என் மலர்
நீங்கள் தேடியது "tag 233400"
குமாரபாளையம்:
குமாரபாளையம் குப்பாண்டபாளையம் ஊராட்சி, குளத்துக்காடு பகுதியில் நீர் வழித்தட ஆக்கிரமிப்பு இருப்பதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து, தாசில்தார் தமிழரசி உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர், நில அளவையாளர்கள் நீர் வழித்தட ஆக்கிரமிப்பு குறித்து அளவீடு பணியை தொடங்கினர். இதில் ஆக்கிரமிப்பு செய்த பல முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என தெரிகிறது.
- உதிரி பாகங்கள் வாங்க ஒப்புதல் பெறுவதில் ஏற்படும் தாமதத்தால் உரிய நேரத்தில் பணிகளை செய்ய முடியாமல் மின்வாரியம் தவித்து வருகிறது.
- பல்லடம் மின் பகிர்மான வட்டத்தில் சுமார் 5 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.
பல்லடம்:
பல்லடம், உதிரி பாகங்கள் வாங்க ஒப்புதல் பெறுவதில் ஏற்படும் தாமதத்தால் உரிய நேரத்தில் பணிகளை செய்ய முடியாமல் மின்வாரியம் தவித்து வருகிறது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-பல்லடம் மின் பகிர்மான வட்டத்தில் சுமார் 5 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.இந்த நிலையில் புதிதாக விண்ணப்பிக்கப்படும் மின் இணைப்புகள் மற்றும் ஏற்கனவே உள்ள இணைப்புகள், சேதமடைந்த கம்பங்கள், கம்பிகள் பொருத்துவது என மின்சார உதிரி பாகங்களின் தேவை அதிகம் உள்ளது. கடந்த வருடத்தில், மாவட்ட முதன்மை பொறியாளர் அலுவலகங்கள் மூலம் மின் உதிரிபாகங்கள், உபகரணங்களை நாங்கள் பெற்று வந்தோம்.தற்போது ஆட்சி மாற்றத்துக்குப் பின் மின் கம்பி முதல் மின் கம்பம் வரை அனைத்துக்கும் சென்னை தலைமை அலுவலகத்துக்கு விண்ணப்பித்து பெற வேண்டிய நிலை உள்ளதால், உரிய நேரத்தில் மின் உதிரிபாகங்கள், உபகரணங்களை பெற முடியாமலும்,மேற்கொண்டுள்ள பணிகளும் தாமதமாகின்றன.இது பொதுமக்கள் மத்தியில் மின்வாரியம் மீது அதிருப்தியை ஏற்படுத்துகிறது.எனவே கடந்த காலத்தில் இருந்தது போலவே,மாவட்ட முதன்மை பொறியாளர் அலுவலகங்களிலேயே மின் உதிரிபாகங்கள், உபகரணங்கள், கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி பொறியாளருக்கு அறிவுறை
- கலெக்டர் அரவிந்த் ஆய்வு
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க கன்னியா குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக ரூ.10.5 கோடியில் நாகர்கோவில் மாநகராட்சிக்கான புதிய அலுவலக கட்டிடத்தின் அனைத்து தளங்களையும் நேரில் பார்வையிடப்பட்டது.
வடசேரி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட தோடு இந்நிலையத்தில் கூடுதலாக கட்டப்பட்டு வரும் புதிய அறையினை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து வடசேரியில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் நீக்கும் பணி யினையும், வடசேரி கிருணன்கோவில் பகுதி களில் உள்ள குடிநீர் சுத்திரிகரிப்பு நிலை யத்தினையும் நேரில் பார்வையிட்டதோடு, பொது மக்களுக்கு தங்கு தடை யின்றி குடிநீர் வழங்கிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் நாகர் கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட் சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற் கொண்டார். ஆய்வில் மாநகர நகர்நல அலுவலர் விஜயசந்திரன், மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- உடுமலை பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது.
- உடுமலை நகரிலுள்ள விபத்து பகுதிகளில், பரிந்துரை மற்றும் கருத்துரு அடிப்படையில், எவ்வித பணிகளும் இதுவரை செய்யப்படவில்லை.
உடுமலை
கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை நகரம் அமைந்துள்ளது.மேலும், பல்லடம், தாராபுரம் மாநில நெடுஞ்சாலைகளும், மாவட்ட முக்கிய ரோடுகளும், நகர போக்குவரத்தில், முக்கிய பங்கு வகிக்கின்றன.இந்நிலையில், அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து மேம்படுத்த, வருவாய்த்துறை, போலீஸ், வட்டார போக்குவரத்து அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து, சாலை பாதுகாப்புக்குழு ஏற்படுத்தப்பட்டது.இக்குழுவினர் உடுமலை பகுதியில், அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் பகுதிகளை கண்டறிந்து, 'பிளாக் ஸ்பாட்' என பெயரிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பரிந்துரைக்கின்றனர். இதற்காக மாதம்தோறும் ஆலோசனை கூட்டமும் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
உடுமலை பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. அங்கு, வாகன ஓட்டுனர்களை எச்சரிக்க இருபுறமும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட வேண்டும். சிறிய அளவிலான வேகத்தடை (ரம்புள் ஸ்பீட் பிரேக்கர்), ரோட்டில் ஒளியை பிரதிபலிக்கும் ஸ்டட் (கேட் ஐ), நான்கு வரிசையில், ஒளியை பிரதிபளிக்கும் பிரதிபளிப்பான் பொருத்த வேண்டும்.மெதுவாக செல்லவும் என்ற அறிவிப்பு பலகை வைக்க பரிந்துரைக்கப்பட்டது. இப்பணிகள், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக்கழகத்தின் கீழ் மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டது.
நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள தளி ரோடு மேம்பாலம் நுழைவாயில் பகுதியில்இரண்டு ஆண்டுகளில், விபத்தினால், 3 உயிரிழப்புகள் ஏற்பட்டது. அங்கு, விபத்தை தவிர்க்க இடது பக்க தடுப்புச்சுவரை, 30 மீட்டருக்கு விரிவுபடுத்த வேண்டும். சுவரில் ஒளி பிரதிபலிப்பான் பொருத்தி, இருபுறமும்,'சோலார் பிளிங்கிரிங் லைட், அணுகுசாலையில், இடது புறமும் திரும்ப தேவையான வெள்ளை குறியீடுகள் அமைக்க வேண்டும்.இதே போல், நகர எல்லையில் தேசிய நெடுஞ்சாலை - கொழுமம் ரோடு சந்திப்பில் வேகத்தடை, தேவையான வெள்ளை குறியீடு அமைத்து அதில், ஒளி பிரதிபலிப்பான் அமைக்கப்பட வேண்டும்.விபத்து பகுதி மெதுவாக செல்லவும் என்ற அறிவிப்பு பலகை வைக்கலாம். ரோட்டின் மையத்தில், டிராபிக் ஐ லேண்ட் எனப்படும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
மேலும், உடுமலை-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில்சி வசக்திகாலனி கோவில் சந்திப்பு பகுதியில் சாலை விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அங்கு தேவையான எச்சரிக்கை குறியீடு அமைத்து, வாகனங்களின் வேகத்தை குறைப்பதால் விபத்து தவிர்க்கப்படும் என கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது.இவ்வாறு நகரில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதி, விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட பகுதிகளை கண்டறிந்து, அவற்றை மேம்படுத்தவே சாலை பாதுகாப்புக்குழு ஏற்படுத்தப்பட்டது.இக்குழுவினர் பல முறை ஆய்வு செய்து ஒவ்வொரு துறையினர் பரிந்துரைகளை பெற்று, விபத்து பகுதிகளில் மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ள கருத்துருவும் அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர்.
ஆனால் உடுமலை நகரிலுள்ள விபத்து பகுதிகளில், பரிந்துரை மற்றும் கருத்துரு அடிப்படையில், எவ்வித பணிகளும் இதுவரை செய்யப்படவில்லை. இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகள் ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது. எனவே கருத்துரு மற்றும் பரிந்துரைகளை செயல்படுத்தி, விபத்தில்லா நகரம் என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கீழக்கரையில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
- ரூ.1.40 கோடி செலவில் மின் மயானம் அமைக்க அரசு தரப்பில் பணிகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இந்துக்கள் மயானத்தில் ரூ.1.40 கோடி செலவில் மின் மயானம் அமைக்க அரசு தரப்பில் பணிகள் ெதாடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த நிலையில் கடந்த நகராட்சி கூட்டத்தில் மின்மயானம் அமைப்பதற்கு பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்த நிலையில் அந்த தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்பேரில் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் கீழக்கரை தாசில்தார் சரவணன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம், துணை தாசில்தார் பழனிக்குமார், கீழக்கரை நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், நகராட்சி பொறியாளர் மீரான் அலி ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 18 சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் பங்கேற்ற சமுதாய நிர்வாகிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மயானத்தில் மின்மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு அறிவித்துள்ள இந்த நல்ல திட்டத்திற்கு தாங்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும், அதே சமயத்தில் கீழக்கரை இந்துக்கள் மயானம் பிரதான சாலையில் அமைந்துள்ளதால் அனைத்து தரப்பு மக்களுக்கும் இடையூறாக இருக்கும் என்றும், மின் மயானத்தை அரசுக்கு சொந்தமான வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும்,இ து குறித்து மாவட்டம் நிர்வாகம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரி வித்தனர். மக்கள் தெரிவித்த கருத்துக்களை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிப்பதாக கீழக்கரை தாசில்தார் சரவணன் தெரிவித்தார்.
- இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த இடம் கையகப்படுத்துவது.
- சாலை பணிக்கு அரசு நிலம் கையகப்படுத்தும் போது அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நெடுஞ்சாலைத்துறை சம்பந்தமாக நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் லலிதா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:
மயிலாடுதுறை மாவட்டத்தில் குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை சம்பந்தமாக நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மாதிரி மங்கலம், முடிகண்டநல்லூர் இணைப்பு சாலை, சீர்காழி திருமுல்லைவாசல் சாலை பணி, கதிராமங்கலம் ஆகிய இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணிக்கு அரசுக்கு சொந்தமாக உள்ள வருவாய்த் துறையைச் சார்ந்த இடம், இந்து சமய அறநிலையத்துறையை சார்ந்த இடம், கையகப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட பணிகள் குறித்தும் முன்னேற்றம் குறித்தும் விரிவாக வருவாய் துறை ஊரக வளர்ச்சித் துறை நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறையைச் சார்ந்த அலுவலர்கள் தங்களின் துறைகளில் சாலை பணிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்டறியப்பட்டது.
குறிப்பாக சாலை பணிக்கு அரசு நிலம் கையகப்படுத்தும் போது அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குநர்முருகண்ணன், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர்அர்ச்சனா, மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சிதுறை, நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலைத்துறை ஆகிய துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- இளம் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், உதவி ஆணையாளர்களிடம் மேயர் அறிவுறுத்தினார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வடகிழக்கு பருவமழை காலங்களில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 54 வார்டு பகுதிகளில் மழை வெள்ளத்தால் ஆண்டுதோறும் பாதிக்கப்படும் இடங்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியில்லாத பகுதிகள், கடந்த காலங்கள் முதல் தற்போது வரை மழைநீர் வெளியேற உரிய வடிகால் வச–தியில்லாத இடங்களில் வெள்ளச்சேதம் ஏற்பட்டு அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
அவ்வாறு பாதிப்பு ஏற்படும் மாநகராட்சியின் வடக்கு பகுதிகளான பாண்டியன்நகர், தோட்டத்துப்பாளையம், மும்மூர்த்திநகர், பாலன்நகர், அங்கேரிப்பாளையம், தெற்கு பகுதிகளான காசிபாளையம், கே.என்.பி. காலனி, சுப்பிரமணியம் நகர், திருவள்ளுவர் நகர், வீரபாண்டி பகுதிகளில் மழைக்காலத்தில் மழைநீர் முழுவதும் வெளியேறும் வகையில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
தனியார் இடங்கள் வழியாக மழைநீர் வெளியேறும்போது இடத்தின் உரிமையாளரிடம், கவுன்சிலர்கள், தன்னார்வ உறுப்பினர்கள் உதவியுடன் நேரில் தொடர்பு கொண்டு மழைநீர் தேங்காமல் வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளம் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், உதவி ஆணையாளர்களிடம் மேயர் அறிவுறுத்தினார்.
மழைக்காலத்தில் மழைநீர் தேங்காமல் வெளியேற்ற அனைத்து வகையான உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை அதிகமாக எதிர்பார்க்கப்படும் மாநகராட்சி பகுதிகளில் அனைத்து பணிகளையும் விரைந்து மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
- வேளாண் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு பயின்று வரும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மாணவிகள் மரக்கன்றுகள் மற்றும் நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.
சீர்காழி:
சீர்காழி அருகே சோதியக்குடி கிராமத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் தொடக்கவிழா நடைபெற்றது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலத்தில் வேளாண் பட்டப்படிப்பு இறுதிஆண்டு பயின்று வரும், மாணவ-மாணவிகள் வேளாண் தொழிலில் நேரடி அனுபவம் பெரும் பொருட்டு கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி புத்தூர் அருகேயுள்ள சோதியக்குடி கிராமத்தில் தங்கிபயிற்சிபெறும் திட்டம் தொடக்கவிழா ஊராட்சி மன்ற தலைவர் கே.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் டி.ஜெயசீலன் மற்றும் மணிவண்ணன் சிறப்புறையாற்றினர். தொடர்ந்து மாணவிகள் மரக்கன்றுகள், நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.
விழாவில் ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், விவசாயிகள் சக்திவேல், பிரதாமசந்திரன், மகாலிங்கம் மற்றும் பலர் பங்கேற்றனர்.
வேளாண் புல இறுதியாண்டு பயிலும் 16 மாணவிகள் 75 நாட்கள் அக்கிராமத்தில் தங்கி வேளாண் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என நேரடி அனுபவங்களை தெரிந்து கொள்ள உள்ளனர்.
- சாக்கடை கால்வாய் நடுவே அமைந்திருக்கும் மின்கம்பத்தை மின்சார வாரியத்திடம் கூறி அப்புறப்படுத்த வேண்டும்.
- நாளடைவில் சாக்கடை ஓட கூட வாய்ப்பில்லாமல் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை பெண்கள் பள்ளியிலிருந்து பெரிய கடைத்தெரு செல்லும் சாலையில் காட்கரேவ் சாஹேப் வீட்டு வாசலில் புதிதாக சாக்கடை கால்வாய் கட்டப்பட்டு வருகிறது.
இந்த சாக்கடை கால்வாயின் நடுவே ஏற்கனவே உள்ள மின்கம்பத்தை சுற்றி சிமெண்ட் கட்டை உள்ளது. மின்கம்பத்தில் அடிப்பாகம் மற்றும் சாக்கடை கால்வாயில் பக்கவாட்டு சுவர் என்று நாளடைவில் சாக்கடை ஓட கூட வாய்ப்பில்லாமல் சாக்கடை தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தற்போது கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருக்கும் நகராட்சி காண்ட்ராக்டர் இடைஞ்சலாகவும் சாக்கடை கால்வாயில் சாக்கடை ஓடுவதற்கு தடையாகவும் உள்ள மின்கம்பத்தை அப்புறப்படுத்தி, அதன் பிறகு பணிகளை தொடராமல் அதை நடுவிலேயே வைத்து பணிகளை தொடர்கின்றனர்.
ஆனால் அதனை நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி தலைவர் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.உடனடியாக நகராட்சி நிர்வாகம் சாக்கடை கால்வாய் நடுவே அமைந்திருக்கும் மின்கம்பத்தை மின்சார வாரியத்திடம் கூறி அப்புறப்படுத்தி விட்டு பணிகளை தொடர வேண்டும் என்றும் கடந்த ஆறு மாதமாக நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் வாங்கி டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கபடாமல் கிடப்பில் கிடப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.நகராட்சியின் மொத்த ஒப்பந்தத்தையும் ஒரு சில காண்ட்ராக்டர்கள் வைத்து பணிகளை முடிக்க நினைப்பதால் டெண்டர் விடப்பட்ட பணிகளை காண்ட்ராக்ட் காரர்களும் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாமல் தவிப்பதாக நகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.
- அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ரூ.7.46 கோடியில் புதிய கட்டுமானப் பணிகள் தொடங்கின
- அமைச்சர் சிவசங்கர் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், அரியலூர் மற்றும் ெஜயங்கொண்டம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ரூ.7.46 கோடி மதிப்பீட்டில் புதிய பணிமனைகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
பொதுப் பணித்துறை சார்பில் நடைபெற்ற பூமி பூஜையில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தலா ரூ.3.73 கோடி என மொத்தம் ரூ.7.46 கோடி மதிப்பீட்டில் இரண்டு புதிய கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், இந்த பணிமனைகள் ஒவ்வொன்றின் தரைத்தளம் தலா 982.25 ச.மீ பரப்பளவு கொண்டது. இந்த தரைத்தளத்தில் நான்கு வகுப்பறைகள், பணிமனை அரங்கம், கூட்டரங்கம், பணியாளர் அறை, கணினி அறை மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் எழிலுற கட்டப்படவுள்ளது என்றார்.
செந்துறை-சேலம் பேருந்து சேவை தொடக்கம்... செந்துறையில், நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சிவசங்கர், செந்துறையில் இருந்து அரியலூர், குன்னம், பெரம்பலூர், துறையூர், நாமக்கல் வழியாக சேலத்துக்கு பேருந்து சேவையை கொடியசைத்து தொடக்கி வைத்தார். தொடர்ந்து அய்யூர் துணை மின்நிலையத்தில் இருந்து புக்குழி கிராமத்துக்கு மின் விநியோகத்தை இயக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர்கள் தேவேந்திரன், அன்பரசி மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
- பல்லடம் நகரத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
பல்லடம் :
பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
திருமணம் போன்ற பண்டிகை நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இதனால் பல்லடம் நகரத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் விபத்துக்கள், ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வந்தது. இதனால் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், புறவழிச்சாலை வேண்டும், மேம்பாலம் கட்ட வேண்டும் என கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பல்லடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில்,பல்லடம் அருகே காரணம்பேட்டை முதல் பல்லடம் அண்ணாநகர் வரை உள்ளசுமார் 9 கி.மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்லடம் நகர பகுதியிலும் ரோடு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து பல்லடத்தில் செட்டிபாளையம் ரோடு பிரிவு முதல் பனப்பாளையத்தில் உள்ள தாராபுரம் ரோடு பிரிவு வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பல்லடம் வாழ் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- நூற்றாண்டுகள் பழமையான உண்ணாமலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
- கும்பாபிஷேகத்திற்காக, யாக சாலை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பல்லடம் :-
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி,அல்லாளபுரத்தில் நூற்றாண்டுகள் பழமையான உண்ணாமலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
இங்கு அடுத்த மாதம் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்காக, யாக சாலை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் உலகேஸ்வர சுவாமி, உண்ணாமலை அம்மன், மற்றும் கரிய காளியம்மனுக்கு 9 யாக குண்டம், இதர தெய்வங்களுக்கு 37 யாக குண்டங்கள் என மொத்தம், 46 யாக குண்டங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. கும்பாபிசேக் பணிகளை விழா கமிட்டியினரும், ஊர் பிரமுகர்களும், நேரில் பார்வையிட்டு ஆலோசனை கூறி வருகின்றனர்.