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் முப்படைகளுக்கும் 23 வயது வரையிலான இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் 4 ஆண்டு பணிபுரிந்தபின் வெளியேறிவிடுவார்கள். அதன்பின் 15 ஆண்டுக்கு 25 சதவீதம் பேரை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது.
இதற்கிடையே, அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ராணுவ வீரர்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதால் அவர்களுக்கு தியாகிகள் என்ற பெயர் கிடைக்காது எனக் கூறினர். ஆனால், மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் இந்த திட்டத்தை ஆதரித்துப் பேசி வருகின்றனர்.
ஒருவேளை பணிக்காலத்தின்போது உயிரிழந்தால் இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோது ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் அக்னிவீர்களுக்கு மாநில அரசால் தேர்வு செய்யப்படும் கான்ஸ்டபிள், சுரங்கக் காவலர், வனக் காவலர், ஜெயில் வார்டன் மற்றும் எஸ்பிஓ போன்ற பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் என அரியானா முதல் மந்திரி நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு அக்டோபரில் அரியானா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாநில அரசின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஏற்கனவே, அக்னிபாத் திட்டத்தின்கீழ் பணிபுரிந்த முன்னாள் அக்னிவீர்களுக்கு மத்திய ஆயுத போலீஸ் படையின் கான்ஸ்டபிள் வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
#WATCH | Haryana CM Nayab Singh Saini says "Agnipath scheme was implemented by PM Modi on 14th June 2022. Under this scheme, Agniveer is deployed in the Indian Army for 4 years. Our government will provide 10% horizontal reservation to Agniveers in Haryana in direct recruitment… pic.twitter.com/1WNxKLK65H
— ANI (@ANI) July 17, 2024
- 23 வயது வரைவிலான இளைஞர்கள் 4 வருடம் என்ற அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.
- 4 வருடத்திற்குப் பிறகு 15 வருடத்திற்கு 25 சதவீத வீரர்களுக்கு பணி வழங்கப்படும்.
மத்திய அரசு முப்படைகளில் வீரர்களை சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டத்தை கடந்த 2022-ம் ஆண்டு அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் முப்படைகளில் 17 1/2 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்கள் சேர்க்கப்படுவார்கள்.
அவர்கள் நான்கு வருடம் பணிபுரிந்த பின்னர் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அதன்பின் 15 வருடத்திற்கு 25 சதவீதம் பேரை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது. பின்னர் வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டது. பணிக்காலத்தின்போது உயிரிழந்தால் இழப்பீடாக ஒரு கோடி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
பாதுகாப்புப் படைகளின் செலவினங்களைக் குறைப்பதற்கும், வயது வரம்பைக் குறைப்பதற்கும் மத்திய அரசால் கொண்டு வரவப்பட்டது. ஆனால், ராணுவ வீரர்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவது, அவர்களுக்கு தியாகிகள் என்ற பெயர கிடைக்காது என எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன.
காங்கிரஸ் கட்சி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்றத்தில் இத்திட்டத்தை கடுமையான எதிர்த்து பேசினார். காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்க வந்தால் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும் என்றார்.
இந்த நிலையில் மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது 25 சதவீதம் தக்கவைத்துக் கொள்ளும் திட்டம் உள்ளது. இந்த சதவீதத்தை அதிகரிக்க உள்ளதாகவும, வீரர்களின் சம்பளம் மற்றும் உரிமைகள் உள்ளிட்டவைகளில் மாற்றங்கள் கொண்டு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திட்டத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பு மற்றும் பயன்களை மேம்படுத்துவதற்காக இந்த மாற்றங்கள் மேற்கொள்ள இருப்பதாக பாதுகாப்புத்துறை சார்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நவாடா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சாலையில் வாகனங்களின் டயர்களை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
- பிரதமர் மோடிக்கு எதிராக தனது கோஷங்களையும் எழுப்பினர்.
பாட்னா:
மத்திய அரசு புதிய அக்னிபத் என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தின்படி ராணுவத்தில் சேரும் வீரர்களுக்கு 4 ஆண்டு காலத்திற்கு மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படுவர். இதில் வீரர்களுக்கு மாதாந்திர ஊதியம் வழங்கப்படும். 4 ஆண்டுகால பணிக்காலம் முடிவடைந்ததும் சேவா நிதி என்ற ஒரே தடவையிலான தொகுப்பு வழங்கப்படும். ஆனால் இவர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் அளிக்கபட மாட்டாது என தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் இளைஞர்கள் நேற்றுமுதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2வது நாளாக நடைபெறும் இந்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
போராடும் வீரர்கள் திடீரென சாலையில் இருந்த கற்களை எடுத்து காவல்துறையினர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் ரெயில் நிலையங்களுக்குள் நுழைந்த அவர்கள் கற்களை எடுத்து ரெயில்கள் மீது எதிர்ந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கியை காட்டி போராட்டக்காரர்களை விரட்டினர்.
நவாடா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சாலையில் வாகனங்களின் டயர்களை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பிரதமர் மோடிக்கு எதிராக தனது கோஷங்களையும் எழுப்பினர்.
இதையடுத்து அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. காவல்துறையினர் பல்வேறு யுக்திகள் மூலம் போராட்டங்களை ஒடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.
- அக்னிபாத் திட்டத்தின் கீழ் 46 ஆயிரம் வீரர்கள் நடப்பாண்டில் தேர்வு செய்யப்படுவர்.
- ராகுல்காந்தி, பிரியங்கா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ‘அக்னிபாத்’ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாட்னா:
மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை 'அக்னிபாத்' என்ற ராணுவத்தில் ஆள் சேர்க்கும் புதிய திட்டத்தை அறிமுகப் படுத்தினார்.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் 46 ஆயிரம் வீரர்கள் நடப்பாண்டில் தேர்வு செய்யப்படுவர். 17 வயது முடிந்து 6 மாதம் ஆனவர்கள் முதல் 21 வயதுக்குட்பட்ட வர்கள் முப்படைகளில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுக்கு சேர்க்கப்படுவார்கள்.
அதன் பின்னர் பெரும்பாலானவர்களுக்கு கட்டாயம் ஓய்வு அளிக்கப்படும். அவர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடைக்காது.
முந்தைய திட்டத்தின்படி குறைந்தபட்சம் 15 ஆண்டு காலம் பணிபுரியலாம் என்ற நிலையில் புதிய ஆள் சேர்ப்பு நடைமுறையில் 4 ஆண்டுகால பணி காலம் குறைக்கப்பட்டது இளைஞர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ராகுல்காந்தி, பிரியங்கா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் 'அக்னிபாத்' திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு எதிராக நாட்டின் ஒரு சில பகுதிகளில் இளைஞர்கள் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பீகாரில் பல்வேறு பகுதிகளில் நேற்று போராட்டம் நடந்தது. இன்றும் 2-வது நாளாக அங்கு போராட்டம் நீடித்தது.
பாட்னா, முசாபர்பூர், பக்கர், ஜெகனாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளிலும், ரெயில் நிலையங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலைகளில் டயர்களை எரித்தும், பஸ்கள் மீது கல்வீசியும் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். மத்திய அரசின் இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி இளைஞர்கள் கோஷங்களை எழுப்பி வன்முறையில் ஈடுபட்டனர்.
பாபுவா ரோடு ரெயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கற்களை வீசினார்கள். அதோடு ரெயிலின் ஒரு பெட்டியிலும் தீ வைத்தார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பல இடங்களில் போலீசார் மீது இளைஞர்கள் கற்களை வீசினர். இதனால் கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகையை பயன்படுத்தினர். இந்த வன்முறை காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மராட்டியம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அக்னிபாத் திட்டத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எதிர்ப்பு
- இத்திட்டம் ஆயுதப் படைகளின் நீண்டகால பாரம்பரியங்கள் மற்றும் நெறிமுறைகளை சீர்குலைக்கிறது.
புதுடெல்லி:
அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் இன்று நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது. இந்த திட்டத்தை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
இத்திட்டம் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியதாவது:-
அக்னிபாத் திட்டம் சர்ச்சைக்குரியது. பல ஆபத்துகளை கொண்டுள்ளது. ஆயுதப் படைகளின் நீண்டகால பாரம்பரியங்கள் மற்றும் நெறிமுறைகளை சீர்குலைக்கிறது. இத்திட்டம் ராணுவ பயிற்சியை கேலி செய்வதாக தோன்றுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட வீரர்களுக்கு நாட்டை பாதுகாக்க ஊக்கம் அளிக்கப்படும் என்பதற்கும், சிறந்த பயிற்சி அளிக்கப்படும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த திட்டத்தை கைவிடவேண்டும்.
இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
- மத்திய அரசின் தவறான கொள்கைகளால் விவசாயிகள் 13 மாதங்கள் பாதிக்கப்பட்டதாக ராகேஷ் திகாய்த் குற்றச்சாட்டு
- ராணுவத்தில் சேருவதற்காக நான்கு ஆண்டுகளாக தயாராகி வந்த அரியானா வாலிபர் தற்கொலை
நொய்டா:
ராணுவத்தில் ஒப்பந்த முறையில் வீரர்களை நியமிக்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் இன்று நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது. இந்த திட்டத்தை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாய்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் தவறான கொள்கைகளால் விவசாயிகள் 13 மாதங்கள் பாதிக்கப்பட்டனர். அதேபோல் இன்று தவறான முடிவினால் இளைஞர்கள் விளைவை எதிர்கொண்டுள்ளனர். ராணுவத்தில் சேர்பவர்களும் விவசாயிகளின் மகன்கள் என்பதை அரசு அறிந்துகொள்ள வேண்டும். இளைஞர்களுக்காகவும், நம் பிள்ளைகளுக்காகவும் கடைசி மூச்சு வரை போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ராணுவத்தில் சேருவதற்காக நான்கு ஆண்டுகளாக தயாராகி வந்த அரியானா வாலிபர், அரசாங்கம் அக்னிபாத் திட்டத்தை அறிவித்தபிறகு தற்கொலை செய்துகொண்டார். அவரது படத்தையும் ராகேஷ் திகாயித் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
- அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.
- பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை
புதுடெல்லி :
முப்படைகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்யும் 'அக்னிபாத்' திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. அத்திட்டத்துக்கு பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தநிலையில், இதுகுறித்து டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது:-
'அக்னிபாத்' திட்டம் தொடர்பாக மத்திய அரசுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால், அந்த திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த தொடங்கி விட்டதால், அதை முழுமையாக ஆதரிக்கிறோம். திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் அளித்த பேட்டியில், 'அக்னிபாத்' திட்டத்துக்கு முழு ஆதரவு அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக விளக்கம் அளித்தார்.
- கடந்த மாதம் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே பல மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.
- 2022-ல் இத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை 23 ஆண்டுகளாக அரசாங்கம் நீட்டித்தது.
ஆயுதப் படைகளில் ஆள் சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டத்திற்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்ததோடு, அதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தினர். அப்போது, திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது ஒருங்கிணைந்த பதிலை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டது.
ஜூன் 14ஆம் தேதி அறிவிக்கப்பட்ட அக்னிபாத் திட்டம், 17 முதல் 21 வயது வரையிலான பாதுகாப்புப் படைகளில் 25 சதவீதத்தினரை இன்னும் 15 ஆண்டுகளுக்குத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே இளைஞர்களைச் சேர்ப்பதற்கு வழங்குகிறது.
கடந்த மாதம் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே பல மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. பின்னர், 2022-ல் இத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை 23 ஆண்டுகளாக அரசாங்கம் நீட்டித்தது.
- நவம்பர் 15-ந் தேதி தொடங்குகிறது
- ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
வேலூர்:
இந்திய ராணுவத்தில் சேருவதற் கான ஆள் சேர்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 21 ம் தேதி தொடங்கி நவம்பர் 25 ம் தேதி வரை நடக்கிறது.
தகுதி வாய்ந்தவர்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று வேலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேலூர் கலெக்டர் குமார வேல் பாண்டியன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
அக்னிபாத் திட்டத்தில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் வேலூர், திருப்பூர் மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் 21.08.2022 முதல் 25.11.2022 வரை நடைபெற உள்ளது.
தகுதி வாய்ந்தவர்கள் www. joinindianarmy.nic.in . என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம்.
அதன்படி நாகர்கோவில் அறிஞர் அண்ணா ஸ்டேடியத்தில்வரும் 21-ந் தேதி முதல் செப்டம்பர் 1-ந் தேதி வரையும், கோவை அவினாசி டி.இ.ஏ பொதுப் பள்ளி வளாகத்தில் செப்டம்பர் 20-ந் தேதி முதல் அக்டோபர் 1-ந் தேதி வரையும், வேலூர் கோட்டை காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் சென்னை தலைமையிடத்து ஆர் ஓ ஏற் பாட்டின் பேரில் நவம்பர் 15-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விமானப்படையில் 3 ஆயிரம் பணியிடங்களுக்கு 7.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
- 3 ஆயிரம் கடற்படை பணிக்கு 9.55 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
புதுடெல்லி:
அக்னிபாத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் 4 ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றும் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் 14 மத்திய அரசு அறிவித்தது.
வடமாநிலங்களில் போராட்டங்கள் நடந்தபோதிலும், இதை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்திய விமானப்படையில், சுமார் 3 ஆயிரம் பணியிடங்களுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கிடையே, இந்திய கடற்படை பணிக்கு விண்ணப்பிக்கும் பணி ஜூலை 1-ந் தேதி தொடங்கியது. சமீபத்தில் முடிவடைந்தது.
இந்நிலையில், கடற்படையில் 3 ஆயிரம் பணியிடங்களுக்கு சுமார் 9 லட்சத்து 55 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பித்தவர்களில் 82 ஆயிரத்து 200 பேர் பெண்கள் ஆவர் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அரசின் இந்த கொள்கைகள் தங்கள் வாழ்க்கையுடன் விளையாடுவதாக இளைஞர்கள் கருதுகின்றனர்.
- பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும், சட்டம் ஒழுங்கை பாதிக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
புதுடெல்லி:
மக்களவையில் இன்று, அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய், அக்னிபாத் விவகாரத்தை எழுப்பினார். அவர் பேசியதாவது:-
ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு போன்ற ஓய்வூதிய பலன்கள் இல்லாமல் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். 4 ஆண்டுகளுக்குப் பிறகு 25 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தரம் செய்யப்படுவார்கள். மற்றவர்கள் விடுவிக்கப்படுவார்கள். அரசின் இந்த கொள்கைகள் தங்கள் வாழ்க்கையுடன் விளையாடுவதாக இளைஞர்கள் கருதுகின்றனர். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், 4 வருடங்கள் கழித்து அவர்களின் வாழ்க்கை என்னவாகும் என கேள்வி எழுப்புகின்றனர். அதனால்தான் போராட்டம் நடத்துகின்றனர்.
ஏராளமான இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி பெற்று, போதுமான வாழ்வாதாரம் இல்லாமல் தங்கள் கிராமங்களுக்கு திரும்புவதன் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும், இது சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, நாட்டின் நலன் கருதி அக்னிபாத் திட்டத்தை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.