search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேனீக்கள்"

    • ஹைச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட கதாநாயகனாக தோன்றி தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்
    • மேத்யூ படப்பிடிப்புக்காக கடினமான சவால்களை எதிர்கொள்ளக்கூடியவர்.

    பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் 'இன்டெர்ஸ்டெல்லார்' படத்தின் கதாநாயகனாக நடித்து உலகம் முழுவதும்  புகழ்பெற்றவர் நடிகர் மேத்யூ மெக்கானஹே. இவர் நடிப்பில் வெளியான 'உல்ப் ஆப் வால் ஸ்டிரீட்' 'டாலஸ் பையர்ஸ் கிளப்', 'தி ஜென்டில்மேன்' ஆகியவை பேசப்பட்ட படங்கள் ஆகும். இன்டர்டெல்லாருக்கு அடுத்த படியாக இவர் நடித்த 'ட்ரூ டிடக்டிவ்ஸ்' வெப் சீரிஸுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.

     

    இந்நிலையில் மேத்யூ தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தனது முகம் வீங்கிய நிலையில் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த படத்தில் அவரது வலது புற கண்கள் வீங்கிய நிலையில் உள்ளன. தேனீக்கள் கொட்டியதால் அவருக்கு இந்த வீக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

     

    இது படப்பிடிப்பின்போது ஏற்பட்டுள்ளதா என்று படத்தைப் பார்த்து கலவலையடைந்த ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பொதுவாகவே மேத்யூ படப்பிடிப்புக்காக கடினமான சவால்களை எதிர்கொள்ளக்கூடியவர். கடந்த 2008 ஆம் ஆண்டு படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் அவரது முகத்தில் அவரே கடுமையான  காயங்களை ஏற்படுத்திக் கொண்டார். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான 'டாலஸ் பையர்ஸ் கிளப்' படத்தில் ஹைச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட கதாநாயகனாக தோன்றி தனது அபாரமான நடிப்பை மேத்யூ வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடதக்கது. 

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    • வீடியோவைப் பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    கேரள மாநிலம் மூணாறு பகுதியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் காய்கறி வாங்குவதற்காக மார்க்கெட்டுக்கு சென்றார்.

    அப்போது அவர் தனது ஆட்டோவை சாலையோரமாக நிறுத்தி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் திரும்பி வந்து பார்க்கும் போது ஆட்டோவில் பெரிய அளவில் தேனீக்கள் கூடு கட்டி இருந்தது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியடைந்தார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • தென்னை மரத்தில் பெரிய அளவில் மலைத்தேனீக்கள் கூடு இருந்தது.
    • அப்பகுதியை கடந்து செல்லும் பொது மக்கள் மற்றும் குழந்தைகளை தேனீக்கள் தீண்டி தொல்லை கொடுத்து வந்தது.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர்கள் காந்தி மற்றும் சம்பத். இவர்களது விவசாய தோட்டம் அருகாமையில் உள்ளது. அதில் தென்னை மரங்கள் பயிர் செய்துள்ளார். அங்கிருந்த தென்னை மரத்தில் பெரிய அளவில் மலைத்தேனீக்கள் கூடு இருந்தது. அப்பகுதியை கடந்து செல்லும் பொது மக்கள் மற்றும் குழந்தைகளை தேனீக்கள் தீண்டி தொல்லை கொடுத்து வந்தது. மேலும் அப்பகுதிகளில் விவசாய பணியை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர்.பொதுமக்களால் தேன் கூட்டை அகற்ற முடியாததால் இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு விவசாயிகள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் நிலைய அலுவலர் வெங்கடாசலம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து வந்து தென்னை மரத்தில் கூடு கட்டி இருந்த மலைத்தேனீக்களை தண்ணீரை பீச்சி அடித்து முழுமையாக அகற்றினார்கள் .இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    வாழப்பாடி தொழிலதிபரின் வீட்டில் 2 மணிநேரத்தில் வீட்டு சமையலறையிலும், நுழைவுவாயில் தூணிலும் 2 ராட்சத கூடுகளை கட்டிய தேனீக்கள்.

     வாழப்பாடி:

    வாழப்பாடி எழில் நகரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில், கட்டுமான தொழிலதிபர் தேவராஜன் என்பவரின் பங்களா வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டிற்குள், நேற்று பகல் 12 மணி அளவில் திடீரென படையெடுத்து வந்த ஆயிரக்கணக்கான தேனீக்கள், வீட்டு சமையலறையிலும், நுழைவுவாயில் தூணிலும் 2 ராட்சத கூடுகளை கட்டின.

    இதனைக்கண்ட தொழிலதிபர் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக 2 மணி நேரத்திற்குப் பிறகு, தேன் கூடுகள் இருந்த சுவடே தெரியாத அளவுக்கு கூடுகளை காலி செய்து கொண்டு வெளியேறின. குடியிருப்பு பகுதியில் வீட்டிற்குள் ராட்சத தேனீக்கள் திடீரென படையெடுத்து வந்த கூடுகட்டியதும், 2 மணி நேரத்திற்குப் பிறகு தானாக கலைந்து சென்றதும் இப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து வனத்து–றையினர் மற்றும் தீயணைப்பு படையினர் கூறுகையில், ஆள்நடமாட்டம் குறைவாகவும், அமைதியாக காணப்படும் உயரமான கட்டிடங்களில் ராட்சத தேனீக்கள் கூடு கட்டுவது வாடிக்கை தான். வசிப்பதற்கேற்ப சூழல் இல்லையெனில் தேனீக்கள் உடனடியாக வெளியேறி விடும். அதன்படியே வாழப்பாடி தொழிலதிபர் வீட்டில் 2 மணிநேரத்திற்குள் ராட்சத கூடு கட்டிய தேனீக்கள், அதே வேகத்தில் வெளியேறிவிட்டது என்றனர்.

    ×