என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புள்ளிமான்"
- அரூர் காப்புக்காட்டில் புள்ளிமானை வேட்டையாடி அதன் கறியை விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.
- வனச்சிப்பந்திகள் ஆகியோர் அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிவனை ஆஜர்படுத்தினர்.
தருமபுரி:
தருமபுரி வனக்கோட்டம், மொரப்பூர் வனச்சரகம் அரூர் காப்புக்காடு புளியன்தோப்பு சரகத்தில் கடந்த 10-ந் தேதி கன்னிவலை களை கொண்டு புள்ளிமானை வேட்டையாடி தலைமறைவான சோலைக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவன் (வயது 48), கொளகம்பட்டி அடுத்த எருக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேட்டு என்கிற பெருமாள் ஆகிய 2 பேரும் புள்ளிமானை வேட்டையாடி அதன் கறியை சோளக்கொட்டாய் பகுதியை சேர்ந்த அல்லி முத்து என்பவர் மூலம் பாப்பாரப்பட்டி பகுதியில் மான்கறி விற்பனை செய்த்தற்காக பாலக்கோடு வனச்சரகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அல்லி முத்து என்பவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் மொரப்பூர் வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் சிவன் மற்றும் சேட்டு ஆகியோர் புள்ளிமானை வேட்டையாடி கறியினை விற்ற குற்றத்திற்காக விசாரணைக்கு அழைத்தபோது விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டனர்.
இதைதொடர்ந்து அவர்களை பிடிக்க வனப் பாதுகாப்புப்படை மற்றும் வனச்சரக பணியாளர்கள் இணைந்து குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த 25-ந் தேதி சிவனை கைது செய்து, மொரப்பூர் வனச்சரக அலுவலகம் கொண்டுவரப்பட்டு விசாரணை செய்ததில் அரூர் காப்புக்காட்டில் புள்ளிமானை வேட்டையாடி அதன் கறியை விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.
பின்னர் சிவன் மீது வனக்குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் அறிவுரைப்படி, அரூர் உதவி வனப்பாதுகாவலர் சரவணன் ஆலோசனை படியும், சிவனை மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார், வனப்பாதுகாப்பு படை வனச்சரக அலுவலர் ஆலயமணி, வனச்சிப்பந்திகள் ஆகியோர் அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிவனை ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற ஆணைப்படி 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார்.
- வேட்டையாடி, கறியை சமைத்து சாப்பிட முயற்சிப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
- கைது செய்யப்பட்ட 8 பேரையும் எச்சரித்து விடுதலை செய்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அறுநூற்றுமலை பெலாப்பாடி கிராமத்துக்கு, வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை நாய்கள் துரத்தியுள்ளது. களைத்துப்போன இந்த மானை அதே பகுதியைச் சார்ந்த 8 பேர் கொண்ட கும்பல் வேட்டையாடி, கறியை சமைத்து சாப்பிட முயற்சிப்பதாக சேலம் மண்டல வன பாதுகாவலர் ராகுல், ஆத்தூர் கோட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து தும்பல் வனச்சரகர் விமல்ராஜ் தலைமையிலான வனத்துறையினர், பெலாப்பாடி கிராமத்திற்கு சென்று மானை வேட்டையாடி சமைத்து சாப்பிட முயற்சித்த அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, மாயவன், பாஸ்கரன், சண்முகம், கிருஷ்ணன், சரவணன், சிதம்பரம், ராஜேந்திரன் ஆகிய 8 பேரையும் கைது செய்தனர்.
மேலும் புள்ளிமானை வேட்டையாடிய குற்றத்திற்காக ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து வசூலித்து, கைது செய்யப்பட்ட 8 பேரையும் எச்சரித்து விடுதலை செய்தனர்.
அருநூற்றுமலை ஆலடிப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராமங்களிலும் வனவிலங்குகளை வேட்டையாட மாட்டோம் என வனத்துறையினர் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றி கிராம மக்கள் உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
- கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.
- பின்னர் அந்தமானை கொலையனூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான முந்திரி காட்டில் வனத்துறையினர் பத்திரமாக விட்டனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கொலையனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி ஜோதி (வயது 55). இவருக்கு சொந்தமான நிலம் கொலையனூரில் உள்ள தமிழ்நாடு அரசு முந்திரி காட்டிற்கு அருகே உள்ளது. நேற்று காலை தனது விவசாய நிலத்திற்கு சென்ற ஜோதி அங்குள்ள பாழடைந்த கிணற்றில் புள்ளிமான் ஒன்று உயிருடன் கிடப்பதை கண்டார். பின்னர் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் விழுந்த 3 வயதுள்ள புள்ளிமானை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் அந்தமானை கொலையனூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான முந்திரி காட்டில் வனத்துறையினர் பத்திரமாக விட்டனர்.
- நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் படுகாயமடைந்தது.
- மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ராஜபாளையம்
விருதநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மான்கள், காட்டு எருமை உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது மலை பகுதியில் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் தண்ணீர் தேடி அடிவாரப்பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
மலை அடிவாரமான தென்றல் நகர் அணைத்தலை பகுதியில் உள்ள தோப்புக்கு 12 வயதுடைய ஆண் புள்ளிமான் தண்ணீர் தேடி வந்தது. அப்போது அப்பகுதி யில் சுற்றித்திரிந்த நாய்கள் மானை துரத்தி கடித்தது. இதை பார்த்த பிரபல தொழிலதிபர் குவைத்ராஜா நாய்களை விரட்டி விட்டு மானை காப்பாற்றினார்.
நாய்கள் கடித்து குதறியதில் மான் படுகாய மடைந்தது. இதுகுறித்து குவைத்ராஜா வனத் துறைக்கு தகவல் தெரிவித் தார். விரைந்து வந்த அவர்கள் புள்ளி மானை மீட்டனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பின் வனத்துறை அதிகாரிகளிடம் மான் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து வனவர் இளைய ராஜா கூறுகையில், காய மடைந்த மானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயங்கள் குணமாகிய பின் மானை வனப்பகுதியில் விடுவோம் என்றார்.
வாழப்பாடி:
வாழப்பாடியைச் சேர்ந்த ஆங்கில மருந்துக்கடை உரிமையாளர் முகமது இப்ராகிம். இவரது மகன்கள் ஷிஃபாக் அஹ்மத், அல்ஃபார் அஹ்மத் சிறுவர்களான இருவரும், 2 நாட்களுக்கு முன், பெற்றோருடன் காரில் நாமக்கல் பகுதியில் திருமணத்திற்கு சென்றனர்.
நாமக்கல் சுங்கச்சாவடி அடுத்த வேலக வுண்டம்பட்டி அருகே நெடு ஞ்சாலையில் சென்று கொண்டி ருந்தபோது, வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்து சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் குட்டி ஓன்று அவ்வழியாக சென்ற வாகனம் மோதியதில் கால்கள் முறிந்து படுகாயமடைந்த நிலையில் சாலையிலேயே கிடந்துள்ளது.
இதனைக் கண்ட சிறுவர்கள் இருவரும், காரை நிறுத்தி புள்ளிமானை மீட்டு அவ்வழியாக சென்ற 108 அவரச சிகிச்சை வாகனத்தில் இருந்து மருந்துகளை கொண்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து புள்ளிமானை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
புள்ளிமானை பெற்றுக்கொண்ட வனத்துறையினர் சிறுவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். புள்ளிமானை நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்று மேல்சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துச் சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்