search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைதீர்க்கும்"

    • 24-ந்தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் (அறை எண்.20) நடைபெறும்.
    • அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந்தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் (அறை எண்.20)திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    எனவே கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் புகார்கள், குறைபாடுகள் இருப்பின் தங்களது எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.   

    • 25-ந்தேதி நடக்கிறது.
    • விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் கலெக்டரால் நேரில் பெறப்படும்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை திருச்சியில் நடைபெறும் வேளாண் சங்கமம் நிகழ்ச்சியில் விவசாயிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    அதனால் 27-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றம் செய்யப்பட்டு 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறும். இந்த கூட்டத்தில் கடந்த ஜூன் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் கலெக்டரால் நேரில் பெறப்படும்.

    கோரிக்கை மனுக்கள் பதிவு செய்து ஒப்புகை பெறும் வசதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் செய்யப்பட்டிருக்கும். கலெக்டரிடம் நேரடியாக தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை கலெக்டர் அலுவலகத்தில், 21-ந் தேதி எரிவாயு நுகர்ேவார் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • சமையல் எரிவாயு உருளைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    இதில் எண்ணை நிறுவன மேலாளர்கள், எரிவாயு நுகர்வோர்கள், முகவர்கள், அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    ×