search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரத்தி"

    • நொய்யல் ஆறு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ரத யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்
    • 4 தனியார் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு நொய்யல் ஆற்றின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    திருப்பூர்,

    அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் மற்றும் நொய்யல் ஆறு டிரஸ்ட் சார்பில் கோவையில் நடைபெற உள்ள நொய்யல் பெருவிழாவையொட்டி அகில பாரதீய சந்நியாசிகள் சங்க நிறுவனர் ஸ்ரீமத் சுவாமி ராமானந்த மகராஜ் வழிகாட்டுதலின்படி, சந்நியாசிகள் இணைந்து நொய்யல் ஆறு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ரத யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். ரதத்தில் நொய்யல் அம்மன் எழுந்தருளினார். ரத யாத்திரை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் தொடங்கி நொய்யல் ஆற்றின் கரையோரமாக சென்று வழிநெடுகிலும் உள்ள மக்களுக்கு சந்நியாசிகள் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

    திருப்பூர் மாநகருக்குள் நேற்று வந்தடைந்த ரத யாத்திரை குழுவினர் திருப்பூரில் உள்ள 4 தனியார் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு நொய்யல் ஆற்றின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதைத்தொடர்ந்து திருப்பூரில் நொய்யல் ஆற்றுக்கு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது. திருப்பூர் ெநாய்யல் வீதி வளம் பாலத்தில் நொய்யல் ஆற்றுக்கு பால், மஞ்சள் நீர், மலர்களால் ஆரத்தி வழிபாடு செய்யப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அகில பாரதீய சந்நியாசிகள் சங்க பொறுப்பாளர் பாரதி, திருப்பூர் ஸ்ரீராம கிருஷ்ணா வித்யாலயா பள்ளி தாளாளர் முத்துக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கன்னியாகுமரி கடற்கரையில் இன்று மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது.
    • சுசீந்திரம் காசி திருப்பனந்தாள் திருமடத்தைச்சேர்ந்த தம்பையா ஓதுவாரின் பண்ணிசை நிகழ்ச்சி

    கன்னியாகுமரி:

    வைகாசி பவுர்ணமியை யொட்டி குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரையில் இன்று மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது.

    மாலை 4.30 மணிக்கு பஜனையும் அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள வேத பாடசாலையில் இருந்து கைலாய வாத்தியத்துடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜர் எழுந்தருளி கடற்கரையில் உள்ள பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இதில் சுசீந்திரம் காசி திருப்பனந்தாள் திருமடத்தைச்சேர்ந்த தம்பையா ஓதுவாரின் பண்ணிசை நிகழ்ச்சி நடக்கிறது.

    5 .15 மணிக்கு பரசுராமர் விநாயகர் கோவிலில் பூஜை நடக்கிறது. 5.30மணிக்கு சித்திரகுப்தர் பூஜை மற்றும் சாதுக்களிடம் ஆசிபெறும் நிகழ்ச்சி நடக்கிறது. 5.30மணிக்கு சப்தகன்னிகள் பூஜை நடக்கிறது.

    பின்னர் நடக்கும் நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட இந்து திருத் தொண்டர் பேரவை தலைவர் வக்கீல் ராஜகோபாலன் தலைமை தாங்குகிறார்.

    பொதுச்செயலாளர் டாக்டர்சிவசுப்பிர மணியபிள்ளை, பொருளாளர்செந்தில், ஒருங்கிணைப்பாளர் அனுசியாசெல்வி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். 6.30மணிக்கு கடல் மாதாவுக்கு சங்கல்ப பூஜை மற்றும் அபிஷேகம் நடக்கிறது.

    6 45 மணிக்கு சுமங்கலிப் பெண்கள் அகல் விளக்கு ஏற்றி கடல்அன்னைக்கு தீபம் காட்டுகிறார்கள்.இறுதியாக இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை தலைவர்எஸ். ராஜகோபால், பொதுச்செயலாளர் எஸ்.சிவசுப்பிரமணிய பிள்ளை, பொருளாளர் செந்தில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுசுயா செல்வி, எம். சந்திரன், எம். கோபி ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • சுமங்கலி பெண்கள் அகல் விளக்கு ஏற்றி கடல் அன்னைக்கு தீபம் காட்டினார்கள்

    கன்னியாகுமரி :

    வைகாசி பவுர்ணமியை யொட்டி குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரையில்நேற்று மாலைநடந்தது. மாலை 5.30மணிக்கு பஜனையுடன் நிகழ்ச்சிதொடங்கியது.

    அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள வேத பாடசாலையில் இருந்து கைலாய வாத்தியத்துடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜர் எழுந்தருளி கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவிலில் பூஜை நடந்தது. தொடர்ந்து சித்திரகுப்தர் பூஜை மற்றும் சாதுக்களிடம் ஆசிபெறும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்னர் சப்தகன்னிகள் பூஜை நடந்தது. அதன் பிறகு கடல் மாதாவுக்கு சங்கல்ப பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடந்தது.

    அதையடுத்து சுமங்கலி பெண்கள் அகல் விளக்கு ஏற்றி கடல் அன்னைக்கு தீபம் காட்டினார்கள். வானத்தில் பவுர்ணமி நிலவு தோன்றியதும் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை தலைவர் வக்கீல் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் டாக்டர் சிவசுப்பிர மணியபிள்ளை, பொருளாளர் செந்தில், ஒருங்கிணைப்பாளர் அனுசியா செல்வி ஆகியோர்முன்னிலை வகித்தார்கள். இதில் தமிழக சட்டமன்ற பா.ஜ.க.தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தீபம் ஏற்றி முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கன்னியா குமரி குகநாதீஸ்வரர் கோவில் அர்ச்சகர் ராஜா மணி அய்யர்தலைமையில் கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் அர்ச்சகர்சுரேஷ் முன்னிலையில் 5 சிவாச்சாரியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் 5 அடுக்கு தீபம் கொண்ட ராட்சத தீபாரதனை தட்டில் தீபம் ஏற்றி பவுர்ணமி நிலவை நோக்கி தீபம் காட்டி ஆராதனை செய்தனர்.

    இதில் திரளான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×