என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள் திருட்டு"
- மோட்டார் சைக்கிள்களை இரவலாக வாங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருமனை:
குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள மாங்கோடு ஐந்துள்ளி பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகன் அபிஷேக் (வயது23). இவர் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் மோட்டார் சைக்கிள்களை இரவலாக வாங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
அவ்வாறு வாங்கிய சிலரது மோட்டார் சைக்கிள்களை திருப்பி கொடுக்கவில்லை. மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களிடம் யாரோ திருடிச்சென்ற விட்டனர் என்று கூறியபடி இருந்துள்ளார். இதுபோன்று தொடர்ச்சியாக செய்தபடி இருந்திருக்கிறார்.
இந்நிலையில் மாங்கோடு படப்பறத்தலவிளை பகுதியை சேர்ந்த ஏசுதாஸ் என்பவரிடம் அவரின் மோட்டார் சைக்கிளை அபிஷேக் இரவலாக வாங்கி திரும்ப கொடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து பலமுறை கேட்ட ஏசுதாஸ், தன்னுடைய மோட்டார் சைக்கிளை தரவில்லை என்றால் போலீசில் புகார் செய்வேன் என கூறியுள்ளார்.
அதற்கு அபிஷேக் எதுவும் கூறவில்லை. இதைத்தொடர்ந்து அவர் மீது அருமனை போலீஸ் நிலையத்தில் ஏசுதாஸ் புகார் கொடுதார். அதன் அடிப்படையில் அருமனை சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார், அபிஷேக்கை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறியபடி இருந்திருக்கிறார். இருந்த போதிலும்போலீசார் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இறுதியில் அபிஷேக், ஏசுதாசின் மோட்டார் சைக்கிளை மார்த்தாண்டத்தில் ஆக்கர் கடையில் விற்றுவிட்டேன் என தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார், அபிஷேக்கின் மோட்டார் சைக்கிளை கண்டு பிடித்தனர்.
இரவல் வாங்கிய மோட்டார்சைக்கிளை திருட்டு போய் விட்டதாக கூறி நாடகமாடி விற்ற சம்பாதித்த அபிஷேக்கின் மீது வழக்குபதிந்து கைது செய்தனர். மற்றவர்களிடம் இரவலாக வாங்கிய மோட்டார் சைக்கிள்களையும் அபிஷேக் இதுபோன்று விற்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தினர். இரவல் வாங்கிய மோட்டார் சைக்கிள்களை வாலிபர் நூதனமுறையில் விற்பனை செய்த சம்பவம் மாங்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்குவது போல் சமூகவலைதள விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணில் பேசினர்.
- கூட்டாளிகள் யார்?யார்? என்று போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வண்டலூர்:
கூடுவாஞ்சேரி, ஸ்ரீபத்மா அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் அப்துல் ரசாக். கல்லூரி மாணவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டு முன்பு நிறுத்தி இருந்த இவரது மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்று விட்டார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அப்துல்ரசாக்கின் மோட்டார் சைக்கிள் அதே பதிவு எண்ணுடன் விற்பனைக்காக சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.
இதனை அறிந்த அப்துல்ரசாக் கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்குவது போல் அந்த சமூகவலைதள விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணில் பேசினர். அப்போது அதில் பேசிய வாலிபர் மோட்டார் சைக்கிள் விற்பனைக்காக மன்னார்குடியில் இருப்பதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் மன்னார்குடிக்கு விரைந்து சென்று அப்பகுதியை சேர்ந்த முனீஸ் (23), என்பவரை கைது செய்தனர். அவர் மோட்டார் சைக்கிளை திருடி இன்ஸ்டாகிராமில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருட்டு மோட்டார் சைக்கிளை விற்பனை செய்ய அதே பதிவு எண்ணுடன் படத்தை வெளியிட்டதால் அவர் சிக்கிக்கொண்டார். கைதான முனீஸ் இதுபோல் வேறு எந்தெந்த இடங்களில் கைவரிசை காட்டி உள்ளார். கூட்டாளிகள் யார்?யார்? என்று போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பாட்டியாலாவில் உள்ள கிராமங்களில் அடிக்கடி மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது.
- போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கிராம மக்களே கொள்ளையர்களை பிடிக்க ரோந்து சென்றனர்.
குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் திருடர்கள் கையில் அகப்பட்டால் அவர்களுக்கு தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பஞ்சாப்பில் மோட்டார் சைக்கிள் திருடர்களுக்கு கிராம மக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. பாட்டியாலாவில் உள்ள கிராமங்களில் அடிக்கடி மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது.
இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கிராம மக்களே கொள்ளையர்களை பிடிக்க ரோந்து சென்றனர். அவ்வாறு சென்றபோது அங்குள்ள ஒரு கிராமத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். உடனே அவருக்கு கழுத்தில் மாலை அணிவித்து கைத்தட்டி மரியாதை செய்ததோடு, அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பினர்.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் இவ்வாறு செய்தால் திருடர்கள் மீண்டும் திருட மாட்டார்கள் என்றனர்.
- கிறிஸ்டோபர் மீது 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ராயபுரம்:
கொருக்குப்பேட்டை டி.கே.கார்டன் பகுதியில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர்.அவர் காசிமேடு சேர்ந்த கிறிஸ்டோபர் (வயது 28) என்பதும் மோட்டார் சைக்கிள் திருடி வந்ததும் தெரிந்தது.
அவரை போலீசார் கைதுசெய்தனர். கிறிஸ்டோபர் மீது 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- மறைமலைநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் திருடியது தெரியவந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
மறைமலைநகர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இது குறித்த புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மறைமலைநகர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த 2 வாலிபர்களை போலீசார் வழிமறித்து விசாரித்த போது முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் படப்பை அருகே உள்ள சிறுமாத்தூர் கிராமத்தை சேர்ந்த பூபாலன் (வயது 37), ஆத்தனஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (29) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து மறைமலைநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றினர்.
- கோடம்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் வரை பல்வேறு பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரித்தனர்.
- செல்போன் மற்றும் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட இருவரும் சேர்ந்து அதிவேகமாக செல்லும் மோட்டார் சைக்கிளை குறி வைத்து திருடுவது வாடிக்கை.
போரூர்:
சென்னை கோடம்பாக்கம் சி.ஆர்.பி கார்டன் தெருவை சேர்ந்தவர் தனசேகர். போலீஸ்காரரான இவர் புதுப்பேட்டை ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறார்.
இவர் வழக்கம் போல இரவு வீட்டின் முன்பு ரூ.3 லட்சம் மதிப்புள்ள தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் காலையில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது.
இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தி.நகர் உதவி கமிஷனர் பாரதிராஜா சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்ததில் வாலிபர்கள் 2பேர் தனசேகரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிந்தது.
ஆனால் அவர்களது முகம் சரியாக தெரியவில்லை. இதையடுத்து கோடம்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் வரை பல்வேறு பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தனர்.
இதில் மோட்டார் சைக்கிளை திருடியது பல்லாவரம் பகுதியை சேர்ந்த சூர்யா, பாலாஜி என்பது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள 5 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
செல்போன் மற்றும் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட இருவரும் சேர்ந்து அதிவேகமாக செல்லும் மோட்டார் சைக்கிளை குறி வைத்து திருடுவது வாடிக்கை.
மேலும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பின்னர் போலீசில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க அவ்வப்போது இடை தரகர்கள் மூலமாக திருட்டு மோட்டார் சைக்கிளை விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இவர்களது கூட்டாளியாக செயல்பட்டு வந்த சரவணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்பேடு பஸ் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மோகன்ராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் மோட்டார் சைக்கிள்கள் திருடும் கும்பலை தொடர்ச்சியாக கண்காணித்து வந்தனர்.
- 18 மோட்டார் சைக்கிளில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கூடுவாஞ்சேரி:
தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில் உள்பட பல்வேறு இடங்களில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருடு போகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் மோட்டார் சைக்கிள்கள் திருடும் கும்பலை தொடர்ச்சியாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஊரப்பாக்கம் ரெயில் நிலையம் அருகே சந்தேகப்படும்படி சுற்றி திரிந்து கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தனர். இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்த போது அவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள மலையம்பாக்கம், மாங்காடு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த மாரிராஜ் (வயது 31), தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை இளங்காடு கிராமத்தை சேர்ந்த அய்யாபிள்ளை (30) என்பதும், ரெயில் நிலையம் மற்றும் கூடுவாஞ்சேரி சுற்றுவட்டாரங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரிய வந்தது. இது குறித்து கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட மாரிராஜ், அய்யா பிள்ளை ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து 18 மோட்டார் சைக்கிளில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
- தனது மோட்டார் சைக்கிளை வீட்டு பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்று படுத்து தூங்கினார்.
- விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
விருகம்பாக்கம், ஏ.வி.எம் அவின்யூ பகுதியை சேர்ந்தவர் அன்புவேல் (வயது45) கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.
இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டு பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்று படுத்து தூங்கினார்.
பின்னர் காலையில் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது கண்டு அன்புவேல் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் அலுவலகத்தின் பின் பகுதியில் உள்ள டூவீலர் பட்டறைக்கு சென்றபோது, அங்கு பட்டறை உரிமையாளர், வேலுவின் டூவீலரில் கிளச் போன்றவற்றை சரி செய்து கொண்டிருந்தார்.
- ராஜாவை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவர் தனது நண்பரை பார்க்க, நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் வந்தார். கேன்டீன் அருகே டூவீலரை நிறுத்திவிட்டு சென்ற அவர், சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது, அவரது வண்டியை காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், எனது வண்டியே மிகவும் பழையது. அதையும் திருடிச்சென்று விட்டார்களா? என்ற வேதனையுடன் வண்டியை தேடினார். சாவி தன்னிடம் இருப்பதால், யாராவது தள்ளிக்கொண்டு தான் சென்றிருக்க வேண்டும் என முடிவு செய்த அவர், நீண்ட தூரம் வண்டியை தள்ளிச் சென்றிருக்க முடியாது என கருதி, தனது நண்பருடன் வண்டியை தேடத் தொடங்கினார்.
அப்போது, கலெக்டர் அலுவலகத்தின் பின் பகுதியில் உள்ள டூவீலர் பட்டறைக்கு சென்றபோது, அங்கு பட்டறை உரிமையாளர், வேலுவின் டூவீலரில் கிளச் போன்றவற்றை சரி செய்து கொண்டிருந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இந்த வண்டியை கொண்டு வந்து ரிப்பேர் பார்க்க சொன்னது யார்? என கேட்டார். அப்போது, அங்கிருந்த மற்றொரு நபரை கடை உரிமையாளர் கைகாட்டினார்.
இதற்கிடையில், அந்த நபர் பட்டறையின் எதிர்பகுதியில் உள்ள கோவிலில் இருந்து, எலுமிச்சை பழத்தை எடுத்து வந்து, திருடி வந்த வண்டிக்கு சிறிய பூஜையும் போட்டிருந்தார். இதுகுறித்து வேலு விசாரித்த போது, அவர் மன்னார்பாளையத்தை சேர்ந்த ராஜா (49) என்றும், அது தன்னுடைய வண்டி எனக் கூறினார்.
இதனையடுத்து, அவரை நண்பர் உதவியுடன் மடக்கிப் பிடித்த வேலு, டவுன் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார். அப்போது அவர், 'என்னை திருடன்னு சொல்லாதீர்கள். எனது நண்பன் தான் வண்டியை கொடுத்தான்.
எனது செல்போனும் அவனிடம் தான் இருக்கிறது. எனது 2 பிள்ளைகள் மீது சத்தியமாக சொல்கிறேன், நான் திருடல, என்னை திருடன் என சொல்லாதீர்கள்,' என்றார்.
இதையடுத்து ராஜாவை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே, என்னை திருடன்னு சொல்லாதீர்கள் என்று அவர் கூறும் வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- பாலாஜி சொந்தமாக மினி வேன் வைத்து ஓட்டி வருகிறார்.
- இன்று அதிகாலையில் பாலாஜியின் மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது.
சென்னை:
சென்னை ராமாபுரம், செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது25). சொந்தமாக மினி வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவர் ரூ.2 லட்சம் மதிப்புள்ள சொகுசு மோட்டார் சைக்கிள் வைத்துள்ளார். அதை நேற்று இரவு வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார்.
இன்று அதிகாலையில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. இதை கண்டு பாலாஜி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் ராமாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் விரைந்து வந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
- திருடிய மோட்டார் சைக்கிளுடன் மது குடிக்க வந்தபோது அசோக்குமார் சிக்கிக்கொண்டார்.
ராமாபுரம் ராகவேந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். இதனை இன்று காலை மர்ம நபர் திருடி சென்று விட்டார்.
இதுகுறித்து ராமாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அதே பகுதி அரசமரம் அருகே உள்ள மதுக்கடை முன்பு பாபுவின் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டு இருந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவன் நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பது தெரிந்தது. திருடிய மோட்டார் சைக்கிளுடன் மது குடிக்க வந்தபோது அசோக்குமார் சிக்கிக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வைஷ்ணவி நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது மோட்டார் சைக்கிளையும் கொள்ளையர்கள் திருடி சென்றனர்.
- மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் கம்மவார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார்.
இதனை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதேபோல் மணவாளநகர் அடுத்த போளிவாக்கம் வைஷ்ணவி நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது மோட்டார் சைக்கிளையும் கொள்ளையர்கள் திருடி சென்றனர்.
இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்