search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செம்மண்"

    • களியக்காவிளை-மார்த்தாண்டம், பளுகல் பகுதியில் நடைபெறுகிறது
    • சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    களியக்காவிளை :

    களியக்காவிளை, மார்த்தாண்டம், பளுகல் சுற்று வட்டார பகுதிகளான அதங்கோடு, குழித்துறை, பழவார், திக்குறிச்சி, மலையோரம், இளஞ்சிறை, மூவோட்டுகோணம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆற்றில் மணல் கடத்தல், தனியார் நிலங்களில் இருந்து பாறைகள் உடைத்து கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்கள் நடந்து வந்தது.

    இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் இணைந்து தீவிர நடவடிக்கை எடுத்ததால் ஆற்றில் மணல் கடத்தல் கட்டுப்ப டுத்தப்பட்டது. ஆனால் தற்போது களியக்காவிளை, மார்த்தாண்டம், பளுகல் சுற்றுவட்டார பகுதிகளில் செம்மண் கடத்தல் அதிகரித்துள்ளது. தனியார் நிலங்கள், புறம்போக்கு நிலங்களில் இருந்து அதிகமாக செம்மண் கடத்தப்படுகிறது. இதற்காக களியக்காவிளை, மார்த்தாண்டம், பளுகல் பகுதிகளில் குறிப்பிட்ட சில கும்பல்கள் உள்ளன. இதுகுறித்து புகார் எழுந்ததால் தனிப்படை அமைத்து கடத்தல் வாகனங்கள் ஜே.சி.பி. எந்திரம், கிட்டாச்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

    இதனால் செம்மண் கடத்தல் சில மாதங்களாக கட்டுக்குள் இருந்தது. தற்போது மீண்டும் களியக்காவிளை, மார்த்தாண்டம், பளுகல் சுற்றுவட்டார பகுதியில் இரவோடு இரவாக செம்மண் கடத்தல் அதிகம் நடந்து வருகிறது. குறிப்பாக படந்தாலுமூடு, அதங்கோடு, திருத்தோபுரம், மருதன்கோடு, வட்டவிளை, குழித்துறை ஆத்துக்கடவு, ஈத்தவிளை, பாலவிளை, மடிச்சல், திக்குறிச்சி, பேரை, ஞா றான்விளை, மேல்புறம், மலை யோரம், செம்மண் காலை, கழுவன்திட்டை, இளஞ்சிறை, ராம வர்மன்சிறை, மூவோட்டு கோணம், மலையடி, மேக்கோடு, கண்ணுமாமூடு, பளுகல், மார்த்தாண்டம், களியக்காவிளை போன்ற பகுதிகளில் இருந்து இரவு ஏராளமான செம்மண் வாகனங்களில் கடத்தப்படு கிறது.

    எனவே செம்மண் கடத்தல் கும்பலை கட்டுப்ப டுத்த மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோழிவிளை பகுதியில் சிலர் செம்மண் கடத்து வதாக போலீசாருக்கு புகார் வந்தது.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமை யில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    நாகர்கோவில் :பா.ஜ.க. பிரமுகர் உட்பட 4 பேர் மீது வழக்குகளியக்காவிளை அருகே கோழிவிளை பகுதியில் சிலர் செம்மண் கடத்து வதாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்தநிலை யில் இன்று காலை களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து செம்மண் கடத்து வதை பார்த்துள்ள னர். அந்த இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றுள்ளனர். ஆனால் போலீசாரை பார்த்த உடன் செம்மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள் அந்த இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டனர்.

    பின்னர் டெம்போவை யும், கிட்டாச்சி எந்திரத்தை யும் பறிமுதல் செய்த போலீசார் வாகனங்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் செம்மண் கடத்தியதாக பா.ஜ.க.வின் முஞ்சிறை மேற்கு ஒன்றிய தலைவர் விஜில்குமார் மற்றும் படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த றோய், மடிச்சல் பகுதியை சேர்ந்த ஆபீஸ், களியக்காவிளை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


    • டெம்போ டிரைவர் பிடிபட்ட நிலையில் அதில் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்
    • தப்பி ஓடியவர்கள் கண்ணனூர் பகுதியை சேர்ந்த அஜித், கைதகுழி பகுதியை சேர்ந்த விஜி என்றும் தெரிய வந்தது

    தக்கலை :

    தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். திருவிதாங்கோடு கைத குழி பகுதியில் சென்ற போது, வேகமாக ஒரு டெம்போ வந்தது. அதனை நிறுத்தும்படி போலீசார் கூறினர். ஆனால் அந்த டெம்போ நிற்காமல் சென்றது. இதனை தொடர்ந்து போலீசார் விரட்டிச் சென்று மடக்கினர்.

    டெம்போ டிரைவர் பிடிபட்ட நிலையில் அதில் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். அந்த டெம்போவில் செம்மண் கடத்துவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் டெம்போவை பறிமுதல் செய்து டிரைவரையும் கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் ஷாஜன் என தெரிய வந்தது. மேலும் தப்பி ஓடியவர்கள் கண்ணனூர் பகுதியை சேர்ந்த அஜித், கைதகுழி பகுதியை சேர்ந்த விஜி என்றும் தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தப்பி ஓடிய டிரைவர்களுக்கு வலைவீச்சு
    • டெம்போக்களின் 2 டிரைவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இருந்து கனிமவளங்கள் அடிக்கடி கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வருவாய்த் துறையினரும், போலீசாரும் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற னர். செம்மண் கடத்தலை தடுக்க போலீ சார் வாகன சோதனை யிலும் ஈடுபட்டு வருகின்ற னர். இருப்பினும் கடத்தல் சம்பவம் தொடர்ந்தே வருகிறது. போலீசார் மற்றும் வருவாய் துறையினரை பார்த்ததும் லாரிகளை நிறுத்திவிட்டு அதன் டிரைவர்கள் தப்பிச்செல்வது வாடிக்கை யாக நடந்து வருகிறது.

    நேற்று கொல்லங்கோடு அருகே உள்ள சந்தனபுறம் பகுதியில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 டெம்போக்கள் வந்தன. அதில் வந்தவர்கள் போலீசாரை கண்டதும் வாக னங்களை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்.

    உடனடியாக போலீசார் 2 டெம்போக்களையும் சோதனை செய்தபோது அவற்றில் செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் 2 டெம்போக்களைணயும் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து செம்மண் கடத்தி வந்த டெம்போக்களின் 2 டிரைவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    • தனிப்படை அமைத்து கடத்தல் வாகனங்கள் ஜே.சி.பி. ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை சுற்று வட்டார பகுதிகளான அதங்கோடு, குழித்துறை, பழவார் ஆகிய பகுதிகளில் இருந்து மணல் கடத்தல், தனியார் நிலங்களில் இருந்து பாறைகள் உடைத்து கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்கள் நடந்து வந்தது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் போலீசார் இணைந்து தீவிர நடவடிக்கை எடுத்ததால் ஆற்றில் மணல் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டது.

    ஆனால் இப்போது களியக்காவிளை சுற்றுவட்டார பகுதிகளில் செம்மண் கடத்தல் அதிகரித்துள்ளது. தனியார் நிலங்கள், புறம்போக்கு நிலங்களில் இருந்து அதிகமாக செம்மண் கடத்தப்படுகிறது. இதற்காக களியக்காவிளை பகுதிகளில் குறிப்பிட்ட சில கும்பல்கள் உள்ளன. இது குறித்து புகார் எழுந்ததால் தனிப்படை அமைத்து கடத்தல் வாகனங்கள் ஜே.சி.பி. ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

    தற்போது மீண்டும் களியக்காவிளை சுற்றுவட்டார பகுதியில் இரவோடு இரவாக செம்மண் கடத்தல் அதிகம் நடந்து வருகிறது. குறிப்பாக படந்தாலுமூடு, திருத்தோபுரம், குழித்துறை ஆத்துக்கடவு, ஈத்தவிளை, பாலவிளை, மடிச்சல் போன்ற பகுதிகளில் இருந்து இரவு ஏராளமான வாகனங்களில் செம்மண் கடத்தப்படுகிறது.

    இது குறித்து புகார் இருந்தா லும் யாரும் கண்டு கொள்வ தில்லை. ஆகவே களியக்கா விளை பகுதியில் கொடிகட்டி பறக்கும் செம்மண் கடத்தலை முடி வுக்கு கொண்டு வர மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • சோதனை செய்த போது அதில் செம்மண் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது
    • டிரைவர் தப்பி ஓட்டம்

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை அருகே உள்ள குழித்துறை ஆத்து க்கடவு பகுதியில் அனுமதி இல்லாமல் மினி வேனில் செம்மண் கடத்தப்படுவதாக களியக்காவிளை போலீசா ருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் போலீசார் இன்று சம்பவ இடம் சென்று சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டினர். இதனை தொடர்ந்து வேனை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். சந்தேகமடைந்த போலீசார் மினி வேனை சோதனை செய்த போது அதில் செம்மண் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    எந்தஅனுமதியும் இல்லா மல் செம்மண் கடத்து வதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து வேனையும் செம்மண் அள்ளுவதற்கு பயன்படுத்திய எந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.செம்மண் கடத்தியதாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை
    • செம்மண் அள்ள பயன்படுத்திய எந்திரம் யாருடையது?என்று விசாரணை

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை அருகே குழித்துறை ஆத்துக்கடவு பகுதியில் அனுமதி இல்லாமல் செம்மண் எடுத்து கடத்துவதாக வந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு வந்த மினி வேனை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தி னர். டிரைவர் தப்பி ஓடி விட்ட நிலையில் போலீசார் வேனை சோதனை செய்த போது அனுமதியின்றி செம்மண் கடத்துவது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து மினி வேனையும் பொக்லைன் எந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து சிதறால் செல்வராஜ். பத்துகாணி வினோத், மடிச்சல் திலீப் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் செம்மண் அள்ள பயன்படுத்திய எந்திரம் யாருடையது?என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×